Home Blog Page 253

நோபல் பரிசு விவகாரம்: நோர்வே தூதரகத்தை மூடியது வெனிசுலா!

 

உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த வருடத்திற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குக்கு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

வெனிசுலா நாட்டு அரசியல்வாதியான இவர் அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவராக உள்ளார்.தனக்கு வழங்கிய அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்புக்கும் அர்ப்பணிக்கிறேன் என நோபல் பரிசு வென்ற வெனிசுலா எதிர்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ தெரிவித்தார்.

இந்நிலையில், நோர்வேயில் உள்ள தூதரகத்தை மூடுவதாக வெனிசுலா அறிவித்துள்ளது. நோர்வே அரசின் தன்னாட்சி அமைப்பான நோபல் கமிட்டி வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினாவுக்கு பரிசு அறிவித்ததற்கு அந்நாட்டு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சஜித், ரணிலுடன் அரசியல் கூட்டு கிடையாது: மொட்டு கட்சி திட்டவட்டம்!

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றுடன் அரசியல் ரீதியிலான கூட்டு பயணம் கிடையாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஒருமித்தக்கொள்கையுடையக் கட்சிகளாகும். அந்த தரப்புகள் இணைவது பிரச்சினை இல்லை. அதனை வரவேற்கின்றோம்.
ஆனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கொள்கை தனித்துவமானது.

ஒற்றையாட்சி, தேசிய பொருளாதாரம் என்பவற்றை மையப்படுத்தியது. எனவே, மேற்படி தரப்புகளுடன் அரசியல் ரீதியில் எமக்கு கூட்டு கிடையாது. ஆனால் ஜனநாயகம் மற்றும் ஏதேச்சாதிகாரத்துக்காக எதிரணியாக ஒன்றிணைந்து செயற்படக்கூடிய இடங்களில் ஒன்றிணைவோம். மாறாக அரசியல் ரீதியில் கூட்டு கிடையாது.” – என்றார்.

முதல்வர் வேட்பாளராக களமிறங்குவாரா மரிக்கார்?

” நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கே மக்கள் எனக்கு வாக்களித்தனர். மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவது பற்றி நான் சிந்தித்துகூட பார்க்கவில்லை. எனினும், கட்சி கோரிக்கை விடுக்கும்பட்சத்தில் அதற்கு மக்களின் அனுமதி கிடைக்கப்பெற்றால் நான் தயார்.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதற்கு தயாரா என கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

கூட்டு பயணம்: ஐதேக நாளை முக்கிய முடிவு!

” இந்த அரசாங்கம் வீழ்ச்சியடைந்தால் நாட்டை பொறுப்பேற்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகவே உள்ளது.” என்று அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பவற்றின் இணைந்த பயணம் தொடர்பில்  நாளை புதன்கிழமை  சாதகமானதொரு முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பொய்யுரைக்கும் அரசியலை முடிவுக்கு கொண்டுவருவதற்கும், நாட்டுக்காக பொதுவானதொரு வேலைத்திட்டத்துடன் முன்னோக்கி செல்வதற்கும் நாட்டு மக்கள் முன்வந்துள்ளனர்.

2022 ஜுலை மாதம் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியெற்றபோது, தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு இணையுமாறு அழைப்பு விடுத்தார். இந்த திட்டத்துக்கு அப்பால் சென்று எதையும் செய்ய முடியாது.

அவ்வாறு செய்ய முடியும் எனக் கூறுவது பொய்யாகும். அவ்வாறு பொய்யுரைத்தால் மக்கள் அவர்களை வீதியில் தாக்குதல் நிலை ஏற்படும்.
ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் பற்றி புதன்கிழமை நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்களில் ஆராயப்பட்டு, சாதகமான முடிவு எடுக்கப்படும்.

ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்த பயணத்தைவிட சிறப்பான பயணத்தை இந்த அரசாங்கத்தால் முன்னெடுக்க முடியுமா? முடியாது என்பதே எனது கருத்தாகும். நாம் கொண்டுவந்த சட்டத், திட்டங்கள் மீறப்பட்டுவருகின்றன.

அப்படியானால் அரசின் வீழ்ச்சி ஆரம்பமாகின்றது. அவ்வாறான நிலை ஏற்பட்டால் நாட்டை ஐதேக பொறுப்பேற்கும். அது பற்றி குழப்பமடையத் தேவையில்லை.” – என்றார்.

தென்னாபிரிக்காவில் கோர விபத்து: 42 பேர் பலி!

தென்னாப்பிரிக்காவில் செங்குத்தான மலைப் பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த கோர விபத்தில் 42 பேர் உயிரிழந்தனர். மேலும் 49 பேர் காயமடைந்துள்ளனர்.

உள்ளுர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில், தலைநகர் பிரிட்டோரியாவுக்கு வடக்கே சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லூயிஸ் டிரைகார்ட் நகரத்திற்கு அருகிலுள்ள நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்தது.

சிம்பாப்வே நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்த பேருந்தில் சிம்பாப்வே மற்றும் மாலாவியைச் சேர்ந்த நாட்டவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர் என்று அரசு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 7 குழந்தைகள், 17 ஆண்கள் மற்றும் 18 பெண்கள் அடங்குவர் என்றும் அரசு தெரிவித்துள்ளது. காயமடைந்த 49 பேரில் ஆறு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையிலும், 31 பேர் தீவிர காயங்களுடனும் பல்வேறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிம்ஸ்டெக் அமைப்புடனான உறவை வலுப்படுத்துகிறது இலங்கை!

 

பிராந்திய செழிப்பு மற்றும் மீள்தன்மைக்காக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளின் திறனைப் பயன்படுத்திக் கொள்வதற்காக, பிம்ஸ்டெக்குடன் நெருக்கமாகப் பணியாற்ற சிறிலங்கா உறுதிபூண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பிம்ஸ்டெக் அமைப்பின் பொதுச் செயலாளர் இந்திரா மணி பாண்டேவை நேற்று வெளிவிவகார அமைச்சில் சந்தித்துப் பேசிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பிம்ஸ்டெக் கட்டமைப்பின் கீழ் நடைபெற்று வரும் முன்முயற்சிகளின் முன்னேற்றம் குறித்து இரு தரப்பினரும் ஆக்கபூர்வமான விவாதங்களை நடத்தியதாகவும், பிராந்திய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்ததாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விஞ்ஞான, தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளுக்கான முன்னணி நாடாக, சிறிலங்கா அதன் துணைத் துறைகளில், குறிப்பாக தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் மனிதவள மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது, இது முழு பிராந்தியத்தின் கூட்டு முன்னேற்றத்திற்கும் பங்களிக்கிறது என்று அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

காசா அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து!

காசா அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஆவணத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்திட்டார்.

இஸ்ரேல்-காசா இடையேயான போர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன் மொழிந்த 20 அம்சங்கள் கொண்ட ஒப்பந்தத்தால் முடிவுக்கு வந்துள்ளது. இருதரப்பிலும் போர் நிறுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்து உள்ளனர்.

டிரம்ப் அறிவித்த காசா அமைதி ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக எகிப்தில் கையெழுத்தானது. டிரம்ப் மற்றும் எகிப்து ஜனாதிபதி தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் ஐநா பொதுச் செயலாளர் குட்டரெஸ் மற்றும் 20க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள், அவர்கள் சார்பில் அனுப்பப்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

அதேவேளை, குறித்த அமைதி ஒப்பந்தம் மகத்தான சாதனை என்று ஆஸ்திரேலிய பிரதி பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் தெரிவித்தார்.

அத்துடன், அமெரிக்காக பாடுபட்ட ட்ரம்ப் நிர்வாகத்தையும் அவர் பாராட்டியுள்ளார்.
காசாவின் மீள் கட்டமைப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையை உலுக்கிய துப்பாக்கிச்சூட்டு சம்பவம்: சூத்திரதாரி கைது!

பாதாள குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவந்த குற்றவாளியான இஷாரா செல்வந்தி நேபாளத்தில கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருடன் மேலும் ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு, அளுத்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் கணேமுல்ல சஞ்ஜீவ சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

சட்டத்தரணிபோல வேடமிட்டுவந்த நபரொருவரே துப்பாக்கிச்சூடு நடத்தி இருந்தார். சம்பவ தினத்தன்றே அவர் புத்தளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

எனினும், சட்டப்புத்தகத்துக்குள் துப்பாக்கியை மறைத்து, அதனை நீதிமன்ற வளாகத்துக்கு கொண்டுவந்த இஷாரா செவ்வந்தி தலைமறைவானார். அவரை கைது செய்வதற்காக விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.

அவர் கடல் வழியாக வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றுள்ளார் என உளவு தகவல் கிடைக்கப்பெற்றது. இதன் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரமே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து சென்ற பொலிஸ் குழுவொன்று, நேபாள பொலிஸாரின் ஒத்துழைப்புடன் அவர்களை கைது செய்துள்ளது.

மரக்கறி விலைப்பட்டியல் (14.10.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (14) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

சூப்பர் ஓவரில் லக்னோவை வீழ்த்தியது கொல்கத்தா

0
ஐபிஎல் 2026 தொடரின் 38-வது லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சூப்பர் ஓவர் முறையில் த்ரில் வெற்றி பெற்றது. லக்னோ ஏகானா மைதானத்தில்...

மரக்கறி விலைப்பட்டியல் (27.04.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (27) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

“மலையக மகிழ்ச்சி”: பதுளையில் 34 புதிய வீடுகளுக்கு அடிக்கல் நாட்டு விழா!

0
"மலையக மகிழ்ச்சி" திட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தில் இரண்டு புதிய வீட்டுத் திட்டங்களுக்கு நேற்று (26) அடிக்கல் நாட்டப்பட்டது. மண்சரிவு அபாயம் மிகுந்த பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாக்கும் வகையிலேயே இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட...