Home Blog Page 258

மார்ச்சில் மாகாணசபைத் தேர்தல்!

இழுபறியில் இருந்து வரும் மாகாண சபைத் தேர்தல், அடுத்த வருடம் ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளதென செய்தி வெளியாகியுள்ளது.

அடுத்த வருடம் நடுப்பகுதியிலேயே தேர்தலை நடத்துவதற்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், அந்நிலைமை மாறியுள்ளது.

இதற்கமைய தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கின்றது.

நீண்ட காலமாக தாமதமாகி வந்த மாகாண சபைத் தேர்தலை மார்ச் மாதத்தில் நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள திடீர் முடிவின் பின்னணியில் பல காரணங்கள் உள்ளன எனக் கூறப்படுகின்றது.

அரசாங்கம் குறித்த விமர்சனங்கள் இருந்தாலும், அரசாங்கத்தை விட எதிர்க்கட்சிக்கு அதிக நற்பெயர் கிட்டவில்லை என்பது அரசாங்கத்தின் மதிப்பீடு. இது முதலாவது காரணம்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியால் முன்வைக்கப்பட்ட திட்டங்களின்படி, அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் அரசாங்கம் மிகவும் சிக்கலான, கடுமையான முடிவுகளை செயற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் என்பது இரண்டாவது காரணம்.

குறிப்பாக, அரசாங்கம் பல அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்கவும், சிலவற்றை மூடவும், அரசு செலவினங்களை வெகுவாகக் குறைக்கவும் கட்டாயப்படுத்தப்படும்.

இந்தக் கொள்கைகளைச் செயல்படுத்துவது தவிர்க்க முடியாமல் இருக்கும் என்பதுடன், மக்கள் மத்தியில் கடும் எர்ப்பையும் தூண்டும் என்று அரசாங்கம் நம்புகிறது.

எனவே, புத்தாண்டுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தி, ஏதாவது ஒரு வகையில் வெற்றியைப் பெற்று, பின்னர் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி நிலைமைகளின் கீழ் தேவைப்படும் கடுமையான பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

முதலீடுகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

 

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முதலீட்டாளர்கள் மற்றும் நாட்டிற்கு வரும் முதலீடுகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

நாட்டின் முதலீட்டு வாய்ப்புகள், வர்த்தக சூழல் மற்றும் சட்ட நிலைமைகள் குறித்து ஆய்வு செய்யும் நோக்கில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் குழுவுடன் இன்று (11) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இலங்கையில் முதலீடுகளுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், முதலீடுகள் தொடர்பாக முந்தைய அரசாங்கங்களின் கீழ் இருந்த முறைகேடுகளை மாற்றி தற்போதைய அரசாங்கம் ஜனநாயக கட்டமைப்பிற்குள் புதிய சட்டங்களை உருவாக்கி வருவதாகவும், ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அதன்படி, நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என்றும், இதற்காக, அரசாங்கம் முதலீட்டு பாதுகாப்பை உறுதி செய்யும், முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்தும் மற்றும் வசதிகளை வழங்கும் என்றும், முதலீட்டு பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இந்நாட்டு முதலீட்டு சூழலை பலப்படுத்துவதற்காக இனவாதம் மற்றும் மதவாதம் எனபவற்றை ஒதுக்கி தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புதல், செயற்திறனான அரச சேவையை உருவாக்குதல், இராஜதந்திர உறவுகளை வெளிப்படையான முறையில் பராமரித்தல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் மூலம் தொழில்நுட்ப தடைகளைத் வெற்றி கொள்ளுதல் ஆகிய நோக்கங்களை அடைய அரசாங்கம் செயல்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க , அமெரிக்க தூதுக்குழுவிடம் மேலும் தெரிவித்தார்.

Crow Holdings தலைவர் ஹார்லன் குரோ (Harlan Crow),
அமெரிக்க-இந்திய நட்புறவு மற்றும் M&A வர்த்தக தலைவர் கிருஷ்ணா பாலம், (Krishna Balam), Hudson Institute தலைவர் சாரா ஸ்டெர்ன்(Sarah Stern), Eagle Capital Management நிறுவனர் மற்றும் இணைத் தலைமை முதலீட்டு அதிகாரி ரெவெனல் பி. கரி (Ravenel B. Curry), Billingsley இணை நிறுவனர் லூசி பெல்லிங்ஸ்லி, (Lucy Bellingsly), SMU Trustee சமூகத் தலைவர் கெதரின் க்ரோ (Katherine Crow) සහ Hudson Institute உறுப்பினர் வோல்டர் ரஸ்ஸல் மீட் (Walter Russell Mead)
ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஸல் அபொன்சு ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சமஷ்டியை நாம் விட்டுக்கொடுக்கவில்லை!

“எங்கள் கட்சிக் கொள்கையான சமஷ்டி வழிக்கு வந்த கஜேந்திரகுமாருக்கு நன்றி. சமஷ்டியை நாங்கள் விட்டுக்கொடுக்கவில்லை. இலங்கைத் தமிழரசுக் கட்சியை மலினப்படுத்தி அழித்து விடலாம் என்பது பகல் கனவே.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சம்பந்தனோ, சுமந்திரனோ மாகாண சபை முறைமை நிராகரிக்கவில்லை. அதேநேரம் அது எமது தீர்வு என்றும் சொல்லவில்லை.

நான் கடந்த ஊடக சந்திப்பில் சொன்ன விடயங்களை ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகள் மறுதலிக்கவில்லை. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அதற்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றது.

கஜேந்திரகுமார் 13ஆம் திருத்தத்தையும் அரசமைப்பையும் குழப்பி ஏக்கிய ராஜ்ஜிய மற்றும் ஒற்றையாட்சி என இரண்டையும் கூறுகின்றார். அது 38 வருடங்களாகத் தோல்வியடைந்த முறை என அவர் சொல்கின்றார்.

மாகாண சபை சட்டத்தின் மூலம்தான் தற்போது உள்ள உள்ளூராட்சி சபைகள் முறைமை காணப்படுகின்றது. நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கஜேந்திரகுமாரின் கட்சியும் போட்டியிட்டது. அது ஒற்றையாட்சி இல்லை என அவர் சொல்கின்றாரா என விளங்கவில்லை.

கஜேந்திரகுமார் முடக்கம், முடக்கம் எனச் சொல்கின்றார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் எழுதி முடக்கக் கூடாது என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுகின்றார்.

எங்களைப் பொறுத்தவரையில் 1987 இற்கு முன்னர் நாடாளுமன்றக்  கட்டமைப்புக்குப் பின்னர் உள்ளூராட்சி சபை முறைமைதான் காணப்பட்டது.
1988 இற்குப் பின்னர் 13ஆம் திருத்தச் சட்டமூலம் ஒரு கட்டமைப்பாக மாகாண சபை கொண்டுவரப்பட்டது.

நாடாளுமன்றுக்கு அடுத்ததாக உப சட்டவாக்க அலுவலகமாக அது காணப்பட்டது.

13ஆம் திருத்தமும் மாகாண சபையும் எமது அரசியல் அபிலாஷைகளுக்குத்  தீர்வு அல்ல. எமது கட்சியின் நிலைப்பாடும் அதுவே.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் அறிக்கை உள்ளக விசாரணையை வலியுறுத்துவது எமக்கு ஏமாற்றமளிக்கின்றது எனக் கடிதத்தில் சொல்லியிருக்கின்றோம். இந்தக்  கடிதம் நானும் சுமந்திரனும் மட்டும் கையொப்பம் வைத்து அனுப்பிய கடிதம் அல்ல. எமது கட்சியின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பம் வைத்துள்ளனர்.

சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை அரசு நடைமுறைப்படுத்த வலியுறுத்த வேண்டும் என ஐ.நாவுக்குக் கடிதம் எழுதியுள்ளோம். பிறகு எவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சி சமஷ்டியைக் கைவிட்டு விட்டதாகக்  கூற முடியும்.?

ஏக்கிய ராஜ்ஜிய நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வரப்பபட்டால் இலங்கைத் தமிழரசுக் கட்சி எதிர்த்து வாக்களிக்கும். அதேவேளை ஏக்கிய ராஜ்ஜிய ஒற்றையாட்சியும் அல்ல சமஷ்டி ஆட்சியும் அல்ல என்பதைத்  திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கின்றோம். ஒருமித்த நாடு என்றால் ஒரு நாடா? ஒன்றுக்கு மேற்பட்டவையையே ஒருமித்த நாடு என்பார். தமிழ் அர்த்தத்தை விட்டு சிங்களத்தைப் பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

எனக்குப் போதிய அறிவு இருக்கின்றது. எனக்கு விளங்காது என கஜேந்திரகுமார் நினைப்பது பொருத்தமற்றது.

ஏக்கிய ராஜ்ஜிய பற்றி நிஹால் அபேசிங்க சுவிட்சர்லாந்தில் சொன்னதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சொல்கின்றார்.

நிஹால் அபேசிங்க உத்தியோகபூர்வமானவரா? அநுரகுமார திஸாநாயக்க, பிமல் ரத்நாயக்க சொல்ல வேண்டும். மக்களைத் திசை திருப்புகின்றனர், திசை திருப்புகின்றனர் எனச் சொல்லி காங்கிரஸே குழப்புகின்றது.

1988 நவம்பரில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலம் மாகாண சபை நடைமுறையில் உள்ளதுதானே.

அண்மையில் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என கஜேந்திரகுமாரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்டபோது, இல்லை கேட்கமாட்டோம் என அவர் சொல்லி இருக்கலாம்தானே. அங்கு நான் முதல்வர், உறுப்பினர் எனப் போட்டியிடுகின்றனர். போட்டியிடுவது பற்றி தெளிவாகச் சொல்லலாமே ஏன் மழுப்புகின்றார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது எனக்குத் தனிப்பட்ட மதிப்பு இருக்கின்றது. அதைப் பேண விரும்புகின்றேன்.

எங்கள் கட்சிக் கொள்கையான சமஷ்டி வழிக்கு வந்த கஜேந்திரகுமாருக்கு நன்றி. சமஷ்டியை நாங்கள் விட்டுக்கொடுக்கவில்லை.

இலங்கைத் தமிழரசுக் கட்சியை மலினப்படுத்தி அழித்து விடலாம் என்பது பகல் கனவே. தந்தை செல்வா போய் விட்டார். நாங்களும் போய் விடுவோம். ஆனால், தமிழரசுக் கட்சி பலமாகத் தொடர்ந்து தமிழ் மக்கள் நலனுக்குக்  குந்தகமிழைக்காத வகையில் செயற்படும். எங்களை அடிப்பதில் மினக்கெடாமல் செயற்படுங்கள்.

சமஷ்டி எங்கள் இலக்கு. சீதனம் முதுசம் எனச் சொல்ல முடியாதே. ஒன்றாகப் பயணிப்போம். தமிழரசுக் கட்சி எந்த இலக்குக்காக ஆரம்பிக்கப்பட்டதோ அந்த இலக்கில் இருந்து வழுவாமல் பயணிப்போம்.” – என்றார்.

பிரதமர் நாளை சீனா பயணம்

பிரதமர் நாளை சீனா பயணம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நாளை சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அவர், ஒக்டோபர் 12 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தின் போது, ​​பீஜிங்கில் “ஒரு பகிரப்பட்ட எதிர்காலம்: பெண்களின் முழுமையான வளர்ச்சிக்கான புதிய மற்றும் துரிதப்படுத்தப்பட்ட செயல்முறை” என்ற தலைப்பில் நடைபெறும், சீனா மற்றும் ஐ.நா. இணைந்து ஏற்பாடு செய்துள்ள பெண்கள் தொடர்பான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய உரை நிகழ்த்துவார்.

இந்தப் பயணத்தின் போது, சீன ஜனாதிபதிஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் லி கியாங் உள்ளிட்ட பல உயர் மட்ட தலைவர்களையும், பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்தித்துப் பேச்சு நடத்துவார்.

வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு நாளை!

மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு பண்டாரவளையில்

மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு நாளை (12) காலை பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெறும்.

இந்திய நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் 10,000 வீடமைப்பு திட்டத்தின் நான்காவது கட்டத்தின் 2000 பயனாளிகளுக்கு இங்கு வீட்டு உரிமைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

வசதியான வீடு, சுகாதாரமான வாழ்க்கை என்ற தொனிப்பொருளின் கீழ், இலங்கை அரசு, இந்திய அரசுடன் இணைந்து, மலையக சமூகத்தினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படும் இந்த வீட்டுத் திட்டம், மலையக சமூகத்தினருக்கு ஒரு வீட்டை வழங்குவதோடு மட்டுமல்லாமல், தாய் நாட்டிற்கு ஆற்றலை வழங்கும் “மதிப்பிற்குரிய பிரஜைகளாக” அவர்களை மாற்றுவதற்கான அடித்தளமாகவும் இருக்கும்.

அதன்படி, மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் வசிக்கும் மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும், அடிப்படை வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு உகந்த வீடுகளை வழங்குவதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த வீடுகளை வழங்குவதற்கான முறையான வழிமுறையின் மூலம் பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பது ஒரு விசேட அம்சமாகும்.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம், ஏனைய அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இந்திய அரசாங்க பிரதிநிதிகள் குழு ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.

நீலக்குறிஞ்சி மலர்களை காண வருபவர்களுக்கான அறிவித்தல்!

ஹோர்ட்டன் சமவெளி தேசிய பூங்காவில் நீலக்குறிஞ்சி பூக்கள் வசந்தத்தைக் காண வருபவர்கள், தேசிய பூங்காவின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று ஹோர்டன் சமவெளி தேசிய பூங்கா பிரதான பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சிசிர ரத்நாயக்க தெரிவித்தார்.

12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முறை நான்கு வகையான மலர்கள் ஒன்றாக மலர்ந்துள்ளதாகவும், வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் அவற்றைப் பார்க்க தேசிய பூங்காவிற்குள் அதிகளவானோர் வருகின்றனர்.

இவ்வாறு வருபவர்களில் சில குழுவினர், தேசிய பூங்காவின் விதிமுறைகளை மீறும் வகையில் செயல்படுகின்றனர். இவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
வ.கார்த்திக்

கொள்கலன் விவகாரத்துக்கும் அமைச்சரவை மாற்றத்துக்கும் தொடர்பில்லை!

 

கொழும்பு துறைமுகத்தில் இருந்து கொள்கலன்களை சோதனையின்றி விடுவிக்கப்பட்ட விவகாரத்தை அடுத்தே அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் இருந்து துறைமுகங்கள், விமான நிலையங்கள் அமைச்சு பறிக்கப்பட்டதாக கூறப்படுவதை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

அரசாங்கம் தனது இலக்குகளை விரைவாக அடையும் வகையில், மிகவும் பொருத்தமான மற்றும் அறிவியல் முறையில் அமைச்சுக்களை மறுசீரமைப்பதே அமைச்சரவை மறுசீரமைப்பின் நோக்கம் என்று தொழிலாளர் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் துணை அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொள்கலன்கள் விவகாரம் காரணமாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க துறைமுகங்கள் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டாரா என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அவர் “அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவ்வாறு நீக்கப்படவில்லை, ஆனால் சரியான நேரத்தில் அவருக்கு இன்னும் பெரிய பொறுப்பு கிடைக்கும்.

இது விரைவில் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

ராமாயணக் காட்சிகளை வானில் காட்ட 1,100 டிரோன்கள்!

 

உத்தர பிரதேசத்​தில் பாஜக ஆட்சி அமைந்​தது முதல் ஒவ்​வொரு தீபாவளி பண்​டிகைக்​கும் அயோத்​தி​யில் லட்​சக் கணக்​கில் அகல் விளக்​கு​கள் ஏற்​றப்​படு​கின்​றன. இது உலக சாதனை​யாகப் பதி​வாகி வரு​கிறது.

அந்த வகை​யில், தீபாவளி பண்​டிகையை முன்​னிட்டு எதிர்வரும் 19-ம் திகதி 9-வது தீப உற்​சவம் நடை​பெற உள்​ளது. இவ்​விழாவை உத்தர பிரதேச அரசு சார்​பில் அயோத்​தி​யின் ராம் மனோகர் லோகியா அவத் பல்​கலைக்கழகம் நடத்​துகிறது.

இதில், 29 லட்​சம் அகல் விளக்​கு​கள் ஏற்ற திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதன்​முலம் கடந்த ஆண்​டின் சாதனை முறியடிக்​கப்பட உள்​ளது.

இவ்​விளக்​கு​கள் சரயு நதி​யின் 56 கரைகள், ராம் கீ பேடி, நகரின் இதரக் கோயில்​கள் மற்​றும் குடி​யிருப்​பு​களில் ஒளிர உள்​ளன.

மேலும் 1,100 டிரோன்​கள் வானில் தீபாவளிக்​காக பறக்​க​விடப்பட உள்​ளன. இவற்​றில் ராமாயணத்​தின் காட்​சிகள் ஒளிப்​படங்​களாக சித்​தரிக்​கப்பட உள்​ளன.

இதுகுறித்து மாநில சுற்​றுலா மற்​றும் கலாச்​சா​ரத் துறை அமைச்​சர் ஜெய்​வீர் சிங் கருத்து வெளியிடுகையில் “அயோத்​தி​யின் வெறும் தீபாவளி திரு​நாள் விழா​வாக அன்றி ஆன்​மிகம், நம்​பிக்​கை, கலாச்​சா​ரம் உள்​ளிட்​ட​வற்​றின் மெகா விழா​வாக கொண்​டாடப்பட உள்​ளது.

இந்த வருட​மும் தீபாவளிக்கு வரும் வெளி​நாட்​ட​வர்​கள் இடையே இது சர்​வ​தேச அளவில் இந்​தி​யா​வின் கலாச்​சா​ரத்தை வெளிப்​படுத்​தும். இதைக் காண வரும் லட்​சக்​கணக்​காக பொது​மக்​களுக்​காக அயோத்​தி​யில் சிறப்பு போக்​கு​வரத்​துடன் பாது​காப்​பு​களும் பலப்​படுத்த உள்​ளன” என்று குறிப்பிட்டார்.

சீனாமீது மீண்டும் வர்த்தக்போர் தொடுப்பு!

 

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 100 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று அறிவித்துள்ளார்.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் மேலும் உக்கிரமடைந்துள்ளது.
இரு நாட்டு தலைவர்களுக்கிடையிலான நேரடி சந்திப்பும் இரத்தாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

குறிப்பாக, தங்கள் நாட்டின் பொருட்கள் மீது அதிக வரி விதிக்கும் நாடுகள் மீது பரஸ்பரம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, சீனாவில் இருந்து இறக்குமதி பொருட்கள் மீது 145 சதவீத வரியை உயர்த்தினார்.

இதற்கு பதிலடி கொடுத்த சீனா, அமெரிக்க பொருட்கள் மீது 125 சதவீத வரியை உயர்த்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப்போர் மூண்டது.

அதேவேளை, வர்த்தகப்போரை முடிவுக்குக் கொண்டுவர இரு நாடுகளும் சுவிட்சர்லாந்தில் பேச்சு நடத்தின. பேச்சு முடிவில் சீன பொருட்கள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரியை 90 நாட்களுக்கு நிறுத்துவதாக கடந்த மே மாதம் 10ம் திகதி அமெரிக்கா அறிவித்தது. இதனை தொடர்ந்து அமெரிக்க பொருட்கள் மீதான வரியை சீனா குறைத்தது.

அதன்படி, சீன பொருட்கள் மீதான வரியை 145 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது. அதேபோல், அமெரிக்க பொருட்கள் மீதான வரியை 125 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக சீனா குறைத்தது.

அதேவேளை, கூடுதல் வரிவிதிப்பு நிறுத்தத்திற்கான 90 நாட்கள் அவகாசம் கடந்த ஆகஸ்ட் 10ம் திகதி நிறைவடைந்ததையடுத்து கால அவகாசம் கூடுதலாக 90 நாட்களவரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 100 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று அறிவித்துள்ளார்.

இந்த கூடுதல் வரி விதிப்பு நவம்பர் 1ம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஏற்கனவே 30 சதவீத வரி உள்ள நிலையில் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் வரி 130 சதவீதமாக அதிகரிக்க உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வரும் 30ம் திகதி சந்திக்க இருந்தனர். தென்கொரியாவில் நடைபெறும் எபிஇசி கூட்டத்தில் பங்கேற்க உள்ள இரு தலைவர்களும் நேருக்கு நேர் சந்தித்து பேச இருந்தனர்.

ஆனால், சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி அறிவித்துள்ள டிரம்ப் இம்மாத இறுதியில் சீனா அதிபரை சந்திக்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். அதேவேளை, சீன பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்ட நிலையில் அமெரிக்க பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

மரக்கறி விலைப்பட்டியல் (11.10.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (11) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

இரத்தினபுரி இளைஞர்களின் ஜனநாயக எழுச்சிக்கு வேலுகுமார் முழு ஆதரவு!

0
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் கூலிப்படைகளைக் கொண்டு நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான வன்முறைச் சம்பவத்தை, கண்டி மாவட்ட காணி உரிமைக்கான இயக்கத்தின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் வன்மையாகக் கண்டித்துள்ளார். அநீதிகளுக்கு எதிராக இரத்தினபுரி...

ஏணியிலிருந்து தவறி வீழ்ந்த மூதாட்டி உயிரிழப்பு! மாத்தளையில் துயரம்!!

0
மாத்தளை, லக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரணமுரேகம பகுதியில் ஏணியிலிருந்து தவறி வீழ்ந்த பெண் ஒருவர், சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். 63 வயதுடைய பெண்ணே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். இவர் ரணமுரேகம பகுதியில் தங்கியிருந்த...