Home Blog Page 244

பட்டாசு புகை: டெல்லியில் காற்று மாசு 15 மடங்கு அதிகரிப்பு

டெல்லியில் இந்த ஆண்டு பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து மக்கள் ‘பட்டாசு தீபாவளி’யை கொண்டாடியதன் எதிரொலியாக, உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்ததைவிட 15 மடங்கு காற்று மாசு அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தரவு தெரிவிக்கிறது.

டெல்லியில் காற்று மாசு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்திருந்தது. அதை எதிர்த்து பட்டாசு உற்பத்தியாளர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை பசுமை பட்டாசுகளை மட்டும் வெடிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது.

நேற்றைய தீபாவளி கொண்டாட்டத்தின்போது நேரக் கட்டுப்பாடு மீறப்பட்டதாகவும், மேலும் பசுமை பட்டாசுகளைத் தாண்டி தடை விதிக்கப்பட்ட பட்டாசுகளும் வெடிக்கப்பட்டதாகவும் இவற்றின்மூலம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வெளிப்படையாக மீறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில், டெல்லியில் ஒரு கன மீட்டருக்கு 228 மைக்ரோ கிராம் அளவில் மாசு பதிவாகி உள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் அனுமதித்துள்ள ஒரு கன அடிக்கு 15 மைக்ரோ கிராம் என்ற அளவுடன் ஒப்பிடும்போது இது 15.1 மடங்கு அதிகம்.

IQAir என்ற சுவிட்சர்லாந்து காற்றுத் தர தொழில்நுட்ப நிறுவனம் உலகின் மிக முக்கிய 120 மாநகரங்களின் காற்ற மாசு குறித்த தரவுகளை வெளியிட்டுள்ளது. அதில் இன்று காலை நிலவரம் பதிவாகி உள்ளது. அதன்படி, டெல்லியின் காற்றுத் தரக்குறியீடு 429 ஆக இருந்ததாகவும், இதன் மூலம் உலகில் மிகவும் மாசுபட்ட மாநகராக டெல்லி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2-ம் இடத்தில் உள்ள லாகூரில் காற்றின் தரக்குறியீடு 260 ஆகவும், 3ம் இடத்தில் உள்ள கராச்சியில் தரக்குறியீடு 182 ஆகவும் பதிவாகி உள்ளது.

கடுமையான காற்று மாசு ஆரோக்கியமாக உள்ள மக்களிடம் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், ஏற்கனவே நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை மேலும் கடுமையாக பாதிப்படைச் செய்வதாகவும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. வாரியத்தின் தரவுகளின்படி, 51 முதல் 100 வரையிலான காற்றின் தரக் குறியீடு திருப்திகரமானது, 101-200 மிதமானது, 201-300 மோசம், 301-400 மிகவும் மோசம், 401-500 கடும் மோசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் அணுசக்தி திறன் அழியவில்லை!

பேச்சு நடத்துவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் விருப்பத்தை ஈரானின் தலைவர் அயதுல்லா அலி கமேனி நிராகரித்துள்ளார். மேலும், அவர் அமெரிக்கா ஈரானின் அணுசக்தி திறன்களை அழித்துவிட்டதாக டிரம்ப் கூறியதை மறுத்தார்.

ஈரான்- அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் அணு ஆயுதத் திட்டம் குறித்த மறைமுக பேச்சு ஐந்து சுற்றுகளாக நடைபெற்றது.

கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகியவை ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. பிறகு அணு ஆயுத ஒப்பந்தம் குறித்து பேச்சு தடைபட்டது.

கடந்த வாரம், காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் தொடங்கியது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள காரணமாக இருந்த டிரம்புக்கு, இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்று ஜனாதிபதி டிரம்ப் பேசுகையில், ‘ஈரானுடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்த பேச்சு நடத்த முடிந்தால், அது நன்றாக இருக்கும்’ என தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் புதிய பேச்சு நடத்த விருப்பத்தை ஈரானின் தலைவர் அயதுல்லா அலி கமேனி நிராகரித்தார். மேலும், அவர் அமெரிக்கா ஈரானின் அணுசக்தி திறன்களை அழித்துவிட்டதாக டிரம்ப் கூறியதை மறுத்தார்.

‘ டிரம்ப் தன்னை ஒரு டீல் மேக்கர் என சொல்கிறார். ஆனால் ஒரு ஒப்பந்தம் வற்புறுத்தலுடன் சேர்ந்து அதன் விளைவு முன்னரே தீர்மானிக்கப் பட்டால், அது ஒரு ஒப்பந்தம் அல்ல, மாறாக ஒரு திணிப்பு மற்றும் மிரட்டல்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பெருமையுடன் அவர்கள் ஈரானின் அணுசக்தித் மையங்களை குண்டுவீசி அழித்ததாகக் கூறுகிறார். சரி, கனவு காணுங்கள்.
ஈரானுக்கு அணுசக்தி வசதிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அமெரிக்காவிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? இந்தத் தலையீடுகள் பொருத்தமற்றவை. இவ்வாறு ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறினார்.

இலங்கை வருகிறார் வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர்!

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் 4 ஆம் திகதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்த தகவலை வெளியிட்டார்.

அவரின் இலங்கை பயணத்தின்போது சில ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன.

அடுத்த வருடம் மாகாணசபைத் தேர்தல் உறுதி!

மாகாணசபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்த வேண்டும் என்ற முடிவில் அமைச்சரவையும் உறுதியாக உள்ளது என்று நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.

எனினும், எந்த முறைமையில் தேர்தல் நடத்தப்படும் என்பது பற்றி முடிவெடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

அதேவேளை, புதிய அரசமைப்பு இயற்றப்படும் என தேசிய மக்கள் சக்தியால் வழங்கப்பட்ட உறுதிமொழியும் நிறைவேற்றப்படும். அதற்கான கால எல்லையை சரியாக குறிப்பிட முடியாது என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை: இன்று தீர்க்கமான முடிவு!

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் இன்று (21) இறுதி முடிவெடுக்கப்படவுள்ளது.

ஒக்டோபர் மாதத்துக்குரிய 2ஆவது வார நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்று ஆரம்பமானது.  குறித்த வாரத்தில் நாடாளுமன்ற வளாகத்தில் முக்கிய கூட்டங்களும் இடம்பெறவுள்ளன.

இந்நிலையில் சபாநாயகருக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையின் வரைவு நகல் கட்சி தலைவர்களுக்கு இன்றைய தினம் வழங்கப்படவுள்ளது.  அவர்களின் இணக்கப்பாட்டுக்கு பிறகு பிரேரணை இறுதிப்படுத்தப்படும்.

பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகர் நிராகரித்திருந்தார். இவ்விடயத்தை பிரதானக் காரணமாகக்கொண்டே சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்குரிய ஏற்பாட்டை ஐக்கிய மக்கள் சக்தி செய்திருந்தது.

குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிபெற வைப்பதற்குரிய பெரும்பான்மை பலம் எதிரணி வசம் இல்லை. இருந்தாலும் சபாநாயகர்மீது எதிரணிக்கு நம்பிக்கை இல்லை என்பது இதன்மூலம் எடுத்துரைக்கப்படும் என எதிரணி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

கே.பிக்கும், செவ்வந்திக்கும் முடிச்சுபோடும் விமல்!

வெளிநாட்டில் வைத்து கே.பியை கைது செய்து இலங்கைக்கு கொண்டுவந்தபோது ஊடகக் கண்காட்சி காண்பிக்கப்படவில்லை. எனினும், செவ்வந்தி விடயத்தில் அவ்வாறு நடப்பது தவறான அணுகு முறையாகும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரசன்ச தெரிவித்தார்.

” வெளிநாட்டில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு கொண்டுவரப்படும் குற்றவாளி விமானத்தில் இறங்குவது முதல் எல்லா தகவல்களும் மிகவும் சுவாரஷ்யமாக ஊடகங்களில் வெளியாகின்றன. ஊடகக் கண்காட்சி காண்பிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள், இதைவிடவும் பயங்கரமான குற்றவாளிகளை வெளிநாட்டில் கைது செய்து அழைத்துவந்துள்ளன. உதாரணம் கே.பி என்பவரை கைது செய்து நாட்டுக்கு கொண்டுவந்தபோது, அவர் எப்படி வந்தார் என்பதுகூட யாருக்கும் தெரியாது.” எனவும் விமல்வீரவன்ச குறிப்பிட்டார்.

செவ்வந்தி விடயத்தில் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை பார்க்கும்போது, பிரபலமாவதற்கு இதுதான் வழி என்ற தவறான உணர்வு சிறார்கள் மத்தியில் ஏற்படக்கூடும்.
எமது நாட்டு விளையாட்டு வீரர்கள் வெளிநாடுகளில் சென்று பதக்கங்கள் வென்றுவரும்போது, அவற்றுக்கு ஏன் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. நான் ஊடகங்களை குற்றஞ்சாட்டவில்லை. பொலிஸார் இதனை ஊடகக் கண்காட்சியாக்கியுள்ளனர்.” – என விமல்வீரவன்ச மேலும் குறிப்பிட்டார்.

அடங்க மறுத்தால் அழிக்கப்படுவீர்: ஹமாஸ் அமைப்புக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

 

“ ஹமாஸ் இயக்கத்தினர் சரியாக நடந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அழிக்கப்படுவார்கள்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இஸ்ரேல் படைகளுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.

கடந்த 13-ம் திகதி எகிப்​தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்​றும் எகிப்து ஜனாதிபதி அல் சிசி தலை​மை​யில் நடை​பெற்ற காசா அமைதி உச்சி மாநாட்​டில் இந்த அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.

எனினும் போர் நிறுத்தம் தொடங்கியபிறகும் ஹமாஸ் – இஸ்ரேல் படைகளுக்கு இடையே காசாவில் தொடர் மோதல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் தொடர்ந்து மீறி வருவதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், “அவர்கள் சரியாக நடந்துகொள்ள வேண்டும், அவ்வாறு இல்லாவிட்டால் அவர்கள் அழிக்கப்படுவார்கள். அவர்கள் இதையே செய்து கொண்டிருந்தால், நாங்கள் உள்ளே சென்று சரி செய்ய வேண்டி இருக்கும். அது மிக விரைவாகவும் மிகவும் வன்முறையான முறையிலும் நடக்கும்.

நான் கேட்டுக் கொண்டால் இஸ்ரேல் இரண்டு நிமிடங்களில் அங்கே சென்றுவிடுவார்கள்.என்னால் அவர்களிடம், ‘உள்ளே போய் அதைப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்ல முடியும். ஆனால் இப்போது, ​​நாங்கள் அதைச் சொல்லவில்லை. நாங்கள் ஒரு சிறிய வாய்ப்பு கொடுக்கப் போகிறோம்” என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு காசா பகு​தியை கட்​டுக்​குள் கொண்​டு​வரு​வது தொடர்​பாக ஆயுதம் ஏந்​திய பாலஸ்​தீனக் குழுக்களுக்கும் ஹமாஸ் குழுக்​களுக்​கும் இடையே ஏற்பட்ட மோதலில் 8 பேரை ஹமாஸ் இயக்கத்தினர் சுட்டுக் கொன்றனர்.

செவ்வந்திக்கு கிளிநொச்சியில் அடைக்கலம் கொடுத்தவர் கைது!

 

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ணமுல்ல சஞ்சீவ படுகொலையின் சூத்திரதாரி இஷாரா செவ்வந்தியை மறைத்துவைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சியில் ஒருவர் கொழும்பில் இருந்து வந்த குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

செவ்வந்தி நாட்டை விட்டுத் தப்பிச் சென்றசமயம் அதற்கு முன்பு சில நாள்கள் மறைந்திருக்க இடம் வழங்கிய குற்றச்சாட்டிலேயேஅவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி, அம்பாள்குளத்தைச்சேர்ந்த ஓர் அரச உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. அவர் மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

நாட்டில் பல பகுதிகளில் இன்றும் மழை!

இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்துள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தொடர்ந்தும் நீடித்து வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அது எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இத்தொகுதியின் தாக்கம் காரணமாக இன்றையதினம் (21) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அத்துடன் நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென், வட மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கடல் பகுதிகளில்
இலங்கைக்கு கிழக்காக ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தொடர்ந்தும் நீடித்து வருவதோடு, அது அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

எனவே நாட்டைச் சூழவுள்ள ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் கடல்சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவோரும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மழை நிலைமை:
காங்கேசந்துறையிலிருந்து மன்னார், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காலியிலிருந்து மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55-60 கி.மீ. வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை, மன்னார் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை:
காலியிலிருந்து மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை, மன்னார் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சாதாரண அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக் கூடும் என்பதோடு, அப்பகுதிகளில் கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.

பாதாள குழுக்களுடன் தொடர்புடைய 18 பெண்கள் கைது!

இலங்கையில் இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் பாதாள குழுக்களுடன் தொடர்புடைய 18 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

20 மற்றும் 45 வயதுக்கிடைப்பட்ட பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் வியாபாரம், துப்பாக்கி கடத்தல், கொலைக்கு உளவு பார்த்தல் போன்ற செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

தையிட்டி காணி அளவீடு நாளை ஆரம்பம்!

0
யாழ். தையிட்டி விகாரையைச் சூழவுள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கான நில அளவீட்டுப் பணிகள் நாளை மற்றும் நாளைமறுதினம் ஆகிய இரு தினங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளன என்று தெல்லிப்பழை பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார். தையிட்டிக் கிராமத்தில்...

யாழில் தந்தை செல்வாவின் 49ஆவது நினைவு நாள் நிகழ்வு!

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வநாயகத்தின் 49ஆவது நினைவு நாள் அஞ்சலி நிகழ்வுகளும் நினைவுப் பேருரையும் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன. இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை...

நீலகாமம் மக்களுக்கு நீதி கிடைக்கும்: நேரில் களமிறங்கி பிரதி அமைச்சர் பிரதீப் உறுதி!

0
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் , அடியாட்களால் தோட்ட மக்கள் தாக்கப்பட்டது தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும், சம்பந்தப்பட்ட தரப்பினரை கைது செய்வதற்கும் தேவையான ஆலோசனைகளை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்...