Home Blog Page 259

மரக்கறி விலைப்பட்டியல் (11.10.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (11) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

நோபல் பரிசு ட்ரம்புக்கு அர்ப்பணிப்பு: மரியா கொரினா அறிவிப்பு!

 

அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர போராடிய மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனக்கு கிடைத்த நோபல் பரிசை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு அர்ப்பணிப்பதாக எக்ஸ் சமூக வலைதள பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

“ வெனிசுலா மக்களின் போராட்டத்துக்கு கிடைத்த இந்த அங்கீகாரம், நிச்சயம் நமது இலக்கை அடைவதற்கான ஊக்கத்தை அளிக்கும் என நம்புகிறேன். இப்போது நாம் ஜனநாயகம் எனும் சுதந்திரத்தை எட்டும் நிலையை அடைந்துள்ளோம். இதில் நமக்கு ஆதரவு தந்த ஜனாதிபதி ட்ரம்ப், அமெரிக்க மக்கள் மற்றும் உலகத்தின் அத்தனை ஜனநாயக நாடுகள் உள்ளன. இந்த விருதை வெனிசுலாவில் துயரத்தில் உள்ள மக்களுக்கும், நமது நோக்கத்துக்கு நிலையான ஆதரவு அளித்த ஜனாதிபதி ட்ரம்ப்புக்கும் அர்ப்பணிக்கிறேன்” என்று மரியா கொரினா மச்சாடோ தெரிவித்துள்ளார்.

மரியா கொரினா மச்சாடோ, கடந்த 14 மாதங்களாக தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். அவரது உயிருக்கு ஆபத்து இருந்தாலும் கூட அவர் வெனிசுலாவை விட்டு வெளியேறவில்லை. இது அந்நாட்டு மக்கள் மத்தியில் அவருக்குப் பெரும் அபிமானத்தைப் பெற்றுத் தந்தது. மரியா, வெனிசுலாவின் ராணுவ ஆட்சி அகற்றப்பட்ட வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டினார். அங்கே ஜனநாயகம் அமைதி வழியில் மலர அவர் வித்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு வழங்க வேண்டும், அதற்கு எல்லாத் தகுதியையும் பெற்றுவிட்டேன் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில், இந்த ஆண்டு மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பு இணைவு சிறப்பான பயணமாக அமையும்!

தமது கட்சி தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு கட்சியின் முகாமைத்துவக்குழு மற்றும் செயற்குழு என்பன அனுமதி வழங்கியுள்ளன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” வரலாற்று முக்கியத்துவமிக்க இந்த முடிவை கட்சியின் மத்திய குழு இம்முறையே முதன்முறையாக எடுத்துள்ளது. அதற்கமைய இரு தரப்புகளுக்கு சிறப்பான பயணத்தை மேற்கொள்ள முடியும்.
எம்மிடையே பிளவுகள் இல்லை.

அதனால்தான் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அநீதி இழைக்கப்பட்டபோது அதற்கு எதிராக ஒன்றாக எழுந்து நின்றோம். ரணில் விக்கிரமசிங்க என்பவர் எமது சிரேஷ்ட தலைவர். தலைமைத்துவம் தொடர்பில் இங்கு பிரச்சினை இல்லை. இப்பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்படும். இரு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் கட்சிகளின் ஆதரவாளர்கள் இதற்கு ஆதரவளிப்பார்கள்.” – என்றார்.

ட்ரம்புக்கு ஏமாற்றம்: அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர தொடர்ந்து போராடிய, வெனிசுலாவின் ‘இரும்புப் பெண்மணி’ என்று அழைக்கப்படும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு வழங்க வேண்டும், அதற்கு எல்லாத் தகுதியையும் பெற்றுவிட்டேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிவந்த நிலையில், அவருக்கு அந்தப் பரிசு கிடைக்கவிலை.

“2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, வெனிசுலா மக்களுக்கு ஜனநாயக உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காக அயராது போராடி, நாட்டில் சர்வாதிகாரத்தில் இருந்து ஜனநாயகம் மலர குரல் கொடுத்து வரும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்படுகிறது.” என ஸ்வீடிஷ் அகாடமி தெரிவித்துள்ளது. விருது அறிவிப்பை தி நார்வேஜியன் நோபல் கமிட்டியின் தலைவர் ஜோர்கன் வாட்னே ஃப்ரிட்நெஸ் அறிவித்தார்.

யார் இந்த மரியா கொரினா? – மரியா கொரினா மச்சாடோ, கடந்த 14 மாதங்களாக தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். அவரது உயிருக்கு ஆபத்து இருந்தாலும் கூட அவர் வெனிசுலாவை விட்டு வெளியேறவில்லை. இது அந்நாட்டு மக்கள் மத்தியில் அவருக்குப் பெரும் அபிமானத்தைப் பெற்றுத் தந்தது. மரியா, வெனிசுலாவின் ராணுவ ஆட்சி அகற்றப்பட்ட வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டினார். அங்கே ஜனநாயகம் அமைதி வழியில் மலர அவர் வித்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பான் நாட்டின் நிஹோன் ஹிதான்கியோ என்ற அமைப்புக்கு வழங்கப்பட்டது. அந்த அமைப்பு ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அண்குண்டு வீச்சில் தப்பியவர்களுக்காக செயல்படும் இயக்கமாகும்.

இந்நிலையில் இந்த ஆண்டு நோபல் அமைதிப் பரிசுக்காக, 338 விண்ணப்பங்கள் வந்தன. அவற்றில் 244 தனிநபர்கள் சார்ந்தது, 94 நிறுவனங்கள் சார்ந்தது. ஜனவரி 31 தான் நோபல் அமைதி விருதுக்கான விண்ணப்பங்கள், பரிந்துரைகளைப் பெற கடைசி நாள். நோபல் அமைதி பரிசுக்கானவர்களை தேர்வு செய்யும் நார்வேஜியன் நோபல் கமிட்டியும் யாரேனையும் பரிந்துரை செய்யலாம். ஆனால், அவர்கள் பிப்ரவரிக்குள் அந்தப் பரிந்துரையை செய்ய வேண்டும்.

மருத்​து​வம், இயற்​பியல், வேதி​யியல், இலக்​கி​யம், அமை​தி, பொருளா​தா​ரம் ஆகிய துறை​களில் சாதனை படைப்​போருக்கு ஆண்​டு​தோறும் நோபல் பரிசு வழங்​கப்​படு​கிறது. அமைதிக்கான நோபல் பரிசு இன்று (அக்.10) அறிவிக்கப்பட்ட நிலையில், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அக்.13-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

டிசம்பர் 10-ல் விருது விழா.. இவ்விருது அறிவிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தங்க பதக்கம், பட்டயம், ரொக்கப் பரிசு 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் (தோராயமாக இந்திய மதிப்பில் ரூ.1.03 கோடி) உள்ளிட்டவை ஆல்பிரட் நோபல் நினைவு நாளான டிசம்பர் 10-ல் வழங்கப்படும்.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு விரைவில் ஸ்தாபிப்பு!

” உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்குரிய சட்டமூலம் வெகு விரைவில் நிறைவேற்றப்படும். குறித்த ஆணைக்குழுவின் பணியும் விரைவில் ஆரம்பமாகும்.” – என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” 2009 இல் போர் முடிவடைந்து ஒரு வாரம் சென்ற பின்னர் உண்மை மற்றும் நல்லிணக்கு ஆணைக்குழுவை அமைக்குமாறு ஜே.வி.பியினராகிய நாம் பரிந்துரை முன்வைத்தோம். இதற்கமைய ஆணைக்குழு அமைத்து, அவற்றின் பரிந்துரைகளை அமுலாக்கி இருந்தால் ஜெனிவா தீர்மானம் என ஒன்று வந்திருக்காது. இன்று அது பற்றி கதைக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டிருக்காது.

எனவே, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆணைக்குழுவின் பணியை முன்னெடுப்பதற்கு இடமளிக்கப்படும்.அதேபோல சுயாதீன வழக்கறிஞர் அலுவலகமொன்றும் ஸ்தாபிக்கப்படும்.

போரை முடிவுக்கு கொண்டுவந்த படையினர் மற்றும் வேறு எந்தவொரு இன குழுமத்தையும் இலக்கு வைத்து நாம் இதற்குரிய நடவடிக்கையை முன்னெடுக்கவில்லை என்பதை தெளிவாக கூறி வைக்க விரும்புகின்றோம். நல்லிணக்கம், மனித உரிமை பாதுகாப்பு, மீள்நிகழாமை போன்ற சூழ்நிலையை உருவாக்குவது எமது பொறுப்பாகும்.

அதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டம் வெகுவிரைவில் நீக்கப்படும். சர்வதேச நியமனங்கள் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் பயங்கரவாதத்தக்கு எதிரான புதிய சட்டம் வரும். நிகழ்நிலை காப்பு சட்டமும் மறுசீரமைக்கப்படும்.” – என்றார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: விசாரணைகளை சீர்குலைக்க சூழ்ச்சி!

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை சீர்குலைப்பதற்கு முற்படும் நபர்களுக்கு அதற்குரிய வாய்ப்பை வழங்கிவிடக்கூடாது என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று தயாசிறி ஜயசேகர எம்.பி. சுட்டிக்காட்டிய விடயத்துக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” இந்த கருத்து சம்பந்தமாக விசாரணை நடக்கின்றது. அதற்கமைய தெரிவுக்குழுவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கே பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன பதில்களை வழங்கினார். மாறாக அவர் தாமாக முன்வந்து கருத்துகளை வெளிப்படுத்தவில்லை.
இது ஊடகங்களுக்க வெளிப்படுத்திய தகவல் அல்ல.இது விசாரணையின் ஓர் அங்கம். எனவே, தகவல்களை வெளிப்படுத்துமாறு நாடாளுமன்றத்தால்கூட கட்டளையிட முடியாது என நினைக்கின்றேன்.

எனவே, விசாரணைய சீர்குலைப்பதற்கு முற்படும் தரப்புகளுக்கு இடமளிக்க வேண்டாம்.” எனவும் நீதி அமைச்சர் சபையில் வலியுறுத்தினார்.

அதேவேளை, உயர்பதவிகள் தொடர்பான தெரிவுக்குழுவுக்கு அதிகாரிகள் பொறுப்புடன்தான் அழைக்கப்படுகின்றனர். தெரிவுக்குழுமீது நம்பிக்கை வைத்தே அவர்கள் கருத்துகளை வெளியிடுகின்றனர். அந்த கருத்துகளை உறுப்பினர்கள் டுவிட் செய்வது தவறு. அவர்களுக்கு எதிராகவே விசாரணை நடத்தப்பட வேண்டும்.” என்று அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டார்.

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை வாபஸ்!

 

தெற்கு பிலிப்பைன்ஸின் மின்தனோவோவில் இன்று 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, ‘அழிவுகரமான சுனாமி’ எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தச் சூழலில், தற்போது பிலிப்பைன்ஸ், பலாவ் மற்றும் இந்தோனேசியாவுக்கான சுனாமி எச்சரிக்கையை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் நீக்கியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் இனி சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸின் மின்தனோவோ பகுதியில் 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் நிலநடுக்கவியல் நிறுவனம் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கம் 20 கிமீ (12 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதால், அருகிலுள்ள கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை மற்றும் விரைவான வெளியேற்ற ஆலோசனை வெளியிடப்பட்டது.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் மையப்பகுதியிலிருந்து 300 கிமீ தொலைவில் “உயிருக்கு ஆபத்தான அலைகள்” உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பிவோல்க்ஸ் நிறுவனம் கூறியது.

இதன் பின்னர் இந்தோனேசியா மற்றும் பலாவ்வின் சில பகுதிகளுக்கும் சுனாமி அச்சுறுத்தல் நீட்டிக்கப்பட்டது.

இந்தோனேசியா வடக்கு சுலவேசி மற்றும் பப்புவாவிற்கு எச்சரிக்கை விடுத்தது.

அலைகள் குறைந்த உயரத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தது.

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கவியல் நிறுவனம் நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள கடலோர நகரங்களில் வசிப்பவர்கள் உடனடியாக உயரமான பகுதிகளுக்குச் செல்லுமாறு கடுமையாக அறிவுறுத்தியது.

“கடலோர நகரங்களில் உள்ள மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற வேண்டும்” என்றும் அந்த நிறுவனம் தெரிவித்தது. இந்த சூழலில், தற்போது பிலிப்பைன்ஸ், பலாவ் மற்றும் இந்தோனேசியாவிற்கான சுனாமி எச்சரிக்கையை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் நீக்கியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் இனி சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசிய கடற்கரைகளில் சிறிய அலைகள் பதிவாகின. அதிகபட்சமாக இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசியில் அலைகள் 17 செ.மீ (6.7 அங்குலம்) உயரத்தை எட்டியது. சுனாமிக்கான பெரிய அச்சுறுத்தல் கடந்துவிட்டாலும், சிறிய அளவிலான கடல் கொந்தளிப்புகள் தொடரக்கூடும் என பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

இறம்பொடையில் குளவிக்கொட்டு: ஐவர் பாதிப்பு!

 

இறம்பொடை, வெதமுல்ல தோட்டத்தில் ஐவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இன்று முற்பகல்வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த ஐந்து ஆண் தொழிலாளர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். அவர்கள் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கௌசல்யா.

என்பிபி ஆட்சிமீது தமிழர் வைத்துள்ள நம்பிக்கை காக்கப்படும்!

 

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் நிச்சயம் மாற்றம் வருமென தமிழ் மக்கள் உறுதியாக நம்புகின்றனர். அந்த நம்பிக்கைக்கு ஒருபோதும் துரோகம் இழைக்கமாட்டோம் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

” இந்நாட்டில் கடந்த 76 வருடகால அரசியலானது மேட்டுக்குடிகள், தனவந்தர்களுக்கு மட்டுமே சொந்தமான அரசியலாக இருந்துவந்தது. இவர்களின் தாளத்துக்கேற்பவே அரசியல்வாதிகள் ஆட்டம் போட்டனர்: ஆட்டுவிக்கப்பட்டனர். இந்நிலைமைய நாம் மாற்றியமைத்துள்ளோம். மேட்டுக்குடிகள் மற்றும் உயர் வர்க்கம் வசமிருந்த அரசியல் சாதாரண மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

எனவே, மக்களை மதிக்கின்ற, மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுகின்ற, உறுதிமொழிகளுக்கு செயல் வடிவம் கொடுக்கின்ற அரசாங்கமாகவே தேசிய மக்கள் சக்தி திகழ்கின்றது. ஆகவே இந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு மக்கள் முன்வரமாட்டார்கள். மாறாக அரசாங்கத்தின் பின்னால் அணிதிரண்டு அதன் பயணத்தை வலுப்படுத்திவருகின்றனர்.” எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இற்றைக்கு ஒரு வருடத்தக்கு முன்னர் இந்நாடு எந்நிலையில் இருந்தது. பல சவால்களுக்கு மத்தியில் நாட்டை மீட்டுள்ளோம். பொருளாதாரத்தை வளப்படுத்திவருகின்றோம். வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் சுதந்திரமாக நாடு திரும்புவதற்குரிய சூழ்நிலை நிலவுகின்றது.

இனவாத மற்றும் மதவாத அரசியலுக்கும் முடிவுகட்டப்பட்டுள்ளது. எனவே கடந்த ஒரு வருடத்தில் நாம் கடந்து வந்த பாதை மகிழ்ச்சியளிக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

சர்வதேச விளையாட்டு மைதானம்கூட நிர்மாணிக்கப்பட்டுவருகின்றது. படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட்டுவருகின்றன. வடக்கு மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பட்டுள்ளது. அங்குள்ள மக்களின் வாழ்க்கை மேம்பட்டுவருகின்றது.” எனவும் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் மேலும் குறிப்பிட்டார்.

 

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

செம்மணி மனிதப் புதைகுழி: 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்!

0
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இன்று காலை 9 மணியளவில் குறித்த வழக்கு விசாரணைக்கு...

இரத்தினபுரி இளைஞர்களின் ஜனநாயக எழுச்சிக்கு வேலுகுமார் முழு ஆதரவு!

0
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் கூலிப்படைகளைக் கொண்டு நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான வன்முறைச் சம்பவத்தை, கண்டி மாவட்ட காணி உரிமைக்கான இயக்கத்தின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் வன்மையாகக் கண்டித்துள்ளார். அநீதிகளுக்கு எதிராக இரத்தினபுரி...

ஏணியிலிருந்து தவறி வீழ்ந்த மூதாட்டி உயிரிழப்பு! மாத்தளையில் துயரம்!!

0
மாத்தளை, லக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரணமுரேகம பகுதியில் ஏணியிலிருந்து தவறி வீழ்ந்த பெண் ஒருவர், சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். 63 வயதுடைய பெண்ணே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். இவர் ரணமுரேகம பகுதியில் தங்கியிருந்த...