Home Blog Page 233

கண்ணீர்மல்க மன்னிப்பு கோரினார் விஜய்

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சந்தித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆறுதல் கூறினார்.

கூட்ட நெரிசல் சம்பவத்துக்காகவும், கரூருக்கு நேரில் வந்து ஆறுதல் கூற இயலாததற்காகவும் அவர்களிடம் விஜய் மன்னிப்பு கோரிஉள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

கரூரில் கடந்த செப்-27-ம் திகதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில், நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் விஜய் சந்தித்து ஆறுதல் கூறும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதற்காக, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நேற்று முன்தினம் 2 பேருந்துகள் மூலம் அழைத்து வரப்பட்டு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். உயிரிழந்தவரின் குடும்பத்தைச் சேர்ந்த 5 நபர்களுக்கு மட்டுமே அனுமதிவழங்கப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில், நேற்று காலை ; விஜய் விடுதிக்கு வந்து, உயிரிழந்த 37 குடும்பத்தில் இருந்து 235 பேரை சந்தித்து ஆறுதல் கூறினார். இதில் உயிரிழந்த அஜிதா என்ற கல்லூரி மாணவியின் குடும்பத்தில் இருந்து மட்டும் யாரும் வரவில்லை.
ஒவ்வொரு குடும்பத்தினரையும் தனித்தனியாக சந்தித்து சுமார் 5 நிமிடம் பேசி ஆறுதல் கூறியதாக கூறப்படுகிறது.

கூட்ட நெரிசல் சம்பவத்துக்காகவும், கரூருக்கு நேரில் வந்து ஆறுதல் கூற இயலாததற்காகவும் அனைவரிடமும் விஜய் கண்ணீர்மல்க மன்னிப்பு கோரி உள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக விஜய் கூறியதாகவும் தெரிகிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீடு தவெக சார்பில் வழங்கப்படும் என்றும் விஜய் உறுதி அளித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், ஆதவ் அர்ஜூனா உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி நிறைவடைந்ததும் அனைவரும் மீண்டும் இரண்டு பேருந்துகள் மூலம் கரூர் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நிகழ்ச்சியின்போது, விடுதி வளாகத்தில் பாதுகாப்புக்காக ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

21 ஆம் திகதி கூட்டு அரசியல் சமர்: மலையக கட்சிகளுக்கும் அழைப்பு!

எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து, மக்களின் குரல் என்ற புதிய எதிர்க்கட்சி கூட்டணி நேற்று உதயமானது.

இக்கூட்டணியில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி , பிவிதுரு ஹெல உறுமய , மக்கள் ஐக்கிய முன்னணி, ஸ்ரீலங்கா மகாஜன கட்சி மற்றும் நவ ஜனதா பெரமுன ஆகியன இடம்பெற்றுள்ளன.

அரசாங்கத்தின் ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் ஜனநாயக விரோத நடைமுறைகளுக்கு எதிராக நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் ஒரு பாரிய பேரணியை இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணி நடத்தவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

அதன் பின்னர் நாடு முழுவதும் தொடர் பேரணிகள் நடத்தப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மக்;களின் வாழும் உரிமையை பாதுகாக்க வேண்டும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என நினைப்பவர்கள் நிச்சயம் இக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று உதய கம்மன்பில அழைப்பு விடுத்தார்.

அதேவேளை, 21 ஆம் திகதி கூட்டு சமரில் பங்கேற்குமாறு மலையக கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், இதில் பங்கேற்பது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பன இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை. தமிழ் முற்போக்கு கூட்டணி அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி இதில் பங்கேற்காது.

2015 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வி அடைந்த பின்னர், மஹிந்த சூறாவளி எனும் பிரச்சாரம் நுகேகொடையில் இருந்தே ஆரம்பமானது என்பது குறிப்பிடத்தக்கது.

மரக்கறி விலைப்பட்டியல் (28.10.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

யாழில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தியவர் கைது!

யாழ் நகரில் இலக்க தகடற்ற புதிய காரில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற நபரொருவர் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டார்.

யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது 11கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் கைப்பற்றப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபர் பிரபல வர்த்தகரின் மகன் எனவும் ஏற்கனவே ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டவரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் கைதிலிருந்து தப்புவதற்காக தமக்கு கையூட்டு வழங்க முயற்சித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

21 ஆம் திகதி போராட்டம்: 21 ஆம் திகதி போராட்டம்: ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது?

எதிரணிகளால் எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது என தெரியவருகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பிவிதுரு ஹெல உறுமய உள்ளிட்ட எதிரணிகள் நேற்று கொழும்பில் ஊடக சந்திப்பை நடத்தின.

தேசிய மக்கள் சக்தியின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையிலும், ஜனநாயகம் மற்றும் மக்களின் வாழும் உரிமையை பாதுகாக்குமாறு கோரியுமே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டது.

எனினும், குறித்த ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தி பிரதிநிதிகள் எவரும் பங்கேற்கவில்லை. இந்நிலையிலேயே 21 ஆம் திகதி கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது என தெரியவருகின்றது.

அஸ்வெசும குறித்து உலக வங்கி பிரதிநிதிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பு

“அஸ்வெசும” சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்கும்போது புதுப்பிக்கப்பட்ட மற்றும் துல்லியமான தரவுக் கட்டமைப்பு அவசியம் என உலக வங்கியின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

இதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் சர்வதேச அனுபவத்தை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள், பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், உலக வங்கியின் பிரதிநிதிகள், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருக்கிடையில் கடந்த 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே ‘அஸ்வெசும திட்டம்’ குறித்து இவ்வாறு கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் (கலாநிதி) உபாலி பன்னிலகே, பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், உலக வங்கியின் சமூகப் பாதுகாப்புத் தொடர்பான சிரேஷ்ட பொருளாதார நிபுணர் பிரான்செஸ்கா லமன்னா (Francesca Lamanna) மற்றும் சிரேஷ்ட பாதுகாப்பு நிபுணர் ஸ்ரீனிவாஸ் வரதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சமூகப் பாதுகாப்புக்கான தரவுத்தளத்தை உருவாக்குவதன் மூலம், உண்மையிலேயே வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய தனிநபர்கள், குடும்பங்களை அடையாளம் காண முடியும் என உலக வங்கியின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். பிரஜைகளின் தகவல்களை சமூகப் பாதுகாப்பு தரவுத்தளத்தில் உள்ளிடுவது அவர்களை அஸ்வெசும அல்லது பிற தொடர்புடைய சலுகைகளுக்கு தகுதியுடையவர்களாக மாற்றாது என்றும், உள்ளிடப்பட்ட தரவைச் சரிபார்க்க முடியும் என்றும், தொடர்புடைய சலுகைகளை துல்லியமாக அடையாளம் காண முடியும் என்றும் இந்தக் குழு வலியுறுத்தியது.

இந்தச் சமூகப் பாதுகாப்பு அமைப்பு ஒரு நாட்டிற்கு ஒரு உற்பத்தி முதலீடாகும், எனவே தரவுத்தளத்தைப் புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.
“அஸ்வெசும” சலுகைகளை வழங்குவதில் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

அதன்படி, கிராம ரீதியாக அமைக்கப்படும் குழுக்களின் மூலம் அஸ்வெசும பயனாளிகளைத் தேர்ந்தெடுத்து, சம்பந்தப்பட்ட கிராமத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின் பெயர்களைக் காண்பிப்பதன் மூலம் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய முடியும் என உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

இங்கு கருத்துத் தெரிவித்த, “அஸ்வெசும” திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலர்களுக்கு இந்தத் திட்டம் குறித்து போதுமான தகவல்கள் இல்லாததால் சில தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களின் வகிபாகம் குறித்து முறையான தெளிவுபடுத்தல்களை வழங்குவதன் ஊடாக இத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தத் தாம் ஒத்துழைப்பு வழங்கிவருவதாகவும் தெரிவித்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உலக வங்கி ஆலோசகர் ஷாலிகா சுபசிங்க மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

தங்கக்கலை தோட்ட அலுவலகம் மூடப்படுவதற்கு எதிராக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்!

ஹட்டன் பிலான்டேஷனின் நிர்வாகத்திற்குட்பட்ட தங்கக்கலை தோட்ட அலுவலகம் மூடப்பட்டு ஊவாக்கலை தோட்டத்திற்கு மாற்றப்படுவது தொடர்பாக தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, இன்று காலை முதல் சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

கேம்பிரி மேற்பிரிவு, கேம்பிரி கீழ்பிரிவு, தங்கக்கலை மேற்பிரிவு, கெல்சி தங்கக்கலை உள்ளிட்ட பிரிவுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்

இன்று தோட்ட முகாமையாளருடன் நடைபெற்ற கலந்துரையாடலில், அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்க பிரதிநிதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்று தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவாக வலியுறுத்தினர்.

எனினும், முகாமையாளரை அழைத்து மக்கள் பிரதிநிதிகள் கலந்துரையாடிய போதிலும் நிர்வாகம் எந்தவிதமான சுமூகமான தீர்வுக்கும் இணக்கம் தெரிவிக்கவில்லை. இதனால் தொழிலாளர்கள் அதிருப்தியடைந்த நிலையில் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர்.

தொழிலாளர்கள் தெரிவித்ததாவது, “தங்கக்கலை அலுவலகம் மூடப்பட்டு மாற்றப்படுவது எங்கள் வாழ்வாதாரத்துக்கும், பணியிட வசதிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். நியாயமான தீர்வு கிடைக்கும் வரை வேலை நிறுத்தம் தொடரும்,” என தெரிவித்தனர்.

நிலைமைக்கமைவாக லிந்துலை பொலிஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.

தொழிலாளர்கள் தங்களின் உரிமை, வேலை பாதுகாப்பு, மற்றும் வாழ்வாதாரத்தைக் காக்கும் நோக்கில் உறுதியுடன் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

பொலிஸ்மா அதிபரின் அறிவிப்பு குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கடும் அதிருப்தி!

பொலிஸ்மா அதிபரின் அறிவிப்பானது சுதந்திரமான பொலிஸ் சேவையின் இருப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு ,

“ அரசியல் அல்லாத காரணங்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினருக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். அது என்னவென்று தெரியப்படுத்த வேண்டியது பொலிஸ்மா அதிபரின் பொறுப்பாகும்.

அவ்வாறு இல்லாமல் மறைமுகமாக அறிக்கை வெளியிடுவது பொதுமக்கள் சேவையில் ஈடுபட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினருக்கு செய்யப்படும் அவமதிப்பாகும். இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

பொலிஸ்மா அதிபரின் கூற்றில் வெளிப்படுவது முறைப்பாட்டாளரையும், பாதிக்கப்பட்டவரையும் குற்றவாளியாக மாற்றும் முயற்சியாகும்.

அரசாங்கத்தின் பிரச்சார திட்டத்திற்கு ஏற்ப பொலிஸ்மா அதிபரின் அறிக்கைகள் சுதந்திரமான பொலிஸின் இருப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரங்களை பொலிஸ்மா அதிபருக்கு வழங்கி, பொலிஸ்மா அதிபர் நினைத்தபடி அறிக்கைகளை வெளியிட்டு மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகளில் நாடு அடக்குமுறை பொலிஸ் அதிகார இருளின் நிழலாகவே நாங்கள் காண்கிறோம்.

இந்த ஆபத்து அனைத்து ஜனநாயக அரசியல் நீரோட்டங்களில் ஈடுபடும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்பதை நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம்.

சந்தேக நபர்களைக் கைது செய்வதை ஊடக சந்திப்பாக மாற்றும் பொலிஸ் நடவடிக்கைகள் மூலம் உண்மையான கேள்விகளை மறைக்க எடுக்கும் குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியான ஜகத் விதான நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பு தொடர்பான தீர்மானத்தை குறைத்து மதிப்பிடுவதற்கு எதிராக நாங்கள் எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.” – என்றுள்ளது.

 

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் அரசு தீவிரம்: விரைவில் கட்சி தலைவர்கள் கூட்டம்!

மாகாணசபைத் தேர்தலை இயலுமானவரை விரைவில் நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதற்கான ஓர் முக்கிய நகர்வாக 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை மக்கள் நலன் சார்ந்த பாதீடாக முன்வைப்பதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

மக்களுக்கு நேரடியாக தாக்கம் செலுத்தும் விதத்தில் புதிய வரிகள் எதுவும் அமுல்படுத்தப்படமாட்டாதென தெரியவருகின்றது.

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பாதாள குழுக்கள் ஒடுக்கல் போன்ற செயற்பாடுகளால் மக்கள் மத்தியில் அரசுக்கு ஆதரவு ஏற்பட்டுள்ளது.

இதனையும் ஒரு வாய்ப்பாக கருதி விரைவில் தேர்தலுக்கு செல்வதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

அதேவேளை, மாகாணசபைத் தேர்தல் சம்பந்தமாக பாதீட்டு கூட்டத்தொடருக்கு மத்தியில் கட்சி தலைவர்கள் கூட்டத்தையும் ஜனாதிபதி நடத்தவுள்ளார்.

எந்த முறையில் தேர்தலை நடத்துவது என்பது பற்றி உறுதியான முடிவொன்றை எடுப்பதற்காகவே இக்கூட்டம் நடத்தப்படவுள்ளதென அறியமுடிகின்றது.

திருமண நிகழ்ச்சிகளில் பெண்கள் தங்க நகைகள் அணிய கட்டுப்பாடு

 

உத்​த​ராகண்ட் மாநிலம், ஜான்​சர் – பவார் பகு​தி​யில் உள்​ளது கந்​தார் கிராமம். பழங்​குடி​யின மக்​கள் வசிக்​கும் இந்த கிராமத்​தில் சமீபத்​தில், பழங்​குடி​யின தலை​வர்​களின் கூட்​டம் நடை​பெற்​றது. அப்​போது திரு​மணம் மற்​றும் குடும்ப நிகழ்ச்​சிகளில் திரு​மண​மான பெண்​கள், தங்க நகைகள் அணிய கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்​டன.

அதன்​படி, திரு​மணம் போன்ற நிகழ்ச்​சிகளில் திரு​மண​மான பெண்​கள், தங்​கத்​தில் கம்​மல், மூக்​குத்​தி, தாலி ஆகிய​வற்றை மட்​டும் அணி​ய​லாம். மற்​றபடி ஆடம்​பர​மான தங்க நகைகளை அணிய கூடாது. மீறி​னால் ரூ.50,000 அபராதம் விதிக்​கப்​படும் என்று கிராம தலை​வர்​கள் அறி​வித்​தனர்.

திருமண நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​ப​தற்​காக ஏழை மக்​கள் கடன் வாங்கி செலவு செய்​யும் நிலை உள்​ளது. ஆடம்பர செலவு செய்​வது, தங்க நகைகளை போட்​டுக் கொண்டு தங்​கள் பணக்​காரத்​தனத்தை காட்​டு​வது போன்​றவற்றை தடுக்​கவே இந்த முடிவு எடுக்​கப்​பட்​டது என்று கிராம தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆரம், நெக்​லஸ் போன்ற பெரிய பெரிய தங்க நகைகளை இனிமேல் திரு​மணம் போன்ற நிகழ்ச்​சிகளில் பெண்​கள் அணிய கூடாது. தங்​கத்​தின் விலை நாளுக்கு நாள் அதி​கரித்து வரு​கிறது. ஏழைகள் தங்​கத்தை வாங்க முடி​யாது. அதனால் அவர்​கள் கடன் வாங்​கி​யா​வது திரு​மணம் போன்ற நிகழ்ச்​சிகளில் பங்​கேற்க நினைக்​கின்​றனர். இது​போன்ற ஆடம்பர கலாச்​சா​ரத்​துக்கு முற்​றுப்​புள்ளி வைக்​கவே இந்த நடவடிக்கை எடுத்​துள்​ளோம்.

திரு​மணம் என்​பது புனித​மான நிகழ்ச்​சி. அது தங்​கள் செல்​வத்​தை, பணக்​காரத்​தனத்தை காட்​டும் மேடை​யாக மாற்​றக் கூடாது. சமூகத்​தில் சமத்​து​வத்தை கொண்டு வரவேண்​டும். அதற்கு இது​போன்ற கட்​டுப்​பாடு​கள் அவசி​யம். திரு​மணம் போன்ற நிகழ்ச்​சிகளில் ஏழை – பணக்​காரர் என்ற வேறு​பாடு இருக்க கூடாது. இந்த கட்​டுப்​பாடு​களை மீறி​னால் ரூ.50,000 அபராதம் விதிக்​கப்​படும் எனவும் வாறு கிராமத் தலை​வர்​கள் கூறினர்.

நன்றி – இந்து தமிழ்

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

பொகவந்தலாவையில் கையெழுத்து வேட்டை ஆரம்பம்!

0
நுவரெலியா மாவட்டம், நோர்வூட் பிரதேச செயலகத்தை நோர்வூட் நகரத்தை அண்மித்து அமைக்கக்கோரும் கை எழுத்து இயக்கம் இன்று பொகவந்தலாவ பகுதியில் ஆரம்பமானது. நோர்வூட் நகரை அண்மித்ததான பகுதியில் நோர்வூட் பிரதேச செயலகத்தை அமைக்க வேண்டும்...

பாகிஸ்தானிலிருந்து புறப்பட்டார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

0
ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi இஸ்லாமாபாத்தில் உயர்மட்ட சந்திப்புகளை நடத்திய பின்னர் அங்கிருந்து புறப்பட்டுள்ளார். அடுத்ததாக ஓமான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அவர் பயணம் விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என ஈரான் அரச...

மெராயாவில் அகற்றப்பட்டது கண்டய்னர் பெட்டி!

0
மெராயாவில் அகற்றப்பட்டது கண்டய்னர் பெட்டி! மெராயா நகரில் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக பலவந்தமாக வைக்கப்பட்டிருந்த கண்டய்னர் , சட்ட ரீதியான நடவடிக்கைகளின் அழுத்தம் காரணமாக இன்று அகற்றப்பட்டுள்ளது. நீண்டகாலமாக மக்களுக்கும் சாரதிகளுக்கும் பெரும் சிரமத்தை...