Home Blog Page 230

மலையகத்தின் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 26வது சிரார்த்த தினம் இன்று அனுஷ்டிப்பு

மலையகத்தின் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 26வது சிரார்த்த தினம் இன்று அனுஷ்டிப்பு

-பெருமாள் கோபிநாத்,
ஊடகப் பிரிவு-இ.தொ.கா

1913 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி பிறந்த சௌமியமூர்த்தி தொண்டமான் ,
மலையக அரசியல் வரலாற்றில் என்றும் மறவாத மாமனிதராக திகழ்கின்றார்.

இலங்கைவாழ் இந்தியர்களின் உரிமைகளுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் போராடிய அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் 1936 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கை இந்திய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவராவார்.

தோட்ட தொழிலார்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த அன்னார் மலையகத்தின் மன்னராகவும், மாமனிதராகவும் இன்றுவரைக்கும் போற்றப்படுகின்றார்.

மலையகத்தின் மூத்த அரசியல்
தலைவரான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் 1999 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி இயற்கை எய்தினார். தனது 89வது வயதில் இயற்கை எய்தும் போது அன்னார், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவராகவும், இலங்கை அமைச்சரவையில் வயது கூடிய அமைச்சராகவும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மலையக மக்களுடைய வாழ்வியலில் பின்னிப் பினைந்த நாமமே அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களுடைய நாமம் ஆகும்.அன்னாரை, மலையக அரசியலில் பிதாமகன் என்று புகழாரம் சூடாதவர்கள் எவரும் இல்லை.

1947 ஆம் ஆண்டு பிரஜா உரிமை சட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவந்து மலையக மக்களுடைய வீட்டுரிமை, நாட்டுரிமை, வாக்குரிமை பறிக்கப்பட்ட போது 1952 ஆம் ஆண்டுகளிலே பல்வேறு சத்தியாகிரகங்களையும், போராட்டங்களையும் செய்து மலையக மக்களுடைய உரிமைகளுக்காக குரல் கொடுத்த பெருந்தகையே அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆவார்.

1987 ஆம் ஆண்டு விசேட சட்டமொன்றை பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்து சத்திய கடதாசியை சமர்ப்பித்து பிரஜா உரிமை, வாக்குரிமை, நாட்டுரிமை என்பவற்றை பெற்றுக்கொடுத்து இன்றும் எம் மக்கள் வாக்களித்து பல அரசியல்வாதிகளை பாராளுமன்றத்திற்கும், மாகாண சபைகளுக்கும், உள்ளூராட்சி மன்றங்களுக்கும் அனுப்புகின்றார்கள் என்றால் அதற்கு காரணமானர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களே.

ஏழைப்பாட்டாளி வர்க்கத்தினரின் நலனை கட்டியெழுப்புவதிலும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் தனது முழுக் கவணத்தையும் செலுத்தி அரும்பணி ஆற்றிவந்தவ செயல் வீரர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் இந்நாட்டு மக்களை பொருத்தவரையில் மறக்க முடியாத செயல் வீரராகவே போற்றப்பட்டிருந்தார்.

தொழிலாளர் வர்க்கத்தினரின் மேம்பாட்டைப் பொருத்தவரை உலகளாவிய மட்டத்தில் அவர்களின் எதிர்ப்பார்ப்புகளையும் அபிலாசைகளையும் தெரியப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தவர். சகல வசதிகளும் கொண்டிருந்த இவர் உண்மையில் விரும்பியிருந்தால் சுகபோக வாழ்க்கையில் தனது காலத்தைக் கழித்திருக்கலாம். ஆனால் அப்படியிருக்க அவர் விரும்பவில்லை. ஏழைத் தோட்டத் தொழிலாளர்களின் அடிமைத்தனத்தை அறுத்தெரிந்து தோட்டக் கூலிகள் என்ற இழிநிலையில் இருந்து அவர்களை மனிதாபிமானமுள்ள பிரஜைகளாக வாழ வழிவகுத்துக் கொடுத்தவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆவார்.

அன்று வாழ வழித்தெரியாது தவித்து நின்ற மனிதர் கூட்டத்தில் தனிப்பெருந் தலைவனாக உருவெடுத்து, அவர்களின் நலனைக் காக்கும் நல்லாசானாக நின்று வழிக்காட்டியவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் என்றால் அது மிகையாகாது. அவர்களுக்கு புத்துயிரூட்டியதுமல்லாமல் தன்னம்பிக்கையுடன் கடமையாற்ற சக்திகொடுத்திருந்தார்.

மக்கள் மத்தியில் தோன்றிய மாற்றுக் கட்சிகளையும்விட மிகவும் சிறந்த முறையில் புனிதமான நோக்கத்துக்காகப் போராடுவதற்கென்றே தனித்துவமான முறையில் சௌமியமூர்த்தி தொண்டமானால் தோற்றுவிக்கப்பட்டதுதான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸாகும். தோட்டத் தொழிலாளர்களின் அந்தஸ்த்தை உயர்த்தும் ஆக்கப்பணியில் ஈடுபட்ட சௌமியமூர்த்தி தொண்டமான் சர்வதேச ரீதியில் அனைத்து தொழிலாளர்களையும் ஒரு குடையின் கீழ் அணித்திரட்ட வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்தார். இதன் விளைவாக சர்வதேச தோட்டத் தொழிலாளர் சம்மேளனத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரசும் முதலாவது உறுப்பினராகச் சேர்ந்துக்கொள்ள வாய்ப்பேற்பட்டது. இதற்கு வித்திட்ட வித்தகர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆவார்.

இதுமட்டுமல்லாமல், இலங்கைத் தொழிலாளரின் பேராளராக அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் சர்வதேச தொழில் மாநாடுகளில் பங்குப்பற்றி அளப்பரிய பங்களிப்புச் செய்துள்ளார். தொழிலாளர் வர்க்கத்தின் பேச்சாளர் என்ற முறையில் சர்வதேச ரீதியில் கீர்த்தியும் புகழும் வாய்க்கப்பெற்ற இவர் சர்வதேச தொழிலாளர் சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுக் கௌரவிக்கப்பட்டிருந்தார் என்று குறிப்பிட்டாக வேண்டும்.

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் தூரநோக்கு கருத்துக்களில் ஒன்றான, “…..எமது வருங்காலச் சந்ததியினர் சமாதானமாகவும் சகோதரத்துடனும் வாழ வழிவகுக்க வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியுடன் ஆளும் கட்சியினரும் இந்நாட்டு மக்களும் நடந்துக்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றேன். இந்த இலக்கை எய்தும் நோக்குடன் நாம் அனைவரும் ஒன்றுபட்டுப் பாடுபட வேண்டும். இதுதான் சுமூக உறவுமுறைக்கான ஒரேவழி…..”

காணி உரிமை, சம்பள உயர்வு கோரி நுவரெலியாவில் பேரணி!

மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக 2 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்பன உட்பட மேலும் சில விடயங்களை வலியுறுத்தி நுவரெலியாவில் இன்று (29) பேரணி முன்னெடுக்கப்பட்டது.

மீரியபெத்த மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 11 ஆண்டுகள் ஆகின்றன. இதனை முன்னிட்டே குறித்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தோட்ட தொழிலாளர் மத்திய நிலையத்தினர் மற்றும் சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பினர் இணைந்து இதற்குரிய ஏற்பாட்டை செய்திருந்தனர்.

பேரணியானது முற்பகல் 11 மணிக்கு காமினி தேசிய பாடசாலைக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்டு நுவரெலியா பிரதான தபால் நிலையத்தின் முன்னால் வீதி ஊடாக லோசன் வீதி மற்றும் நுவரெலியா பிரதான வீதி ஊடாக நுவரெலியா மாநகர சபையின் கேட்போர் கூடம் வரையில் சென்றடைந்தது.

அதனைத் தொடர்ந்து 12. 30 க்கு நுவரெலியா மாநகர சபையில் கேட்போர் கூடத்தில் தெளிவுபடுத்தல் கூட்டம் நடைபெற்றது.
மக்கள் போராட்ட இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் துமிந்த நாகமுவ மற்றும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் உறுப்பினர்கள், தோட்டத் தொழிலாளர் மத்தியநிலையத்தின் செற்பாட்டாளர் மாக்ஸ் பிரபாகர் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்தப் பேரணியின் பிரதான கருப்பொருளாக மீறியபெத்த மண்சரிவு அர்த்தம் நடந்து 11 வருடத்தை கடந்துள்ள நிலையில் அந்தத் தினமான இன்று காணி உரிமை தினமாக பிரகடனப்படுத்தி ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 29ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்டது.

அத்தோடு இதன் முக்கிய நோக்கமாக தோட்ட தொழிலாளிகளின் அடிப்படை சம்பளத்தை 2000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும்,

தோட்ட லயன் வீடுகளை ஒழித்து தனி வீடு தனி, காணியை பெற்றுக் கொடுக்க வேண்டும்,
அடிமைத்தனமான தோட்ட வாழ்க்கைக்கு முடிவு கட்டி உண்மையான உரிமை பெற்றுக் கொடுக்க வேண்டும்,

மலையக இளைஞர்களுக்கு தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக வழங்க வேண்டும் எனவும்,
தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையங்களின் வசதிகளை விரிவுபடுத்த வேண்டும் எனவும்,
உயர்தர கணித விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப துறை சார் கல்விகளுக்கு ஏற்ற வகையில் மலையக தமிழ் மொழி மூலமான பாடசாலைகளை விரித்து செய்ய வேண்டும் எனவும்,

மலையக மக்களை தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும் எனவும்,

வலியுறுத்தி இந்த பேரணி மற்றும் மக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

கஜரூபன் திவ்யா நுவரெலியா

தேயிலை உற்பத்தியை மேம்படுத்த புதிய தொழில்நுட்பம்: இலங்கை, சீன குழுக்கள் ஆராய்வு!

 

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு மற்றும் சீனாவின் யுனான் பிராந்தியத்தின் மக்கள் காங்கிரஸ் நிலைக் குழுவின் உப தலைவரான யான் யாலின் அவர்களின் தலைமையிலான சீன பிரதிநிதிகள் குழுவுக்கும் இடையில் விவசாய அபிவிருத்தி அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது மற்றும் எதிர்கால ஒத்துழைப்பு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் (24) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், தேயிலை, கோப்பி மற்றும் புகையிலை பயிர்ச்செய்கை துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

இங்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, அமைச்சு மட்டத்தில் ஆரம்பகட்ட கலந்துரையாடல் ஏற்கனவே நடத்தப்பட்டதாகவும், இந்தச் சந்திப்பானது சீனத் தூதுக்குழுவிற்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சம்பந்தப்பட்ட துறைகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடுவதை நோக்கமாகக் கொண்டது என்றும் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கையின் அபிவிருத்திச் செயன்முறையில் பல்வேறு கட்டங்களில் சீனாவால் வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஆதரவை பாராட்டிய பிரதி அமைச்சர் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நீண்டகால நட்புறவு தொடர்பிலும் விசேடமாகச் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான உறவுகள் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், இலங்கையின் விவசாயத் துறையை நவீனமயமாக்குவதற்கும், விரிவுபடுத்துவதற்கும் பங்களிக்கும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

தேயிலை, கோப்பி மற்றும் புகையிலைத் தொழில்களின் அபிவிருத்தி குறித்து இரு தரப்பினரும் தமது கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதுடன், நவீன தொழில்நுட்பப் பயன்பாடுகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

குறைந்து வரும் தொழிற்படை காரணமாக எழும் சவால்களைக் வெற்றிகொள்வதற்கும், தேயிலைப் பயிர்ச்செய்கையின் உற்பத்தியை மேம்படுத்துவதற்கும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் அவசியம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், மண்ணின் வளத்தை மேம்படுத்தவும், பயிர் விளைச்சலை அதிகரிக்கவும் நான்காம் தலைமுறை உரங்களைப் (fourth-generation fertilizers) பயன்படுத்துவது பொருத்தமானது என்று சீன தூதுக்குழுவினர் பரிந்துரைத்தனர்.

கோப்பி பயிர்ச்செய்கை குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. கடந்த தசாப்தத்தில் இலங்கையின் கோப்பித் தொழில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண்பித்துள்ளது என்று இங்கு தெரிவிக்கப்பட்டதுடன், கோப்பி பயிர்ச்செய்கைக்காக நில ஒதுக்கீட்டை விரிவுபடுத்துவதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

தற்போது 5,000 ஹெக்டெயாருக்கும் அதிகமான பரப்பளவில் கோப்பி பயிரிடப்படுவதாகவும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் அதனை 10,000 ஹெக்டெயாராக விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாககவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன், இலங்கையின் புகையிலைத் தொழில் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், புகையிலை மூலப்பொருட்களுக்குப் பதிலாக பதப்படுத்தப்பட்ட, பெறுமதி சேர்க்கப்பட்ட தயாரிப்புக்களை சந்தைப்படுத்துவதன் மூலம் சர்வதேச சந்தைக்கு நுழைய முடியும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கு தெரிவித்தனர்.

இலங்கையின் புகையிலைத் தொழில் இன்னும் சிறிய அளவிலான தொழிலாகவே காணப்படுவதாகவும், தொழிற்சாலைகளை மையமாகக் கொண்ட பாரிய அளவிலான தொழில்துறையாக அதனை அபிவிருத்தி செய்வதன் முக்கியத்துவத்தையும் சீனப் பிரதிநிதிகள் குழுவினர் சுட்டிக்காட்டினர்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் உள்ளடங்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள், சீனப் பிரதிநிதிகள் குழுவினர், பாராளுமன்றத்தின் மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

மாகாணசபைத் தேர்தலிலும் என்.பி.பி. வெற்றிநடை!

மாகாணசபைத் தேர்தலில் 9 மாகாண சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றிநடைபோடும் என்று பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது மாகாணசபைத் தேர்தல் சம்பந்தமாக எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” நாடாளுமன்றத்தில் சலுகைகள் கிடைக்காததால் எதிரணி எம்.பிக்கள் சிலர், பதவி துறந்துவிட்டு முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு முற்படுகின்றனர். இது அவர்களுக்குள்ள உரிமை. அதனை நாம் சவாலுக்குட்படுத்தவில்லை.

எதிரணிகள் ஒன்று சேர்ந்து போட்டியிட்டால்கூட எமக்கு சவால் இல்லை. 9 சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறும்.” எனவும் சுனில் வட்டகல தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் பற்றி சிந்திக்காது நிறைவேற்று அதிகார முறைமையை இல்லாதொழிக்க ஒன்றுபடுங்கள்…!

மாகாண சபைகளுக்கு அதிகாரப்பகிர்வு அவசியம். அச்சபைகளை மக்கள் பிரதிநிதிகளே ஆள வேண்டும். எனவே, உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா வலியுறுத்தினார்.

பதுளையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என்பது நாட்டு மக்களின் கோரிக்கையாகும். பல வருடங்களாக இக்கோரிக்கை விடுக்கப்பட்டுவருகின்றது. எனவே, அடுத்த ஜனாதிபதி தேர்தல் பற்றி சந்திக்காமல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்குரிய முக்கிய பொறுப்பு இந்த அரசாங்கத்துக்கு உள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது.

அதேவேளை, மாகாணசபைகளை ஆளுநர்கள் ஊடாக ஆள்வது ஜனநாயகம் அல்ல. எனவே, தமது பிரச்சினைகளை தமது பிரதிநிதிகள் ஊடாக தீர்த்துக்கொள்ளும் உரிமை மக்களுக்கு இருக்க வேண்டும். மாகாணசபைகளுக்கு அதிகாரப்பகிர்வு அவசியம். எனவே, தேர்தல் நடத்தப்பட வேண்டும்.” – என்றார் டிலான் பெரேரா.

புதிய எதிர்க்கட்சி கூட்டு: மலையக கட்சிகள் கைவிரிப்பு?

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி எதிர்க்கட்சிகளால் முன்னெடுக்கப்படவுள்ள அரசாங்க எதிர்ப்பு கூட்டத்தில் மலையக கட்சிகள் பங்கேற்காதென நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

அரசாங்கத்தின் ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் ஜனநாயக விரோத நடைமுறைகளுக்கு எதிராகவே நவம்பர் 21 ஆம் திகதி இந்த கூட்டம் நடத்தப்படுகின்றது என எதிரணிகள் அறிவித்துள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி , ஐக்கிய தேசியக் கட்சி , பிவிதுரு ஹெல உறுமய , மக்கள் ஐக்கிய முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா மகாஜன கட்சி என்பன இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

எனினும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இதில் பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே மலையகத்தின் இரு பிரதான கட்சிகளான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி என்பன இக்கூட்டத்தில் பங்கேற்காது என தெரியவருகின்றது.

புதிய எதிர்க்கட்சி கூட்டணி தொடர்பில் அறிவிப்பு விடுப்பதற்காக கொழும்பில் நடந்த ஊடக சந்திப்பிலும் மேற்படி கட்சிகள் பங்கேற்கவில்லை என தெரியவருகின்றது.

காசாமீது இஸ்ரேல் கோரத் தாக்குதல்: ட்ரம்ப் ஆதரவு!

 

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்த ஜனாதிபதி டிரம்ப், மாஸ் தங்கள் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்தால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்தது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர ஜனாதிபதி டிரம்ப் தீவிர முயற்சி மேற்கொண்டார். இதனால் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

தற்போது, போர் நிறுத்தம் அமுலில் உள்ள நிலையில், ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்த விதிகளை மீறியதாக கூறி, தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டார்.

அதன்படி காசாவில் பல்வேறு இடங்களில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நடவடிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆதரித்தார்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட டிரம்ப் ,

” ஹமாஸ் அமைப்பினர் ஒரு இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரரை கொன்றார்கள். எனவே இஸ்ரேல் படையினர் திருப்பித் தாக்கினர். அவர்கள் திருப்பித் தாக்க வேண்டும். ஹமாஸ் தங்கள் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இந்த தாக்குதல் அமுலில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை எதுவும் பாதிக்காது.” எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மாகாணசபைத் தேர்தல் இழுத்தடிப்பு: அரசுக்கு எச்சரிக்கை!

 

மாகாணசபைத் தேர்தலை பழைய முறைமையின்கீழ் விரைவில் நடத்துமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவரான, நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க மேற்கண்டவாறு வலியுறுத்தினார் .

” மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும். பழைய முறைமையின்கீழ் அத்தேர்தலை நடத்தலாம். அவ்வாறு இல்லையேல் தேர்தல் மேலும் இழுத்தடிக்கப்படக்கூடும். விரைவில் தேர்தல் நடத்தப்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயார். தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையையே நாம் விடுக்கின்றோம்.

மாகாணசபை முறைமைமீது எனக்கு நம்பிக்கை இல்லை. எனினும், வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு மாகாணசபை முறைமை அவசியம். அதனை நான் ஏற்கின்றேன். அதற்குரிய நிர்வாக அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.” எனவும் அவர் குறிப்பிட்டார்.

21 ஆம் திகதி போராட வாருங்கள்: சஜித் அணிக்கு மொட்டு கட்சி அழைப்பு!

நுகேகொடையில் எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்புக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் உறுப்பினரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர மேற்படி அழைப்பை விடுத்தார்.

நுகேகொடை கூட்டத்தில் தமது கட்சி பங்கேற்காது என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ள நிலையிலேயே, மொட்டு கட்சி தரப்பில் இருந்து இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

” இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் வேலைத்திட்டம் 21 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இதில் ஐக்கிய மக்கள் சக்தியும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கின்றோம். இது தனி நபர்களை பிரச்சாரப்படுத்தும் கூட்டம் அல்ல. எனவே, இதில் பங்கேற்பதால் கட்சிகளின் தனித்துவத்துக்கு பாதிப்பு ஏற்படாது.” எனவும் மேற்படி ஊடக சந்திப்பின்போது ஜானக வக்கும்புர தெரிவித்தார்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

பொகவந்தலாவையில் கையெழுத்து வேட்டை ஆரம்பம்!

0
நுவரெலியா மாவட்டம், நோர்வூட் பிரதேச செயலகத்தை நோர்வூட் நகரத்தை அண்மித்து அமைக்கக்கோரும் கை எழுத்து இயக்கம் இன்று பொகவந்தலாவ பகுதியில் ஆரம்பமானது. நோர்வூட் நகரை அண்மித்ததான பகுதியில் நோர்வூட் பிரதேச செயலகத்தை அமைக்க வேண்டும்...

பாகிஸ்தானிலிருந்து புறப்பட்டார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

0
ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi இஸ்லாமாபாத்தில் உயர்மட்ட சந்திப்புகளை நடத்திய பின்னர் அங்கிருந்து புறப்பட்டுள்ளார். அடுத்ததாக ஓமான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அவர் பயணம் விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என ஈரான் அரச...

மெராயாவில் அகற்றப்பட்டது கண்டய்னர் பெட்டி!

0
மெராயாவில் அகற்றப்பட்டது கண்டய்னர் பெட்டி! மெராயா நகரில் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக பலவந்தமாக வைக்கப்பட்டிருந்த கண்டய்னர் , சட்ட ரீதியான நடவடிக்கைகளின் அழுத்தம் காரணமாக இன்று அகற்றப்பட்டுள்ளது. நீண்டகாலமாக மக்களுக்கும் சாரதிகளுக்கும் பெரும் சிரமத்தை...