Home Blog Page 234

திருமண நிகழ்ச்சிகளில் பெண்கள் தங்க நகைகள் அணிய கட்டுப்பாடு

 

உத்​த​ராகண்ட் மாநிலம், ஜான்​சர் – பவார் பகு​தி​யில் உள்​ளது கந்​தார் கிராமம். பழங்​குடி​யின மக்​கள் வசிக்​கும் இந்த கிராமத்​தில் சமீபத்​தில், பழங்​குடி​யின தலை​வர்​களின் கூட்​டம் நடை​பெற்​றது. அப்​போது திரு​மணம் மற்​றும் குடும்ப நிகழ்ச்​சிகளில் திரு​மண​மான பெண்​கள், தங்க நகைகள் அணிய கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்​டன.

அதன்​படி, திரு​மணம் போன்ற நிகழ்ச்​சிகளில் திரு​மண​மான பெண்​கள், தங்​கத்​தில் கம்​மல், மூக்​குத்​தி, தாலி ஆகிய​வற்றை மட்​டும் அணி​ய​லாம். மற்​றபடி ஆடம்​பர​மான தங்க நகைகளை அணிய கூடாது. மீறி​னால் ரூ.50,000 அபராதம் விதிக்​கப்​படும் என்று கிராம தலை​வர்​கள் அறி​வித்​தனர்.

திருமண நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​ப​தற்​காக ஏழை மக்​கள் கடன் வாங்கி செலவு செய்​யும் நிலை உள்​ளது. ஆடம்பர செலவு செய்​வது, தங்க நகைகளை போட்​டுக் கொண்டு தங்​கள் பணக்​காரத்​தனத்தை காட்​டு​வது போன்​றவற்றை தடுக்​கவே இந்த முடிவு எடுக்​கப்​பட்​டது என்று கிராம தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆரம், நெக்​லஸ் போன்ற பெரிய பெரிய தங்க நகைகளை இனிமேல் திரு​மணம் போன்ற நிகழ்ச்​சிகளில் பெண்​கள் அணிய கூடாது. தங்​கத்​தின் விலை நாளுக்கு நாள் அதி​கரித்து வரு​கிறது. ஏழைகள் தங்​கத்தை வாங்க முடி​யாது. அதனால் அவர்​கள் கடன் வாங்​கி​யா​வது திரு​மணம் போன்ற நிகழ்ச்​சிகளில் பங்​கேற்க நினைக்​கின்​றனர். இது​போன்ற ஆடம்பர கலாச்​சா​ரத்​துக்கு முற்​றுப்​புள்ளி வைக்​கவே இந்த நடவடிக்கை எடுத்​துள்​ளோம்.

திரு​மணம் என்​பது புனித​மான நிகழ்ச்​சி. அது தங்​கள் செல்​வத்​தை, பணக்​காரத்​தனத்தை காட்​டும் மேடை​யாக மாற்​றக் கூடாது. சமூகத்​தில் சமத்​து​வத்தை கொண்டு வரவேண்​டும். அதற்கு இது​போன்ற கட்​டுப்​பாடு​கள் அவசி​யம். திரு​மணம் போன்ற நிகழ்ச்​சிகளில் ஏழை – பணக்​காரர் என்ற வேறு​பாடு இருக்க கூடாது. இந்த கட்​டுப்​பாடு​களை மீறி​னால் ரூ.50,000 அபராதம் விதிக்​கப்​படும் எனவும் வாறு கிராமத் தலை​வர்​கள் கூறினர்.

நன்றி – இந்து தமிழ்

நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடக்கப்போவது என்ன?

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 21 ஆம் திகதி பொது கூட்டமொன்றை நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

நவம்பர் 21 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு நுகேகொடையில் இக்கூட்டம் நடத்தப்படும் என்று கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பின்போது எதிர்க்கட்சி அரசியல் பிரமுகர்கள் வலியுறுத்தினர்.

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தனர்.

 

தமிழ்த் தேசியக் கட்சிகள் பிளவுபட்டு நிற்பதால் தமிழ் மக்களுக்கே ஆபத்து!

“தமிழ்த் தேசியக் கட்சிகள் பிளவுபட்டு நிற்பதால் தமிழர்களுக்கான தீர்வு திட்டத்தின் முக்கியத்துவமும் மூடி மறைக்கப்பட்டுவருகின்றது. எனவே, பொது வேலைத்திட்டத்தின்கீழ் வடக்கில் இருந்து ஒருமித்த குரல் அவசியம்.”

இவ்வாறு ஐக்கிய சோஷலிசக் கட்சியின் பொதுச்செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய வலியுறுத்தினார்.

மாகாணசபைத் தேர்தல் உட்பட சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில்   கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ஆளுங் கட்சிக்கான மக்கள் ஆதரவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கூட்டுறவு தேர்தல்களில்கூட ஆளுங்கட்சிக்கு தோல்வி ஏற்பட்டுவருகின்றது. எனவே, மாகாணசபைத் தேர்தலை இழுத்தடிப்பதற்கே அதிகார தரப்பு முற்படக்கூடும். அதற்கான ஆயுதமாக எல்லை நிர்ணய விடயம் பயன்படுத்தப்படலாம்.

எனினும், இந்தியா மற்றும் ஐநா மனித உரிமைகள் பேரவை என்பன மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அழுத்தம் கொடுத்துவருகின்றன. இந்த அழுத்தத்தால் தேர்தல் நடத்தப்படுவதற்குரிய சாத்தியமும் உள்ளது. எது எப்படி இருந்தாலும் இவ்வருட இறுதிக்குள் அல்லது அடுத்த வருடம் ஆரம்பத்தில் தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும்.

அதேவேளை, மஹிந்த, ரணில் ஆட்சிகாலங்களின்போது, வடக்கில் அரசியல் பிரச்சினை இல்லை என்ற விம்பம் உருவாக்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலையிலும் தமிழர்களுக்கான உரிமை சார்ந்த விடயங்களின் முக்கியத்துவம் மழுங்கிவருகின்றது.

தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கிடையிலான பிளவும் இதற்கு காரணம். பிளவுகள் இருந்தாலும் பொது வேலைத்திட்டத்தின்கீழ் வடக்கில் இருந்து ஒருமித்த குரலொன்று அவசியம். அப்போதுதான் தீர்வுக்குரிய அழுத்தம் பிரயோகிக்ககூடிய சூழ்நிலை உருவாகும்.” – என்றார் சிறிதுங்க ஜயசூரிய.

நீச்சல் குளத்தில் துப்பாக்கிச்சூடு: ஐவர் பலி: ஈகுவடாரில் சோகம்!

 

தென் அமெரிக்க நாடான ஈகுவடாரின் சாண்டோ டொமிங்கோ நகரில் நீச்சல் குளம் அமைந்துள்ளது. அங்கு ஏராளமானோர் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது வேனில் இருந்து இறங்கிய ஒரு கும்பல் நீச்சல் குளத்துக்குள் நுழைந்தது. பின் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதல் கட்ட விசாரணையில், போதைப் பொருள் கடத்தல் முன் விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றது தெரிய வந்துள்ளது. இதையடுத்து தப்பியோடிய குற்றவாளிகளைப் பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பாதாள குழுவை ஒழிக்கும் போர்வையில் வளர்க்க முற்படின் அரசின் கதை முடிந்துவிடும்!

பாதாள குழக்களுக்கு முடிவு கட்டும் போர்வையில் மற்றுமொரு குழுவை வளர்ப்பதற்கு முற்பட்டால் அரசாங்கத்தின் கதை முடிந்துவிடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் நாமல் ராஜபக்ச கூறியவை வருமாறு,

“ பாதாள குழுக்களுக்கு முற்றுபுள்ளி வைப்பது நல்லது. எனினும், இதற்குரிய நடவடிக்கை என்ற போர்வையில் மற்றுமொரு குழுவை கட்டியெழுப்ப முற்பட்டால் இந்த நடவடிக்கை வெற்றியளிக்காது.

மற்றுமொரு குழுவை உருவாக்குவதற்கு அரசாங்கம் முற்படுகின்றது என்பதையே அதன் செயற்பாடு வெளிப்படுத்துகின்றது. அவ்வாறு நடந்தால் அரசும் முடிந்துவிடும். எனவே, பாதாள குழுக்களுக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

தமது பொறுப்பை மறந்து அரசாங்கம் செயற்பட்டுவருகின்றது. இதற்குரிய பதிலடி அடுத்த தேர்தலில் வழங்கப்படும்.” – என்றார் நாமல்.

மரக்கறி விலைப்பட்டியல் (27.10.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (27) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உள்ளிட்ட உரிமைகள் காக்கப்படும்!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உள்ளிட்ட உரிமைகள் காக்கப்படும்!

ஜே.வி.பியின் பெருந்தோட்டத்துறை தொழிற்சங்கமான அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் சந்திப்பு நேற்று நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கிட்னன் செல்வராஜ், கிருஷ்ணன் கலைச்செல்வி, மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி ஆகியோரின் பங்கேற்புடன் இச்சந்திப்பு நடைபெற்றது.

இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள், தோட்ட தலைவர் தலைவிமார்கள் , இளைஞர்கள் பொதுமக்கள் பங்கேற்றிருந்தனர்.

தோட்ட தொழிலாளர்களுக்கு தேசிய மக்கள் சக்தி அரசு நிச்சயம் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்கப்படும் என இதன்போது உறுதியளிக்கப்பட்டது. அத்துடன், தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டது.

கஜரூபன் திவ்யா

இலங்கையின் தேயிலை உற்பத்தி குறித்து சீனா ஆராய்வு!

இலங்கையின் தேயிலை உற்பத்தி தொடர்பில் சீன முதலீட்டாளர்கள் குழுவொன்று ஆராய்ந்துள்ளது.

சீன முதலீட்டாளர்களின் குழு, கடந்த 24ஆம் திகதி விவசாய அமைச்சின் அதிகாரிகளை சந்தித்து இதுபற்றிக் கலந்துரையாடியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன குழுவினர் விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுடன், சிறப்பு கலந்துரையாடல் நடத்தியது. இலங்கையில் தேயிலை உற்பத்தி குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.

இலங்கையல் தேயிலை உற்பத்தி பெரிய அளவிலான, நடுத்தர அளவிலான மற்றும் சிறிய அளவிலான,என மூன்று நிலைகளில் நடைபெறுகிறது.

கடந்த ஆண்டு இலங்கை 245 மில்லியன் கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்தது.

இது இந்தியா ஏற்றுமதி செய்த தேயிலையை விட 24 மில்லியன் கிலோ குறைவாகும். இந்தியா தேயிலை ஏற்றுமதியில் இலங்கையை முந்தியுள்ளது.

2021 ஆம் ஆண்டில் உரத் தடையின் நீண்டகால விளைவுகளை மாற்றுவது தொடர்பாக அரசாங்கத்தின் தரப்பில் நிவாரணம் இல்லாததே உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சிக்குக் காரணம் என்று தொழில்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேம்நாத் தொலவத்த    வலியுறுத்தியுள்ளார்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிடமே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக சுட்டிக்காட்டி, உரிய   பாதுகாப்புகோரி பொலிஸ்மா அதிபருக்கு    கடிதம்    எழுதி இருந்தார். எனினும், இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

இந்த விடயத்தை பிரதானக் காரணமாகக் கொண்டே    மேற்படி நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட வேண்டும் எனவும் பிரேம்நாத் தொலவத்த சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், இது தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தமது நிலைப்பாட்டை இதுவரை அறிவிக்கவில்லை.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றுவதற்குரிய பெரும்பான்மைபலம் எதிர்க்கட்சிவசம் இல்லாதபோதும்,     பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்மீது நம்பிக்கை இல்லை என்பதை வெளிப்படுத்தவும், நாட்டில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்பதை சுட்டிக்காட்டவும் இப்பிரேரணையை ஒரு கருவியாக பயன்படுத்தலாம் என சில எதிரணி உறுப்பினர்கள் கருதுகின்றனர்.

அதேவேளை, சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்னெடுப்பதற்குரிய நகர்வுகளை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்கனவே ஆரம்பித்திருந்தமை தெரிந்ததே.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

போதைப்பொருள்களுடன் லுணுகலை பொலிஸாரால் ஒருவர் கைது!

0
போதை பொருள் தன் கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர். 23 ம் கட்டை கீனகோட பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 370 மில்லி...

பொகவந்தலாவையில் கையெழுத்து வேட்டை ஆரம்பம்!

0
நுவரெலியா மாவட்டம், நோர்வூட் பிரதேச செயலகத்தை நோர்வூட் நகரத்தை அண்மித்து அமைக்கக்கோரும் கை எழுத்து இயக்கம் இன்று பொகவந்தலாவ பகுதியில் ஆரம்பமானது. நோர்வூட் நகரை அண்மித்ததான பகுதியில் நோர்வூட் பிரதேச செயலகத்தை அமைக்க வேண்டும்...

பாகிஸ்தானிலிருந்து புறப்பட்டார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

0
ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi இஸ்லாமாபாத்தில் உயர்மட்ட சந்திப்புகளை நடத்திய பின்னர் அங்கிருந்து புறப்பட்டுள்ளார். அடுத்ததாக ஓமான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அவர் பயணம் விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என ஈரான் அரச...