Home Blog Page 238

செவ்வந்தியின் தொலைபேசி: நாமல் ராஜபக்ச கூறுவது என்ன?

“ செவ்வந்தியின் தொலைபேசியில் உங்களது பெயர் எவ்வாறு ‘சேவ்’ செய்யப்பட்டிருக்கும்.” என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இன்று சிரித்தப்படியே பதிலளித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச.

“ செவ்வந்தியின் தொலைபேசியை பரிசோதித்தவர்களிடம்தான் அது பற்றி கேட்க வேண்டும். செவ்வந்தியின் தொலைபேசியை பார்ப்பதற்கு பலரும் ஆவலாக உள்ளனர்போல்தான் தெரிவிக்கின்றது.

அவ்வாறானவர்கள் பரிசோதித்து எனது பெயர் எவ்வாறு உள்ளது எனக் கூறினால் நல்லது.” என்பதே மேற்படி கேள்விக்கு நாமல் வழங்கிய பதிலாகும்.

“மகே ராஜபக்ச (எனது ராஜபக்ச) என பெயரொன்று சேவ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதே…” எனவும் நாமலிடம் கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர்,

“ சிலருக்கு தற்போது ராஜபக்சக்கள்தான் கனவில்கூட வருகின்றனர்;. அந்த கட்சியிலும் (என்.பி.பி.) நாமல் ஒருவர் இருக்கின்றார், அது அவரா என்பதுகூட தெரியவில்லை. நாமல் என்ற பெயரை கண்டதுமே அவர்களுக்கு என்னை நினைவுக்கு வருவது சந்தோஷம். பெண்கள் தமது காதலர்களின் பெயருக்கு முன்னால்தான் எனது என எழுதி சேவ் செய்வார்கள்;. சிலவேளை அது அப்படி சேவ் செய்யப்பட்ட ஒரு பெயராகக்கூட இருக்கலாம். “ என்றார் நாமல் ராஜபக்ச.

போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிக்க முழு நாடும் ஒன்றுபட வேண்டும்!

அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் குறித்து விவாதிக்க முடிந்தாலும், நாட்டிலிருந்து போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்கான தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதில் இனிமேலும் விவாதித்துக் கொண்டிருப்பதற்கு இடமில்லை.போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்கான துரித வேலைத்திட்டத்திற்காக முழு நாடும் ஒன்றுபட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

‘போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்கான ” முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு’ குறித்து ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்கு விளக்கமளிப்பதற்காக நேற்று (23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது தேசிய பேரழிவாக மாறி இளைஞர் சமூகத்தைப் போன்றே பாடசாலை மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்து வரும் போதைப் பொருள் வர்த்தகத்தை மையமாகக் கொண்டு அநேகமான குற்றங்கள் நடப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய மட்டத்தில் அரசியல் தலைமைத்துவம், செயற்திறனாக முடிவெடுக்கும் பொறிமுறை மட்டுமன்றி பரந்த பொதுமக்கள் பங்கேற்புடன் கூடிய தேசிய மட்டத்திலான வேலைத்திட்டத்தின் ஊடாக போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அந்த தேசிய நோக்கத்தை அடைவதற்காக , ”முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு’ முன்னெடுக்கப்படுவதோடு பரந்தளவிலான பிரச்சார செயல்முறையின் ஊடாக போதைப்பொருள் அச்சுறுத்தல் குறித்து சமூகத்தின் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு பாரிய திட்டமொன்றாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த பிரச்சார திட்டத்தை செயல்படுத்துவதில் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களால் மேற்கொள்ளக் கூடிய பங்களிப்பு குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றக் கும்பல்களின் நிதி பலம் என்பன பொருளாதாரம், சமூகக் கட்டமைப்பு, அரச பொறிமுறை மற்றும் சட்டத்தின் ஆட்சியைக் கூட வீழ்ச்சியடையச் செய்து நாட்டையும் சமூகத்தையும் அழித்து வருவதாகத் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் இந்த அச்சுறுத்தலுக்கு இனிமேலும் இடமளிப்பதில்லையென முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக அனைவரின் பங்களிப்பையும் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், கடந்த காலங்களில் அரசியல் நிழலின் கீழ் சுதந்திரமாக வளர்ந்த இந்தக் குற்றங்கள், தற்போது நாட்டையும் சமூகத்தையும் கடுமையாக ஆக்கிரமித்துள்ளது என்பதையும், அதற்கு பொலிஸ், சுங்கம், மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் உள்ளிட்ட முக்கிய அரச நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் ஆதரவையும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.

மீண்டும் இவ்வாறான நிலைமை ஏற்படாதவாறு எதிர்கால சந்ததியினருக்காக இந்த தேசிய பேரழிவைத் தோற்கடிப்பதற்கு அனைவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள மறுக்க முடியாத பொறுப்பை ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.

முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறும்.

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க, ஆகியோருடன் அரச மற்றும் தனியார் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பொழுதுபோக்கு துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அமெரிக்க அழுத்தங்களுக்கு ரஷ்யா அடிபணியாது!

அமெரிக்கா அல்லது வேறு எந்த நாட்டின் அழுத்தத்திற்கும் ரஷ்யா ஒருபோதும் அடிபணியாது என்று ரஷ்யா ஜனாதிபதி புடின் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் பதவி ஏற்ற பிறகு ரஷியாவுடன் உறவுகளை மேம்படுத்த முயன்றார். அந்நாட்டு ஜனாதிபதி புதினுடன் தொலைபேசியிலும் பேசி நட்பை வளர்த்தார்.

மேலும், உக்ரைனுடன் ரஷியா நடத்தி வரும் போரை நிறுத்தும் முயற்சியிலும் டிரம்ப் ஈடுபட்டார். ஆனால் அவரது முயற்சி எந்தவித பலனும் அளிக்கவில்லை.
இதனால் விரக்தி அடைந்த டிரம்ப் ரஷியா வின் மிகப்பெரிய 2 எண்ணை நிறுவனங்களான ரோஸ் நெப்ட் மற்றும் அகோயில் ஆகியவற்றிற்கு பொருளாதார தடை விதித்தார்.

ரஷியாவுக்கு எதிராக டிரம்ப் எடுத்த முதல் நடவடிக்கை இதுவாகும். ரஷியாவின் இந்த 2 எண்ணெய் நிறுவனங்களும் உலக கச்சா எண்ணை வினியோகத்தில் 6 சதவீத பங்கை கொண்டு உள்ளன.

ரஷிய அரசுக்கான மிகப் பெரிய வருவாய் ஆதாரமாக இந்நிறுவனங்கள் உள்ளன.அமெரிக்காவின் இந்த நடவடிக்கை குறித்து ரஷிய அதிபர் புதின் கூறியதாவது:-

ரஷியா மீதான தடைகள் நட்பற்ற செயல். இது நிச்சயமாக ரஷியா மீது அழுத்தம் கொடுக்கும் முயற்சிதான். இவை சில விளைவுகளை ஏற்படுத்தினாலும் எங்களது பொருளாதாரம் பாதிக்கும் வகையில் இருக்காது. இவை நீண்ட காலம் நீடிக்காது என்று நம்புகிறோம்.

அமெரிக்கா அல்லது வேறு எந்த நாட்டின் அழுத்தத்திற்கும் ரஷியா ஒரு போதும் அடிபணியாது. சுய மரியாதை கொண்ட நாடும், சுயமரியாதை கொண்ட மக்களும் அழுத்தத்திற்காக எதையும் முடிவு செய்ய மாட்டார்கள். சுய மரியாதை கொண்ட எந்த நாடும் அப்படி செய்யாது. ரஷியா வின் எரிசக்தி துறை நம்பிக்கையுடன் உள்ளது.

போரை விட பேச்சுவார்த்தை எப்போதும் சிறந்தது. போர் தீர்க்கப்படும் என நம்புகிறோம்.அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய டோமோ ஹாக் ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தினால் அதற்கான பதிலடி கடுமையாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ரூ. 2500 அவசியம்!

 

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 2 ஆயிரத்து 500 ரூபா வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய சோஷலிசக் கட்சியின் பொதுச்செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய வலியுறுத்தினார்.

வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள சூழ்நிலையில் நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை நிர்ணயிப்பது அநீதி எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மலையக மக்களுக்கு காகிதங்களை வழங்கிக்கொண்டிருக்காமல், காணி உரிமையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், இது தொடர்பில் தனது பாதீட்டு உரையில் ஜனாதிபதி தெளிவுபடுத்த வேண்டும் எனவும் சிறிதுங்க ஜயசூரிய மேலும் குறிப்பிட்டார்.

 

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தலைமைக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்நிலை குழு ஆதரவு

சீனா​வில் ஒரு கட்சி நிர்​வாக நடை​முறை உள்ளது. எதிர்க்​கட்​சிகள் கிடை​யாது. இதன்படி சீன கம்​யூனிஸ்ட் கட்​சியின் ஜி ஜின்​பிங் கடந்த 2013-ம் ஆண்​டில் ஜனாதிபதியாக பதவி​யேற்​றார். கடந்த 2023-ம் ஆண்​டில் அவர் 3-வது முறை ஜனாதிபதியாக தேர்வு செய்​யப்​பட்டு பதவி​யில் நீடிக்​கிறார்.

அவரது தலை​மைக்கு எதி​ராக சீன கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த நிர்​வாகி​கள், மூத்த ராணுவ தளப​தி​கள் போர்க்​கொடி உயர்த்தி வரு​வ​தாக தகவல்​கள் வெளி​யாகி வரு​கின்​றன.

இதன்​ காரண​மாக ஏராள​மான தலை​வர்​கள் மாய​மாகி இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. குறிப்​பாக சீன கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் 3-வது மிகப்​பெரிய தலை​வ​ரான ஹீ வெய்​டோங்கை கடந்த மார்ச் மாதம் முதல் காண​வில்​லை.

சீன கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மத்​திய கமிட்​டி, அந்த நாட்​டின் உயர்​நிலைக் குழு​வாக கருதப்​படு​கிறது. இந்த கமிட்டி ஆண்​டு​தோறும் அக்​டோபர் மாதம் பெய்​ஜிங்​கில் கூடி ஆலோ​சிப்​பது வழக்​கம். இதன்​படி கடந்த 20-ம் தேதி ஜனாதிபதி ஜி ஜின்​பிங் தலை​மை​யில் மத்​திய கமிட்​டி​யின் கூட்​டம் பெய்​ஜிங்​கில் தொடங்​கியது. இதில் 350 உறுப்​பினர்​கள் பங்​கேற்​றனர். 3 நாட்​கள் நடை​பெற்ற கூட்​டம் நேற்று நிறைவுப் பெற்​றது.

இதன் ​பிறகு மத்​திய கமிட்டி வெளி​யிட்ட அறிக்​கை​யில்

சீன கம்​யூனிஸ்ட் கட்​சி, ஆட்சி நிர்​வாகம் மற்​றும் ராணுவத்​தில் முக்​கிய பதவி​களில் இருந்த 9 பேர் பணி நீக்​கம் செய்​யப்​பட்டு உள்​ளனர். குறிப்​பாக ஹீ வெய்​டோங்​கின் பதவி நீக்​கத்​துக்கு மத்​திய கமிட்டி கூட்​டத்​தில் ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது. அவருக்கு பதிலாக ராணுவத்​தின் ஊழல் தடுப்பு துறை தலை​வ​ராக ஜாங் ஷெங்​மின் நியமிக்​கப்​பட்டு உள்​ளார். அவர் மத்​திய ராணுவ கமிஷனின் துணைத் தலை​வ​ராக​வும் பதவி வகிப்​பார்.

மத்​திய கமிட்டி கூட்​டத்​தில் அதிபர் ஜி ஜின்​பிங்​கின் தலை​மைக்கு ஆதர​வாக ஒரு​மன​தாக தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. அடுத்த 5 ஆண்​டுக்​கான திட்​டத்​துக்​கும் ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது. இதன்​மூலம் சுய​சார்பு சீனா திட்​டங்​களுக்கு முன்​னுரிமை அளிக்​கப்​படும். இவ்​வாறு அதில் கூறப்பட்​டுள்​ளது.

ரணில், சஜித் சங்கமம்: வருட இறுதிக்குள் சாத்தியம்!

நாடாளுமன்றத்தைக் கொளுத்துவதற்கு வந்த நபர்களுக்கு எதிராக அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தவர்களில் 50 சதவீதமானோர் தற்போது தமது முடிவை மாற்றிக்கொண்டுள்ளனர். எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பவற்றை ஒன்றிணைப்பதற்குரிய முயற்சி இவ்வருடத்துக்குள் வெற்றியளிக்கும் என எதிர்பார்க்கின்றோம்.” – எனவும் தலதா அத்துகோரள குறிப்பிட்டார்.

பாதாளக்குழு, போதைப்பொருளுக்கு முற்றப்புள்ளி வைக்கப்படும்!

” பாதாள குழு செயற்பாடு மற்றும் போதைப்பொருள் என்பவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். எத்தகைய சவால்கள் வந்தாலும் இது விடயத்தில் பின்வாங்கப்போவதில்லை. ” – என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று  (23) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு  கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் சட்டம், ஒழுங்கு நிலைநாட்டப்படும். ஒழுக்க விழுமியமுடைய சமூகமொன்று உருவாக்கப்படும் என நாட்டு மக்களுக்கு நாம் உறுதியளித்துள்ளோம். அதற்கமைய நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றது. அரசியல் மயமாக்கலில் இருந்து விடுபட்டு பொலிஸார் தற்போது சுயாதீனமாக செயற்பட்டுவருகின்றனர்.

இவ்வாறு சட்டம் தமக்குரிய கடமையை செய்யும்போது சிலருக்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளது. அத்தகையவர்களே கலக்கமடைந்து கத்துகின்றனர்.  எது எப்படி இருந்தாலும் பாதாளகுழு செயற்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். அதற்குரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.  30 ஆம் திகதி தேசிய வேலைத்திட்டம் ஆரம்பமாகவுள்ளது.

சமூகத்தில் சட்டவிரோதமாக புழங்கும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுவருகின்றன. போதைப்பொருள் வலையமைப்பு அழிக்கப்பட்டுவருகின்றது. இப்பணியை சிறப்பாக முன்னெடுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்றார்.

நாட்டை அராஜக நிலைக்கு கொண்டு செல்ல சூழ்ச்சியா?

” போர்காலத்தில் புலிகள்கூட அலுவலகங்களுக்குள் புகுந்து தமது எதிரிகளை கொலை செய்யவில்லை. போர் காலத்தைவிடவும் தற்போது பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” வெலிகம துப்பாக்கிச்சூட்டு சம்பவமானது படு பயங்கரமாகும். தமக்கு பாதுகாப்பு வேண்டுமென துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவர் கோரிக்கை விடுத்திருந்தபோதிலும் அது வழங்கப்படாத சூழ்நிலையிலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

நாட்டில் 30 வருடகாலம் போர் நிலவியது. இக்காலப்பகுதியில் புலிகள்கூட இவ்வாறு அச்சமின்றி அலுவலகங்களுக்குள் புகுந்து தமது எதிரிகளை கொல்லவில்லை. ஆனால் ஜே.வி.பி. ஆட்சியின்கீழ் அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளது. இது ஜனநாயகத்துக்கு பாரிய அச்சுறுத்தமாகும்.

நாட்டை அராஜக நிலைக்கு கொண்டுசெல்வதற்காக பாதாள குழு என்ற போர்வையில் தமக்கு தேவையானவற்றை நிறைவேற்றிக்கொள்வதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. மக்கள் நாய், பூனைகள்போல சுட்டுக்கொல்லப்படுவதை அனுமதிக்க முடியாது. பாதாள குழுக்களை ஒடுக்குகின்றோம் என்ற போர்வையில் அக்குழுக்கள் பலப்படுத்தப்படுகின்றனவா என்ற சந்தேகமும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது ” – என்றார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம்.

பாதாள குழுவுடன் தொடர்பெனில் ஏன் கைது செய்யப்படவில்லை?

 

சுட்டுக்கொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தவிசாளருக்கு பாதாள குழுவுடன் தொடர்புள்ளதெனில் அவர் உயிருடன் இருக்கும்போது ஏன் கைது செய்யப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கூட்டமொன்று நேற்று முன்தினம் இடம்பெற்றது.

இக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ரஞ்சித் மத்தும பண்டார மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டு மக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இந்த ஆட்சியின்கீழ் முதலாவது அரசியல் படுகொலை இடம்பெற்றுள்ளது .

எல்லா சம்பவங்களையும் பாதாள குழுக்கள்மீது திணிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. ஜனநாயக வழியில் மக்கள் வாக்குகளுடன் அவர் (வெலிகம பிரதேச சபை தலைவர்) சபைக்கு வந்தவர். அவரின் படுகொலைக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும்.

அவருக்கு பாதாள குழுவுடன் தொடர்புள்ளதெனில் இதுவரையில் அவர் ஏன் கைது செய்யப்படவில்லை?”- என்றார்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

அமைதி பேச்சை ரத்து செய்தார் ட்ரம்ப்!

0
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் பாகிஸ்தானில் நடைபெறவிருந்த 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திடீரென ரத்து செய்துள்ளார். ஈரான் தலைவர்களிடையே நிலவும் குழப்பமே இதற்குக் காரணம் எனக் கூறியுள்ள ட்ரம்ப், பேச்சுவார்த்தைக்கு ஈரான்...

110 கிலோ போதைப்பொருளுடன் 22 பிக்குகள் கைது!

0
1.1 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மதிப்புள்ள, போதைப்பொருள்களை கடத்தி வந்த 22 பௌத்த பிக்குகள், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேசவிமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த...

ஹட்டனில் மே 1 சித்தர் யாகம்!

0
ஓம் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர ஆஸ்ரமத்தின் குருநாதர் சுவாமி கணபதி அவர்களின் ஆசியுடன் எதிர்வரும் 01.05.2026 அன்று மாபெரும் சித்தர் யாகமும் அதனைத் தொடர்ந்து 02.05.2026 திருவாசகம் முற்றோதல் நிகழ்வும் இடம்பெற இருக்கிறது. சுவாமி...