Home Blog Page 249

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன்னர் இலங்கையில் மாகாணசபைத் தேர்தல் நடக்கும் சாத்தியம்!

இந்தியாவில் தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன்னதாக இலங்கையில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறுவதற்குரிய சாத்தியம் உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன கூறியவை வருமாறு,

” அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலுக்கு செல்ல வேண்டியுள்ளது. தமிழக சட்டசபைத் தேர்தலானது மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்கவுள்ளது. அதற்கு முன்னதாக இலங்கையில் தேர்தல் நடத்தப்படக்கூடும் என்றே அரசியல் கள நிலைவரம் தெரிவிக்கின்றது.

எனினும், தேர்தலை நடத்துவதற்கு இந்த அரசாங்கம் அஞ்சுகின்றது. ஏனெனில் உள்ளாட்சிசபைத் தேர்தலில் அதன் வாக்கு வங்கி சரிந்துள்ளது. எது எப்படி இருந்தாலும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் மக்கள் ஆணை யாருக்கு என்பது தெரியவரும்.” – என்றார் சஞ்ஜீவ எதிரிமான்ன.

மிகை உற்பத்தியால் குப்பைத் தொட்டிகளுக்குள் செல்லும் மரக்கறி: விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிப்பு!

 

நுவரெலியாவில் மரக்கறி வகைகளின் நிரம்பல் அதிகரித்துள்ளதால் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள கடைகளில் அதிகப்படியான மரக்கறிகள் குவிந்துள்ளன.
இந்நிலையில் சந்தையில் கேள்வி – விற்பனை குறைவடைந்துள்ளதால் தேங்கிக்கிடக்கும் மரக்கறிகள் பழுதடைந்துவருகின்றன. இவ்வாறு பழுதடைந்த பிறகு குப்பை தொட்டிகளில் வீசப்படும் கழிவுகளை குதிரைகள் உண்ணும் நிலையையும் காணமுடிகின்றது.

மறுபுறத்தில் மரக்கறி விலை தொடர்ச்சியாக குறைந்துவருவதால் விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மழைக்காலம் என்பதால் விவசாயிகள் திரிசங்கு நிலையில் உள்ளனர்.

இந்த விடயம் சம்பந்தமாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் செயலாளரிடம் வினவிய போது,

” கடந்த காலத்தில் கிழங்கு உற்பத்தி அதிகரித்ததால் அதன் விலை வீழ்ச்சியடைந்தது. இதனால் கிழங்கு விவசாயிகளும் ஏனைய மரக்கறி செய்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாகவே மரக்கறி வகைகளின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இவ்வாறு மரக்கறி உற்பத்தி அதிகரித்துள்ளதால் சந்தையில் நிரம்பல் அதிகரித்து விலை குறைவடைந்துள்ளது.” – என்று தெரிவித்தார்.

கஜரூபன் திவ்யா

பூனைகளின் பெருக்கத்தால் திண்டாடுகிறது சைப்ரஸ் !

 

சைப்ரஸ் நாட்டில் மக்கள் தொகைக்கு இணையாக பூனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது.

சைப்ரஸ், நீண்டகாலமாக பூனைகளை விரும்பும் சிறிய தீவு நாடாக உள்ளது. இங்கு 9,500 ஆண்டுகளுக்கு முன், மனிதருடன் புதைக்கப்பட்ட பூனையின் எலும்புகள் அங்கு கண்டறியப்பட்டதே அதற்கு சான்று.

நான்காம் நூற்றாண்டில் புனித ஹெலன் என்ற பாதிரியார், பாம்பு பிரச்னையை சமாளிக்க பூனைகளை அந்த தீவுக்கு அழைத்து வந்ததாகக் கூறப் படுகிறது.

கட்டுப்பாடற்ற இனப்பெருக்கம், ஊர் மக்களின் பராமரிப்பு போன்ற காரணங்களால் தற்போது அங்கு எங்கும் பூனைகள் மயமாகவே காட்சியளிக்கிறது.

சைப்ரசில், 10 லட்சம் தெருப் பூனைகள் உள்ளதாக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். நாட்டின் மக்கள்தொகை, 13.6 லட்சமாக உள்ள நிலையில், கிட்டத்தட்ட அதற்கு இணையாக பூனைகள் எண்ணிக்கையும் உள்ளன.

நாட்டின் தற்போதைய பூனை கருத்தடை திட்டம் பலனளிக்கவில்லை. இதனால், அவற்றின் எண்ணிக்கை தொடர்ந்து பெருகி வருகிறது.
மேலும் பூனைகளால் தீவின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, உணவு மற்றும் தங்குமிடம் தேடி தெருக்களில் அலைவதால், அவை துன்புறுத்தல்களையும் சந்திக்கின்றன.

இந்நிலையில், பூனைகள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக, அந்த நாட்டு அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துகிறது இந்தியா: ட்ரம்ப் தகவல்!

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கூறியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவதில் நான் மகிழ்ச்சியடையவில்லை. அவர்கள் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க மாட்டார்கள் என்று மோடி எனக்கு உறுதியளித்தார். உங்களுக்குத் தெரியும், இதை உடனடியாக செய்ய முடியாது. இது ஒரு சிறிய செயல்முறை, ஆனால் செயல்முறை விரைவில் முடிவடையும்.” எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்த இது ஒரு பெரிய படி. இப்போது சீனாவையும் அதையே செய்ய வைக்கப் போகிறோம். மோடி ஒரு சிறந்த மனிதர். அவர் ட்ரம்பை நேசிக்கிறார். நான் அவரது அரசியல் வாழ்க்கையை அழிக்க விரும்பவில்லை.

நான் பல ஆண்டுகளாக இந்தியாவைப் பார்த்து வருகிறேன். அது ஒரு நம்பமுடியாத நாடு, ஒவ்வொரு ஆண்டும் உங்களுக்கு ஒரு புதிய தலைவர் அங்கு இருப்பார். ஆனால், என் நண்பர் மோடி நீண்ட காலமாக அங்கு தலைவராக இருக்கிறார்” எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு இத்தகைய உறுதியை அளித்தாரா என்பது குறித்த மின்னஞ்சல் கேள்விகளுக்கு வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் உடனடியாக பதிலளிக்கவில்லை.

பாண் விற்கும் போர்வையில் கஞ்சா கலந்த மதன மோதக மாத்திரைகள் விற்றவர் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸாரால் கைது!

பேக்கரி பொருள் விற்பனை என்ற போர்வையில் கஞ்சா கலந்த மதனமோதக போதைப்பொருளை விற்பனை செய்தார் எனக் கூறப்படும் சந்தேக நபர், நோட்டன் பிரிட்ஜ் பொலிஸாரால் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார்.

56 வயது நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

லொறியொன்றில் பேக்கரி பொருள் விற்பனை என்ற போர்வையில் கஞ்சா கலந்த மதனமோதக போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதற்கமைய நோட்டன் பிரிட்ஜ் ஊடாக குறித்த லொறி ஹட்டன் நோக்கி
பயணித்துக்கொண்டிருக்கையில் அதனை பொலிஸார் பரிசோதனைக்குட்படுத்தினர்.

இதன்போது லொறிக்குள் இருந்து 250 மதனமோதக உருண்டைகள் கைப்பற்றப்பட்டன.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் இன்று முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆதித்யா

ரூ. 1700: 25 ஆம் திகதி இறுதி முடிவு: 7 ஆம் திகதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

” பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் எதிர்வரும் 25 ஆம் திகதியளவில் இறுதி முடிவு எட்டப்படும். இந்த முடிவின் பிரதி பலன் தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி வரவு- செலவுத் திட்டம் முன்வைக்கப்படும்போது அரசாங்கத்தால் வெளியிடப்படும். ”

இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவருமான கிட்ணன் செல்வராஜ் தெரிவித்தார்.

இது தொடர்பில் சிரச தொலைக்காட்சியில் இன்று காலை ஒளிபரப்பான பெத்திகட நிகழ்வின்போது கிட்ணன் செல்வராஜ் எம்.பி. வழங்கிய நேர்காணல் வருமாறு,

(தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2ஆவது வரவு- செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது)

மாகாணசபைத் தேர்தலில் கூட்டு பயணம் குறித்து தமிழ்க் கட்சிகள் ஆராய்வு!

 

வரும் மாகாண சபைத் தேர்தலில் தமிழ்க் கட்சிகள் ஒற்றுமையாகப் போட்டியிட்டு எவ்வாறு வடக்கு மாகாணத்தைக் கைப்பற்றுவது என்பது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை கலந்துரையாடல் நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜாப்பெருமாள் தலைமையில் இந்தக் தமிழ்க் கட்சிகளின் கூட்டம் இடம்பெற்றது.

இதில் சுரேஷ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், முருகேசு சந்திரகுமார், வேந்தன் உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் கலந்துகொள்ள அதன் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அவர் சுகயீனம் காரணமாக வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அவரும் வரவில்லை எனக் கூறப்பட்டது.

மத்திய வங்கி மோசடி: மகேந்திரன்மீதும் சட்டம் பாயும்: எந்த கொம்பனும் தப்பவே முடியாது!

 

எந்த கொம்பனாக இருந்தாலும், உலகில் எந்த மூலையில் பதுங்கி இருந்தாலும் தவறிழைத்தவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது. பாதாள குழுக்கள் மற்றும் போதைப்பொருள் மாபியாக்களுக்கு முடிவு கட்டப்பட்டுவருகின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

” பாதாள குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு முடிவு கட்டப்படும் என நாம் உறுதியளித்திருந்தோம். இதற்காக பொலிஸார் உட்பட பாதுகாப்பு துறையினருக்கு தேவையான வளங்களை வழங்கினோம். அவர்கள் சிறப்பாக தமது கடமைகளை செயல்படுத்தி வருகின்றனர்.

போதைப் பொருள் கடத்தல் மன்னர்கள் சிக்கி, சிறைக்கு சென்றுள்ளனர்;. நீதிமன்றத்தக்குள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற நபர்கள்கூட நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர் இப்படியான கைதுகள் நடத்தப்படவில்லை.” – எனவும் சந்திரசேகர் குறிப்பிட்டார்.

நாட்டில் கடந்த காலங்களில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றபோது, இவற்றை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை எனவும், செவ்வந்தி உள்ளிட்டவர்களை பிடிப்பதற்குகூட தெம்பு இல்லை எனவும் எதிரணிகள் கூச்சலிட்டன. ஆனால் எந்த கொம்பனாக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்பது இன்று நிரூபனமாகி வருகின்றது.

கடந்தகாலங்களில்தான் குற்றவாளிகள் அரசியல்வாதிகளால் பாதுகாக்கப்பட்டனர். ஆனால் எமது ஆட்சியில் குற்றவாளிகளுக்கு இடமில்லை. தவறிழைத்தவர்கள் சட்டத்தின் பிடிக்குள் இருந்து தப்ப முடியாது.

அதேவேளை, மக்களுடைய சொத்துகளை களவாடியவர்கள், சூறையடித்தவர்கள் சட்டத்தின் பிடிக்குள் சிக்குவார்கள். மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய அர்ஜுன் மகேந்திரன் விடயத்திலும் சட்டம் செயல்படும்.” – என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

வெத்து காகிதமென விமர்சிப்பது கேடுகெட்ட அரசியல்!

நாடாளுமன்ற உறுப்பினரானான ஜீவன் தொண்டமான், மனோ கணேசன், திகாம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரை மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். எனவே, கேடு கெட்ட அரசியலை அவர்கள் நிறுத்தாவிட்டால் முகத்திரைகளை கிழித்தெறிய வேண்டிய நிலை ஏற்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மீரியபெத்த மண்சரிவு ஏற்பட்டு எத்தனை வருடங்கள்? இவ்வளவு நாளும் எங்கிருந்தீர்கள் என ஜீவன் தொண்டமான், மனோ கணேசன், திகாரம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் கேட்கின்றேன். இவ்வளவு நாளும் படுத்து தூங்கிக் கொண்டிருந்தீர்களா? அவர்களுக்கான வீடுகள் தற்போதுதான் கட்டப்பட்டு கையளிக்கப்படக்கூடிய சூழ்நிலை வந்துள்ளது.

வெத்து காகிதம் என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டது. வழங்கப்பட்டது காகிதமாக இருந்தாலும் உண்மை என்னவென்பது மக்களுக்கு தெரியும். எனவே, கேடு கெட்ட அரசியலை நிறுத்துங்கள். எமது மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக்கொடுக்காமல், அவர்களை அடிமை வாழ்வு வாழ வைத்ததால்தான் கடந்த தேர்தலில் மக்கள் பதிலடி கொடுத்தார்கள். கொழும்பில் இருந்த மக்களும் மனோவின் நாடக நடிப்பு அரசியலை நிராகரித்து, அவரை ஒதுக்கி வைத்துள்ளனர்.

மக்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்திக்குரிய ஆதரவு அதிகரித்துவருவதால்தான் இவர்கள் கத்துவதற்கு ஆரம்பித்துள்ளனர். தம்பி ஜீவன் அரசியலை நல்ல முறையில் கத்துக்கொள்ளுங்கள். கூவித்திரிவதால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை.

கடந்த காலங்களில் நீங்கள் எத்தனை வீடுகளை கட்டினீர்கள்? கட்டிய சில வீடகள்கூட எந்த நிலையில் உள்ளது? எனவே, முடியுமாக இருந்தால் உதவி செய்யுங்கள், தயவு செய்து உபத்திரம் செய்யாதீர்கள் என திகா, மனோ, ராதா, ஜீவனிடம் கேட்டுக்கொள்கின்றேன். நாங்கள் கதைக்கபோனால் உங்களின் முகத்திரைகளை கிழிக்க நேரிடும்.” – என்றார்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

தையிட்டி காணி அளவீடு நாளை ஆரம்பம்!

0
யாழ். தையிட்டி விகாரையைச் சூழவுள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கான நில அளவீட்டுப் பணிகள் நாளை மற்றும் நாளைமறுதினம் ஆகிய இரு தினங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளன என்று தெல்லிப்பழை பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார். தையிட்டிக் கிராமத்தில்...

யாழில் தந்தை செல்வாவின் 49ஆவது நினைவு நாள் நிகழ்வு!

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வநாயகத்தின் 49ஆவது நினைவு நாள் அஞ்சலி நிகழ்வுகளும் நினைவுப் பேருரையும் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன. இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை...

நீலகாமம் மக்களுக்கு நீதி கிடைக்கும்: நேரில் களமிறங்கி பிரதி அமைச்சர் பிரதீப் உறுதி!

0
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் , அடியாட்களால் தோட்ட மக்கள் தாக்கப்பட்டது தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும், சம்பந்தப்பட்ட தரப்பினரை கைது செய்வதற்கும் தேவையான ஆலோசனைகளை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்...