Home Blog Page 250

நாளை கூடுகிறது சம்பள நிர்ணய சபை!

 

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சம்பள நிர்ணய சபை நாளை வெள்ளிக்கிழமை கூடுகின்றது.

தொழில் ஆணையாளர் நாயகம் எச்.எம்.டீ.என்.கே.வட்டலியத்த தலைமையில், கொழும்பிலுள்ள தொழில் திணைக்களத்தில் பிற்பகல் 1 மணியளவில் சம்பள நிர்ணய சபை கூடும் என தெரியவருகின்றது.

சம்பள நிர்ணய சபையின் தொழில் அமைச்சின் நியமன உறுப்பினர்கள், தொழிற்சங்கங்கள் சார்பில் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் சட்ட ஆலோசகர் கே.மாரிமுத்து,

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் முத்துக்குமார், விவசாய தோட்ட தொழிலாளர் காங்ரஸ் சார்பில் ஆர்.எம்.கிருஸ்ணசாமி, அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கிட்னண் செல்வராஜா, இலங்கை செங்கொடி சங்கத்தின் சார்பில் அதன் ஆலோசகர் மேனகா கந்தசாமி மற்றும் பி.ஜி.சந்திரசேன உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகளும், தொழில் தருநர் சார்பில் பெருந்தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மரக்கறி விலைப்பட்டியல் (16.10.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (16) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

செவ்வந்தி ஒப்பரேஷன்: மேலும் பல தகவல்கள் அம்பலம்!

 

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட அறுவர் நேற்று மாலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், விசாரணைக்காக சிஐடியினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தைசூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அவர்களுடன் நேபாள பொலிஸாரும் வந்திருந்தனர்.

கொழும்பு, அளுத்கடை நீதிமன்றத்துக்குள் பாதாள குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்ஜீவ சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான மூளையாளியாக இஷாரா செல்வந்தி கருதப்படுகின்றார்.

மேற்படி கொலை சம்பவத்துக்கு பிறகு இஷாரா செவ்வந்தி நாட்டைவிட்டு தப்பியோடுவதற்கு பாதாள குழு உறுப்பினர் பெக்கோ சமன் என்பவரே வெளிநாட்டில் இருந்தவாறு ஏற்பாடுகளை செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

மத்துகம பகுதிக்கு சென்ற செல்வந்தி தனது முடியை கட்டையாக வெட்டிக்கொண்டு, ஆள் அடையாளத்தையும் மாற்றியுள்ளார். அதன்பின்னரே யாழ். சென்று அங்கிருந்து படகுமூலம் இந்தியா சென்றுள்ளார். சுபுன் என்பவரே அவரை காரில் யாழுக்கு அழைத்துச்சென்றுள்ளார்.

ஜே.கே. பாய் என்ற ஆள்கடத்தல் காரரே யாழில் இருந்து இந்தியா தப்பிச்செல்வதற்குரிய ஏற்பாடுகளை செய்துள்ளார். இந்தியாவில் இருந்து ரயில் மூலம் நேபாளம் சென்றுள்ளனர். அங்கு தலைமறைவாகி இருந்த நிலையிலேயே செவ்வந்தி உள்ளிட்ட அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியான ரொஹான் ஒலுகலவே இந்த ஒபரேஷனுக்காக நேபாளம் சென்றிருந்தார்.

பொலிசுக்குள் பாதாள குழுவுக்கு உதவக்குகூடிய உளவாளிகள் இருக்கக்கூடும் என்பதால் தனக்கு வைரஸ் காய்ச்சல் என்ற தகவலை பரப்பிவிட்டு, வீட்டில் இருந்து சிகிச்சை பெறுவதுபோல் தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். அவர் வெளிநாடு சென்ற பிறகும் உள்நாட்டில் அவரது தொலைபேசி இயங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பொலிஸ் அதிகாரி ரொஹான் ஒலுகலவேவை கண்ட செவ்வந்தி,

” சேர், என்னை நீங்கள் ஒருநாள் கைது செய்வீர்கள் என்பது தெரியும். 7 மாதங்கள் சிறையில் இருப்பதுபோல்தான் இங்கு இருந்தேன். இங்கு இருப்பதைவிட எனது நாட்டிற்கு செல்வது சுகம் என நினைத்தேன். எனினும், பொலிஸார் கைது செய்வார்கள் என்ற அச்சத்தால் இங்கேயே இருந்துவிட்டேன்.” எனக் கூறியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல பாதாள குழு உறுப்பினர் கம்பஹா பபா என்பவர், சேர் 50 லட்சம் ரூபா தருகின்றேன் என்னை விட்டுவிடுங்கள் என கெஞ்சியுள்ளார். அதனை ஏற்க பொலிஸ் அதிகாரி மறுத்துவிட்டார். பிறகு தொகையை அவர் உயர்த்தியுள்ளர்ர. ஆனால் பொலிஸ் அதிகாரி, மன்னிப்பு என்பதற்கே இடமில்லை என திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

நேபாளத்தில் தங்கி இருந்தபோது தன்னை இந்திய பெண்போலவே செவ்வந்தி காட்டிக்கொண்டுள்ளார், அங்கிருந்தபோது அவர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

படையினரை காட்டிக்கொடுத்துவிட்டார் பொன்சேகா: கம்மன்பில குற்றச்சாட்டு

“போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து தான் தப்பித்துக்கொள்வதற்காக படையினரையும், நாட்டையும் காட்டிக்கொடுத்த இராணுவ தளபதிதான் சரத் பொன்சேகா.” என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” வெள்ளைக்கொடி ஏந்தி வந்த புலித்தலைவர்களை கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவுக்கமைய இராணுவம் கொன்றது என ஜனாதபதி தேர்தலின்போது பொன்சேகா ஊடகமொன்றிடம் கூறி இருந்தார்.

அவரின் அந்த கதையால்தான் படையினர்மீது போர்க்குற்றச்சாட்டு சுமந்தப்பட்டு, இன்றுவரை அப்பிரச்சினை நீடிக்கின்றது. உலக வரலாற்றில் இராணுவத் தளபதியொருவர், தமது படை போர்க்குற்றம் இழைத்தது எனக் கூறிய ஒரேயொரு இராணுவத் தளபதிதான் சரத் பொன்சேகா.

போர் முடிப்பதற்கு பொன்சேகா பங்களிப்பு வழங்கினார். ஆனால் போர் முடிந்த பின்னர் தன்னை தற்காத்துக்கொள்வதற்காக படையினரையும், நாட்டையும் காட்டிக்கொடுத்தார். தற்போதும் அச்செயலை செய்துகொண்டுவருகின்றார்.” – எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.

பாதாள குழுக்களுக்கு பின்னால் இருப்பது யார்? விசாரணை கோருகிறார் நாமல்!

பாதாள குழுக்களுக்கு பின்னால் இருப்பது யார், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது யார் என்பன உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே நாமல் ராஜபக்ச இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” செவ்வந்;தி நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது நல்லது. கைதானவர்கள் விரைவில் நாட்டுக்கு அழைத்துவப்பட வேண்டும்.
இந்த திட்டமிட்ட குற்றவாளிகளுக்கு பின்னால் இருப்பது யார், அவர்களுக்கு எவ்வாறு ஒத்துழைப்பு கிடைக்கின்றது என்பது உட்பட அனைத்து தகவல்களையும் நாட்டு மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். எனவே, பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம். முன்னாள் கடற்படை தளபதிக்கு நடந்ததுபோல விசாரணை இடம்பெறக்கூடாது.” என்றார் நாமல்.

சுற்றுலாப் பயணிகளுக்குரிய வசதிகளை மேம்படுத்த திட்டம்!

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த அரசாங்கம் பல திட்டங்களைத் தீட்டியுள்ளது.

சுற்றுலாக் கைத்தொழிலை மேம்படுத்துவதற்குத் தேவையான அவசர முடிவுகளை எடுப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி செயலணி நேற்று (14) ஜனாதிபதி அலுவலகத்தில் இரண்டாவது முறையாகக் கூடிய போது இந்த விடயம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

அதன்படி, சுற்றுலாப் பயணிகளுக்கு விசாக்கள் மற்றும் மின்னணு பயண அனுமதிப் பத்திரங்களை (ETAs) வழங்குவதை எளிதாக்குவது தொடர்பான விடயங்களில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வரும்போது விமான நிலையத்தில் ஏற்படும் நெரிசலைக் குறைப்பதற்கான கவுண்டர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் பல்வேறு இடங்களைப் பார்வையிடச் செல்லும் போது சுற்றுலாப் பயணிகள் டிக்கெட்டுகளை வாங்க வேண்டிய இடங்களில் ஒன்லைனில் டிக்கெட்டுகளை வாங்குவதை எளிதாக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலாத் துறையுடன் தொடர்புடையவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், சுற்றுலாத் துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா மற்றும் சுற்றுலாத் துறையுடன் தொடர்புள்ள நிறுவனத் தலைவர்கள் ,ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி கிரிஷான் பாலேந்திர, EKHO ஹொட்டல்ஸ் மற்றும் ரிசோர்ட்ஸ் நிறுவன உப தலைவர் நிஹால் முஹந்திரம் உள்ளிட்ட சுற்றுலாத் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நுவரெலியா மாவட்ட டிஐஜி இன்று கடமையேற்பு!

நுவரெலியா மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பிரியந்த சந்திரசிரி இன்று சுப நேரத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.

நுவரெலியா மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி வகித்த பிரியந்த சில்வா, 11 மாத காலம் சேவையாற்றி பின்பு பொலிஸ் தலைமை காரியாலயத்திற்கு இடம்மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையிலேயே நுவரெலியா மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பிரியந்த சந்திரசிரி நியமிக்கப்பட்டு இன்று அவர் கடமையேற்றார்.

இவர் கடந்த ஒரு வருட காலமாக பொலிஸ் தலைமையகத்தில் சேவையாற்றியுள்ளார். அத்துடன், முல்லைத்தீவு, வவுனியா , கிளிநொச்சி மற்றும் காலி ஆகிய பகுதிகளிலும பிரதி பொலிஸ் மா அதிபராக சேவையாற்றியுள்ளார்.

இன்றைய கடமையேற்பு நிகழ்வில் நுவரெலியா பிரிவுக்குப் பொறுப்பான உதவிக் காவல் கண்காணிப்பாளர் ஜி.பி.ஜே.எஸ். சந்திரசேகர பண்டார, ஹட்டன் பிரிவுக்குப் பொறுப்பான உதவிக் காவல் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர, நுவரெலியா மற்றும் ஹட்டன் பகுதிகளுக்குப் பொறுப்பான உதவிக் காவல் இயக்குநர்கள், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களின் தலைமைக் காவல் ஆய்வாளர்கள் மற்றும் பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வ. கார்த்திக்

13 வயது சிறுமி சடலமாக மீட்பு: பொகவந்தலாவையில் சோகம்!

 

பொகவந்தலாவ, பொகவானை தோட்டப் பகுதியில் வீடொன்றில் தொட்டிலில் ஊஞ்சல் ஆடி விளையாடிக்கொண்டிருந்தார் எனக் கூறப்படும் 13 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் 14.10.2025 நேற்று செவ்வாய்கிழமை மாலை 5.45மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த சிறுமியின் வீட்டுக்கு உறவினர்கள் வந்திருந்த நிலையில் உறவினரின் குழந்தைக்காக தொட்டிலொன்று கட்டப்பட்டுள்ளது. அதில் குறித்த சிறுமி ஊஞ்சல் ஆடி விளையாடி கொண்டிருந்த நிலையில் சிறுமி தொட்டிலில் தொங்கிய நிலையில், பேச்சு மூச்சு அற்ற நிலையில் காணப்பட்டதாக சிறுமியின் உறவினர்கள் தெரிவித்தனர்.

தனது சகோதரி பேச்சுமூச்சு அற்ற நிலையில் இருப்பதைக் கண்ட சகோதரன், இது பற்றி தெரிவித்து அயலவர்களை அழைத்ததையடுத்து சிறுமியை மீட்டெடுத்த அயலவர்கள் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசென்றனர்.

சிறுமி உயிர்ழந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ பொகவானை தோட்டத்தை சேர்ந்த 13 வயதுடை மதுமதன் ஜென்சியா என்ற சிறுமியே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிவந்துள்ளது .

இதேவேளை சம்பவம் தொடர்பில் ஹட்டன் நீதிமன்ற பதில் நீதிவான் புபூது ஜிந்தக்க தலைமையில் மரணவிசாரனைகள் இடம் பெற்று , சிறுமியின் சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கள் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தொட்டிலில் தொங்கி விளையாடியபோது உயிரிழப்பு நடந்ததா அல்லது வேறு ஏதேனும் நடந்துள்ளதா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காகிதங்களை கையளிக்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை: காணி உரிமை பற்றி சஜித் கருத்து!

 

வீடுகளை நிர்மாணிப்பதற்கு முன்பே வீடுகளை நிர்மாணிப்போம் என காகிதத் துண்டுகளை பகிரும் பழக்கம் ஐக்கிய மக்கள் சக்திக்கு இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

” 1987 ஆம் ஆண்டு அனைவருக்கும் போதுமான வசிப்பிடத்தின் முக்கியத்துவம் உணரப்பட்டு, பத்து இலட்சம் வீடுகள், பதினைந்து இலட்சம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன.

2500 மாதிரி கிராமங்கள் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, சுமார் 300 வீடுகள் திறந்து வைக்கப்பட்டன. 2500 வீடுகளை நிர்மாணிப்போம் எனக் கூறி வெறுமனே காகிதத் துண்டுகளை பகிர்ந்தளிக்கவில்லை.” – எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

அதேவேளை, தேர்தலை நடத்துவதாக இருந்தால், தேர்தல் நடத்தப்படும் திகதியை அறிவியுங்கள். ஐக்கிய மக்கள் சக்தி தேர்தலுக்கு தயாராகவே உள்ளது. எந்தவொரு கருத்துக் கணிப்புக்கும், எந்தவொரு பலப்பரீட்டைக்கும் நாம் தயார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கைது!

 

முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார , இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

இஸ்ரேலுக்கு இலங்கையர்களை வேலைக்கு அனுப்பிய விவகாரத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பில் இடம்பெற்றுவரும் விசாரணைகளின் பிரகாரமே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளிப்பதற்காக மனுஷ நாணயக்கார இன்று முற்பகல் முன்னிலையாகி இருந்த நிலையிலேயே கைது இடம்பெற்றுள்ளது.

கைதுசெய்யப்பட்ட மனுஷ நாணயக்காரவை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றத.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

தையிட்டி காணி அளவீடு நாளை ஆரம்பம்!

0
யாழ். தையிட்டி விகாரையைச் சூழவுள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கான நில அளவீட்டுப் பணிகள் நாளை மற்றும் நாளைமறுதினம் ஆகிய இரு தினங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளன என்று தெல்லிப்பழை பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார். தையிட்டிக் கிராமத்தில்...

யாழில் தந்தை செல்வாவின் 49ஆவது நினைவு நாள் நிகழ்வு!

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வநாயகத்தின் 49ஆவது நினைவு நாள் அஞ்சலி நிகழ்வுகளும் நினைவுப் பேருரையும் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன. இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை...

நீலகாமம் மக்களுக்கு நீதி கிடைக்கும்: நேரில் களமிறங்கி பிரதி அமைச்சர் பிரதீப் உறுதி!

0
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் , அடியாட்களால் தோட்ட மக்கள் தாக்கப்பட்டது தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும், சம்பந்தப்பட்ட தரப்பினரை கைது செய்வதற்கும் தேவையான ஆலோசனைகளை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்...