Home Blog Page 247

நீண்ட நாட்களுக்கு பிறகு வடிவேல் சுரேஷ் களத்தில்!

 

” அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் அனைத்து நல்ல வேலைத்திட்டங்களுக்கும் ஆதரவு வழங்கப்பட வேண்டும்.” – என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

அத்துடன், பாதாள குழுக்கள் மற்றும் போதைப்பொருளுக்கு எதிரான அரசாங்கத்தின் நடடிக்கை சிறப்பானது. இது தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு ஆதவளிக்கப்படும் எனவும் வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டார்.

மாகாணசபைத் தேர்தலில் இதொகா தனிவழி?

 

மாகாணசபைத் தேர்தலில் தனித்தும், கூட்டணியாகவும் களமிறங்குவது தொடர்பில் மலையகத்திலுள்ள பிரதான கட்சிகள் பரிசீலித்துவருகின்ற என்று தெரியவருகின்றது.

இதற்கமைய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, பதுளை உள்ளிட்ட மாவட்டங்களில் தனித்து சேவல் சின்னத்திலும் ஏனைய சில மாகாணங்களில் கூட்டு சேர்ந்தும் போட்டியிடுவற்குரிய சாத்தியம் பற்றி ஆராய்ந்துவருகின்றது.

எனினும், தேர்தல் அறிவிப்பு வெளியான பின்னர், கட்சியின் தேசிய சபைக் கூட்டத்திலேயே இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

அதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணி ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்தே களமிறங்கக்கூடும். சில மாவட்டங்களில் தனித்து போட்டியிடுவது பற்றியும் பரிசீலிக்கப்பட்டுவருகின்றது.

செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

 

இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கினர் எனக் கூறப்படும் நால்வர், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் உள்ளடங்குகின்றார். இவரின் அத்தையும் சிக்கியுள்ளார். அத்தையின் வீட்டிலேயே அவர் செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார்.

கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரமே இக்கைது இடம்பெற்றுள்ளது.

செவ்வந்தி தலைமறைவாகி இருந்த இடங்கள் மற்றும் சென்ற இடங்களுக்கு அவரை நேரில் அழைத்துச்சென்று விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

’13’ஐ அமுல்படுத்த வலியுறுத்துவோம்!- சுரேஷ் திட்டவட்டம்

”1988 ஆம் ஆண்டு எவ்வாறு 13 ஆம் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதோ அதிலிருக்கக்கூடிய அனைத்து அதிகாரங்களும் மீளவும் தமிழ் மக்களுக்குக்  கொடுக்கப்பட வேண்டும் என்பதும் எமது கருத்தாகும். அதை வலியுறுத்துவோம். மாகாண சபை தொடர்பில் மிகப் பெரும்பாலான தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஓர் ஒற்றுமைப்பாடும் ஒருமித்த கருத்துக்களும் இருக்கின்றன. இவற்றை நாங்கள் இன்னும் ஒருவரும் மிகுதி இல்லாமல், அனைவரையும் இணைத்துக்கொண்டு செல்லும் முயற்சியாகத்தான் கலந்துரையாடல் நடைபெற்றது.”

– இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் விபரம் தெரிவிக்கையில் கூறியவை வருமாறு:-

“ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியானது மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலே ஒரு தொடர் கருத்தரங்குகளை வடக்கு, கிழக்கில் நடத்தி வருகின்றது. தமிழர் தரப்பில் இருக்கக் கூடிய ஏனைய தரப்புக்களும் இதற்குள் வந்து இணைய வேண்டும் என்பது எமது எல்லோரதும் விருப்பம். அது, தமிழ் அரசுக் கட்சியாக இருக்கலாம் அல்லது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியாக இருக்கலாம். ஏனைய கட்சிகளாக இருக்கலாம். இவர்கள் அனைவரையும் இணைத்துக்கொண்டு போக வேண்டும் என்பதில் எங்களுக்குள் ஒருமித்த கருத்து இருக்கின்றது.

ஏற்கனவே வவுனியாவில் இடம்பெற்ற கருத்தரங்கில் எம்.ஏ.சுமந்திரன், ப.சத்தியலிங்கம் போன்றோர் கலந்துகொண்டிருந்தனர். ஆகவே அவர்கள் மாகாண சபைத் தேர்தல், மாகாண சபை அதிகாரங்கள் தொடர்பாக ஒரு ஒருமித்த கருத்தில் இருக்கின்றார்கள் என்பது தெளிவானது. இருந்தபோதும் ஒரு கூட்டாக வடக்கு, கிழக்கில் மாத்திரம் அல்லாமக் ஏனைய பிரதேசங்களிலும் முன்னெடுத்துக் கொண்டு போக வேண்டும்.

இன்றைய கால கட்டத்தில் அரசு தேர்தலை நடாத்தாமல், மாகாணங்களுக்குள் எல்லைகளைப் பிரித்து, அதற்குப் பின்புதான் தேர்தல் என்ற ஒரு தொனி தொடர்ந்தும் இருந்து கொண்டிருக்கின்றது. அவ்வாறு நடக்குமாக இருந்தால் தேர்தல் காலவரையின்றி பிற்போடலாம் என்ற ஓர் அச்சம் தமிழ் மக்கள் மத்தியிலும் இருக்கின்றது. ஆகவே இதனை மாற்றி, தேர்தலை குறைந்த பட்சம் வரும் வருடத்தின் ஆரம்பத்திலேனும் வைக்க வேண்டும்.

ஒதுக்கப்பட்ட அனைத்து அதிகாரங்களும் – அதாவது 1988 ஆம் ஆண்டு எவ்வாறு 13 ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதோ அதிலிருக்கக்கூடிய அனைத்து அதிகாரங்களும் – மீளவும் தமிழ் மக்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பதும் எமது கருத்தாகும்.

இந்த அரசுக்கும் நாங்கள் ஒரு தெளிவான கருத்தைச் சொல்லியிருக்கின்றோம். ஜனநாயக ரீதியாக ஏற்கனவே இந்த நாட்டில் அரசியல் சாசனத்தில் இந்த அதிகாரங்கள் மாகாணங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன. அதற்கான தேர்தல்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்த மட்டில் கடந்த 7, 8 வருடங்களாக நடைபெறவில்லை. ஆகவே உடனடியாக அந்தத் தேர்தல்கள் நடத்தப்பட்டு அந்த அதிகாரங்கள் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் வசம் கொடுக்கப்பட வேண்டும். அவை முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று நாங்கள் மிகத் தெளிவாக அரசைக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றோம். ஆகவே அந்தவகையில் மிகப் பெரும்பாலான தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஒரு ஒற்றுமைப்பாடும் ஒருமித்த கருத்துக்களும் இருக்கின்றன. இவற்றை நாங்கள் இன்னும் ஒருவரும் மிகுதி இல்லாமல் அனைவரையும் இணைத்துக்கொண்டு முன் நகர்த்தும் முயற்சியாகத்தான் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

தமிழ் மக்கள் கூட்டணியின் விக்னேஸ்வரனுடனும் பேச ஆலோசித்துள்ளோம்” – என்றார்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பது பற்றி ஆராய்வு!

 

தற்போது நாடு எதிர்கொண்டுள்ள தேசிய பேரழிவான போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கில் தேசிய திட்டத்தை செயல்படுத்துவதற்காக ‘முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டு சபை’ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் முதன்முறையாக இன்று (17) ஜனாதிபதி செயலகத்தில் கூடியது.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான கடந்த 13 ஆம் திகதி ‘முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டு த் திட்டத்திற்காக ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் அங்கீகரிக்கப்பட்டதுடன் இந்த திட்டத்தை செயல்படுத்த தேசிய செயற்பாட்டுச் சபையை நிறுவ முன்மொழியப்பட்டது.

அதன்படி, கூடிய தேசிய செயற்பாட்டு சபை, போதைப்பொருள் வலையமைப்பை ஒழித்தல், அதற்கு அடிமையானவர்களின் மறுவாழ்வு, போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க பொதுமக்களின் பங்களிப்பைப் பெறுதல், பொதுமக்களை அறிவூட்டுவதற்காக வெகுஜன அமைப்புகளின் பங்களிப்பு மற்றும் ஊடக பிரச்சாரத்தை செயல்படுத்துதல் குறித்து முக்கியமாக கவனம் செலுத்தியது.

இந்த செயற்பாட்டு சபையை நிறுவுவதன் பிரதானமான நோக்கத்தை விளக்கிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, போதைப்பொருள் அச்சுறுத்தலால் இளைஞர் சமூகம் மற்றும் பாடசாலை மாணவர்களின் வாழ்க்கை தற்போது ஆபத்தில் உள்ள விதம் மற்றும் அது எவ்வாறு ஒரு சமூக-பொருளாதார பேரழிவாக மாறியுள்ளது என்பது குறித்து எடுத்துரைத்தார்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க பொதுமக்களின் ஆதரவைப் பெறுவதன் முக்கியத்துவத்தையும், முழு நாட்டையும் ஒன்றிணைக்கும் இத்தகைய விரிவான திட்டத்தைத் தொடங்குவதன் முக்கியத்துவத்தையும் இந்த நிகழ்வில் பங்கேற்ற மதத் தலைவர்கள் பாராட்டினர்.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, அமைச்சின் செயலாளர் டி.டபிள்யூ.ஆர்.பி. செனவிரத்ன, சுகாதார அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க, கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, விமானப்படைத் தளபதி ஏர் வைஸ் மார்ஷல் வாசுபந்து எதிரிசிங்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பி.ஏ.கே.எஸ்.பி. பானகொட, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உதித கயாஷான் குணசேகர,லேக் ஹவுஸ் நிறுவனத்தின் தலைவர் காமினி வருஷமான, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் கிஹான் டி சில்வா மற்றும் பாதுகாப்புப் படை பிரதானிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஊடகத் தலைவர்கள், கலைஞர்கள், சுகாதாரத் துறை பிரதானிகள் மற்றும் சிவில் மற்றும் வெகுஜன அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சம்பள நிர்ணய சபை கூட்டம் புறக்கணிப்பு: முதலாளிமார் சம்மேளனம்மீது இதொகா தலைவர் பாய்ச்சல்!

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய சபையில் இடம்பெற்ற நிலையில், இதில் தொழிற்சங்க ரீதியாக அனைவரும் கலந்துக்கொண்ட போதும், முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் எவரும் கலந்துக்கொள்ளாதது பெரும் வேதனை அளிப்பதோடு, அது கண்டிக்கத்தக்க விடயம் எனவும் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கம்பனியின் வளர்ச்சிக்காக தோட்டங்களில் முழுமையாக பாடுப்படும் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் தொடர்ந்தும் தான்தோன்றி தனமாக செயற்படும் கம்பனிகளை கடுமையாக கண்டிப்பதாக செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மேலும், தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் முதலாளிமார் சம்மேளனம் தொடர்ந்தும் அலட்சிய போக்கை கடைப்பிடித்து வருகிறது . கம்பனிக்கு எதிராக போராட்டம் நடத்தி தான் சம்பளத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றால் அதற்கும் இ.தொ.கா தயார் எனவும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் தொழில் அமைச்சின் முயற்ச்சி வரவேற்கத்தக்கது எனவும். அம்முயற்சிக்கு அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை, இந்திய பிரதமர்கள் டில்லியில் சந்திப்பு!

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று வெள்ளிக்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

இதன்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இரு தலைவர்களும் விரிவான கலந்துரையாடல்களை நடத்தினர்.

புதுடில்லியில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில்,

“இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல், புதுமை, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் நமது மீனவர்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் நாங்கள் கலந்துரையாடினோம். நெருங்கிய அண்டை நாடுகளாக, நமது இரு நாட்டு மக்களின் செழிப்புக்கும், பகிரப்பட்ட பிராந்தியத்திற்கும் நமது ஒத்துழைப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.” – என்று பதிவிட்டுள்ளார்.

“இந்தச் சந்திப்பின் போது இரு தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், கல்விச் சீர்திருத்தங்கள், டிஜிட்டல் முயற்சிகள் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பில் இரு நாடுகளும் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.” – என்று இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ரஷ்யா, உக்ரைன் ஜனாதிபதிகள் நேரடி சந்திப்பு: ட்ரம்ப் வியூகம்!

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியும் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆகியோரை நேருக்கு நேர் சந்தித்து பேச்சு நடத்த வைப்பதற்குரிய முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது.
போரை நிறுத்தும் முயற்சியின் மற்றுமொரு அங்கமாகவே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

ஐரோப்பாவின் நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் உக்ரைன் இணைய முயற்சிப்பது தங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி கடந்த 2022 பெப்ரவரி மாதம் ரஷ்யா அந்நாட்டின் மீது போர் தொடுத்தது.

கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவில்லாமல் உக்ரைன் – ரஷியா போர் நீடித்து வருகிறது. இதுவரை ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்ட இந்த போர் உக்ரைனில் மிகப்பெரிய அளவிலான மக்களின் இடப்பெயர்ச்சிக்கும் வழிவகுத்தது.

ரஷியாவுக்கு எதிரான பொருளாதர தடைகளை விதித்து உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உதவி வருகின்றன. ரஷியாவுக்கு சீனா, வட கொரியா உள்ளிட்ட நாடுகள் உதவி வருகின்றன.

போர் நிறுத்தம் தொடர்பாக பலமுறை நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியை சந்தித்தன.
குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்-ரஷ்ய ஜனாதிபதி புதின் கடந்த ஆகஸ்ட் மாதம் அலாஸ்கா சென்று நேரில் சந்தித்து பேசியும் எந்த பயனும் இல்லை. புதின் போரை தேவையில்லாமல் நீட்டித்து வருவதாக டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.

இன்று டிரம்ப்-ஐ ஜெலன்ஸ்கி நேரில் சந்திக்க உள்ள நிலையில் முன்னதாக புதின், டிரம்புடன் தொலைபேசியில் பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய டிரம்ப், தானும் புதினும் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் நகரில் விரைவில் சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியும், ரஷ்ய ஜனாதிபதி புதினும் நேருக்கு நேர் சந்தித்து பேச்சு நடத்த வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

21 ஆம் திகதி மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை!

மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு (20.10.2025) பண்டிகைக்கு மறுநாள் (21.10.2025) ஆம் திகதி மத்தி

மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு (20.10.2025) பண்டிகைக்கு மறுநாள் (21.10.2025) ஆம் திகதி மத்திய மாகாண ஆளுநரால் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நுவரெலியா கல்வி வலயத்தின் நிர்வாகத்திற்குப் பொறுப்பான பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.கணேஸ்ராஜ் பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்க அவர் மத்திய மாகாண ஆளுனரிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இவ்விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் (25) சனிக்கிழமை பாடசாலைகளை நடாத்துமாறு சகல அதிபர்களுக்கு மத்திய மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

ய மாகாண ஆளுநரால் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நுவரெலியா கல்வி வலயத்தின் நிர்வாகத்திற்குப் பொறுப்பான பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.கணேஸ்ராஜ் பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்க இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இவ்விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் (25) சனிக்கிழமை பாடசாலைகளை நடாத்துமாறு சகல அதிபர்களுக்கு மத்திய மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அதேவேளை, சப்ரகமுவ மாகாணத்திலுள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை பி.கேதீஸ்

ஆகாஷ் ஏவுகணைகளை பிரேசிலுக்கு வழங்குகிறது இந்தியா

 

வான் ​பாது​காப்பு வழங்​கும் ஆகாஷ் ஏவு​கணை​களை பிரேசிலுக்கு இந்​தியா வழங்க உள்​ளது.

ஆகாஷ் ஏவு​கணை இந்​தி​யா​விலேயே தயாரிக்​கப்​பட்ட வான் பாது​காப்பு அமைப்​பாகும். தரை​யில் இருந்து வான் இலக்​கு​களைத் துல்​லிய​மாகத் தாக்கி அழிக்​கும் திறன் கொண்​டது ஆகாஷ்.

இந்த ஏவு​கணை​கள் எதிரி நாடு​களின் விமானங்​கள், ஹெலி​காப்​டர்​கள், ட்ரோன்​களை வான்​வெளி​யிலேயே இடைமறித்து அழிக்​கும். இது​போன்ற ஏவு​கணை​களை வாங்க பல நாடு​களும் ஆர்​வம் காட்டி வரு​கின்​றன.

இந்​நிலை​யில், பிரேசிலும் இந்​தி​யா​வும் இருதரப்பு பாது​காப்​புத் துறை​யில் இணைந்து செயல்பட ஏற்​கெனவே முடி​வெடுத்​துள்​ளன. அதன் ஒரு கட்​ட​மாக ஆயுதங்​களை இணைந்து தயாரிக்க, மேம்​படுத்த இரு நாடு​களும் திட்​ட​மிட்​டுள்​ளன. இந்​நிலை​யில், இந்​தி​யா​வில் தயாரிக்​கப்​பட்ட ஆகாஷ் ஏவு​கணை​களை பிரேசிலுக்கு வழங்க மத்​திய அரசு நேற்​று ​முன்​தினம் ஒப்​புதல் வழங்கி உள்​ளது.

பிரேசில் துணை அதிபர் ஜெரால்டோ அல்க்​மின், பாது​காப்​புத் துறை அமைச்​சர் ஜோஸ் முசியோ மான்​டீரோ பில்ஹோ ஆகியோர் டெல்லி வந்​துள்ளனர். மத்​திய பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங்கை அவர்​கள் நேற்​று ​முன்​தினம் சந்​தித்து இருதரப்பு பாது​காப்​புத் துறை​கள் இணைந்து மேற்​கொள்ள வேண்​டிய பணி​கள் குறித்து ஆலோ​சனை நடத்​தினர்.

இதுகுறித்து பாது​காப்​புத் துறை அதி​காரி​கள் கூறும்​போது, “இந்​தி​யா​வும் பிரேசிலும் பாது​காப்​புத் துறை​யில் இணைந்து செயல்பட உள்​ளன. அதற்​கேற்ப பிரேசிலுக்கு ஆகாஷ் ஏவு​கணைகளை இந்​தியா வழங்​கும். இந்த ஏவு​கணை​கள் எதிரி​களின் போர் விமானங்​கள், ஹெலி​காப்​டர்​கள், ட்ரோன்​களை வான்​வெளி​யில் 25 கி.மீ. தூரத்​திலேயே தாக்கி அழிக்​கும்” என்​றனர்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

தையிட்டி காணி அளவீடு நாளை ஆரம்பம்!

0
யாழ். தையிட்டி விகாரையைச் சூழவுள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கான நில அளவீட்டுப் பணிகள் நாளை மற்றும் நாளைமறுதினம் ஆகிய இரு தினங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளன என்று தெல்லிப்பழை பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார். தையிட்டிக் கிராமத்தில்...

யாழில் தந்தை செல்வாவின் 49ஆவது நினைவு நாள் நிகழ்வு!

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வநாயகத்தின் 49ஆவது நினைவு நாள் அஞ்சலி நிகழ்வுகளும் நினைவுப் பேருரையும் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன. இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை...

நீலகாமம் மக்களுக்கு நீதி கிடைக்கும்: நேரில் களமிறங்கி பிரதி அமைச்சர் பிரதீப் உறுதி!

0
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் , அடியாட்களால் தோட்ட மக்கள் தாக்கப்பட்டது தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும், சம்பந்தப்பட்ட தரப்பினரை கைது செய்வதற்கும் தேவையான ஆலோசனைகளை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்...