Home Blog Page 232

GovPay வழியாக போக்குவரத்துக்கான அபராதம் செலுத்தும் முறை வடக்கிலும் ஆரம்பம்

 

அரசாங்க டிஜிட்டல் கட்டணத்தளமான GovPay மூலம் வட மாகாணத்தில் போக்குவரத்திற்கான அபராதம் செலுத்தும் முறை இன்று (28) கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தார்.

இந்த நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் (DIG) திலக் சி ஏ தனபால, வன்னி பிரிவுக்கான பிரதி பொலிஸ் மாஅதிபர் எச்.ஏ.கே.ஏ. இந்திக்க ஹப்புகொட, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிக்கான பிரதி பொலிஸ் மாஅதிபர் ஜே.ஏ. சந்திரசேன, யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறைக்கான பிரதி பொலிஸ் மாஅதிபர் ஜி.எச்.மாரப்பன, வவுனியா பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் [SSP) டபிள்யூ.ஏ.சோமரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,

“டிஜிட்டல்மயமாக்கலை நாடு முழுவதும் அமுல்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் வினைத்திறனான சேவையை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. கட்டணங்கள் மட்டுமின்றி, அபராதத்தையும் GovPay மூலம் செலுத்துவதன் ஊடாக கால வீணடிப்பு குறைக்கப்படுகின்றது. பொலிஸாரின் சேவையையும் இது இலகுபடுத்தும். மக்களுக்கும் நேர வீணடிப்பு ஏற்படாது.

GovPay மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தும் நடைமுறை மேல் மற்றும் தென்மாகாணங்களில் ஆரம்பிக்கப்பட்டது. மூன்றாவதாக தற்போது வடக்கு மாகாணத்திலும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்குரிய உபகரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு சில பொலிஸாரின் தவறான நடவடிக்கையால் ஒட்டுமொத்த பொலிஸ் துறைக்கும் களங்கம் ஏற்படும் நிலை காணப்பட்டது. நவீன முறைமை என்பது வெளிப்படைத்தன்மையானது. எனவே, பொலிஸார் மீதான விமர்சனங்களுக்கும் இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

இன்றைய நவீன உலகில், நவீன தொழில்நுட்பத்தை நோக்கி நாமும் நகரவேண்டும். அப்போதுதான் உலகை வென்று முன்நோக்கிச் செல்ல முடியும். இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் பொறுப்பை எமது ஊடக தோழர்கள் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன்” என்றார்.

 

ட்ரம்ப் நோபல் பரிசுக்கு தகுதியானவர்: ஜப்பான் பிரதமர் ஆதரவு குரல்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசினை வழங்க ஜப்பானின் புதிய பிரதமர் சனே தகைச்சி ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஆசியாவில் பயணம் மேற்கொண்டு வரும் ட்ரம்ப், மலேசியாவில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு, தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட அவர் மத்தியஸ்தம் செய்தார். இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதனைத் தொடர்ந்து ஜப்பான் சென்ற ட்ரம்ப், அந்நாட்டின் புதிய பிரதமர் சனே தகைச்சியைச் சந்தித்து பேசசு; நடத்தினார்.

இதன்போது டொனால்ட் ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்பதை ஜப்பான் ஆதரிப்பதாக சனே தகைச்சி கூறியதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜப்பான் தனியாக அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரம்ப் உடனான சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட தகைச்சி, “தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை உறுதி செய்வதில் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். மேலும், மத்தியக் கிழக்கில் ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் ஒரு வரலாற்றுச் சாதனையாகும்” என தெரிவித்துள்ளார்.

ஜப்பான் பயணத்தைத் தொடர்ந்து ட்ரம்ப், தென் கொரியா செல்கிறார். அங்கு நடைபெற இருக்கும் ஆசியா – பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் அவர், உச்சி மாநாட்டின் இடையே சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர தொடர்ந்து போராடி வரும் அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டது. எனினும், அதற்கு முன்பு வரை அந்த விருதுக்காக ட்ரம்ப் தொடர்ந்து போராடினார்.

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர், தாய்லாந்து – கம்போடியா இடையிலான போர், இஸ்ரேல் – காசா இடையேயான போர் உட்பட 8 போர்களை தான் முடிவுக்குக் கொண்டு வந்ததாக ட்ரம்ப் தொடர்ந்து கூறி வந்தார்.

ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என இஸ்ரேல், பாகிஸ்தான், கம்போடியா, தாய்லாந்து போன்ற நாடுகளின் தலைவர்கள் வெளிப்படையாக தெரிவித்தனர். இவர்களின் வரிசையில் ஜப்பான் பிரதமரும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ செலவுக்கு பணம் இல்லை: பதுளை வீட்டை விற்றார் டிலான் பெரேரா

 

” நான் நோய் வாய் பட்டிருந்தேன். எனக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டதைவிடவும் அதிக செலவு ஏற்பட்டது. அதனை ஈடுசெய்வதற்கு என்னிடம் பணம் இருக்கவில்லை. எனவே, பதுளையில் நான் 63 வருடங்களாக வாழ்ந்த வீட்டை விற்பனை செய்துவிட்டேன். எனது தந்தை வழி உரிமையாகவே எனக்கு இந்த வீடு கிடைத்தது.

வீட்டை விற்ற பணத்தில் மருத்து செலவை செலுத்திவிட்டேன். எஞ்சிய பணத்தில் சிறிய வீடொன்றை கட்டிக்கொண்டு எஞ்சிய காலத்தை கடந்த வேண்டியதுதான். இங்கிருந்தே அரசியலிலும் ஈடுபடுவேன். ஜனாதிபதி நிதியத்திடம் பணம் கேட்பதற்கு நான் முற்படவில்லை. ”

இவ்வாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

பதுளையில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

ஊழல் எதிர்ப்பு வேலைத்திட்டம்: 4 புதிய மேல் நீதிமன்றங்களை ஸ்தாபிக்க ஏற்பாடு!

 

ஊழல் எதிர்ப்பு தேசிய செயற்பாட்டுத் திட்டம் (2025-2029) இன் பிரகாரம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பணிப்பொறுப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்காக புதிய மேல்நீதிமன்றங்கள் சிலவற்றை துரிதப்படுத்தி தாபிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, 04 மேல்நீதிமன்றங்களைத் தாபிப்பதற்காக தற்போது பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் கீழுள்ள கீழ்வரும் முகவரிகளில் அமைந்துள்ள கட்டிடங்களை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு ஒப்படைப்பதற்காக தமது அமைச்சின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் அமைச்சரவையைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

அதற்காக அமைச்சரவை உடன்பாடு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

• இலக்கம் B 88, கிறகெரி வீதி, கொழும்பு 07

• இலக்கம் V 76, பௌத்தாலோக்க மாவத்த, கொழும்பு 07
6

• இலக்கம் B 108, விஜேராம வீதி, கொழும்பு 07

• இலக்கம் B 12, ஸ்டென்மோர் சந்திரவங்கய, கொழும்பு 07

பாதாள குழு விவகாரம்: வடக்குக்கு வெள்ளையடிப்பு: மஹிந்த அணி சீற்றம்!

பாதாளகுழு விடயத்தில் தெற்குக்கு கறுப்பு முத்திரை குத்திவிட்டு, வடக்குக்கு வெள்ளையடிப்பு செய்யும் நடவடிக்கையே தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் இடம்பெறுகின்றது என்று கடும் சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்து வெளியிடுகையிலேயே முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இவ்வாறு விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

“ தெற்குக்கு கறுப்பு கரையை ஏற்படுத்திவிட்டு வடக்குக்கு வெள்ளையடிப்பு செய்யும் நடவடிக்கை தற்போது இடம்பெறுகின்றது. பாதாள குழு, ஐஸ் மற்றும் போதைப்பொருள் உள்ளிட்ட விடயங்கள் தெற்குமீது சுமத்தப்படுகின்றது.

ஆனால் வடக்கில் இருந்தே இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு இவர்கள் (குற்றவாளிகள்) தப்பிச்சென்றுள்ளனர். இது பற்றி கதைக்கப்படுவதில்லை. மாறாக தெற்குக்கு கறுப்பு முத்திரை குத்தும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

டயஸ் போராக்களை திருப்திப்படுத்துவதற்காகவே இப்படி செய்யப்படுகின்றது. “ – எனவும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார்.

21 ஆம் திகதி கூட்டு பேரணி: சஜித் அணி கைவிரிப்பு!

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது என்று அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

எனினும், அரசாங்கத்தின் ஒடுக்குமுறை மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக எதிரணிகளுடன் இணைந்து பயணிக்ககூடிய இடங்களில் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து செயற்படும் எனவும் அவர் கூறினார்.

அரசாங்கத்தின் ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் ஜனநாயக விரோத நடைமுறைகளுக்கு எதிராகவே நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் பேரணியை நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பன திட்டமிட்டுள்ளன.

ரஷ்யாவின் அணுசக்தி ஏவுகணை சோதனை வெற்றி

அணு சக்​தி​யால் இயங்​கும் புரேவெஸ்ட்​னிக் என்ற ஏவு​கணையை ரஷ்யா வெற்​றிகர​மாக பரிசோ​தித்​துள்​ளது. இதை எந்த வகை வான் பாது​காப்பு ஏவு​கணை​களாலும் நடு​வானில் தடுத்து அழிக்க முடி​யாது என கூறப்​படு​கிறது.

ரஷ்யா ‘9எம்​730 புரேவெஸ்ட்​னிக்’ என்ற அணு சக்தி ஏக்தி ஏவு​கணையை கடந்த 2018-ம் ஆண்டு அறி​முகம் செய்​தது.

சக்​தி​வாய்ந்த ஏவு​கணை தயாரிப்பு திட்​டத்​தில் ஈடுட​வேண்​டாம் என்ற ஒப்​பந்​தத்​தில் இருந்து அமெரிக்கா கடந்த 2001-ம் ஆண்டு வெளி​யேறியது. இதையடுத்து நேட்டோ படைகள் விரிவுபடுத்​தப்​பட்​டன. அமெரிக்​கா​வின் வான் பாது​காப்பு ஏவு​கணை திட்​டங்​களும் விரிவுபடுத்​தப்​பட்​டன.

இதையடுத்து 9எம்​730 புரேவெஸ்ட்​னிக் என்று அணு சக்தி ஏவு​கணையை ரஷ்யா அறி​முகம் செய்​தது. இதை அமெரிக்​கா​வின் வான் பாது​காப்பு ஏவு​கணை திட்​டத்​துக்​கான ரஷ்​யா​வின் பதிலடி நடவடிக்கை என ரஷ்ய ஜனாதிபதி புதின் கூறி​னார்.

இந்த ஏவு​கணையை எவ்​வளவு தூரம் வேண்​டு​மா​னாலும் செலுத்த முடி​யும். இது பறந்து செல்​லும் பாதையை​யும் கணிக்க முடி​யாது என கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில் இந்த ஏவு​கணையை ரஷ்யா கடந்த 21-ம் திகதி பரிசோதனை செய்​தது. இந்த ஏவு​கணை வானில் சுமார் 15 மணி நேரம் பறந்து 14,000 கி.மீ தூரம் சென்​ற​தாக ரஷ்ய ராணுவத் தளபதி ஜெனரல் வலேரி கெராசிமோவ் கூறி​னார்.

இந்த சோதனை வெற்​றிகர​மாக முடிந்​ததையடுத்து உக்​ரைன் போரை நடத்தி வரும் ராணுவ உயர் அதி​காரி​களு​டன் புதின் பேசி​னார்.

போர்க்​கால சீருடை அணிந்து பேசிய புதின், ‘‘இது போன்ற சக்​தி​வாய்ந்த ஏவு​கணை உலகில் எந்த நாட்​டிட​மும் இல்​லை. இது போன்ற ஆயுதத்தை உரு​வாக்​கு​வது சாத்​தி​யமில்லை என ரஷ்ய நிபுணர்​கள் முன்பு கூறினர். ஆனால் தற்​போது, இந்த முக்​கிய பரிசோதனை வெற்​றிகர​மாக நிறைவடைந்​துள்​ளது’’ என பெரு​மிதத்​துடன் கூறி​னார்.

உக்​ரைன் போர் நிறுத்​தத்தை கொண்​டுவர ரஷ்​யா​வுக்கு அழுத்​தம் கொடுக்​கும் வகை​யில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடும் நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறார். இந்த நேரத்​தில் ரஷ்யா அணு சக்தி ஏவு​கணையை பரிசோ​தித்​துள்​ளது, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மேற்​கத்​திய நாடு​களுக்கு ஜனாதிபதி புதின்​ விடுக்​கும்​ எச்​சரிக்​கை​யாக இது கருதப்​படுகிறது.

இராமேஸ்வரம் – தலைமன்னார் கப்பல் சேவை குறித்து ஆராய்வு!

 

இராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே புதிய கப்பல் சேவையை ஆரம்பிப்பது குறித்து, இந்தியாவும் இலங்கையும் பேச்சு நடத்தியுள்ளன.

மும்பையில் நடைபெறும், 2025 ஆம் ஆண்டு இந்திய கடல்சார் வார நிகழ்வில் கலந்து கொண்டுள்ள இந்தியாவின் ​​துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், மற்றும், இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக ஆகியோருக்கு இடையில் நேற்று இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே புதிய பாதையைத் தொடங்குவதன் மூலம், இந்தியா-இலங்கை கடல்சார் இணைப்பை விரிவுபடுத்துவதற்கான சாத்தியங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையே தற்போதுள்ள பாதையுடன் சேர்த்து, இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே புதிய படகுப் பாதையை அமைப்பதற்கான சாத்தியங்களை இந்தியா ஆராய்ந்து வருகிறது என்று இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

என்.பி.பி. அரசை 5 வருடங்களுக்கு ஆளவிடக்கூடாது என்பதே மக்களின் கோரிக்கை: மஹிந்த அமரவீர

 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்நாட்டை ஐந்து வருடங்களுக்கு ஆளக்கூடாது எனவும், அரசை விரட்டி அடிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நாட்டு மக்கள் கோரி வருகின்றனர் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர், முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கொழும்பில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,

“ இந்த அரசாங்கத்துக்கு கடந்த ஒரு வருட காலப்பகுதியில் நாம் எவ்வித இடையூறையும் ஏற்படுத்தவில்லை. நாட்டை மேம்படுத்துவதற்கு இடமளிக்கப்பட்டது. வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டு எவ்வித தடையையும் ஏற்படுத்தவில்லை. இந்நாட்டுக்கு வரவேண்டாம் என வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தவில்லை.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகவே அரசாங்கத்துக்கு அவகாசம் வழங்கப்பட்டது. எனினும், உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை.

இந்த அரசாங்கம் ஐந்து வருடங்களுக்கு பயணிப்பதற்கு இடமளிப்பதற்கு நாம் தயார். ஆனால் இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புமாறு அரசாங்கத்துக்கு வாக்களித்த மக்கள் வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர். இது பற்றி எம்மிடமும் கோரிக்கை விடுத்துவருகின்றனர். ஏன் மௌனம் காக்கின்றீர்கள்? நாட்டை சீரழிக்க இடமளிக்க வேண்டாம் என மக்கள் எம்மிடம் வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.” -என்றார் மஹிந்த அமரவீர.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

பொகவந்தலாவையில் கையெழுத்து வேட்டை ஆரம்பம்!

0
நுவரெலியா மாவட்டம், நோர்வூட் பிரதேச செயலகத்தை நோர்வூட் நகரத்தை அண்மித்து அமைக்கக்கோரும் கை எழுத்து இயக்கம் இன்று பொகவந்தலாவ பகுதியில் ஆரம்பமானது. நோர்வூட் நகரை அண்மித்ததான பகுதியில் நோர்வூட் பிரதேச செயலகத்தை அமைக்க வேண்டும்...

பாகிஸ்தானிலிருந்து புறப்பட்டார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

0
ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi இஸ்லாமாபாத்தில் உயர்மட்ட சந்திப்புகளை நடத்திய பின்னர் அங்கிருந்து புறப்பட்டுள்ளார். அடுத்ததாக ஓமான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அவர் பயணம் விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என ஈரான் அரச...

மெராயாவில் அகற்றப்பட்டது கண்டய்னர் பெட்டி!

0
மெராயாவில் அகற்றப்பட்டது கண்டய்னர் பெட்டி! மெராயா நகரில் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக பலவந்தமாக வைக்கப்பட்டிருந்த கண்டய்னர் , சட்ட ரீதியான நடவடிக்கைகளின் அழுத்தம் காரணமாக இன்று அகற்றப்பட்டுள்ளது. நீண்டகாலமாக மக்களுக்கும் சாரதிகளுக்கும் பெரும் சிரமத்தை...