Home Blog Page 229

போதைப்பொருள் பற்றிய தகவல்களைத் தெரிவிக்க துரித தொலைபேசி இலக்கம் – 1818

போதைப்பொருள் பற்றிய தகவல்களைத் தெரிவிக்க துரித தொலைபேசி இலக்கம் – 1818

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டுடன் இணைந்த வகையில் 24 மணித்தியாலமும் செயற்படும் வகையிலான துரித தொலைபேசி இலக்கம் ஒன்றை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு சபையின் வேண்டுகோளுக்கு இணங்க அறிமுகப்படுத்தியுள்ள ‘1818’ துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொதுமக்களுக்கு நாடு பூராகவும் இயங்கும் போதைப்பொருள் வர்த்தகம், விநியோகம் அல்லது அதனுடன் தொடர்புடைய சந்தேகத்திற்கு இடமான செயற்பாடுகள் குறித்து சரியான தகவல்களை வழங்க முடியும்.

தொலஸ்பாகை தமிழ் வித்தியாலய காணி அபகரிப்பு: அரசியல்வாதிக்கு எதிராக போராட்டம்!

தொலஸ்பாகை தமிழ் வித்தியாலய காணி அபகரிப்பு: அரசியல்வாதிக்கு எதிராக போராட்டம்! கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்து!

நாவலப்பிட்டிய, தொலஸ்பாகை தமிழ் வித்தியாலயத்துக்கு சொந்தமான காணியை அபகரிக்க முற்படும் அரசியல்வாதியை உடனடியாக கைது செய்து, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இன்று (30) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தொலஸ்பாகை நகரில் பாடசாலை மாணவர்கள், பெற்றோர் மற்றும் நலன்விரும்பிகள் இணைந்து பல மணிநேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தொலஸ்பாகை நகரில் இருந்து குறுந்துவத்த, கம்பளை போன்ற பகுதிகளுக்கான போக்குவரத்து நீண்டநேரம் தடைபட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட தரப்பினருடன், குறுந்துவத்த பொலிஸார் கலந்துரையாடி, வாக்குமூலங்களைப் பதிவு செய்து கொண்டனர். முறைப்பாட்டுக்கு அமைய உரிய வகையில் விசாரணை இடம்பெறும் என உறுதியளிக்கப்பட்டதையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்துச்சென்றனர்.

குறுந்துவத்த, கங்கேஹியல பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே இவ்வாறு பாடசாலை காணியை, கையகப்படுத்த முற்படுகின்றார் என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த அரசியல்வாதி, பாடசாலை வளாகத்துக்குள் நேற்றிரவு அத்துமீறி நுழைந்து வேலிகளை உடைத்தெறிந்துள்ளார்.
மாணவர்களால் வளர்க்கப்பட்ட பூக்கன்றுகளையும் பிடுங்கி வீசியுள்ளார் என பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.

இது தொடர்பில் பாடசாலை அதிபரால் இன்று காலை பொலிஸ் அவசர சேவை இலக்கம் ஊடாக, பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்தே மாணவர் மற்றும் பெற்றோரால் மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

க. யோகா

33 வருடங்களுக்கு பிறகு அணு ஆயுத சோதனை: ட்ரம்ப் உத்தரவு!

 

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பிற நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில், சீன பொருட்களுக்கு எதிராக கூடுதல் வரி விதித்தார். இதனால் அமெரிக்கா- சீனா இடையே சலசலப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், தென்கொரியாவின் புசான் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்- சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தைக்கு முன்னதாக அணு ஆயுத சோதனையை மீண்டும் தொடங்குமாறு அமெரிக்க ராணுவத்திற்கு ஜனாதிபதிடிரம்ப் உத்தரவிட்டார்.

1992 ஆம் ஆண்டுக்கு பிறகு அதாவது 33 ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக அமெரிக்கா அணு ஆயுத சோதனையை மேற்கொள்ளவுள்ளது.

இதனிடையே டிரம்ப் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

“அமெரிக்கா மற்ற எந்த நாட்டையும் விட அதிக அளவில் அணு ஆயுதங்களை வைத்துள்ளது. என்னுடைய முதல் ஆட்சிக் காலத்தில் ஆயுதங்களை புதுப்பித்ததால் இது சாத்தியமானது. அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை பொறுத்தவரையில் ரஷ்யா இரண்டாமிடத்திலும், சீனா மூன்றாம் இடத்திலும் இருக்கிறது.

ஆனால் இன்னொரு 5 ஆண்டுகளில் சீனாவிடமும் சரிசமமான ஆயுதங்கள் இருக்கும்மற்ற நாடுகளின் பரிசோதனை திட்டங்களை கருத்தில் கொண்டு, நம்முடைய அணு ஆயுதங்களை சம அளவில் பரிசோதிக்க உத்தரவிடுகின்றேன் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சராகிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன்

தெலங்​கா​னா​வில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலை​மையி​லான அமைச்சரவையில் தற்​போது 15 பேர் இடம் பெற்றுள்ளனர். சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் எண்​ணிக்கை அடிப்​படை​யில் மேலும் 3 பேருக்கு அமைச்​சர​வை​யில் வாய்ப்பு வழங்கலாம்.

தெலங்​கா​னா​வில் முஸ்​லிம் சிறு​பான்​மை​யினருக்கு ஒவ்​வொரு முறை​யும் ஓர் அமைச்​சர் பதவி வழங்​கப்​பட்டு வரு​கிறது.

இம்​முறை இந்த வாய்ப்பை யாருக்கு வாய்ப்பு வழங்​கலாம் என ரேவந்த் ரெட்டி அரசு ஆலோ​சித்து வந்​தது. பிறகு இது தொடர்​பாக கட்சி மேலிடமே முடிவு எடுக்​கும் என அறி​வித்​தது.

இந்​நிலை​யில் இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் தலைவர் முகமது அசா​ரு​தீன் தெலங்​கானா அமைச்​ச​ராக பதவி​யேற்க உள்​ள​தாக அரசி​யல் வட்​டாரங்​கள் தெரிவிக்​கின்​றன.

தெலங்​கா​னா​வில் கடந்த 2023 சட்​டப்​பேரவை தேர்​தலில் ஹைத​ரா​பாத் ஜூப்ளி ஹில்ஸ் தொகு​தி​யில் காங்​கிரஸ் சார்​பில் முகமது அசா​ருதீன் போட்​டி​யிட்டு தோல்வி அடைந்​தார். இதே தொகு​தி​யில் நடை​பெற உள்ள இடைத்​தேர்​தலில் அவர் மீண்​டும் போட்​டி​யிட தயா​ரா​னார். ஆனால் அவருக்கு காங்​கிரஸ் மேலிடம், மேலவை உறுப்​பினர் பதவி வழங்க தீர்​மானித்​தது.

லயன் அறைகளில் வசிக்கும் மக்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக வலுப்படுத்துங்கள்!

 

‘ லயன் அறைகளில் இன்னும் கஷ்டப்படும் மக்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றி, அவர்களுக்கு மூலதனத்தைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம், பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை காணலாம். ”
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையிலான சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் நாடாளுமன்றத்தில் கூடியது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது சஜித் மேலும் கூறியவை வருமாறு,

” நமது நாட்டில் தேசிய தேயிலை உற்பத்தியில் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் அன்னளவாக 60 சதவீதம் பங்களிப்பைப் பெற்றுத் தருகின்றனர். தேயிலைத் தோட்ட காணிகளில் 30 சதவீதம் அல்லது 40 சதவீதம் ஆனவையே இவர்களுக்கு உரித்துடையதாக காணப்படுகின்றன.

சிறிய அளவிலான காணிகளை வைத்திருப்பவர்கள் பெரும் பங்களிப்பைப் பெற்றுத் தரும்போது, பெரும் காணி உரிமைகளை வைத்திருக்கும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் அல்லது தனியாருக்குச் சொந்தமான எஸ்டேட் நிறுவனங்கள் குறைவான பங்களிப்பையே வழங்கி வருகின்றன.

இன்னும் லயன் அறைகளில் கஷ்டப்படும் மக்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றி, அவர்களுக்கு மூலதனத்தைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம், பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை காணலாம்.

ஒரு வீடு போலவே, செய்கைகளுக்கான காணியும் கிடைக்கும். இவ்வாறு மேற்கொண்டால் அவர்களின் சம்பளப் பிரச்சினைக்குக் கூட இதனால் தீர்வு கிட்டும். பயன்படுத்தப்படாத காணிகளை இவர்களுக்குப் பெற்றுக் கொடுத்து, பெரும் எண்ணிக்கையிலான சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களை உருவாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” – என்றார்.

21 ஆம் திகதி கூட்டு அரசியல் சமர்: சஜித் அணிக்கு மீண்டும் அழைப்பு!

நுகேகொடை கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காவிட்டால் அது அக்கட்சிக்கே அரசியல் ரீதியில் பின்னடைவாக அமையும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரான சஞ்ஜீவ எதிரிமான்ன மேற்படி விடயத்தை சுட்டிக்காட்டினார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் ஜனநாயக விரோத நடைமுறைகளுக்கு எதிராக நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் கூட்டம் மற்றும் எதிர்ப்பு பேரணியை நடத்துவதற்கு முக்கியமான சில எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி , ஐக்கிய தேசியக் கட்சி , பிவிதுரு ஹெல உறுமய , மக்கள் ஐக்கிய முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா மகாஜன கட்சி என்பன இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. எனினும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குறித்த பேரணியில் பங்கேற்காதிருக்க தீர்மானித்தள்ளது.

இந்நிலையிலேயே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

” கூட்டத்தில் பங்கேற்பதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் முடிவெடுக்கும் உரிமை ஐக்கிய மக்கள் சக்திக்கு உள்ளது. அந்த உரிமையை நாம் மதிக்கின்றோம். எனினும், பிரதான எதிர்க்கட்சிக்குரிய பொறுப்பை அக்கட்சி நிறைவேற்றும் என நம்புகின்றோம்.

நுகேகொடை கூட்டத்தில் அக்கட்சி பங்கேற்கும் என நம்புகின்றோம். இன்னும் காலம் உள்ளது. சிலவேளை பங்கேற்காவிட்டால் அது அக்கட்சிக்கே பாதகமாக அமையக்கூடும்.” எனவும் சஞ்ஜீவ எதிரிமான்ன குறிப்பிட்டார்.

முடிவுக்கு வருமா வர்த்தக போர்? அமெரிக்க , சீன ஜனாதிபதிகள் இன்று சந்திப்பு!

 

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று தென்கொரியாவில் சந்தித்து பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளார்.

ஆசிய நாடான தென் கொரியாவின் ஜியாங்ஜு நகரில், ஆசிய – பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு அக்டோபர் 31ம் திகதி மற்றும் நவம்பர் 1ல் நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்பதற்காக தென்கொரியா சென்றுள்ள டிரம்ப், அங்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை இன்று (அக்.30ல்) சந்தித்து பேச உள்ளார்.

ஆறு ஆண்டுகளுக்கு பின் நடைபெற உள்ள இந்த சந்திப்பின்போது அமெரிக்காவின் வரிவிதிப்பு விவகாரம் மற்றும் வர்த்தக போர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள குழு உறுப்பினர்களுக்கு வலை: 82 பேருக்கு சிவப்பு பிடிவிறாந்து

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள குழு உறுப்பினர்களை நாட்டுக்கு கொண்டுவந்து, சட்டத்தின் முன் நிறுத்துவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

அரசாங்க தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின்போதே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

” 216 பேருக்கு எதிராக சிவப்பு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பாதாள குழுவை சேர்ந்தவர்கள் அல்லர். சுமார் 82 பேரே பாதாள குழுவுடன் தொடர்புடையவர்கள். பாதாள குழுவை சேர்ந்தவர்களில் 17 பேர் இதுவரையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.” எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பாதாள குழுவை சேர்ந்தவர்களில் அதிகளவானோர் டுபாயிலேயே இருக்கின்றனர். சிலர் வெளிநாட்டு சிறைகளில் உள்ளனர். இவர்களை கொண்டுவருவதற்குரிய இராஜதந்திர நடவடிக்கையும் இடம்பெறுகின்றது. இந்தோனேசியாவில் முன்னெடுக்கப்பட்டதுபோல எதிர்காலத்தில் நடவடிக்கைகள் இடம்பெறும்.

இந்நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவிட்டு வெளிநாடுகளில் பதுங்கி வாழ்வதற்கு இடமளிக்கமாட்டோம். அவர்கள் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். இதற்கு நீதி அமைச்சின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெற்றுவருகின்றது.” – என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்!

போதைப்பொருள் பேரழிவை நாட்டிலிருந்து வேரோடு அழிப்பதற்கான அரசாங்கத்தின் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று 30 ஆம் திகதி வியாழக்கிழமை ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமாகிறது.

இந்த தேசிய வேலைத்திட்டம் இன்று காலை பத்து மணிக்கு சுகததாச உள்ளரங்கில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

“எமது நாட்டின் எதிர்கால சந்ததியினரைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதற்கான சிறந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கின்றமை சகலரதும் பாராட்டைப் பெற்றுள்ளது. வந்தபின் காப்பதை விடவும் வருமுன் காப்பதே சிறந்தது. இதற்கான விழிப்புணர்வுகளில் நாட்டில் அனைவரும் இனி வரும் காலங்களில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும்.

இந்த தேசிய செயற்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு பரந்தளவிலான பிரசார நடவடிக்கைகள் அவசியமென்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனூடாக போதைப்பொருள் அச்சுறுத்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு பாரிய திட்டமாக இத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது. இந்த செயற்பாடுகளில் எதிர்கொள்ள நேரும் எந்த அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்துவதில்லை என்ற தீர்மானத்தில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.

இதனால், இதற்கான பிரசாத் திட்டங்களை சாத்தியமானதாக முன்னெடுப்பதில் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களின் பங்களிப்பு தொடர்பிலும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இதன்போது, இந்த தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதற்கு அனைத்து ஊடகங்களின் பங்களிப்பை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருத்தார்.

அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் தொடர்பில் விவாதிக்க முடிந்தாலும், நாட்டிலிருந்து போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்கான தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதில் இனிமேலும் விவாதித்துக் கொண்டிருப்பதற்கு இடமில்லை என்றும் போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்கான துரித வேலைத் திட்டத்திற்காக முழு நாடும் ஒன்றுபட வேண்டும் என்றும் இதன்போது ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இளைஞர் சமூகத்தைப் போன்றே பாடசாலை மாணவர்களின் உயிருக்கும் ஆபத்தை விளைவித்து வரும் போதைப் பொருள் வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டு பெருமளவிலான குற்றங்கள் இடம்பெறுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தேசிய மட்டத்தில் அரசியல் தலைமைத்துவம், செயற்திறனாக முடிவெடுக்கும் பொறிமுறை மட்டுமன்றி பரந்த பொதுமக்கள் பங்கேற்புடன் கூடிய தேசிய மட்டத்திலான வேலைத்திட்டத்தின் ஊடாக போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றும் இனம் காணப்பட்டுள்ளது.

போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றக் கும்பல்களின் நிதி பலம் என்பன பொருளாதாரம், சமூகக் கட்டமைப்பு, அரச பொறிமுறை மற்றும் சட்டத்தின் ஆட்சியைக் கூட வீழ்ச்சியடையச் செய்து நாட்டையும் சமூகத்தையும் அழித்து வருவதையும் காணமுடிகிறது.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

பொகவந்தலாவையில் கையெழுத்து வேட்டை ஆரம்பம்!

0
நுவரெலியா மாவட்டம், நோர்வூட் பிரதேச செயலகத்தை நோர்வூட் நகரத்தை அண்மித்து அமைக்கக்கோரும் கை எழுத்து இயக்கம் இன்று பொகவந்தலாவ பகுதியில் ஆரம்பமானது. நோர்வூட் நகரை அண்மித்ததான பகுதியில் நோர்வூட் பிரதேச செயலகத்தை அமைக்க வேண்டும்...

பாகிஸ்தானிலிருந்து புறப்பட்டார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

0
ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi இஸ்லாமாபாத்தில் உயர்மட்ட சந்திப்புகளை நடத்திய பின்னர் அங்கிருந்து புறப்பட்டுள்ளார். அடுத்ததாக ஓமான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அவர் பயணம் விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என ஈரான் அரச...

மெராயாவில் அகற்றப்பட்டது கண்டய்னர் பெட்டி!

0
மெராயாவில் அகற்றப்பட்டது கண்டய்னர் பெட்டி! மெராயா நகரில் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக பலவந்தமாக வைக்கப்பட்டிருந்த கண்டய்னர் , சட்ட ரீதியான நடவடிக்கைகளின் அழுத்தம் காரணமாக இன்று அகற்றப்பட்டுள்ளது. நீண்டகாலமாக மக்களுக்கும் சாரதிகளுக்கும் பெரும் சிரமத்தை...