Home Blog Page 240

தோல்வி பீதியால் மாகாணசபைத் தேர்தலுக்கு அஞ்சுகிறது அரசு!

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீறிவிட்டதென ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குற்றஞ்சாட்டினார்.

தேர்தல் சம்பந்தமாக ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,

” தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஒருவருட காலப்பகுதிக்குள் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என்ற வாக்குறுதியை தேசிய மக்கள் சக்தி வழங்கி இருந்தது. எனினும், ஒரு வருடம் கடந்தும் தேர்தல் நடத்தப்படவில்லை. இதன்மூலம் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழி மீறப்பட்டுள்ளது.

உள்ளாட்சிசபைத் தேர்தலில் அரசாங்கத்துக்கு பின்னடைவு ஏற்பட்டது. எனவே, தோல்வி பயத்துக்கு அஞ்சியே இவ்வாறு இழுத்தடிப்பு இடம்பெறுகின்றது.” – என்று குறிப்பிட்டார்.

 

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது!

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த சம்பவத்தில் கைதான இருவரில் ஒருவர் யாழ் மாநகர சபையின் உறுப்பினர் ஒருவரது மகன் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் மாவட்ட சிரேஸ்ர பொலிஸ் அத்தியாச்சரின் கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த இருவரும் 20g ஐஸ் போதை பொருளுடன் கைது செய்யபட்டுள்ளனர்.

சுமார் 25 மற்றும் 23 வயதை சேந்த குறித்த நபர்கள் கைதான சமயம் குற்றத்தடுப்பு பொலிசாதுக்கு இலஞ்சம் கொடுத்து தப்பிக்கவும் முயற்சி மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம் குறித்த இருவருள் ஒருவர் வன்முறை கும்பல்களுடன் தொடர்புடையவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரிடமிருந்து அபாயகரம் மிக்க வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேலதிக விசாரணைகள் யாழ் மாவட்ட போலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இதனிடையே நேற்றையதினம் கைதான இருவருடன் ஐஸ் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுடன் தொடர்புடைய 6 பேர் கடந்த சில தினங்களுக்குள் கைதாகி இருப்பதாக பொலிசார் தெரிவித்திரிந்தமை குறிப்பிடத்தக்கது

உங்களை பார்த்தாலே பயம்: தயவுசெய்து ஆவியாக வேண்டாம்! சாமர எம்.பிக்கு ஆளுங்கட்சி பதிலடி!

 

” உங்களின் முகத்தை பார்த்தாலே பயமாகத்தான் இருக்கின்றது. காலையில் பார்த்தால்கூட அப்படிதான். எனவே, தயவுசெய்து ஆவியாக வந்துவிட வேண்டாம். நாம் உங்களை பாதுகாப்போம். அச்சப்பட வேண்டாம்.”

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்துக்கு பதிலடி கொடுத்தார் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய சாமர சம்பத் தஸநாயக்க எம்.பி.,

” என்னை கொலை செய்தால் ஆவியாக வந்தேனும் பழிவாங்குவேன்.” என குறிப்பிட்டிருந்தார்.இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே நீதி அமைச்சர் சிரித்தபடி மேற்கண்டவாறு கூறினார்.

 

நுவரெலியாவில் காணிகளை கையகப்படுத்திய அரசியல் வாதிகளின் பெயர்கள் வெளியீடு!

நுவரெலியா மாவட்டத்தில் காணிகளை கையகப்படுத்திய அரசியல் வாதிகளின் பெயர்களை, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர நாடாளுமன்றத்தில் இன்று (23) வெளியிட்டார்.

நுவரெலியா மாவட்ட மக்களுக்கு காணி இல்லாத நிலையிலேயே இவ்வாறு காணி கொள்ளை இடம்பெற்றுள்ளது என சுட்டிக்காட்டிய அவர், இது தொடர்பில் விசாரணை வேண்டும் என வலியுறுத்தினார்.

எல்.ஆர்.சியால் மாற்று காணி வழங்கப்பட்டுள்ள நபர்களின் பட்டியலில் அரசியல்வாதிகளின் பெயர் உள்ளதா என கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி நீர்பாசனம் அமைச்சரிடம் மஞ்சுள சுரவீர எம்.பி. கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு அமைச்சு தரப்பில் பிரதி அமைச்சர் பதிலளிக்கையில்,

” அரசியல்வாதிகளுக்கு ஆணைக்குழுவால் சட்டத்திற்குட்பட்ட வரையறைக்குள் காணி வழங்கப்படவில்லை.” எனக் கூறினார்.

இதனையடுத்து கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரவீர,

“நுவரெலியா மாவட்டத்தில் மக்களுக்கு காணி இல்லை, இந்நிலையில் பிரதி அமைச்சரால் வழங்கப்பட்ட பதில் தொடர்பில் எமக்கு பிரச்சினை உள்ளது.” என சுட்டிக்காட்டினார். அதன்பின்னர் கீழ்வரும் அரசியல் வாதிகளின் பெயர்களையும், கையகப்படுத்தப்பட்ட காணியின் அளவையும் அவர் வெளியிட்டார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ்: அம்பகமுவ, வேவல்கலாவ பிரதேசத்தில் சுமார் 50 ஏக்கர்.

உபாலி லியனகே ( தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர்) வேவல்கலாவ பிரதேசத்தில் 50 ஏக்கர்.

சுப்பையா சதாசிவம் (முன்னாள் பா.உ) கொத்மலை கிழக்கு, புரட்டொப் பிரதேசத்தில் சுமார் 16 ஏக்கர்.

ரஞ்சித் சியம்பலாபிட்டிய (முன்னாள் இராஜாங்க அமைச்சர்) தலவாக்கலையில் சுமார் 50 ஏக்கர்.

மகிந்தானந்த அளுத்கமகே (முன்னாள் அமைச்சர்) நுவரெலியா மாகஸ்தொட்ட, ஹாவெலிய, லவ்வர்ஸ்லீப் ஆகிய பிரதேசங்களில் (தலா 10 ஏக்கர் வீதம்) மொத்தமாக 30 ஏக்கர்.

இந்த பெயர் பட்டியல் உள்ள ஆவணம் எங்கே எனவும் காணி பிரதி அமைச்சரிடம் அவர் கேள்வி எழுப்பினார்.

” அந்த பட்டியல் இருக்கவில்லை. இது பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்.இது பற்றி அமைச்சுக்கு தெரியப்படுத்தப்படும்.” என பிரதி அமைச்சர் பதிலளித்தார்.

இந்த காணி கொள்ளை தொடர்பில் எப்போது விசாரணை ஆரம்பமாகும் என்ற கேள்விக்கு, இது தொடர்பில் வெளிப்படையான விசாரணையை முன்னெடுத்து, விரைவில் சபைக்கு தெரியப்படுத்தப்படும் என பிரதி அமைச்சர் பதிலளித்தார்.

என்னை கொலை செய்தால் ஆவியாக வந்து பழிதீர்ப்பேன்: சாமர எம்.பி.!

” என்னை கொலை செய்தால் ஆவியாக வந்தேனும் பழிவாங்குவேன் என்பதை புரிந்துகொள்ளுங்கள் பொலிஸ் துறைக்கு பொறுப்பனா அமைச்சரே….”

இவ்வாறு பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (23) உரையாற்றுகையிலேயே சாமர சம்பத் தஸநாயக்க இவ்வாறு குறிப்பிட்டார். தனது உரையின்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தொடர்பில் சாமர எம்.பி. கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

” அமைச்சரே, எம்மை அச்சுறுத்தி அடிபணிய வைக்க முடியாது. முடிந்தால் எம்மை கொல்லுங்கள். ஆவியாக வந்தேனும் பழிதீர்ப்பேன். எனது பாதுகாப்பும் நீக்கப்பட்டுள்ளது. என்னை கொல்வதற்குதான் பார்க்கின்றீர்கள். கொலை செய்தாலும் உங்களுக்கு பின்னால்தான் நிற்பேன்.” – எனவும் சாமர சம்பத் தஸநாயக்க எம்.பி. குறிப்பிட்டார்.

சீரற்ற காலநிலையால் 12,142 பேர் பாதிப்பு: 483 வீடுகள் சேதம்!

நுவரெலியா, கண்டி, பதுளை, குருணாகல், காலி உட்பட நாட்டில் 12 மாவட்டங்களில் நிலவும் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால 3, 036 குடும்பங்களைச் சேர்ந்த 12, 142 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலையால் நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (23) மதியம் வெளியிட்டுள்ள நாளாந்த நிலைவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம், மண்சரிவால் 2 வீடுகள் முழுமையாகவும், 481 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. சீரற்ற காலநிலையால் காலி மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

எரிபொருள் லொறி வெடித்து விபத்து: நைஜீரியாவில்39 பேர் பலி!

எரிபொருள் ஏற்றிச்சென்ற லொறி விபத்துக்குள்ளாகி வெடித்து சிதறியதல் 39 பேர் பலியாகியுள்ளனர்.

நைஜீரியாவின் நைஜர் மாகாணம் பீடாவில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு டேங்கர் லொறியொன்று அகே நோக்கி சென்று கொண்டிருந்தது.

அதிகாலை 4 மணியளவில் அந்த டேங்கர் லொறி எசான் அருகே சென்றபோது பள்ளத்தில் விழுந்து தலைகுப்புற கவிழ்ந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த எசான் சுற்றுவட்டார பகுதி மக்கள் விபத்திற்குள்ளான பகுதிக்கு பாத்திரங்களை எடுத்து கொண்டு வந்தனர்.

பின்னர் டேங்கர் லாரியில் இருந்து சாலையில் ஆறாக ஓடிய எண்ணெயை சேகரித்தனர். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் அந்த டேங்கர் லாரி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் எண்ணெய் சேகரித்து கொண்டிருந்த அப்பாவி பொதுமக்கள் உள்பட 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை?

 

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபவர்களுக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பில் அரசாங்கத்துக்குள் எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (22) நடைபெற்றது.

இதன்போது போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் நபர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என சமூகத்தில் எழுந்துள்ள கருத்தாடல் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

” மரண தண்டனை வழங்குவது பற்றி தீர்மானம் எடுக்கப்படவில்லை. சமூகத்தில் கருத்தாடல் உருவாகி இருந்தாலும் அரசாங்க மட்டத்தில் கலந்துரையாடல் ஆரம்பமாகவில்லை.” – என்றார் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ.

செம்மணி புதைகுழி: வெளிநாட்டு தொழில்நுட்ப உதவி பெற திட்டம்!

” செம்மணி புதைகுழி விவகாரத்தில் சர்வதேச தொழில்நுட்ப ஒத்துழைப்பு பெறப்படும். ஏனெனில் உண்மையை கண்டறிவதற்கு இது முக்கியம்.” – என்று நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.

செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பான விசாரணைக்கு சர்வதேச ஒத்துழைப்பு பெறப்பட வேண்டும் என முன்வைக்கப்பட்டுவரும் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” செம்மணி புதைகுழி அகழ்வு நடவடிக்கைக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எமக்கு சில விடயங்களில் ஆய்வுக்கூட வசதி இல்லை. எமது நாட்டு பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படவேண்டும். எமக்கு உண்மையை கண்டறிவதுதான் முக்கியம். தொழில்நுட்ப உதவியும் தேவைப்படுகின்றது. எனவே, சர்வதேச தொழில்நுட்ப உதவி பெறப்படும்.” – என்றார்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

அமைதி பேச்சை ரத்து செய்தார் ட்ரம்ப்!

0
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் பாகிஸ்தானில் நடைபெறவிருந்த 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திடீரென ரத்து செய்துள்ளார். ஈரான் தலைவர்களிடையே நிலவும் குழப்பமே இதற்குக் காரணம் எனக் கூறியுள்ள ட்ரம்ப், பேச்சுவார்த்தைக்கு ஈரான்...

110 கிலோ போதைப்பொருளுடன் 22 பிக்குகள் கைது!

0
1.1 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மதிப்புள்ள, போதைப்பொருள்களை கடத்தி வந்த 22 பௌத்த பிக்குகள், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேசவிமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த...

ஹட்டனில் மே 1 சித்தர் யாகம்!

0
ஓம் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர ஆஸ்ரமத்தின் குருநாதர் சுவாமி கணபதி அவர்களின் ஆசியுடன் எதிர்வரும் 01.05.2026 அன்று மாபெரும் சித்தர் யாகமும் அதனைத் தொடர்ந்து 02.05.2026 திருவாசகம் முற்றோதல் நிகழ்வும் இடம்பெற இருக்கிறது. சுவாமி...