Home Blog Page 251

நில உரிமை வேண்டும்: ஹட்டனில் கையெழுத்து வேட்டை!

 

மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் தோட்டத் தொழிலாளர்கள், அரச ஊழியர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் உட்பட காணியை பெறுவதற்கு தகுதி உடைய அனைவருக்கும் நில உரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனை வலியுறுத்தி ஹட்டன் பஸ் நிலைய வளாகத்தில் கையெழுத்து வேட்டை இடம்பெற்றது.

உரிமை மீட்போம், தலைமுறை காப்போம் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இதற்குரிய நிகழ்வில் அமைப்பின் தலைவர் பா. சிவநேசன் உட்பட பல சமூக செயற்பாட்டாளர்கள் பங்கேற்றிருந்தனர்.

“பெருந்தோட்டப் பகுதி மக்களுக்கு நிலம் மற்றும் வீடுகளை வழங்குவது மிகவும் அவசியமானது. இதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் முன்னேறும். கையெழுத்து திரட்டப்பட்ட பின் மனு ஜனாதபதியிடம் கையளிக்கப்படும்.” என்று அமைப்பின்தலைவர் பா. சிவநேசன் தெரிவித்தார்.

பணயக் கைதிகள் விடுவிப்பு: 738 நாட்களுக்கு பிறகு ஒன்று சேர்ந்த தம்பதி!

காசாவில் நீண்ட நாட்​களாக பிணைக் கை​தி​களாக வைக்​கப்​பட்​டிருந்​தவர்​கள் அண்​மை​யில் விடுவிக்​கப்​பட்​டனர். இதை தொடர்ந்து 738 நாட்​களுக்​குப் பிறகு இஸ்​ரேல் தம்​ப​தி​யினர் மீண்​டும் ஒன்று சேர்ந்​துள்​ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்​பின் முயற்​சி​யால் இரு தரப்​பினர் இடையே கடந்த 9-ம் திகதி அமைதி உடன்​பாடு ஏற்​பட்​டது.
இதையடுத்து காசா​வில் 10-ம் திகதி போர் நிறுத்​தம் அமுலுக்கு வந்​தது.

எகிப்​தில் நடை​பெற்ற அமைதி மாநாட்​டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்​னிலை​யில் இந்த காசா அமைதி ஒப்​பந்​தம் உறு​தி​யானது. முன்​ன​தாக, ஹமாஸ் குழு​வின் பிடி​யில் இருந்த 20 இஸ்​ரேலிய பிணைக் கைதி​கள் விடு​தலை செய்​யப்​பட்​டனர். அதே​போல் இஸ்​ரேல் சிறை​களில் அடைக்​கப்​பட்​டிருந்த 154 பாலஸ்​தீனர்​களும் விடுவிக்​கப்​பட்​டனர்.

பிணைக் கைதி​கள் விடுவிக்​கப்​பட்​டதைத் தொடர்ந்து இஸ்​ரேல் நாட்​டைச் சேர்ந்த அவி​நாட்​டன் ஓர் என்​பவரும் விடுவிக்​கப்​பட்​டார். இவர் ஹமாஸ் தீவிர​வா​தி​கள் பிடித்து வைத்​திருந்த 20 இஸ்​ரேலியர்​களில் ஒரு​வர் ஆவார்.

சுமார் 738 நாட்​கள் பிணைக் கைதி​யாக இருந்த இவர் நேற்று முன்​தினம் வீடு வந்து சேர்ந்​தார். அவரைப் பார்த்​ததும் அவரது மனைவி நோவா அர்​காமனி ஓடி வந்து கட்​டியணைத்​துக் கொண்​டார். கணவரை முத்​தமிட்டு வரவேற்​றார். சந்​தோஷத்​தில் அவர் வாய்​விட்டு அழு​தார்.

மனை​வியைப் பார்த்​ததும் கண்​ணீர் விட்டு அழு​தார் அவி​நாட்​டன் ஓர். அவி​நாட்​டனின் மனைவி நோவா அர்​காமனி​யும், பிணைக் கைதி​யாக பிடித்து வைக்​கப்​பட்​டிருந்​தார். இஸ்​ரேல் ராணுவத்​தினர் கடந்த ஆண்டு மேற்​கொண்ட முயற்​சி​யால் அவர் விடுவிக்​கப்​பட்​டார். 2 ஆண்​டு​களுக்​கும் மேலான பிரிவுக்​குப் பின்​னர் தம்​ப​தி​யர் ஒன்று சேர்ந்​ததற்கு நண்​பர்​கள் வரவேற்பு தெரி​வித்​துள்​ளனர்.

இரு​வரும் கட்​டியணைத்து வரவேற்ற வீடியோ, புகைப்​படங்​கள் தற்​போது சமூக வலை​தளங்​களில் வைரலாகி​யுள்​ளன.

மாகாணசபைத் தேர்தலில் அரசு மண்கவ்வும்: கம்மன்பில கணிப்பு!

தமது கோரிக்கைகளை நிறைவேற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், மாகாணசபைத் தேர்தல் ஊடாக பலவீனமடைவதை இந்தியா விரும்பாது. எனவே, மாகாணசபைத் தேர்தல் விடயத்தில் இந்தியாவின் அழுத்தங்கள் இல்லை என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” உள்ளாட்சிசபைத் தேர்தலை முடிவுகளை அடிப்படையாகக்கொண்டு மாகாணசபைத் தேர்தலை ஒப்பிட்டால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு வடமத்திய மாகாணசபையை மட்டுமே கைப்பற்றக்கூடியதாக இருக்கும். ஆனால் தற்போது அந்நிலைமையும் மாறியுள்ளது. ஆளுங்கட்சியால் ஒரு சபையைக்கூட கைப்பற்ற முடியாமல்போகும்.

மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்த அரசாங்கம் இல்லை. எனினும், சர்வதேச அழுத்தங்களுக்கு அஞ்சுகின்றது. இப்பிரச்சினையின்போது இந்திய அழுத்தம் இல்லை. இந்தியா கூறுவதற்கிணங்க இந்த அரசாங்கம் செயற்படுகன்றது. எனவே, மாகாணசபைத் தேர்தல் ஊடாக அரசாங்கம் பலவீனமடையதை இந்தியா விரும்பாது. எதிர்வரும் செப்டம்பர் மாதத்துக்குள் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும்.” – என்றார்.

இலங்கையுடனான உறவை வலுப்படுத்துகிறது சீனா!

 

சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உடன் நேற்று சந்திப்பு நடத்தினார்.

இதன் போது இரு நாடுகளுக்கும் இடையே சட்ட அமுலாக்கம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த சீன ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையுடன் உயர்மட்ட பாதை மற்றும் அணை ஒத்துழைப்பை கூட்டாக ஊக்குவிக்கவும், துறைமுகப் பொருளாதாரம், நவீன விவசாயம், டிஜிட்டல் பொருளாதாரம், பசுமைப் பொருளாதாரம் மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் சீனா தயாராக இருப்பதாகவும் சீன ஜனாதபதி குறிப்பிட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை சீனாவிற்குப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நேற்று முன்தினம் சீன பிரதமர் லீ கியாங்கை சந்தித்த நிலையில் நேற்று சீன ஜனாதிபதியை சந்தித்திருந்தார்.

இந்தச் சந்திப்பின் போது, சட்ட அமுலாக்கம் மற்றும் பாதுகாப்பில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், எல்லை தாண்டிய சூதாட்டம், மோசடி மற்றும் பிற குற்றச் செயல்களை உறுதியாகக் கட்டுப்படுத்தவும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அழைப்பு விடுத்ததாக, சீனாவின் சின்{ஹவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்போது, பாதை மற்றும் அணை ஒத்துழைப்பை இலங்கை தீவிரமாக ஆதரித்து பங்கேற்பதாக கூறிய ஹரிணி அமரசூரிய, இலங்கையின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக சீனாவுடனான ஒத்துழைப்பை ஆழப்படுத்த விரும்புவதாகவும், குறிப்பிட்டுள்ளார்.

படப்பிடிப்பில் மாரடைப்பு: கன்னட நடிகர் ராஜு தலிகோட்டே மரணம்

சினிமா படப்​பிடிப்​பின்​போது மாரடைப்பு ஏற்​பட்​ட​தால் கன்னட நகைச்​சுவை நடிகரும் இயக்​குநரு​மான ராஜு தலிகோட்டே (62) மரணமடைந்​தார்.

சிறு​வய​திலேயே மேடை நாடகங்​களில் நடித்து வந்த ராஜு தலிகோட்​டே, ‘ஹெண்​டத்தி அந்த்ரே ஹெண்​டத்​தி’ படம் மூலம் நடிக​ராக அறி​முக​மா​னார். பெரும்​பாலும் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வந்​தார். மனசா​ரே, பஞ்​சா​ரங்​கி, ராஜ​தானி, மைனா, டோபி​வாலா, பஞ்​சாபி ஹவுஸ் என பல படங்​களில் நடித்​துள்​ளார். ‘பிக் பாஸ்’ கன்னட நிகழ்ச்​சி​யிலும் பங்​கேற்​றுள்ள அவர், தொடர்ந்து நாடகங்​களி​லும் நடித்து வந்​தார்.

படப்​பிடிப்பு ஒன்​றுக்​காக அவர் உடுப்பி சென்​றிருந்​தார். திங்​கள்​கிழமை அவருக்குத் திடீரென நெஞ்​சுவலி ஏற்​பட்​டது. அரு​கில் உள்ள மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர். ஆனால், அவர் ஏற்​கெனவே உயிரிழந்து விட்​ட​தாக மருத்​து​வர்​கள் தெரி​வித்​தனர். அவர் மறைவுக்​குக் கன்னட சூப்​பர் ஸ்டா​ரான சிவ ராஜ்கு​மார் உள்பட நடிகர், நடிகைகளும் கர்​நாடகத் துணை முதல்​வர் சிவக்​கு​மார், முன்​னாள் முதல்​வர் பசவ​ராஜ் பொம்மை உள்ளிட்ட அரசி​யல் தலை​வர்​களும் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்​.

விசில் அடித்த ரசிகரை எச்சரித்த அஜித்குமார்

நடிகர் அஜித் குமார் இப்​போது சர்​வ​தேச கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று வரு​கிறார். இதற்​காக ‘அஜித்​கு​மார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்​துள்​ளார்​.இந்த அணி, உலகின் பல்​வேறு பகு​தி​களில் நடை​பெறும் கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று வரு​கிறது. துபாய், இத்​தாலி, ஸ்பெ​யின் நாடு​களில் நடை​பெற்ற ரேஸ்​களில் பங்​கேற்ற அவர் அணி,​பார்​சிலோ​னா​வில் நடந்த கார் பந்​த​யத்​தில் கடந்த வாரம் பங்​கேற்​றது. அங்கு கடந்த ஞாயிற்​றுக்​கிழமை அஜித்​கு​மாரை பார்க்க ரசிகர்​கள் கூடினர். அதில் சிலர், அஜித்​கு​மாரை பார்த்​ததும் ஆரவாரம் செய்து விசிலடித்​தனர்.

இதைக் கவனித்த அஜித் கோபமடைந்​தார். விரலை அசைத்​து, ‘அமை​தி​யாக இருங்​கள்’ என்ற சைகை செய்​தார். உடனே ரசிகர்​கள் ஆரவாரத்தை நிறுத்தி அமை​தி​யா​னார்​கள். இந்​தக் காட்சி இணை​யத்​தில் வைரலாகி வரு​கிறது. அஜித், பார்​சிலோனா பந்​த​யத்தை முடித்​து​விட்டு துபாய் திரும்பி இருக்​கிறார். அடுத்து மலேசி​யா​வில் டிசம்​பர் மாதம் நடக்​கும் கார் பந்​த​யத்​தில் பங்​கேற்​க இருக்​கிறார்​.

மரக்கறி விலைப்பட்டியல் (15.10.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (15) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

235 நாட்களுக்கு பிறகு சிக்கிய செவ்வந்தி: ஒப்பரேஷன் அரங்கேறியது எப்படி?

 

பாதாள குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தில் பிரதான மூளையாளியாக செயற்பட்ட 26 வயதான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்காக முன்னெடுக்கப்பட்ட கைது நடவடிக்கை தொடர்பில் பல தகவல்கள் கசிந்துள்ளன.

கொழும்பு, அளுத்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி, வழக்கு விசாரணைக்கு வந்தபோது கணேமுல்ல சஞ்ஜீவ சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தார்.

சட்டத்தரணிபோல வேடமிட்டுவந்த நபரொருவரே துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றார். எனினும், சம்பவத்துக்கு மறுநாள் அவர் புத்தளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

எனினும், பெண் சட்டத்தரணிபோல் வேடமிட்டு சட்டப்புத்தகத்துக்குள் துப்பாக்கியை மறைத்து, அதனை நீதிமன்ற வளாகத்துக்கு கொண்டுவந்த இஷாரா செவ்வந்தி தலைமறைவானார். அவரை கைது செய்வதற்காக விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இலங்கையில் பல பகுதிகளிலும் தேடுதல் வேட்டை இடம்பெற்றது. அவர் சிக்கவில்லை. அவர் கடல் வழியாக வெளிநாடொன்றுக்கு தப்பிச்சென்றிருந்தார். பின்னர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். சர்வதேச பொலிஸாருக்கும் இது பற்றி தெரியப்படுத்தப்பட்டது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே கணேமுல்ல சஞ்ஜீவவைக் கொலை செய்வதற்குரிய ஒப்பந்தத்தை வெளிநாட்டில் இருந்து வழங்கிய நிழல் உலக தாதா கெஹேல்பத்தர பத்மே உள்ளிட்ட பாதாள குழு உறுப்பினர்கள் சிலர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இலங்கை மற்றும் இந்தோனேசிய பொலிஸார் இணைந்தே அவர்களை மடக்கிப்பிடித்திருந்தனர்.
கெஹேல்பத்தர பத்மேவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் இலங்கையின் விசேட பொலிஸ் குழுவொன்று நேபாளம் சென்றுள்ளது. அங்குள்ள பொலிஸாரின் ஒத்துழைப்பையும் பெற்று இஷாரா செவ்வந்தி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்காக நேபாளத்தில் மூன்று நாட்கள்வரை ஒப்பரேஷன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேபாளம் தலைநகர் காத்மண்டு பகுதியில் மலைப்பகுதியொன்றில் அமைந்திருந்த வீடொன்றில் தலைமறைவாகி இருந்த நிலையிலேயே அவர் சிக்கியுள்ளார்.

அதேவேளை, இலங்கையில் நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கு பிறகு செல்வந்தி 4 நாட்கள் இலங்கையில் தலைமறைவாகி இருந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.

மித்தெனிய மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளிலேயே அவர் தலைமறைவாகி இருந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. பின்னர் இந்தியாவுக்கு தப்பிச்சென்று அங்கு மூன்று வாரங்கள் தங்கி இரு
ந்த பின்னரே நேபாளம் சென்றுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
நான்கு ஆண்களும், இரு பெண்களுமே நேபாளத்தில் சிக்கியுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண் செந்தவந்தி போல் இருந்துள்ளார் எனவும், போலி கடவுச்சீட்டு ஊடாக செவ்வந்தியும், அவரும் ஐரோப்பிய நாடொன்றுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜே.கே. பாய் என்பவரே செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார் என தெரியவருகின்றது. இவர் நிழல் உலக தாதா கெஹேல்பத்தர பத்மேயின் சகாவெனவும் தெரியவருகின்றது.
செவ்வந்தியுடன் இணைந்து அவரும் வெளிநாட்டுக்கு தப்பியோடியுள்ளார். இவர் ஊடாகவே செவ்வந்திக்குரிய பணம் வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகின்றது.

கைதானவர்களை நாட்டுக்கு கொண்டுவருவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

செம்மணி மனித புதைகுழியின் அடுத்த அகழ்வு: 2 கோடி ரூபா நிதிக்கு அனுமதி

இலங்கையின் இரண்டாவது பெரிய புதைகுழியில் மேலும் இரண்டு மாத அகழ்வாய்வு பணிகளுக்காகக் கோரப்பட்ட சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் நிதியை, நீதி அமைச்சு வழங்கியுள்ளது.

நிதி கிடைத்தாலும், தற்போது யாழ்ப்பபாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழி பிரதேசத்தில் பெய்து வரும் மழை காரணமாக, அடுத்த கட்ட அகழ்வாய்வுப் பணிகளை ஆரம்பிப்பது சாத்தியமில்லை என அகழ்வாய்வு நிபுணர்கள் கூறுகின்றனர்.

செம்மணி மனித புதைகுழி தொடர்பான வழக்கு, நேற்றைய தினம் (ஒக்டோபர் 13), யாழ்ப்பாணம் நீதிபதி செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அகழ்வாய்வுப் பணிகளுக்காகக் கோரப்பட்ட 1.9 மில்லியன் ரூபாய் கிடைக்கப்பெற்றுள்ளதாக காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) சட்டத்தரணி பூரணி ஜோசப் மரியநாயகம், வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

“மூன்றாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகளுக்கான நிதி எங்களுக்குக் கிடைத்துள்ளது. நீதி அமைச்சிலிருந்து கோரப்பட்ட 19 மில்லியன் ரூபாய் எங்களுக்குக் கிடைத்துள்ளது.”

நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், யாழ்ப்பாணம் நீதவான் செல்வநாயகம் லெனின்குமார், சட்டத்தரணிகள், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக அதிகாரிகள் மற்றும் அகழ்வாய்வு நிபுணர்களுடன் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியைப் பார்வையிட்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அகழ்வாய்வு பணிக்குப் பொறுப்பான நிபுணர்கள், அகழ்வாய்வு நடைபெறும் இடத்தில் சில இடங்களில் ஏற்கனவே மழைநீர் தேங்கி நிற்பதாகவும், இந்த நாட்களில் அப்பகுதியில் மழை பெய்து வருவதால், இந்த நேரத்தில் அகழ்வாய்வுப் பணிகளை ஆரம்பிக்க முடியாது எனவும் நீதவானிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கை நவம்பர் 3, 2025 அன்று மீண்டும் விசாரிக்க நீதவான் தீர்மானித்துள்ளார்.

முன்னர் அங்கீகரிக்கப்பட்ட நிதியுடன் 45 நாட்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வாய்வுப் செப்டெம்பர் 6, 2025 அன்று பிற்பகல் நிறைவடைந்த நேரத்தில், 240 மனித எலும்புக்கூடுகளில் ஒன்றைத் தவிர ஏனைய அனைத்தும் புதைகுழியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன.

செம்மணி சித்துப்பாத்தி மனித தைகுழியிலிருந்து இதுவரை மீட்கப்பட்ட பிற பொருட்களில், குழந்தை பால் போத்தல், பொம்மை, சிறுவர் காலணிகள் மற்றும் பாடசாலைப் பை ஆகியவை அடங்கும்.

இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழி மன்னார் சதொச மனிதப் புதைகுழி ஆகும், அங்கு 28 சிறுவர்கள் உட்பட 376 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

தையிட்டி காணி அளவீடு நாளை ஆரம்பம்!

0
யாழ். தையிட்டி விகாரையைச் சூழவுள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கான நில அளவீட்டுப் பணிகள் நாளை மற்றும் நாளைமறுதினம் ஆகிய இரு தினங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளன என்று தெல்லிப்பழை பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார். தையிட்டிக் கிராமத்தில்...

யாழில் தந்தை செல்வாவின் 49ஆவது நினைவு நாள் நிகழ்வு!

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வநாயகத்தின் 49ஆவது நினைவு நாள் அஞ்சலி நிகழ்வுகளும் நினைவுப் பேருரையும் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன. இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை...

நீலகாமம் மக்களுக்கு நீதி கிடைக்கும்: நேரில் களமிறங்கி பிரதி அமைச்சர் பிரதீப் உறுதி!

0
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் , அடியாட்களால் தோட்ட மக்கள் தாக்கப்பட்டது தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும், சம்பந்தப்பட்ட தரப்பினரை கைது செய்வதற்கும் தேவையான ஆலோசனைகளை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்...