Home Blog Page 241

செம்மணி புதைகுழி: வெளிநாட்டு தொழில்நுட்ப உதவி பெற திட்டம்!

” செம்மணி புதைகுழி விவகாரத்தில் சர்வதேச தொழில்நுட்ப ஒத்துழைப்பு பெறப்படும். ஏனெனில் உண்மையை கண்டறிவதற்கு இது முக்கியம்.” – என்று நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.

செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பான விசாரணைக்கு சர்வதேச ஒத்துழைப்பு பெறப்பட வேண்டும் என முன்வைக்கப்பட்டுவரும் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” செம்மணி புதைகுழி அகழ்வு நடவடிக்கைக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எமக்கு சில விடயங்களில் ஆய்வுக்கூட வசதி இல்லை. எமது நாட்டு பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படவேண்டும். எமக்கு உண்மையை கண்டறிவதுதான் முக்கியம். தொழில்நுட்ப உதவியும் தேவைப்படுகின்றது. எனவே, சர்வதேச தொழில்நுட்ப உதவி பெறப்படும்.” – என்றார்.

ட்ரம்ப் தென்கொரியா செல்லும் நிலையில் வடகொரியா ஏவுகணை பரிசோதனை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த வாரம் தென்கொரியா வரவுள்ள நிலையில், வடகொரியா அதி நவீன ஏவுகணை பரிசோதனையில் ஈடுபட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகளின் வர்த்தகப் பொருளாதார தடைகளை மீறி வடகொரியா ராணுவம் அதி நவீன ஏவுகணைகளைத் தயாரித்து சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது.

இதற்கிடையே, தென் கொரியாவில் அடுத்த வாரம் நடக்கவுள்ள ஆசியா-பசிபிக் பொருளாதார மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் தென் கொரியாவின் புதிய ஜனாதிபதி லீ ஜே மூங் ஆகியோரை சந்தித்து டிரம்ப் பேச்சு நடத்துவார் என்பதால் அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், வடகொரியா ராணுவம் நேற்று அதி நவீன ஏவுகணைகளை வானில் ஏவி பரிசோதனை செய்தது. கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையை நோக்கி ஏவி வடகொரியா ராணுவம் சோதித்தது என தென் கொரியா ராணுவம் முறைப்பாடு செய்துள்ளது.

ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கம்பளை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது!

 

ஹெரோயின் போதைப்பொருள் சகிதம் மூன்று சந்தேக நபர்கள், கம்பளை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

26, 34 மற்றும் 43 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்பளை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கம்பளை, தொலுவ வட்டகொடவத்த பகுதியிலுள்ள வீடொன்று சோதனைக்குட்படுத்தப்பட்டது.

இதன்போது 26 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 2,173 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் பேராதனை, சியதகலவத்த பகுதியில் 34 வயது நபரொருவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து 2,840 மில்லி கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
இதனையடுத்து அதே பகுதியை சேர்ந்த 43 வயது நபரொருவர் கைது செய்யப்பட்டார். அவர் வசமிருந்தும் 2,530 ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது.

சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர், 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

க.யோகா

மரக்கறி விலைப்பட்டியல் (23.10.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (23) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

மலையக அதிகார சபைக்கு பாதீட்டில் நிதி ஒதுக்கீடு: மகஜர் கையளிப்பு!

பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையை கலைப்பதற்கு பதிலாக அதற்கு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கி மலையக சமூகத்திற்கான அபிவிருத்திகளை முன்னெடுங்கள் எனும் கோரிக்கையை வலியுறுத்தும் பொதுமக்கள் மனுவை மலையக அரசியல் அரங்கம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கையளித்துள்ளது.

22-10-225 புதன் கிழமை பத்தரமுல்ல யில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் மலையக அரசியல் அரங்கத்தின் உயர் பீட உறுப்பினர்களுக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

மலையக அரசியல் அரங்கத்தின் சார்பில் அதன் உயர் பீட உறுப்பினர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா , கிருஷ்ணகுமார், சுரேஷ் குமார், ஆரோக்கியம் பிரான்ஸிஸ் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

இச்சந்திப்பு குறித்து மலையக அரசியல் அரங்கம் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் கலைப்பதற்கு என பட்டியலிடப்பட்ட மலையக அதிகார சபை கலைக்கப்படக் கூடாது , மாறாக அதற்கு 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் நிதியீட்டம் செய்து வலுப்படுத்தி மலையக சமூகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்த வேண்டும்,

அதிகார சபையை மறுசீரமைப்பு எனும் போர்வையில் எந்தவிதத்திலும் அதிகார குறைப்பு செய்யக் கூடாது எனும் கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்து சேகரிக்கப்பட்ட மனுவினை வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்திடம் கையளித்தோம்.

அண்மையில் பாராளுமன்றத்திலும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை பேரவை அமர்விலும் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் இலங்கையில் ‘இந்திய/ மலையகத் தமிழர்’ என சனத்தொகைக் கணக்கெடுப்பு செய்யப்படும் மக்களை ‘மலையகத் தமிழர்’ அன அங்கீகரிப்பதாகத் தெரிவுத்துள்ளார்.

அதற்கு நன்றி தெரிவித்த அதேநேரம், இலங்கையில் வட கிழக்குத் தமிழர்களும், முஸ்லிம்களும் தங்களது இனத்துவ அடையாளஙகளுக்கு முன்பதாக ‘இலங்கை’ எனும் தேசிய அடையாளத்துடனேயே சனத் தொகைக் கணக்கெடுப்பு செய்யப்படுகின்றனர்.அதேபோல மலையகத் தமிழர்களும் ‘இலங்கை மலையகத் தமிழர்’ என அடையாளப்படுத்தபபடல் வேண்டும்.

அதே நேரம் தற்போதைய இந்திய தமிழர் என்பதற்கு பதிலாக ‘இந்திய வம்சாவளியினர்’ எனும் பகுதி உருவாக்கப்படல் வேண்டும். அதன் மூலம் இந்திய வம்சாவளி அடையாளத்தை விரும்பும் தமிழரும் தமிழரல்லாத இந்தியரும் அதனைத் தமது அடையாளமாகக் கொள்ள முடியும் எனும் எமது முன்மொழிவையும் செய்திருந்தோம்.

அதிகார சபை கலைக்கப்படமாட்டாது என உறுதியளித்த அமைச்சரிடம் அதனை அரசாங்கத்தின் சார்பில் எழுத்துமூல அறிக்கையாக வழங்குமாறு வேண்டிக் கொண்டோம்.

அதிகார சபைக்குரிய ஆளணியினராக மலையக மக்களுக்கு சேவையாற்றுவதற்கு என நியமனம் வழங்கப்பட்டு தற்போது வெவ்வேறு பணிகளில் அமர்த்தப்படுள்ள பெருந்தோட்ட சமூக தொடர்பாடல் வசதியளிப்பாளர்களை ( PCCF) இணைத்துக் கொள்வதன் மூலம் அனைத்து மலையக மாவட்டங்களிலும் பிரதேச செயலகங்களூடாக அதிகார சபையின் வேலைத் திட்டங்களை முன்னெடுக்க முடியும் எனும் எமது ஆலோசனையையும் முன்வைத்தோம்.

அண்மையில் பண்டாரவளை யில் இடம் பெற்ற வீட்டுரிமைப் பத்திரங்கள் வழங்குதலில் ஏற்பட்ட சர்ச்சைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

சுமூகமான இந்தக் கலந்துரையாடலை அடுத்து மக்கள் மனு வினை ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவைக்கு சேர்ப்பிக்குமாறு அமைச்சரவையின் மூத்த உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தி அரசியல் உயர்பீட உறுப்பினருமான விஜித்த ஹேரத்திடம் கையளித்தோம்.

எமது வேண்டுகோள்கள் குறித்து தெளிவாகக் கேட்டு அறிந்து கொண்ட அமைச்சர் விஜித்த ஹேரத் அரசாங்கத்தின் கவனத்துக்கு மேற்படி விடயங்களைக் கொண்டு செல்வதாக உறுதி அளித்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும் மழை: சீரற்ற காலநிலையில் 9 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு!

 

மத்திய , சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில இடங்களி்ல் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 – 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காங்கேசன்துறை தொடக்கம் மன்னார், கொழும்பு , காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 – 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

அதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் நுவரெலியா, கண்டி, பதுளை, குருணாகல், காலி உட்பட நாட்டில் 2, 395 குடும்பங்களைச் சேர்ந்த 9, 542 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலையால் நால்வர் உயிரிழந்துள்ளனர் .

4 பொலிஸ் குழுக்கள் விசாரணை வேட்டை!

வெலிகம பிரதேச சபைத் தலைவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் நேற்று பங்கேற்றிருந்தார்.

” வெலிகம பிரதேச சபையில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. தென்மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் நேரடி கண்காணிப்பின்கீழ் 4 குழுக்கள் விசாரணைக்கு களமிறக்கப்பட்டுள்ளன. பல கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

இதற்கமைய விரைவில் தகவல்கள் கிடைக்கப்பெறும் என நம்புகின்றோம். மக்களுக்கும் ஏதேனும் தகவல் தெரிந்தால் அது பற்றி எமக்கு தெரியப்படுத்தலாம்.” எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

டிசம்பரில் இலங்கையர் தின நிகழ்வு!

” இலங்கையர் தினம்” நிகழ்வுகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 12,13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபை மைதானத்திலும், விகாரமாதேவி பூங்கா உள்ளிட்ட அப்பிரதேத்தை அண்டிய வளாகங்கள் மற்றும் பிரதான வீதிகளை உள்ளடக்கியதாக 04 வலயங்களில் அரச மற்றும் தனியார் துறைகளின் பங்கேற்புடன் நிகழ்வுகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

சமூகத்தவர்களிடையே புரிந்துணர்வை அதிகரித்து நல்லிணக்கத்துடன் கூடிய இலங்கையைக் கட்டியெழுப்பும் நோக்கில் ‘இலங்கையர் தினமாக’ தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை நடாத்துவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட உரையில் முன்மொழிந்துள்ளார்.

இந்நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்ச்சித்திட்டம் அனைத்து இனங்கள் மற்றும் மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், அனைத்து மாவட்டங்களின் கலாச்சார நிகழ்வுகள் மற்றும் உணவுக் கலாச்சாங்களை உள்ளடக்கிய நிகழ்ச்சிகள், உள்நாட்டு கைத்தொழில் கண்காட்சி மற்றும் விற்பனை, புதிய உற்பத்திகளுக்கான வாய்ப்புக்களை அறிமுகப்படுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, ‘இலங்கையர் தினம்’ நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நாட்டில் அரசியல்வாதிகள், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

 

வெலிகம பிரதேச சபைத்தவிசாளரின் கொலைக்குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெலிகமவில் இன்று (22) காலை இடம்பெற்ற வெலிகம பிரதேச சபைத்தவிசாளருடைய அகோரமான கொலைச்சம்பவம் எல்லோரையும் மிக மோசமாகப் பாதித்துள்ளது.

இக்கொலைச்சம்பவம் சம்பந்தமாக உரிய விசாரணை மேற்கொள்ளப்படுவதுடன் சட்ட, ஒழுங்குக்குப் பொறுப்பான அமைச்சர் இது சம்பந்தமான விளக்கத்தை பாராளுமன்றத்தில் விடுக்க வேண்டும்.

இன்று அரசியல்வாதிகளுடைய பாதுகாப்பு மாத்திரமல்ல, பொதுமக்களுடைய பாதுகாப்பும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கின்றது. திட்டமிட்டு பட்டப்பகலில் ஒரு காரியாலயத்திற்குள் புகுந்து ஒரு உள்ளூராட்சி சபைத்தவிசாளரைக்கொலை செய்வது சாதாரணமான விடயமல்ல.

இந்த உள்ளூராட்சித்தவிசாளரை நியமனமிக்கின்ற தினத்தில் அவருக்குச்சார்பாக வாக்களிக்கவிருந்தவர்களை கடத்திச்சென்று தடுத்து வைத்திருந்த சம்பவம் அரசாங்கத்தின் மேல் சந்தேகமெழுந்திருந்தது.

இப்பின்னணியில் இவ்வாறான கொலை நடைபெற்றிருப்பது என்பது அரசியல் ரீதியாக இதற்கு சம்பந்தமிருக்கிறதா? ஏற்கனவே இதை வேறுபக்கங்களில் திசைதிருப்புவதற்காக கொலையுண்டவரை அவமானப்படுத்தும் அடிப்படையில் சில காரணங்களைச்சொல்ல சில ஊடகங்கள் முயற்சிக்கின்றன. அதற்குப்பின்னால் அரச தரப்பினரும் இருக்கிறார்களா? என்ற சந்தேகம் வலுவாக இருக்கிறது.

இச்சூழ்நிலையில் இது சம்பந்தமாக அவசரமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நீதிமன்றத்திற்குள்ளே கொலைச்சம்பவத்தை திட்டமிட்டார் என்ற அடிப்படையில் நாட்டிற்கு வெளியில் சென்று பெண்ணொருவரைக் கைது செய்ய முடியுமாயின், இன்று நாட்டுக்குள்ளே கொலையை நடாத்திய கொலைதாரிகளை மிக அவசரமாககைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென மிக அழுத்தம் திருத்தமாக வேண்டிக்கொள்கின்றோம் எனத்தெரிவித்தார்.

எம்.என்.எம்.யஸீர் அறபாத்

வெலிகம பிரதேச சபை தவிசாளருக்கு பாதாள குழுவுடன் தொடர்பு!

துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்துள்ள வெலிகம பிரதேச சபை தலைவர், பாதாள குழுவுடன் தொடர்புபட்டவர். அவருக்கு எதிராக ஆறு வழங்குகள் உள்ளன என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

வெலிகம பிரதேச சபைக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

” பாதாளக்குழுக்களுக்கிடையிலான மோதலின் விளைவாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவர் மக்கள் பிரதிநிதி என்றபோதிலும் பாதாள குழுவுடன் தொடர்புபட்டவர். கொலைகளை நாம் அனுமதிப்பதில்லை. மேற்படி சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை இடம்பெறுகின்றது.”எனவும் அமைச்சர் கூறினார்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

நீலகாமம் மக்களுக்கு நீதி கிடைக்கும்: நேரில் களமிறங்கி பிரதி அமைச்சர் பிரதீப் உறுதி!

0
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் , அடியாட்களால் தோட்ட மக்கள் தாக்கப்பட்டது தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும், சம்பந்தப்பட்ட தரப்பினரை கைது செய்வதற்கும் தேவையான ஆலோசனைகளை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்...

அமைதி பேச்சை ரத்து செய்தார் ட்ரம்ப்!

0
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் பாகிஸ்தானில் நடைபெறவிருந்த 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திடீரென ரத்து செய்துள்ளார். ஈரான் தலைவர்களிடையே நிலவும் குழப்பமே இதற்குக் காரணம் எனக் கூறியுள்ள ட்ரம்ப், பேச்சுவார்த்தைக்கு ஈரான்...

110 கிலோ போதைப்பொருளுடன் 22 பிக்குகள் கைது!

0
1.1 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மதிப்புள்ள, போதைப்பொருள்களை கடத்தி வந்த 22 பௌத்த பிக்குகள், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேசவிமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த...