Home Blog Page 239

பற்றி எரிந்தது பஸ்: 25 பேர் பலி: ஆந்திராவில் சோகம்!

 

இந்தியா, ஆந்திர மாநிலம் கர்னூலில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் இருசக்கர வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதியது. இதில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் பயணிகள் 25 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் பலர் காயமடைந்தனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் இருந்து பெங்களூரு நகருக்கு 40 பயணிகளுடன் படுக்கை வசதி கொண்ட தனியார் வால்வோ பேருந்து நேற்று நள்ளிரவு புறப்பட்டுள்ளது.

இந்தப் பேருந்து அதிகாலை 3.30 மணி அளவில் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்துக்கு வந்த போது எதிர்திசையில் வந்த இருசக்கர வாகனம் மீது மோதி உள்ளது. இதில் பேருந்தின் கீழ்ப்பக்கம் இருசக்கர வாகனம் சிக்கியதாக தெரிகிறது.

தொடர்ந்து விபத்தில் சிக்கிய பேருந்தின் முன்பக்கம் தீப்பிடித்துள்ளது. அடுத்த சில வினாடிகளில் அது மளமளவென பேருந்தின் மற்ற பகுதிக்கும் தீ பரவியுள்ளது. இதில் எரிபொருள் இருந்த டேங்கிலும் தீப்பற்றி அது வெடித்ததாக தெரிகிறது. விபத்தை அடுத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பயணிகள் செய்வதறியாது தவித்தனர்.

சிலர் அவசர காலத்தில் உதவும் எமர்ஜென்சி எக்சிட் கதவை உடைத்து கொண்டு லேசான காயங்களுடன் பேருந்தில் இருந்து வெளியேறினர்.

பேருந்தில் இருந்து வெளியேற முடியாத பயணிகள் தீ மற்றும் புகையினால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதில் 25 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 15 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரசு தரப்பில் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்த விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் மற்றும் உதவியாளர் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடினர்.

சம்பவ இடத்தில் காவல் துறையினர், தீயணைப்பு படையினர் முகாமிட்டுள்ளனர். தீயணைப்பு படையினர் வருவதற்குள்ளாகவே பேருந்து முழுவதும் எரிந்து சாம்பலாகி உள்ளது. நிகழ்விடத்தில் தடயவியல் நிபுணர்களும் விபத்துக்கான காரணம் குறித்து சோதனை மேற்கொண்டுள்ளனர்.

சீரற்ற காலநிலையால் 21,778 பேர் பாதிப்பு: 593 வீடுகள் சேதம்!

நுவரெலியா, கண்டி, பதுளை, குருணாகல், காலி உட்பட நாட்டில் 16 மாவட்டங்களில் நிலவும் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் 5, 361 குடும்பங்களைச் சேர்ந்த 21, 778 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலையால் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளம், மண்சரிவால் 2 வீடுகள் முழுமையாகவும், 591 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று முற்பகல் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால் காலி மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிட்டத்தக்கது. எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

வெளிநாட்டு சக்திகளால் அடிபணிய வைக்க முடியாத பெருந்தலைவரே ரணில்!

 

” வெளிநாட்டு சக்திகளால் அடிபணிய வைக்க முடியாத தலைவரே ரணில் விக்கிரமசிங்க. அதனால்தான் நாட்டு நலன் கருதி அவர் பின்னால் அணிதிரண்டுள்ளோம்.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

தனியார் வானொலியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” ரணில் விக்கிரமசிங்க என்ற பெருந்தலைவருக்கு பதவி முக்கியம் அல்ல. ஜனாதிபதி பதவி, பிரதமர் பதவி என எந்த பதவியைக்காட்டியும் அவரை அடிபணிய வைக்க முடியாது. பதவிகள் இல்லாமல் வீட்டில் இருப்பார். ஆனால் நாட்டைக் காட்டிக்கொடுக்கமாட்டார்.

நாம் ஏன் ரணிலின் பின்னால் நிற்கின்றோம் என சிலர் கேட்கின்றனர். வெளிநாட்டு சக்திகளால் அடிபணிய வைக்க முடியாத தலைவர்தான் அவர். இதுதான் பிரதான காரணம் என்பதை கூறிக்கொள்கின்றேன்.” – எனவும் வஜிர அபேவர்தன குறிப்பிட்டார்.

மரக்கறி விலைப்பட்டியல் (24.10.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

நுவரெலியா மாவட்டத்தில் கையகப்படுத்தப்பட்ட காணி குறித்து விசாரணை

 

கடந்த ஆட்சி காலத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மற்றும் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே ஆகியோர் நுவரெலியா மாவட்டத்தில் தன்னிச்சையாக நூற்றுக் கணக்கான ஏக்கர் காணிகளை கையகப்படுத்தியுள்ளதாக கிடைக்கும் தகவல்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என காணி மற்றும் நீர்ப்பாசன பிரதியமைச்சர் அரவிந்த செனரத் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழு மூலம் எந்த அரசியல்வாதிகளுக்கும் உத்தியோகபூர்வமாக காணி வழங்கப்பட்ட தகவல்கள் தற்போது காணப்படும் பட்டியலில் இடம்பெறவில்லை என்றும் அவ்வாறு அரசியல்வாதிகளால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆரச்சி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே பிரதியமைச்சர் அரவிந்த செனரத் இவ்வாறு தெரிவித்தார்.

மஞ்சுள சுரவீர எம்.பி தனது கேள்வியின்போது, பெருமளவு காணிகள் கடந்த அரசாங்க காலத்தில் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அம்பகமுவ வேவல்தலாவ பிரதேசத்தில் 50 ஏக்கர் காணிகளை முன்னாள் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் கையகப்படுத்தியுள்ளார்.

கொத்மலை கிழக்கு புரட்டொப் என்ற தோட்டப் பகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் 16 ஏக்கர் காணிகளை கையகப்படுத்தியுள்ளார்.

தலவாக்கலை பகுதியில் முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய 50 ஏக்கர் காணிகளை கையகப்படுத்தியுள்ளார். நுவரெலியா மாவட்டத்தில் மாகஸ்தொட்டை பிரதேசத்தில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமே மூன்று இடங்களில் தலா 10 ஏக்கர் காணிகளை கையகப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் காணி ஆணைக்குழுவில் உத்தியோகபூர்வ காணி வழங்கள் பட்டியலில் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதா? அவ்வாறில்லாவிட்டால் அது தொடர்பில் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கை என்ன? என அவர் கேள்வி எழுப்பினார்.

வெள்ளைக்கொடி விவகாரம்: சர்வதேச விசாரணை வேண்டும்!

இறுதிப்போரின்போது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு உள்ளக பொறிமுறை ஊடாக நீதி கிட்டாது. எனவே, சர்வதேச விசாரணையே வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

” 2009 இறுதிப்போரின்போது வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த மக்கள், புலிகள் சவேந்திர சில்வாவின் அனுமதியுடன் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தார்.

இதனோடு சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள், அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் தண்டிக்கப்பட வேண்டியவர்களாக உள்ளனர்.

எனினும், போர் முடிவடைந்து பல வருடங்ககள் கடந்தும் தமிழ் மக்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. படுகொலை குறித்து கடந்த அரசாங்கமும் விசாரணை செய்யவில்லை, இந்த அரசாங்கமும் விசாரணை முன்னெடுக்கவில்லை. இதன்காரணமாகவே உள்நாட்டு பொறிமுறைமீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.

உள்ளக பொறிமுறைமூலம் குற்றமிழைத்தவர்களை தண்டிக்க முடியாது. எனவேதான் சர்வதேச விசாரணையை கோரி நிற்கின்றோம்.” எனவும் க. கோடீஸ்வரன் எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.

அடுத்த மாதம் சஜித் டில்லி பயணம்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நான்கு நாள் விஜயமாக நவம்பர் முதல் வாரத்தில் புதுடில்லி செல்கின்றார்.

தம்மோடு வேறு பிரதிநிதிகள் குழுவைக் கூட்டிச் செல்லாமல், எதிர்க்கட்சித் தலைவர் தனித்து புதுடில்லி செல்கின்றார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அங்கு இந்திய உயர்மட்டத் தலைவர்களோடு அவர் பல சுற்றுப் பேச்சுகளில் ஈடுபடுவார் என்றும் தெரிகின்றது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பின்னர் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரைப் புதுடில்லிக்கு அழைத்துப் பேசிய இந்திய அரசு, இப்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை இந்தியாவுக்கு அழைத்திருப்பது முக்கிய விடயமாகப் பேசப்படுகின்றது.

செவ்வந்தி தப்பிச் செல்லப் பயன்படுத்திய யாழ். ஆனந்தனின் மீன்பிடிப் படகும் மீட்பு!

பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின் சூத்திரதாரி இஷாரா செவ்வந்தி இலங்கையில் இருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்குப் பயன்படுத்திய படகு யாழ்ப்பாணத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது.

தெற்கில் இருந்து வடக்குக்குத் தப்பி வந்து கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் தலைமறைவாக இருந்த செவ்வந்தி, இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் கடந்த சில தினங்களில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆனந்தன், மீன்பிடிப்பதற்காகக் கடற்றொழில் அமைச்சில் பதிவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்ட படகே நேற்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

7598 என்ற இலக்கத்துடன் காணப்படும் படகு தற்போது யாழ். பொலிஸாரின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.

ஐஸ்லாந்தில் முதன்முறையாக தென்பட்ட கொசுக்கள்!

ஐஸ்லாந்து நாட்டில் முதன்முறையாக கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அந்நாட்டின் தலைநகருக்கு தென் மேற்கில் உள்ள ஜோஸ் என்ற பள்ளத்தாக்குப் பகுதியில் கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்மூலம் உலகில் இதுவரை கொசுக்களே இல்லாத தேசம் என்ற தகுதியை ஐஸ்லாந்து இழந்துள்ளது. இப்போதைக்கு, ஐஸ்லாந்தை தவிர்த்து கொசுக்கள் இல்லாத இன்னொரு பகுதி என்றால் அது அன்டார்டிக்கா கண்டமாக அறியப்படுகிறது.

ஐஸ்லாந்தின் ஜோஸ் பகுதியில் இரண்டு பெண் கொசுக்களும், ஓர் ஆண் கொசுவும் கண்டறியப்பட்டதாக அந்நாட்டின் பூச்சியியல் துறை நிபுணர் ஜோர்ன் ஹிஜால்டாசன் கூறியுள்ளார்.

மேலும், இந்தக் கொசுக்கள் ‘Culiseta annulata’ என்ற இனத்தைச் சேர்ந்தவை என்றும், இவை எளிதில் கடும் குளிரை தாக்குப் பிடிக்கும் ரகம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த ரக கொசுக்கள் ஐரோப்பா, வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் தென்படுபவை. ஆனால், இவை எப்படி ஐஸ்லாந்துக்கு வந்தன என்பது குறித்து தெரியவில்லை என்று ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த பூச்சியியல் துறை சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஐஸ்லாந்தில் நிலவும் நடுக்கும் குளிரும், தேங்கிய நீர்நிலைகள் இல்லாத சூழலும் தான் அங்கு இதுவரை கொசுக்கள் இல்லாததற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு ஐஸ்லாந்தில் பல முறை அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக 20 டிகிரி செல்சியஸை ஐஸ்லாந்து சந்தித்திராத நிலையில் இந்த ஆண்டு மே மாதம் தொடர்ச்சியாக 10 நாட்களுக்கும் மேல் 20 டிகிரி செல்சியஸைக் கடந்து வெப்பம் பதிவானதாகவும், ஒரு முறை 26.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதாகவும் கூறப்படுகிறது. இந்த வெப்ப அதிகரிப்பு ஐஸ்லாந்தில் பனிப்பாறைகள் உருகக் காரணமானது என்றும், இதுவே, கொசு உற்பத்தியாகக் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் கொசுக்கள் எப்படி நாட்டுக்குள் வந்தது என்பது குறித்து தீவிர ஆய்வுகள் நடந்து வருகின்றன.

சில ஆய்வாளர்கள், “பொதுவாகக் கொசுக்கள் கப்பல்கள், அதில் வரும் கன்டெய்னர்கள் மூலம் பிறநாடுகளுக்குப் பரவும். அதனால் துறைமுகப் பகுதியில் தென்பட்டால் வெளிநாட்டிலிருந்து வந்ததாகச் சொல்லலாம். ஆனால், இந்த கொசுக்கள் ஐஸ்லாந்தின் ஒரு பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் தோட்டத்தில் இருந்துள்ளன. அதனால், அவை எண்ணிக்கையில் இன்னும் அதிகமாக ஐஸ்லாந்தில் இருக்கும் எனத் தோன்றுகிறது” என்று கூறுகின்றனர்.

 

யானை, தொலைபேசி கூட்டு சாத்தியமா?

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவத்தின்கீழ் தனிக்கட்சியாக ஒன்றிணைவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாரில்லை என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் மானப்பெரும தெரிவித்தார்.

அனைத்து எதிர்க் கட்சிகளையும் ஒன்றிணைப்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் நோக்கமாகும். இந்த நடவடிக்கையானது தனியொரு கட்சிக்கு தலைமைத்துவத்தை வழங்கல் அல்ல எனவும் அவர் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பவற்றை ஒன்றிணைப்பதற்குரிய முயற்சி இடம்பெற்றுவருகின்றது.

இவ்வாறு இரு தரப்புகளும் இணைந்து மாகாணசபைத் தேர்தலை பொதுபட்டியலின்கீழ் எதிர்கொள்வதற்குரிய ஏற்பாடும் இடம்பெற்றுவருகின்றது என தகவல் வெளியாகியுள்ள நிலையிலேயே ஐதேக உறுப்பினரான அஜித் மானப்பெரும மேற்கண்டவாறு கூறினார்.

அனைத்து எதிர்க் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் நோக்கிலேயே ஹரின் பெர்ணான்டோவுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

அமைதி பேச்சை ரத்து செய்தார் ட்ரம்ப்!

0
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் பாகிஸ்தானில் நடைபெறவிருந்த 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திடீரென ரத்து செய்துள்ளார். ஈரான் தலைவர்களிடையே நிலவும் குழப்பமே இதற்குக் காரணம் எனக் கூறியுள்ள ட்ரம்ப், பேச்சுவார்த்தைக்கு ஈரான்...

110 கிலோ போதைப்பொருளுடன் 22 பிக்குகள் கைது!

0
1.1 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மதிப்புள்ள, போதைப்பொருள்களை கடத்தி வந்த 22 பௌத்த பிக்குகள், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேசவிமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த...

ஹட்டனில் மே 1 சித்தர் யாகம்!

0
ஓம் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர ஆஸ்ரமத்தின் குருநாதர் சுவாமி கணபதி அவர்களின் ஆசியுடன் எதிர்வரும் 01.05.2026 அன்று மாபெரும் சித்தர் யாகமும் அதனைத் தொடர்ந்து 02.05.2026 திருவாசகம் முற்றோதல் நிகழ்வும் இடம்பெற இருக்கிறது. சுவாமி...