Home Blog Page 242

நாட்டில் அரசியல்வாதிகள், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

 

வெலிகம பிரதேச சபைத்தவிசாளரின் கொலைக்குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெலிகமவில் இன்று (22) காலை இடம்பெற்ற வெலிகம பிரதேச சபைத்தவிசாளருடைய அகோரமான கொலைச்சம்பவம் எல்லோரையும் மிக மோசமாகப் பாதித்துள்ளது.

இக்கொலைச்சம்பவம் சம்பந்தமாக உரிய விசாரணை மேற்கொள்ளப்படுவதுடன் சட்ட, ஒழுங்குக்குப் பொறுப்பான அமைச்சர் இது சம்பந்தமான விளக்கத்தை பாராளுமன்றத்தில் விடுக்க வேண்டும்.

இன்று அரசியல்வாதிகளுடைய பாதுகாப்பு மாத்திரமல்ல, பொதுமக்களுடைய பாதுகாப்பும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கின்றது. திட்டமிட்டு பட்டப்பகலில் ஒரு காரியாலயத்திற்குள் புகுந்து ஒரு உள்ளூராட்சி சபைத்தவிசாளரைக்கொலை செய்வது சாதாரணமான விடயமல்ல.

இந்த உள்ளூராட்சித்தவிசாளரை நியமனமிக்கின்ற தினத்தில் அவருக்குச்சார்பாக வாக்களிக்கவிருந்தவர்களை கடத்திச்சென்று தடுத்து வைத்திருந்த சம்பவம் அரசாங்கத்தின் மேல் சந்தேகமெழுந்திருந்தது.

இப்பின்னணியில் இவ்வாறான கொலை நடைபெற்றிருப்பது என்பது அரசியல் ரீதியாக இதற்கு சம்பந்தமிருக்கிறதா? ஏற்கனவே இதை வேறுபக்கங்களில் திசைதிருப்புவதற்காக கொலையுண்டவரை அவமானப்படுத்தும் அடிப்படையில் சில காரணங்களைச்சொல்ல சில ஊடகங்கள் முயற்சிக்கின்றன. அதற்குப்பின்னால் அரச தரப்பினரும் இருக்கிறார்களா? என்ற சந்தேகம் வலுவாக இருக்கிறது.

இச்சூழ்நிலையில் இது சம்பந்தமாக அவசரமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நீதிமன்றத்திற்குள்ளே கொலைச்சம்பவத்தை திட்டமிட்டார் என்ற அடிப்படையில் நாட்டிற்கு வெளியில் சென்று பெண்ணொருவரைக் கைது செய்ய முடியுமாயின், இன்று நாட்டுக்குள்ளே கொலையை நடாத்திய கொலைதாரிகளை மிக அவசரமாககைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென மிக அழுத்தம் திருத்தமாக வேண்டிக்கொள்கின்றோம் எனத்தெரிவித்தார்.

எம்.என்.எம்.யஸீர் அறபாத்

வெலிகம பிரதேச சபை தவிசாளருக்கு பாதாள குழுவுடன் தொடர்பு!

துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்துள்ள வெலிகம பிரதேச சபை தலைவர், பாதாள குழுவுடன் தொடர்புபட்டவர். அவருக்கு எதிராக ஆறு வழங்குகள் உள்ளன என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

வெலிகம பிரதேச சபைக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

” பாதாளக்குழுக்களுக்கிடையிலான மோதலின் விளைவாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவர் மக்கள் பிரதிநிதி என்றபோதிலும் பாதாள குழுவுடன் தொடர்புபட்டவர். கொலைகளை நாம் அனுமதிப்பதில்லை. மேற்படி சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை இடம்பெறுகின்றது.”எனவும் அமைச்சர் கூறினார்.

இஸ்ரேல் பிரதமரை கைது செய்வோம்: கனடா பிரதமர் எச்சரிக்கை!

இஸ்ரேல் பிரதமர் கனடா நுழைந்தால் சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை அமுல்படுத்தும் விதமாக அவர் நிச்சயம் கைது செய்யப்படுவார் என கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.

காசா மீது இஸ்ரேல் தொடுத்த போரில் 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதில் குழந்தைகள், பெண்கள் ஆகியோரும் அடங்குவர். எனவே போர்க்குற்றம் செய்ததாக நெதர்லாந்து சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

இதில் கடந்த ஆண்டு அவருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையே, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலையீட்டால் இஸ்ரேல்-காசா போர் முடிவுக்கு வந்தது.

அதேசமயம் அவருக்கு எதிரான கைது உத்தரவு தொடர்ந்து நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், தனி பாலஸ்தீன நாடு உருவாக்கத்துக்கு பெஞ்சமின் நெதன்யாகு தடையாக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி குற்றம்சாட்டினார். எனவே கனடாவில் நுழைந்தால் சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை அமுல்படுத்தும் விதமாக அவர் நிச்சயம் கைது செய்யப்படுவார் என பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.

ஏற்கனவே பிரான்ஸ், துருக்கி, பெல்ஜியம் உள்ளிட்ட பல நாடுகள் சர்வதேச நீதிமன்றத்தின் கைது உத்தரவை நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நுவரெலியா உட்பட 12 மாவட்டங்களில் சீரற்ற காலநிலை: நால்வர் பலி!

நுவரெலியா, கண்டி, பதுளை, குருணாகல், காலி உட்பட நாட்டில் 12 மாவட்டங்களில் நிலவும் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால 2, 395 குடும்பங்களைச் சேர்ந்த 9, 542 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலையால் நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (22) மதியம் வெளியிட்டுள்ள நாளாந்த நிலைவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம், மண்சரிவால் 2 வீடுகள் முழுமையாகவும், 422 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. சீரற்ற காலநிலையால் காலி மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

மக்கள் பிரதிநிதி சுட்டுக்கொலை: இதுதான் தேசிய பாதுகாப்பா?

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் அலுவலகத்தில் இருக்கும் போதே அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தேசியப் பாதுகாப்பு இதுதானா? எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி.

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர அவர்கள் அலுவலகத்தில் பொது மக்கள் தின நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் வேளையில், அவர் மீது துப்பாக்கி சூடு நடந்தப்பட்டுள்ளது. தனது கடமைகளைச் செய்து கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த அவர் தற்போது உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

 

 

வெலிகம பிரதேச சபை தவிசாளர் சுட்டுக்கொலை!

மாத்தறை, வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று முற்பகல்வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரதேச சபைக்குள் வைத்தே துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான தவிசாளர், மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மோட்டார் சைக்களில் வந்த இருவரே துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்
.
இவர் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரென்பது குறிப்பிடத்தக்கது.

லெவலன் தோட்டத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் வெளிக்கள உத்தியோகத்தர் கைது!

புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெவலன் தோட்டத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புப்புரஸ்ஸ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, அவர் தங்கி இருந்த தோட்ட விடுதியில் நேற்று மதியம் பொலிஸார் சோதனை நடத்தினர்.

இதன்போதே பையொன்றில் இருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை இன்று நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

க,யோகா

ட்ரம்ப், புடின் நேரடி சந்திப்பு இரத்து!

ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கிடையில் நடைபெறவிருந்த நேரடி சந்திப்பு திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையேயான போர், 3 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கு இடையே அமெரிக்கா மத்தியஸ்தம் செய்து வந்த போதிலும் போர் முடிவுக்கு வரவில்லை.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி ரஷ்ய ஜனாதிபதி புடினை, டிரம்ப் சந்தித்து பேசினார். அலாஸ்காவில் நடைபெற்ற இந்த பேச்சில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. போர் நிறுத்தம் பற்றிய எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் அண்மையில் வாஷிங்டனில் டிரம்பை, உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து புடினை நேரில் சந்திக்க உள்ளதாக டிரம்ப் தெரிவித்து இருந்தார். இவர்களின் சந்திப்பு ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்ட் நகரத்தில் நடப்பதாக இருந்தது.

இந் நிலையில், திடீரென இந்த சந்திப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த விவரத்தை வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர்கள் கூறி உள்ளனர்.

அவர்கள் என்ன பேசினார்கள் என்பது குறித்து பொதுவெளியில் எதையும் தெரிவிக்க முடியாது என்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
போர் நிறுத்தத்துக்கு புடின் இணங்க மறுத்தாலேயே சந்திப்பை ட்ரம்ப் இரத்து செய்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

வேட்பாளர்களுக்கு பொலிஸ் சான்றிதழ்: சஜித் அணியும் ஆதரவு!

மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாம் குற்றப்பின்னணி கொண்டவர்கள் அல்லர் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் பொலிஸ் சான்றிதழை வழங்கினால் அது சிறப்பாக இருக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

வேட்பாளராக களமிறங்குவதற்கு விண்ணப்பிப்பவர்களிடம் பொலிஸ் சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச அறிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

” தவறிழைத்தவர்களுக்கு எமது கட்சி எப்படியும் வேட்புமனு வழங்காது. எனினும், பொலிஸ் அறிக்கையொன்றி பெற்று வேட்பு மனு வழங்கும் நடவடிக்கையில் தவறு இருக்காது என்றே நான் நினைக்கின்றேன்.” – எனவும் மத்தும பண்டார கூறியுள்ளார்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

தையிட்டி காணி அளவீடு நாளை ஆரம்பம்!

0
யாழ். தையிட்டி விகாரையைச் சூழவுள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கான நில அளவீட்டுப் பணிகள் நாளை மற்றும் நாளைமறுதினம் ஆகிய இரு தினங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளன என்று தெல்லிப்பழை பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார். தையிட்டிக் கிராமத்தில்...

யாழில் தந்தை செல்வாவின் 49ஆவது நினைவு நாள் நிகழ்வு!

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வநாயகத்தின் 49ஆவது நினைவு நாள் அஞ்சலி நிகழ்வுகளும் நினைவுப் பேருரையும் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன. இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை...

நீலகாமம் மக்களுக்கு நீதி கிடைக்கும்: நேரில் களமிறங்கி பிரதி அமைச்சர் பிரதீப் உறுதி!

0
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் , அடியாட்களால் தோட்ட மக்கள் தாக்கப்பட்டது தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும், சம்பந்தப்பட்ட தரப்பினரை கைது செய்வதற்கும் தேவையான ஆலோசனைகளை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்...