Home Blog Page 257

அடை மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

 

நானுஓயா பகுதியில் இன்று பெய்துவரும் அடை மழையால் நானுஒயா கிரிமெட்டிய பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் உட் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு பாதிக்கப்பட்டுள்ளது.

நானுஓயா கிரிமெட்டிய பகுதியில் அடிக்கடி மழை பெய்யும் போது இவ்வாறு வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுவதால் மக்கள் பெரும் அசௌகரிய நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளனர்.

இந்த விடயம் சம்பந்தமாக கடந்த காலங்களிலும் அதிகாரிகளுக்கு தெரிவித்த போதும் இதுவரை காலமும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு நுவரெலியா பிரதேசத்தை பொறுத்தவரையில் அடிக்கடி மழை பெய்யக்கூடிய ஒரு இடமாகும்.இருப்பினும் ஒவ்வொரு தடவையும் மழை பெய்யும் போது வெள்ளநீர் வீடுகள் உட்பகுதியில் மக்களின் உடைமைகளும் நாசமாகின்றது.

இதற்கு தீர்வு தான் என்ன என மக்கள் தமது விமர்சனத்தை தெரிவிக்கின்றனர்.

வ. கார்த்திக்

அரசின் சம்பள சூத்திரம் என்ன?

 

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி இன்று விடுத்த அறிவிப்பு சம்பந்தமாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் எக்ஸ் தள பதிவு வருமாறு,

” இன்று, அடிப்படை சம்பளம் ரூ. 1,350 ஆகும். கேள்வி இதுதான்: அரசு அடிப்படை சம்பளத்தை உயர்த்த உள்ளதா, அல்லது பிற மேலதிக கொடுப்பனவுகள் மூலம் ரூ. 1,750 வருகிறதா?

ஜனாதிபதியை முதலில் மூன்று அரச பெருந்தோட்ட நிறுவன தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்தி விட்டு,  பின்னர் தனியார் கம்பனிகளுடன் பேச வேண்டும்.

அடிப்படை சம்பளம் மட்டுமே EPF பங்களிப்புக்கு உட்பட்டது.  கொடுப்பனவுகள் அல்ல.

கம்பனிகளின் நிலையான நிலைப்பாடு எப்போதும் உறுதியானது. தொழிலாளரின் அதிக  கொழுந்து பறித்தால், கூடுதல் சம்பளம் வழங்க தயார். இது தான் அவர்களின் சூத்திரம். “அதிக கொழுந்து, அதிக சம்பளம்”. ஜனாதிபதியின் சூத்திரமும் இதுவென்றால்,  இதில் புதியதொன்றும் இல்லை.

தொழிலாளர்கள் அதிக கொழுந்து  பறிக்க முடியாததற்கு காரணம் என்ன?  ஏனெனில் தோட்டங்கள் பல தசாப்தங்களாக பராமரிக்க படவில்லை. ஆகவே, கொழுந்து குறைந்துள்ளது.

தமுகூவின் நிலைப்பாடு, ஐ.ம.கூட்டணியுடனான எமது உடன்படிக்கையின்படி, தொழிலாளர்கள் பங்குதாரர்களாக மாற  வேண்டும். இதை சிறு தோட்ட  கூட்டுறவுகள் மூலம் இதை  சாத்தியமாகும்.

இதில் அரசு, தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியோருக்கிடையில் கூட்டு ஒப்பந்தம் உருவாக வேண்டும். இதுதான் நிரந்தர தீர்வு.”

என்.பி.பி. அரசின் ஏமாற்று வித்தை அம்பலம்! ரூ. 1,750 போதாது!

 

மலையக மக்கள் காணி உரிமையே கோரி வருகின்றனர். இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்று ஏதேவொரு பத்திரத்தை வழங்கியுள்ளது. இது மலையக மக்களை முட்டாளாக்கி ஏமாற்றுகின்ற செயலாகும் என்று இதொகாவின் பிரதித் தலைவர் கணபதி கணகராஜ் தெரிவித்தார்.

இதொகா தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தோட்டத் தொழிலாளர்களுக்கு வீட்டுரிமை வழங்கப்படுகின்றது என பண்டாரவளையில் நிகழ்வொன்று நடத்தப்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரிமை என்பதே எமது கோஷமாக இருந்து வந்தது. கடந்த காலங்களில் அதற்காக செயற்பட்டுள்ளோம்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியில் அமைச்சரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. செல்லுபடியான காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக 4 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டது.

ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்று ஏதேவொரு பத்திரத்தை வழங்கியுள்ளது. இது மலையக மக்களை முட்டாளாக்கி ஏமாற்றுகின்ற செயலாகும்.
அதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாவுக்கு மேற்பட்ட சம்பளமே வேண்டும் என ஜே.வி.பியின் தொழிற்சங்கம் வலியுறுத்தி வந்தது. தற்போது 1, 750 ரூபா எனக் கூறப்படுகின்றது. இது ஏற்புடைய தொகை அல்ல. இதைவிட அதிக சம்பளமே எமது மக்களுக்கு வேண்டும்.” -என்றார்.

 

வருட இறுதிக்குள் சம்பள உயர்வு: மலையக மக்களுக்கும் சம உரிமை!

( ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பண்டாரவளையில் இன்று ஆற்றிய உரையின் ஒரு பகுதி வருமாறு) 

🛑 வருட இறுதிக்குள் சம்பள உயர்வு :

🛑 மலையக மக்களும் சம உரிமையுடைய பிரஜைகள்!

🛑 மலையக மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்குரிய வழிவகைகள் மற்றும் அவர்களுக்கு நிம்மதியானதொரு வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுக்கும் பாரிய கடப்பாடு அரசாங்கத்தக்கு உள்ளது.

🛑 ஒரு அங்குலேமேனும் காணி உரிமை அற்றவர்களாக வாழ்ந்துவருகின்றனர். அவர்களுக்கு காணி உரிமை, வீட்டு உரிமை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இதற்குரிய வேலைத்திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும்.

🛑 பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்கப்பட வேண்டும். 1,750 ரூபா நாளாந்த சம்பளம் வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுவருகின்றது.

🛑 இவ்வருடத்துக்குள் இந்த சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

🛑 தோட்டங்களை சூழ உள்ள வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்பது குறித்தும், சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவது சம்பந்தமாகவும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
மக்களுக்குரிய சுகாதாரம் அரசாங்கத்தின் பொறுப்பு. அதனை கம்பனிகளிடம் வழங்க தயாரில்லை.

🛑 மலையக மக்களுக்குரிய சமூக அந்தஸ்த்து, கலாசார உரிமை, அவர்களுக்குரிய அடையாளம் என்பன காக்கப்படும். அனைத்து இன மக்களுக்கும் இது பொருந்தும்.

🛑 மலையக மக்கள் இந்நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்ந்தனர். இறந்த பின்பும் இம்மண்ணுக்கு உரமாகினர். அவர்கள் இரண்டாம் தர பிரஜைகள் அல்லர். அவர்களுக்கு சம உரிமை உள்ளது.

🛑 பாரம்பரிய அரசியல் முகாம்களை நிராகரித்து, புதிய நம்பிக்கையுடன்தான் தேசிய மக்கள் சக்திக்கு மலைய மக்கள் வாக்களித்தனர். மக்கள் மத்தியில் இருந்து மலையக பிரதிநிதிகள் நாடாளுமன்றம் வந்தனர். இது இலங்கை அரசியலில் மிக முக்கிய மாற்றமாகும். எங்கள்மீது வைத்த நம்பிக்கையே இது. அந்த நம்பிக்கையை நாம் காப்பாற்றுவோம். அதற்கு எதிராக செயற்படமாட்டோம்.

ஆர்.சனத்

காணி உரிமை வழங்கப்படும்: சம்பள உயர்வும் உறுதி!

🛑 இந்திய வீட்டுத் திட்டத்துடன், மலையக மக்களுக்கும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் காணி உரிமை பெற்றுக்கொடுக்கப்படும்.

🛑 பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வும் உறுதி.

🛑 மக்களுக்கு இழைத்த துரோகம் போதும், எமது நிற்பயணத்தை குழப்ப முற்பட வேண்டாம் என எம்மை விமர்சிப்போருக்கு கூறிக்கொள்கின்றோம்.

🛑 நானும் தோட்டத்தில் பிறந்தவன், லயத்தில் வாழ்ந்தவன். எங்களுக்கான விடிவை ஜனாதிபதி தோழர் அநுரகுமார திஸாநாயக்க பெற்றுக்கொடுப்பார்.

பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

இவ்வாறு பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், பண்டாரவளையில் இன்று நடைபெற்ற காணி உரித்துக்கான ஆவணம் கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

போர் நிறுத்தத்தை கண்காணிக்க காசாவில் அமெரிக்க படை முகாம்!

 

அமெரிக்​கா, எகிப்​து, கத்​தார், துருக்​கி மற்றும் ஐக்​கிய அரபு அமீரகம் ஆகிய நாடு​களை சேர்ந்த இராணுவ அதி​காரி​கள், வீரர்​கள் காசா​வில் முகாமிட்டு போர் நிறுத்​தத்தை கண்​காணிக்க உள்​ளனர்.

கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் முதல் இஸ்​ரேல் இராணுவம், காசா​வின் ஹமாஸ் குழு​வினர் இடையே போர் நடை​பெற்று வந்​தது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்​பின் முயற்​சி​யால் இருதரப்​பினர் இடையே எகிப்​தில் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது.

கடந்த 9-ம் திகதி இரு தரப்பு இடையே போர் நிறுத்த ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. இஸ்​ரேல் அமைச்​சரவை ஒப்​புதல் அளித்த பிறகு கடந்த 10-ம் திகதி காசா​வில் போர் நிறுத்​தம் அமுலுக்கு வந்​தது. அமைதி ஒப்​பந்​தத்​தின்​படி ஹமாஸ் பிடி​யில் உள்ள இஸ்​ரேலிய பிணைக்கை​தி​கள் 72 மணி நேரத்​தில் விடுக்​கப்பட வேண்​டும்.

இந்த சூழலில் அமெரிக்​கா, எகிப்​து, கத்​தார், துருக்​கி, ஐக்​கிய அரபு அமீரகம் ஆகிய நாடு​களை சேர்ந்த ராணுவ அதி​காரி​கள், வீரர்​கள் காசா​வில் முகாமிட்டு போர் நிறுத்​தத்தை கண்​காணிக்க உள்​ளனர்.

இதன்​படி அமெரிக்​கா​வின் சார்​பில் 200 வீரர்​கள் காசாவுக்கு அனுப்​பப்பட உள்​ளனர். அமெரிக்க ராணுவத்​தின் முதல் குழு நேற்று இஸ்​ரேலின் டெல் அவிவ் நகருக்கு வந்​தது.

அங்​கிருந்து அவர்​கள் காசா எல்​லைப் பகு​திக்கு சென்​றனர். இந்த வார இறு​திக்​குள் 200 அமெரிக்க வீரர்​கள் இஸ்​ரேலுக்கு வரு​வார்​கள் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. அவர்​கள் காசா​வில் முகாமிட்டு போர் நிறுத்​தத்தை முழு​மை​யாக கண்​காணிக்க உள்​ளனர்.

மரக்கறி விலைப்பட்டியல் (12.10.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (12) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

எம்.பி. பதவி துறப்பு: முதல்வர் வேட்பாளராக களமிறங்கும் முக்கிய புள்ளிகள்!

 

ஐக்கிய மக்கள் சக்தியின் நான்கு இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர், மாகாண சபைத் தேர்தல்களில் களமிறங்குவதற்கு திட்டமிட்டுள்ளனர் என தெரியவருகின்றது.

இதற்காக அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகி மாகாண சபை முதல்வர் வேட்பாளராக களமிறங்க திட்டமிட்டுள்ளனர். இது பற்றி கட்சி தலைவருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர் என அறியமுடிகின்றது.

மாகாண முதலமைச்சர்களாக இருந்தால் தமது பகுதி மக்களுக்கான சேவைகளை ஆற்றுவதற்கான வாய்ப்புக் கிடைக்கும் என அவர்கள் நம்புகின்றனர்.

அரசாங்கம்மீது மக்கள் மத்தியில் அதிருப்தி இருப்பதால் மாகாணசபைத் தேர்தலில் எதிரணியால் வெல்ல முடியும் என அவர்கள் கருதுகின்றனர்.

எம்.பிக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு கட்சி தலைவர் இன்னும் இறுதி முடிவை, அவர்களுக்கு தெரியப்படுத்தவில்லை.

மார்ச்சில் மாகாணசபைத் தேர்தல்!

இழுபறியில் இருந்து வரும் மாகாண சபைத் தேர்தல், அடுத்த வருடம் ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளதென செய்தி வெளியாகியுள்ளது.

அடுத்த வருடம் நடுப்பகுதியிலேயே தேர்தலை நடத்துவதற்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், அந்நிலைமை மாறியுள்ளது.

இதற்கமைய தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கின்றது.

நீண்ட காலமாக தாமதமாகி வந்த மாகாண சபைத் தேர்தலை மார்ச் மாதத்தில் நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள திடீர் முடிவின் பின்னணியில் பல காரணங்கள் உள்ளன எனக் கூறப்படுகின்றது.

அரசாங்கம் குறித்த விமர்சனங்கள் இருந்தாலும், அரசாங்கத்தை விட எதிர்க்கட்சிக்கு அதிக நற்பெயர் கிட்டவில்லை என்பது அரசாங்கத்தின் மதிப்பீடு. இது முதலாவது காரணம்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியால் முன்வைக்கப்பட்ட திட்டங்களின்படி, அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் அரசாங்கம் மிகவும் சிக்கலான, கடுமையான முடிவுகளை செயற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் என்பது இரண்டாவது காரணம்.

குறிப்பாக, அரசாங்கம் பல அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்கவும், சிலவற்றை மூடவும், அரசு செலவினங்களை வெகுவாகக் குறைக்கவும் கட்டாயப்படுத்தப்படும்.

இந்தக் கொள்கைகளைச் செயல்படுத்துவது தவிர்க்க முடியாமல் இருக்கும் என்பதுடன், மக்கள் மத்தியில் கடும் எர்ப்பையும் தூண்டும் என்று அரசாங்கம் நம்புகிறது.

எனவே, புத்தாண்டுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தி, ஏதாவது ஒரு வகையில் வெற்றியைப் பெற்று, பின்னர் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி நிலைமைகளின் கீழ் தேவைப்படும் கடுமையான பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

முதலீடுகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

 

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முதலீட்டாளர்கள் மற்றும் நாட்டிற்கு வரும் முதலீடுகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

நாட்டின் முதலீட்டு வாய்ப்புகள், வர்த்தக சூழல் மற்றும் சட்ட நிலைமைகள் குறித்து ஆய்வு செய்யும் நோக்கில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் குழுவுடன் இன்று (11) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இலங்கையில் முதலீடுகளுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், முதலீடுகள் தொடர்பாக முந்தைய அரசாங்கங்களின் கீழ் இருந்த முறைகேடுகளை மாற்றி தற்போதைய அரசாங்கம் ஜனநாயக கட்டமைப்பிற்குள் புதிய சட்டங்களை உருவாக்கி வருவதாகவும், ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அதன்படி, நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என்றும், இதற்காக, அரசாங்கம் முதலீட்டு பாதுகாப்பை உறுதி செய்யும், முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்தும் மற்றும் வசதிகளை வழங்கும் என்றும், முதலீட்டு பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இந்நாட்டு முதலீட்டு சூழலை பலப்படுத்துவதற்காக இனவாதம் மற்றும் மதவாதம் எனபவற்றை ஒதுக்கி தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புதல், செயற்திறனான அரச சேவையை உருவாக்குதல், இராஜதந்திர உறவுகளை வெளிப்படையான முறையில் பராமரித்தல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் மூலம் தொழில்நுட்ப தடைகளைத் வெற்றி கொள்ளுதல் ஆகிய நோக்கங்களை அடைய அரசாங்கம் செயல்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க , அமெரிக்க தூதுக்குழுவிடம் மேலும் தெரிவித்தார்.

Crow Holdings தலைவர் ஹார்லன் குரோ (Harlan Crow),
அமெரிக்க-இந்திய நட்புறவு மற்றும் M&A வர்த்தக தலைவர் கிருஷ்ணா பாலம், (Krishna Balam), Hudson Institute தலைவர் சாரா ஸ்டெர்ன்(Sarah Stern), Eagle Capital Management நிறுவனர் மற்றும் இணைத் தலைமை முதலீட்டு அதிகாரி ரெவெனல் பி. கரி (Ravenel B. Curry), Billingsley இணை நிறுவனர் லூசி பெல்லிங்ஸ்லி, (Lucy Bellingsly), SMU Trustee சமூகத் தலைவர் கெதரின் க்ரோ (Katherine Crow) සහ Hudson Institute உறுப்பினர் வோல்டர் ரஸ்ஸல் மீட் (Walter Russell Mead)
ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஸல் அபொன்சு ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

ரஷ்யாவில் களமிறங்கினார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

0
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை , ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். பாகிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு ரஷ்யா மற்றும் ஓமானுக்கான விஜயத்தை ஈரான் வெளிவிவகார அமைச்சர் மேற்கொண்டுள்ளார். அவர் தற்போது...

வாட்ஸ்அப் குழு மூலம் போதைப்பொருள் விற்பனை: பண்டாரவளை பகுதியில் 9 பேர் கைது!

0
பண்டாரவளை பகுதியில் வாட்ஸ்அப் குழுக்களைப் பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஹோட்டல் சமையல்காரர் ஒருவர் உட்பட 9 பேரை, பண்டாரவளை பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் நேற்று (26) கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து...