Home Blog Page 245

தீபாவளி பண்டிகையால் ஜொலித்தது அயோத்தி: 29 லட்சம் விளக்குகள் ஏற்றி உலக சாதனை

அயோத்தி சரயு நதிக்கரையில் நேற்று 29 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 2,128 அர்ச்சகர்கள் நடத்திய பிரம்மாண்ட ஆரத்தி வழிபாடும் உலக சாதனை படைத்துள்ளது.

தீபாவளியையொட்டி அயோத்தி ராமர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ராமர் கோயில் வளாகத்தில் நேற்று 22 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. ராமாயணக் காட்சிகள், கும்ப மேளா, மகளிர் முன்னேற்றம், பிரம்மோஸ் ஏவுகணை உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்ட ஊர்திகள் பார்வையாளர்களை கவர்ந்தன.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அயோத்தி சரயு நதிக் கரையின் 56 படித்துறைகளில் நேற்று மாலை 29 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. இதற்காக 73,000 லிட்டர் எண்ணெய், 55 லட்சம் பருத்தி திரிகள் பயன்படுத்தப்பட்டன. 33,000-க்கும் மேற்பட்ட தன்னார் வலர்கள் விளக்குகளை ஏற்றி னர். ஒரே நேரத்தில் 29 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டது புதிய உலக சாதனை ஆகும்.

சரயு நதியின் படித்துறைகளில் நேற்று இரவு ஒரே நேரத்தில் 2,128 அர்ச்சகர்கள் நடத்திய பிரம்மாண்ட ஆரத்தி வழிபாடும் உலக சாதனை படைத்துள்ளது.

1,100 ட்ரோன்கள் மூலம் சிறப்பு கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் ராமர், அனுமன், ராமர் பாலம், அயோத்தி கோயில் போன்ற உருவங்களை மக்கள் வெகுவாக கண்டு ரசித்தனர்.

அயோத்தி ராமர் கோயிலில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், அவர் வடம் பிடித்து இழுத்து ராமர், சீதை தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

9-ஆவது ஆண்டு தீப உற்சவம் கோலாகலம்: ராமகதா பூங்காவில் நடந்த விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: கடந்த 2017 தீபாவளியின்போது அயோத்தியில் தீப உற்சவத்தை தொடங்கினோம். தற்போது 9-வது ஆண்டாக உற்சவம் கோலாகலமாக நடந்து வருகிறது.

ராமரும், ராமர் பாலமும் கற்பனை என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறினர். அவர்கள் கூறியதை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். கடந்த 1990-ல் கரசேவகர்கள் அயோத்தி நோக்கி பாத யாத்திரை சென்றபோது அப்போதைய சமாஜ்வாதி அரசு துப்பாக்கிச்சூடு நடத்தியது. அவர்கள் துப்பாக்கியால் சுட்டார்கள். ஆனால், நாம் அயோத்தியில் தீபங்களை ஏற்றுகிறோம். உத்தர பிரதேசத்தில் ராம ராஜ்ஜியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டு பயணம் குறித்து கட்சியே முடிவெடுக்கும்: சுமந்திரன் அறிவிப்பு

” மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு அரசுக்கு எவ்வாறு அழுத்தம் கொடுப்பது என்பது பற்றி ஆராய்வதற்காக தமிழ்த் தரப்புக்களால் ஏற்பாடு செய்யப்படும் சந்திப்புக்களில் பங்கேற்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

எனினும், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஒன்றிணைந்து பயணிப்பது குறித்துக் கலந்துரையாடும் நோக்கிலான சந்திப்பு எனில் அதில் பங்கேற்பது குறித்து கட்சியே தீர்மானிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நீண்டகாலம் நடத்தப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், அதற்குரிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் நோக்கிலும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் பங்கேற்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அந்தக் கட்சியின் சார்பில் எவரும் பங்கேற்றிருக்கவில்லை. அதனையடுத்து தனிப்பட்ட சில காரணங்களால் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை எனவும், இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் நடத்தப்படும் சந்திப்புக்களில் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள் கலந்துகொள்வர் என எதிர்பார்ப்பதாகவும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் அந்தக் கூட்டத்தில் பங்கேற்காமைக்கான காரணம் குறித்து சுமந்திரனிடம் வினவியபோது, அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்குத் தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டது எனவும், இருப்பினும் அன்றைய தினம் கொழும்பில் இருக்க வேண்டியிருந்த காரணத்தால் அதில் பங்கேற்க முடியவில்லை எனவும் பதிலளித்தார்.

கண்டியில் குளவிக்கொட்டு: ஐவர் பாதிப்பு!

 

கண்டி, ஹந்தான மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த ஐவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலுள்ள தனியார் கல்வி நிறுவனமொன்றில் உயர் கல்வி பயிலும் 27, 28, 29 மற்றும் 31 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்கள் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

க. யோகா

 

பிரம்மோஸ் ஏவுகணை வரம்புக்குள் பாகிஸ்தான்! இந்திய பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை!

 

” பாகிஸ்​தான் முழுவதும் பிரம்மோஸ் வரம்புக்குள் உள்ளது. அந்த நாட்டின் எந்த பகு​தி​யை​யும் தாக்​கலாம். ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின்​போது, பிரம்​மோஸ் ஏவு​கணை தாக்​குதலின் முன்​னோட்​டத்தை நாம் பார்த்​தோம்.”

இவ்வாறு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

பிரம்​மேஸ் ஏவு​கணை தயாரிப்பு மையம் உத்தர பிரதேசம் லக்​னோ​வில் கடந்த மே மாதம் தொடங்​கப்​பட்​டது. இங்கு தயாரிக்​கப்​பட்ட முதல் ஏவு​கணை யூனிட்டை பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் கொடியசைத்து தொடங்கி வைத்​தார்.

இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

” நாட்​டின் பாதுகாப்பு மற்​றும் நம்​பிக்கை வளர்ச்​சி​யில் இது முக்​கி​யமான நடவடிக்​கை. பிரம்​மோஸ் ஏவு​கணை வெறும் ஆயுதம் மட்​டும் அல்ல. இது உள்​நாட்டு திறனின் அடை​யாளம். தரைப்​படை, கடற்​படை மற்​றும் விமானப்​படையின் முது​கெலும்​பாக பிரம்​மோஸ் ஏவு​கணை விளங்​கு​கிறது.

பாகிஸ்​தான் முழுவதும் பிரம்மோஸ் வரம்புக்குள் உள்ளது. அந்த நாட்டின் எந்த பகு​தி​யை​யும் தாக்​கலாம். ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின்​போது, பிரம்​மோஸ் ஏவு​கணை தாக்​குதலின் முன்​னோட்​டத்தை நாம் பார்த்​தோம்.

பிரம்​மோஸ் ஏவு​கணைக்கு உலகம் முழு​வதும் வரவேற்பு உள்​ளது. பிலிப்​பைன்ஸ் நாட்​டுக்கு பிரம்​மோஸ் ஏவு​கணை விற்​பனை செய்​த​பின் 4,000 கோடி ரூபா மதிப்​பில் பிரம்​மோஸ் ஏவு​கணை வாங்க இரண்டு நாடு​கள் ஒப்​பந்​தம் செய்​துள்​ளன. உலகம் முழு​வதும் இருந்து நிபுணர்​கள், லக்னோ வரு​வ​தால், பாது​காப்பு தளவாட வரைபடத்​தில் லக்னோ இடம்​பிடித்​துள்​ளது. 2047-ம் ஆண்​டுக்​குள் வளர்ந்த நாடு என்ற இலக்கை அடைய, பிரம்​மோஸ் ஏவு​கணை போன்ற திட்​டங்​கள்​ மிக முக்​கிய​மானது எனவும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

தீர்க்கமான பதிலடி: இந்தியாவுக்கு பாகிஸ்தான் இராணுவத் தளபதி எச்சரிக்கை!

எந்தவொரு தாக்குதல் நடவடிக்கைக்கும் தீர்க்கமான பதிலடி கொடுக்கப்படும் என்று இந்தியாவுக்கு பாகிஸ்தான் இராணுவத் தலைவர் அசிம் முனீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கைபர் பக்துன்க்வாவின் அபோட்டாபாத்தில் உள்ள முதன்மை பாகிஸ்தான் ராணுவ அகாடமியில் நடைபெற்ற ராணுவ கேடட் பயிற்சி பட்டமளிப்பு விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.

“அணுசக்திமயமாக்கப்பட்ட சூழலில் போருக்கு இடமில்லை என்று இந்திய ராணுவத் தலைமைக்கு நான் அறிவுறுத்துகிறேன், உறுதியாக எச்சரிக்கிறேன். இந்தியாவுடனான நான்கு நாள் மோதலின்போது பாகிஸ்தான் வெளியிலிருந்து ஆதரவைப் பெற்றதாகக் கூறுவது தவறானது.

நாங்கள் ஒருபோதும் மிரட்டப்பட மாட்டோம், வார்த்தைகளால் வற்புறுத்தப்பட மாட்டோம், ஒரு சிறிய ஆத்திரமூட்டும் தூண்டுதலுக்குக் கூட எந்த தயக்கமும் இல்லாமல் தீர்க்கமான பதிலடி கொடுப்போம். இதுவரை இந்தியாவின் அனைத்து அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு நமது ஆயுதப் படைகள் தொலைநோக்கு திறன்களை வெளிப்படுத்தியுள்ளன.” எனவும் பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானை நிலைகுலையச் செய்ய பயங்கரவாதத்தை ஓர் ஆயுதமாக இந்தியா பயன்படுத்துகிறது. ஒரு சில பயங்கரவாதிகளால் பாகிஸ்தானுக்கு தீங்கு விளைவிக்க முடியாது. காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச விதிமுறைகளின்படி தீர்க்க வேண்டும். ஜம்மு – காஷ்மீர் மக்களுக்கு தார்மிக மற்றும் ராஜதந்திர ஆதரவை வழங்குவோம். பாகிஸ்தான் அமைதியை விரும்பும் நாடு. நாங்கள் அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட பெரிய நாடுகளுடன் வலுவான உறவுகளை கொண்டுள்ளோம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

மரக்கறி விலைப்பட்டியல் (19.10.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (19) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

பலமடைந்துவருகிறது மொட்டு கட்சி!

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கிராம மட்டங்களிலும் பலமடைந்துவருகின்றது. மாகாணசபைத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னரே தேர்தலில் போட்டியிடும் விதம் பற்றி முடிவெடுக்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

” மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்குரிய வேட்பு மனு வழங்கும்போது, வேட்பாளர்கள் தொடர்பில் பொலிஸ் சான்றிதழொன்று பெறப்படும். போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர்களா என்பது பற்றி ஆராயப்படும்.

குற்றவாளிகள் நாட்டைவிட்டு தப்பியோடுவதற்கு கடவுச்சீட்டு செய்து கொடுக்கும் தரப்புகள் பற்றியும் விசாரணை நடத்தப்பட வேண்டும். ” எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.

சிக்கியது தொலைபேசி: விரிவடைகிறது விசாரணை வேட்டை!

 

பாதாள குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்ஜீவவை கொலை செய்வதற்குரிய திட்டமிடலுக்கு இஷாரா செவ்வந்தி பயன்படுத்தினார் எனக் கூறப்படும் கையடக்க தொலைபேசி சிக்கியுள்ளது.

கம்பஹா பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் தொலைபேசி மீட்கப்பட்டுள்ளது. எனவே, அதனை ஆய்வு செய்த பின்னர் மேலும் பல முக்கிய தகவல்கள் அம்பலமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இஷாரா செல்வந்தி, ஜே.கே. பாய் உள்ளிட்ட தரப்புகளிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் பிரகாரம் தேடுதல் வேட்டைகளும், கைதுகளும் இடம்பெற்றுவருகின்றன. நேற்றைய தினமும் தேடுதல் வேட்டை அரங்கேறியது.

இதற்கமைய இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கினர் எனக் கூறப்படும் நால்வர், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் உள்ளடங்குகின்றார். அவர் தனது அத்தையின் வீட்டில் செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்தார் எனக் கூறப்படுகின்றது.

கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரமே இக்கைது இடம்பெற்றுள்ளது.

செவ்வந்தி தலைமறைவாகி இருந்த இடங்கள் மற்றும் சென்ற இடங்களுக்கு அவரை நேற்று முன்தினம் நேரில் அழைத்துச்சென்று விசாரணைகள் தேடுதல்கள் இடம்பெற்றன.

அதேவேளை, கொலைச்சம்பவம் இடம்பெற்ற பின்னர் 2 மாதங்கள்வரை செவ்வந்தி மத்துகம மற்றும் மித்தெனிய பகுதிகளில் தலைமறைவாகி இருந்துள்ளார். அதன்பின்னரே வெளிநாடு சென்றுள்ளார். உள்ளாட்சிசபைத் தேர்தல் நடந்த மே மாதம் காலப்பகுதியிலேயே அவர் வெளிநாடு தப்பிச்சென்றுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

தலைமைப்பதவியில் மாற்றம் வருமா?

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப்பதவியில் மாற்றம் வரப்போவதல்லை. எனினும், கட்சிக்குள் மறுசீரமைப்பு இடம்பெற்று, வியூக மாற்றம் இடம்பெறும் என்று அக்கட்சியின் உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார்.

இரு ஜனாதிபதி தேர்தல்கள் உட்பட நான்கு தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சக்தி தோல்வியை சந்தித்துள்ளதால், தலைமைப்பதவியில் மாற்றம் வேண்டும் என்ற கருத்தை சிலர் முன்வைத்துவரும் நிலையிலேயே, துஷார இந்துனில் மேற்கண்டவாறு கூறினார்.

மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகிவருகின்றது. எந்த முறைமையில் தேர்தல் நடைபெறும் என்பது தொடர்பான தகவல் வெளியான பின்னரே பிரச்சார வியூகம் வகுக்கப்படும். மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பாதாள குழுக்களுடன் தொடர்புடைய தரப்புகளே அரசியல் பழிவாங்கலென பதற்றம்!

சட்டம் தற்போது உரிய வகையில் அமுலாகி வருகின்றது. எனினும், பாதாள குழுக்களுடன் தொடர்புடைய தரப்புகளே அரசியல் பழிவாங்கலென விமர்சித்துவருகின்றன என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” குற்றவாளிகள், பாதாளக்குழுவினர், போதைப்பொருள் வியாபாரிகள் ஆகியோரை கைது செய்த பின்னர் அவர்கள் வழங்கும் தகவல்களின் அடிப்படையிலேயே கைதுகள் இடம்பெறுகின்றன. இது அரசியல் பழிவாங்கல் அல்ல. அவ்வாறு கூறி சட்டம் அமுலாவதை தடுக்க முடியாது. எவருக்கும் அநீதி இழைக்கப்படவில்லை. சட்டத்தின் பிரகாரமே நடவடிக்கை இடம்பெறுகின்றது.

பாதாளக்குழுக்களை அண்டி இருந்த தரப்புகள்தான் தற்போது அஞ்சுகின்றன. பொலிஸாருக்கு தேவையான வளங்களையே அரசாங்கம் வழங்கிவருகின்றது. விசாரணைகளில் தலையிடவில்லை.” – என்றார்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

தையிட்டி காணி அளவீடு நாளை ஆரம்பம்!

0
யாழ். தையிட்டி விகாரையைச் சூழவுள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கான நில அளவீட்டுப் பணிகள் நாளை மற்றும் நாளைமறுதினம் ஆகிய இரு தினங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளன என்று தெல்லிப்பழை பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார். தையிட்டிக் கிராமத்தில்...

யாழில் தந்தை செல்வாவின் 49ஆவது நினைவு நாள் நிகழ்வு!

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வநாயகத்தின் 49ஆவது நினைவு நாள் அஞ்சலி நிகழ்வுகளும் நினைவுப் பேருரையும் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன. இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை...

நீலகாமம் மக்களுக்கு நீதி கிடைக்கும்: நேரில் களமிறங்கி பிரதி அமைச்சர் பிரதீப் உறுதி!

0
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் , அடியாட்களால் தோட்ட மக்கள் தாக்கப்பட்டது தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும், சம்பந்தப்பட்ட தரப்பினரை கைது செய்வதற்கும் தேவையான ஆலோசனைகளை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்...