Home Blog Page 231

கொழும்பு துறைமுகத்தில் ஜப்பான் போர்க்கப்பல்!

ஜப்பானிய கடற்படையின் அகிபோனோ என்ற போர்க்கப்பல், நேற்றுக் காலை நல்லெண்ணப் பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

150.5 மீட்டர் நீளமுள்ள நாசகாரி போர்க்கப்பலான அகிபோனோவில், 158 மாலுமிகள் உள்ளனர்.

கொழும்பில் தரித்து நிற்கும் போது, ​​கப்பலின் பணியாளர்கள் இலங்கையின் சில சுற்றுலா தலங்களை பார்வையிடுவார்கள்.

அத்துடன் இரு கடற்படைப் படைகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பின் பிணைப்புகளை வலுப்படுத்த வடிவமைக்கப்பட்ட இலங்கை கடற்படையுடனான தொழில்முறை பயிற்சிகளும் இடம்பெறவுள்ளன.

ஜப்பானிய போர்க்கப்பல், கொழும்பு கடலில் இலங்கை கடற்படைக் கப்பலுடன் ஒரு பயணப் பயிற்சியை நடத்திய பின்னர், 31ஆம் திகதி நாட்டை விட்டுப் புறப்படும்.

உக்ரைனில் நீல நிறமாக மாறும் நாய்கள்: அணுக் கதிர்வீச்சு காரணமா?

உக்ரைனின் செர்னோபிலில் உள்ள நாய்கள் திடீரென நீலநிறமாக மாறியிருப்பது விலங்கு பராமரிப்பு குழுவினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனின் வடக்கு பகுதியில் உள்ள செர்னோபில் நகரத்தின் அருகே அணுமின் நிலையம் செயல்பட்டு வந்தது. இதன் ஒரு அணு உலையில், 1986ல் விபத்து ஏற்பட்டது.

உலகின் மிகவும் மோசமான அணு விபத்தாக கருதப்படும் இதைத் தொடர்ந்து, அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். விபத்துக்கு பின், அந்நகரத்தின் சுற்றுபுறங்களில் உள்ள பகுதி, செர்னோபில் விலக்கு மண்டலம் என அறிவிக்கப்பட்டது.

இம்மண்டலத்தில், கதிர்வீச்சுக்கு பின் வெளியேறிய மக்களால் கைவிடப்பட்ட செல்லப் பிராணிகள் வசித்து வந்தன.
அதன்படி தற்போது அங்கு, 700 நாய்கள் வசித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த, 40 ஆண்டுகளாக கடுமையான கதிர்வீச்சு நிறைந்த மண்டலத்தில் வசிக்கும் இந்நாய்களின் எதிர்ப்பாற்றல் உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

கடந்த 2017ம் ஆண்டு முதல் இந்நாய்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ கவனிப்புகளை, ‘டாக்ஸ் ஆப் செர்னோபில்’ என்ற அமைப்பின் துணை நிறுவனமான, ‘கிளீன் பியூச்சர்ஸ் பண்டு’ வழங்கி வருகிறது. சமீபத்தில், இங்குள்ள நாய்கள் திடீரென நீல நிறத்தில் மாறியுள்ளன.

இந்த நிறமாற்றம் கடந்த வாரம் இல்லை என்றும், கடந்த 39 ஆண்டுகளுக்கு பின் இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது. இதில் ஒரு நாய், முழுதுமாக நீல நிறத்தில் மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

நிறம் மாற்றத்திற்கான காரணம் என்னவென்று இதுவரை உறுதியாக தெரியவில்லை. இது, ஏதாவதொரு ரசாயனத்தில் விழுந்திருக்கலாம் எனவும், இதனால், அதன் வெளிப்புறம் நீல நிறத்தில் மாறி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த மாற்றம் இவற்றின் ஒட்டுமொத்த உடல்நலனில் உள் பாதிப்பை ஏற்படுத்தி இருக்காது என நம்பப்படுகிறது. எனினும், இதை உறுதிபடுத்த முழுமையான சோதனை மேற்கொள்ள வேண்டும் என குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இந்நாய்களை பிடித்து அவற்றின் நீல நிறத்துக்கான காரணத்தை கண்ட றிந்து, தேவைப்பட்டால் சிகிச்சை அளிப்பதே தற்போதுள்ள முதன்மையான நோக்கம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இந்த நிறமாற்றம், கதிர்வீச்சால் ஏற்பட்ட மரபணு பிறழ்வாக இருக்காது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நிறம் மாறிய போதிலும், இங்குள்ள நாய்கள் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதாக நாய் பராமரிப்பு குழு தெரிவித்துள்ளது. மேலும், அவற்றின் வெளிப்புறத் தோற்றத்தைத் தவிர அவற்றின் இயல்பான நடத்தையில் பெரிதாக எவ்வித மாற்றங்களும் இல்லை என அந்த குழு கூறியுள்ளது.

மரக்கறி விலைப்பட்டியல் (29.10.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (29) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

காசாமீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் உத்தரவு!

ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்த ஒப்பந்த விதிமீறலுக்கு பதிலடியாக காசா மீது சக்திவாய்ந்த தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.

தெற்கு காசாவில் தங்கள் படைகள் மீது ஹமாஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றத்தின் எதிரொலியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பாதுகாப்பு ஆலோசனைகளைத் தொடர்ந்து, காசா பகுதியில் உடனடியாக பலத்த தாக்குதல்களை நடத்துமாறு பிரதமர் நெதன்யாகு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.

இன்னொருபுறம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேல் படைகளால் மீட்கப்பட்ட ஒரு பணயக் கைதியின் உடல் பாகங்களை ஹமாஸ் முன்னதாக ஒப்படைத்ததாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது. இது போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அப்பட்டமான விதிமீறல் என்று நெதன்யாகு கண்டனம் தெரிவித்திருந்தார்.

நெதன்யாகுவின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில நிமிடங்களில், செவ்வாய்க்கிழமை மாலை மற்றொரு பணயக்கைதியின் உடலை ஒப்படைக்கும் திட்டத்தை ஒத்திவைப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

குற்றச்செயல்களில் ஈடுபட்ட 5,467 பேர் கைது!

2025 ஜனவரி முதல் இற்றைவரை 62 லட்சத்துக்கு மேற்பட்டோர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எவ்.யு. வூட்லர் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பங்கேற்றிருந்தார். இதன்போதே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

” போதைப்பொருள் சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கை மற்றும் விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. 2025 ஜனவரி முதல் இதுவரையில் 62 லட்சத்துக்கு மேற்பட்டோர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த பரிசோதனைகள் ஊடாக களவு, துஷ்பிரயோகம், மோசடி உட்பட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 5 ஆயிரத்து 467 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் காலகட்டத்தில், 57 ஆயிரத்துக்கு மேற்பட்ட பிடியாணை கைதுகளும், 38 ஆயிரத்துக்கு மேற்பட்ட திறந்த பிடியாணைகளும் செயல்படுத்தப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் சட்டவிரோதமாக குவித்துள்ள சொத்துகளும் சட்ட நடவடிக்கை மூலம் அரசுடமையாக்கப்பட்டுவருகின்றன.” – எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

வெளிநாடு செல்ல இருந்த இளைஞன் காட்டுக்குள் இருந்து சடலமாக மீட்பு!

கிளிநொச்சியில் காணாமல்போன இளைஞர் ஒருவர் காட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யூனியன் குளத்தைச் சேர்ந்த அப்சரன் (வயது 26) எனும் இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேற்படி இளைஞர் கடந்த 24ஆம் திகதி வெளிநாட்டுக்குப் பயணமாக இருந்த நிலையில் ஐந்து தினங்களுக்கு முன்னர் – கடந்த 19ஆம் திகதி முதல் காணாமல்போனார்.

காணாமல்போன மகனை பெற்றோர்த் தேடி வந்த நிலையில் கடந்த 21ஆம் திகதி அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் உறவினர்களும் இளைஞரைத் தேடி வந்தனர்.

இந்தநிலையில் இளைஞரின் வீட்டில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள காட்டினுள் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக நேற்று அவர் கண்டுபிடிக்கப்பட்டார்.

இளைஞரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் அக்கராயன் பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எதிரணி அரசியல்வாதிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்: சஜித் வலியுறுத்து!

” பொலிஸ் மா அதிபரின் அறிவிப்பு மூலம் ஜகத் விதானவின் குடிமகன் என்ற முறையிலான சிறப்புரிமைகளும், பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலான அவரது சிறப்புரிமைகளும் மீறப்பட்டுள்ளன.” என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.

தற்போதைய பொலிஸ் மா அதிபரின் சில நடவடிக்கைகள் பெரிதும் அரசியல்மயமாகி காணப்படுகின்றன. சில விசாரணைகள் அரசியல் மற்றும் ஊடகக் காட்சிப்படுத்தல்களாக மாற்றப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் பிரச்சார கட்டமைப்பின் ஓர் தரப்பாக பொலிஸ் மா அதிபர் மாறிவிட்டார் என்பதை பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துக்கள் மூலம் தெட்டத் தெளிவாக தெரிகிறது என்று விசேட அறிவிப்பின் ஊடாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

” அச்சுறுத்தல்கள் தொடர்பாக முறைப்பாட்டாளராக செயற்படும் போது அவரை குற்றவாளியாக அழைப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். பாதுகாப்பு வழங்குவது அரசியல்மயமாக்கப்பட்டுவிட்டதா அல்லது பாதுகாப்பை வழங்கும் பெரும் பொறுப்பை அரசியல்வாதிகள் தங்கள் கைகளில் எடுத்துள்ளனரா என்று கேள்வி எழுப்புகிறோம்.

ஜகத் விதானவின் பாதுகாப்பு தொடர்பில் மிகவும் அவதானத்துடன் இருக்கிறோம். அரசாங்கம், பொலிஸ் மா அதிபர், சட்டம் மற்றும் ஒழுங்குக்குப் பொறுப்பான அமைச்சர் உள்ளிட்ட சகலரும் ஜகத் விதானாவின் பாதுகாப்பை உறுதி செய்து, அவரது உயிரைப் பாதுகாக்க வேண்டும்.” எனவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டார்.

220 இலட்சம் குடிமக்களுக்கு பாதுகாப்பைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்  , தவிசாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களினது பாதுகாப்பு தொடர்பில் அதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து பொலிஸ் மா அதிபர் கவனம் செலுத்தி, சகல எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கிறேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில் நாமல்தான் சிறந்த ஜனாதிபதி வேட்பாளர்!

2029 ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் பட்சத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் நாமல் ராஜபக்சவே வேட்பாளராக களமிறங்குவார் . தற்போதைய சூழ்நிலையில் எமது கட்சியில் அவரே சிறந்த வேட்பாளராக உள்ளார். என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில்   நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

“ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. சவாலை ஏற்கக்கூடிய தலைவருக்கே நாட்டு மக்கள் ஆதரவளிப்பார்கள். கட்சிகளும் இத்தகைய நபரையே ஆதரிக்கும்.

கடந்த முறை நெருக்கடியான சூழ்நிலையிலும் நாமல் ராஜபக்ச போட்டியிட்டார். எமது கட்சியில் தற்போதுள்ள சிறந்த வேட்பாளர்தான் நாமல் ராஜபக்ச. அவர்தான் ஜனாதிபதி வேட்பாளர். தன்னை அவர் பலப்படுத்திக்கொண்டுவருகின்றனார்.” எனவும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார்.

அதேவேளை, நவம்பர் 21 ஆம் திகதி நடைபெறும் கூட்டத்துக்கு ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச உட்பட அனைத்து எதிரணி கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தகவல் வெளியிட்டார்.

ஆளணி வெற்றிடங்களை நிரப்புமாறு கோரி யாழ். பல்கலை ஊழியர் சங்கம் போராட்டம்!

ஆளணி வெற்றிடங்களை நிரப்புமாறு கோரி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கும் மாணவர் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கும் பல்கலைக்கழக நிர்வாகம் தீர்வு காண வேண்டும் எனக் கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கல்விசாரா பணியாளர் வெற்றிடங்கள் 355 காணப்படுகின்ற போதிலும் 117 வெற்றிடங்களே நிர்வாகத்தால் கோரப்பட்டுள்ளன. அத்துடன் பல்கலைக்கழக சுற்றுநிருபத்துக்கு முரணாக தனியார் நிறுவனங்களூடாகவும் ஊழியர்கள உள்வாங்கப்பட்டு சேவை ஒப்பந்தத்தினூடாக நியமனம் வழங்கப்படுவது தவறு எனவும் சுட்டிக்காட்டி பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே இந்த முறைகேடு தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் பல்கலைக்கழகப் பேரவைக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டும் அவை புறக்கணிக்கப்பட்டதால் இன்று போராட்டத்தில் இறங்கியுள்ளதாகப் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

உடனடியாக வெற்றிடங்கள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் எனவும், இதற்குக் காரணமாக இருந்த அதிகாரிகளுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

போராட்டத்தின் ஆரம்பத்தில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ரஜீவன் ஊழியர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார் .

அத்துடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவர் கடமையேற்பு!

தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் நளிந்த நியங்கொட இன்று (28) தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இவருக்குரிய நியமனக் கடிதம், பாதுகாப்புச் செயலாளர் ஏயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவால் நேற்று வழங்கப்பட்டது.

இந்நிலையிலேயே மேஜர் ஜெனரல் நியங்கொட இன்று ஸ்ரீஜெயவர்தனபுர கோட்டேயில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் தனது அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இலங்கை இராணுவத்தின் கவசப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் நியங்கொட, இராணுவத்தில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக சேவையாற்றிய மிகவும் திறமையான சிரேஷ்ட அதிகாரி ஆவார் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை, தேசிய புலனாய்வு பிரிவின் தலைவராக சேவையாற்றிய மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய நேற்று (அக்டோபர் 27) தனது 60வது வயது பூர்த்தியானதையிட்டு அந்த பதவியிலிருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

பொகவந்தலாவையில் கையெழுத்து வேட்டை ஆரம்பம்!

0
நுவரெலியா மாவட்டம், நோர்வூட் பிரதேச செயலகத்தை நோர்வூட் நகரத்தை அண்மித்து அமைக்கக்கோரும் கை எழுத்து இயக்கம் இன்று பொகவந்தலாவ பகுதியில் ஆரம்பமானது. நோர்வூட் நகரை அண்மித்ததான பகுதியில் நோர்வூட் பிரதேச செயலகத்தை அமைக்க வேண்டும்...

பாகிஸ்தானிலிருந்து புறப்பட்டார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

0
ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi இஸ்லாமாபாத்தில் உயர்மட்ட சந்திப்புகளை நடத்திய பின்னர் அங்கிருந்து புறப்பட்டுள்ளார். அடுத்ததாக ஓமான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அவர் பயணம் விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என ஈரான் அரச...

மெராயாவில் அகற்றப்பட்டது கண்டய்னர் பெட்டி!

0
மெராயாவில் அகற்றப்பட்டது கண்டய்னர் பெட்டி! மெராயா நகரில் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக பலவந்தமாக வைக்கப்பட்டிருந்த கண்டய்னர் , சட்ட ரீதியான நடவடிக்கைகளின் அழுத்தம் காரணமாக இன்று அகற்றப்பட்டுள்ளது. நீண்டகாலமாக மக்களுக்கும் சாரதிகளுக்கும் பெரும் சிரமத்தை...