Home Blog Page 235

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உள்ளிட்ட உரிமைகள் காக்கப்படும்!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உள்ளிட்ட உரிமைகள் காக்கப்படும்!

ஜே.வி.பியின் பெருந்தோட்டத்துறை தொழிற்சங்கமான அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் சந்திப்பு நேற்று நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கிட்னன் செல்வராஜ், கிருஷ்ணன் கலைச்செல்வி, மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி ஆகியோரின் பங்கேற்புடன் இச்சந்திப்பு நடைபெற்றது.

இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள், தோட்ட தலைவர் தலைவிமார்கள் , இளைஞர்கள் பொதுமக்கள் பங்கேற்றிருந்தனர்.

தோட்ட தொழிலாளர்களுக்கு தேசிய மக்கள் சக்தி அரசு நிச்சயம் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்கப்படும் என இதன்போது உறுதியளிக்கப்பட்டது. அத்துடன், தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டது.

கஜரூபன் திவ்யா

இலங்கையின் தேயிலை உற்பத்தி குறித்து சீனா ஆராய்வு!

இலங்கையின் தேயிலை உற்பத்தி தொடர்பில் சீன முதலீட்டாளர்கள் குழுவொன்று ஆராய்ந்துள்ளது.

சீன முதலீட்டாளர்களின் குழு, கடந்த 24ஆம் திகதி விவசாய அமைச்சின் அதிகாரிகளை சந்தித்து இதுபற்றிக் கலந்துரையாடியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன குழுவினர் விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுடன், சிறப்பு கலந்துரையாடல் நடத்தியது. இலங்கையில் தேயிலை உற்பத்தி குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.

இலங்கையல் தேயிலை உற்பத்தி பெரிய அளவிலான, நடுத்தர அளவிலான மற்றும் சிறிய அளவிலான,என மூன்று நிலைகளில் நடைபெறுகிறது.

கடந்த ஆண்டு இலங்கை 245 மில்லியன் கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்தது.

இது இந்தியா ஏற்றுமதி செய்த தேயிலையை விட 24 மில்லியன் கிலோ குறைவாகும். இந்தியா தேயிலை ஏற்றுமதியில் இலங்கையை முந்தியுள்ளது.

2021 ஆம் ஆண்டில் உரத் தடையின் நீண்டகால விளைவுகளை மாற்றுவது தொடர்பாக அரசாங்கத்தின் தரப்பில் நிவாரணம் இல்லாததே உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சிக்குக் காரணம் என்று தொழில்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேம்நாத் தொலவத்த    வலியுறுத்தியுள்ளார்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிடமே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக சுட்டிக்காட்டி, உரிய   பாதுகாப்புகோரி பொலிஸ்மா அதிபருக்கு    கடிதம்    எழுதி இருந்தார். எனினும், இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

இந்த விடயத்தை பிரதானக் காரணமாகக் கொண்டே    மேற்படி நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட வேண்டும் எனவும் பிரேம்நாத் தொலவத்த சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், இது தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தமது நிலைப்பாட்டை இதுவரை அறிவிக்கவில்லை.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றுவதற்குரிய பெரும்பான்மைபலம் எதிர்க்கட்சிவசம் இல்லாதபோதும்,     பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்மீது நம்பிக்கை இல்லை என்பதை வெளிப்படுத்தவும், நாட்டில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்பதை சுட்டிக்காட்டவும் இப்பிரேரணையை ஒரு கருவியாக பயன்படுத்தலாம் என சில எதிரணி உறுப்பினர்கள் கருதுகின்றனர்.

அதேவேளை, சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்னெடுப்பதற்குரிய நகர்வுகளை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்கனவே ஆரம்பித்திருந்தமை தெரிந்ததே.

குளவிக்கொட்டுக்கு இலக்காகி வயோதிபர் பலி: பொகவந்தலாவையில் சோகம்!

 

கால்நடை வளர்ப்பில் ஈடுபட்ட நபர், புல் அறுப்பதற்கு சென்றவேளை குளவி கொட்டுக்கிலக்காகி பரிதாபமான முறையில் உயிரிழந்துள்ளார். இத்துயர் சம்பவம் இன்று நண்பகல் பொகவந்தலாவை , எல்டப்ஸ் பகுதியில் உள்ள 06 ம் இலக்க தேயிலை மலையில் இடம்பெற்றுள்ளது.

கால்நடைக்கு புல் அறுப்பதற்கான தனது மனைவியுடன் சென்றுள்ளார். இதன்போது திடீரென களைந்து வந்த குளவிகள் சரமாரியாக கொட்டியுள்ளனர்.

அதனை தொடர்ந்து குறித்த குடும்பஸ்தர், பொகவந்தலா வைத்தியசாலைக்கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
69 வயதுடைய கருப்பனன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலா பொலிஸார் மேற்கொண்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எதிரணிகளின் சங்கமம் என்.பி.பி. அரசுக்கு சவால் அல்ல…!

எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவானது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எவ்விதத்திலும் சவாலாக அமையாது என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளுக்கு சவால் என்பதாலேயே ஒன்றிணைந்து பயணிப்பது பற்றி பரிசீலிக்கின்றன. அது அத்தரப்புகளின் சுயநல அரசியலின் வெளிப்பாடாகும் எனவும் அமைச்சர் கூறினார்.

” நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தவேளை அவர்கள் ஒன்றிணையவில்லை. போர் நடந்த காலகட்டத்தில்கூட இணைந்து பயணிக்கவில்லை. தற்போது இணைகின்றனர் எனில் அது அவர்களின் வங்குரோத்து அரசியலை வெளிப்படுத்துகின்றது.” என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

ஐஸ் போதைப்பொருள் விற்ற மாமி, மருமகன் கம்பளை பொலிஸாரால் கைது!

கம்பளை, உலப்பனை பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் மாமி மற்றும் மருமகன் ஆகியோர் கம்பளை பொலிஸாரால் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளனர்.

67 வயது மாமியார் ஓய்வுபெற்ற ஆசிரியை என தெரியவருகின்றது. இவர்களிடமிருந்து 200 க ராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த ஓய்வுபெற்ற ஆசிரியையின் மகன் கடந்த 24 ஆம் திகதி ஜஸ் மற்றும் ஹொரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.

நீதிமன்றத்தில ; முற்படுத்தப்பட்ட பின்னர் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில் கம்பளை, உலப்பனை பகுதியில் உள்ள வீட்டில் சோதனை செய்த போது மாமியார் , மருமகன் இருவரும் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.

போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இரு தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர்கள் கம்பளை, நாவலப்பிட்டிய, உலப்பனை போன்ற பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்தனர் என தெரியவருகின்றது.
இருவரையும் கம்பளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலதிக விசாரணை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

க. யோகா

 

வெலிகம பிரதேச சபை தலைவர் சுட்டுக்கொலை: மூவர் கைது!

வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளாலேயே கெக்கிராப பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெண்ணொருவரும் உள்ளடங்குகின்றார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது.

கனடாமீது ட்ரம்ப் மீண்டும் வரிப்போர் தொடுப்பு!

அமெரிக்காவின் புதிய வரி கொள்கைகளால், கனடாவிற்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்து வெளியான விளம்பரத்தின் எதிரொலியாக, கனடா இறக்குமதி பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரியை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விதித்துள்ளார்.

கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதீத வரியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்தார்.

இதையடுத்து, கனடாவின் மிகப்பெரிய மாகாணங்களில் ஒன்றான ஒன்டாரியோ மாகாணம், அமெரிக்காவின் புதிய வரி கொள்கைகளால், கனடாவிற்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்து அமெரிக்க மக்களுக்கு எடுத்துச் சொல்கின்ற வகையில், தொலைக்காட்சி விளம்பரத்தை வெளியிட்டது.

மொத்தம், 60 வினாடிகள் உள்ள இந்த விளம்பரத்தில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரொனால்டு ரீகன், 1987ம் ஆண்டு அந்நாட்டு தேசிய வானொலியில் பேசிய உரைகளில் இருந்து சில பகுதிகள் பயன்படுத்தப்பட்டிருந்தன.

இதற்கு ரொனால்டு ரீகன் அறக்கட்டளை எதிர்ப்பு தெரிவித்ததுடன், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கனடாவுடன் நடத்தி வந்த வர்த்தக பேச்சுகள் அனைத்தும் முடிவுக்கு வருவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய விளம்பரத்தை நாளை முதல் நிறுத்தப் போவதாக அம்மாகாண முதல்வர் டக் போர்டு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில்,

“உண்மைகளை அவர்கள் கடுமையாக தவறாக சித்தரித்ததாலும், விரோதமான செயலாலும், கனடா மீதான வரியை அவர்கள் இப்போது செலுத்துவதை விட 10 சதவீதம் அதிகமாக உயர்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

மரக்கறி விலைப்பட்டியல் (26.10.2025)

மரக்கறி விலைப்பட்டியல் (26.10.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (26) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

நாட்டில் குற்றச் செயல்கள் தலைவிரிப்பு: பாதுகாப்பு உத்தரவாதம் எங்கே?

“இலங்கையில் எந்தச் சந்தர்ப்பத்தில் எங்கு துப்பாக்கிச்சூடு நடக்கும் என்பதை ஊகிக்க முடியாமல் உள்ளது. இந்த நிச்சயமற்ற நிலை மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு அரசிடம் முறையான வேலைத்திட்டங்கள் எவையும் இல்லை.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டம், இறக்குவானைத் தேர்தல் தொகுதியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“மக்களை வாழ வைப்பதுதான் ஓர் அரசின் கொள்கையாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் இன்று நாட்டில் கொலைக் கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது. இவ்வாண்டில் மாத்திரம் அதிக எண்ணிக்கையிலான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதால், உயிரிழப்புகளும் காயங்களுக்குள்ளான சந்தர்ப்பங்களும் அதிகரித்துள்ளன.

பொதுமக்கள் சந்திப்பு இடம்பெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பிரதேச சபை தவிசாளர் ஒருவர் மீது அவரது அலுவலகத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு சேவையாற்றுவதற்கான சந்தர்ப்பத்தில் இவ்வாறான அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் சாதாரண பிரஜைகளின் உயிருக்கு எவ்வாறு உத்தரவாதமளிக்க முடியும்?

இன்று சமூகத்தில் கொலைகளும் திட்டமிட்ட குற்றச் செயல்களும் வெகுவாகவும் சர்வசாதாரணமாகவும் இடம்பெற்று வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த அரசிடம் சரியான வேலைத்திட்டமொன்று இல்லை. இந்த அரசின் பலவீனம் காரணமாக, கொலைகாரர்களுக்கும் கொள்ளையர்களுக்கும் குற்றங்களைச் செய்வதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

தான் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் வெலிகம பிரதேச சபை தவிசாளர் தனக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும், எனவே தனக்கு பாதுகாப்பு வழங்குமாறும் பொலிஸ்மா அதிபரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், பொலிஸ்மா அதிபர் உட்பட பொலிஸார் அதற்குரிய எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இன்று நாட்டில் எந்தச் சந்தர்ப்பத்தில் எங்கு துப்பாக்கிச்சூடு நடக்கும் என்பதை ஊகிக்க முடியாமல் உள்ளது. இந்த நிச்சயமற்ற நிலை மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல்காரர்களையும், கொலைகாரர்களையும் கைது செய்து, குற்றச் செயல்களை இல்லாதொழிக்க வேண்டும். அற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும்.

அவர்களுக்குச் சட்டத்தின் கீழ் அதிகபட்ச தண்டனை வழங்கும் நடவடிக்கைக்கு நாமும் எமது ஆதரவைத் தருவோம். இந்தக் கொலைக் கலாச்சாரத்தை முன்னிறுத்தி, எதிர்க்கட்சியைக் கட்டுப்படுத்த வந்தால், அதற்கு நாம் இடமளியோம்.

இன்று நாட்டில் ஜனநாயகமோ – அமைதியோ இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. நாட்டை அழிக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

நீதி, நியாயம், சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கும் நாம் எமது உட்சபட்ச ஒத்துழைப்பைத் தருவோம். மக்களுக்குச் சேவையாற்றுவதற்கு மக்கள் பிரதிநிதிகளுக்கு முறையான பாதுகாப்பைப் பெற்றுக் கொடுக்குமாறும், 220 இலட்சம் மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.” – என்றார்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

சென்னை, குஜராத் அணிகள் இன்று மோதல்!

0
சென்னை, குஜராத் அணிகள் இன்று மோதல்! IPL 2026 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 37 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில்...

37 பந்துகளில் சதமடித்து அசத்திய சூர்யவன்ஷி!

0
ஐ.பி.எல். 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி 37 பந்துகளில் 103 ஓட்டங்களைப் பெற்று சாதனை படைத்தார். குறித்த போட்டி ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்...

மரக்கறி விலைப்பட்டியல் (26.04.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (26.04.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (26) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...