Home Blog Page 256

போரை நிறுத்துவதில் நான் வல்லவன்: ட்ரம்ப் தம்பட்டம்!

 

இஸ்ரேல் – காசா மோதல் முடிவுக்கு வந்தது. இது நான் நிறுத்திய 8-வது போர் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

காசா மீதான இஸ்ரேல் தாக்குதகை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று உலகம் முழுவதும் இருந்து குரல் எழுந்தது. இந்நிலையில்தான் ஜனாதிபதி ட்ரம்ப் காசா – இஸ்ரேல் போரை முடிவுக்குக் கொண்டு ஒரு 20 அம்சத் திட்டத்தை முன்வைத்தார்.

இது தொடர்பில் இஸ்ரேல் – ஹமாஸ் தரப்பிடையே எகிப்தில் அமைதிப் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது.

இருதரப்பும் உடன்பட்ட நிலையில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. ஹமாஸ் பிணைக் கைதிகளை விடுவிக்கத் தயாராகிக் கொண்டிருக்க, இஸ்ரேலும் காசா மீதான தாக்குதலை நிறுத்தியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இஸ்ரேல் பயணப்படுகிறார். தனது அதிகாரபூர்வ விமானமான ஏர் ஃபோர்ஸ் 1 விமானத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

இதன்போது, ‘ இந்தப் போர் ஓய்ந்தது. இனி எல்லாம் இயல்பாக இருக்கப்போகிறது என்று நான் நம்புகிறேன். இஸ்ரேல் – ஹமாஸ் இடையே அமைதி ஏற்படுவதில் கத்தாரின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் முன்னெடுப்புகளும் பாராட்டுக்குரியது.

ஹமாஸ் தரப்பிலிருந்து எதிர்பார்த்ததைவிட முன்கூட்டியே பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட இருக்கிறார்கள். காசா மீள் கட்டமைப்பை உறுதி செய்ய விரைவில் ஓர் அமைதிக் குழு உருவாக்கப்படும். இந்தப் போர் முடிவுக்கு வந்ததில் யூதர்கள், இஸ்லாமியர்கள், அரபு நாட்டவர் என அனைவருமே மகிழ்ச்சியாக உள்ளனர்.” என்று குறிப்பிட்டார்.

இது நான் நிறுத்தியுள்ள 8-வது போர். இப்போது ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே போர் நடப்பதாகக் கேள்விப்பட்டேன். அந்தப் போர் குறித்து நான் திரும்பி வந்ததும் பார்க்க வேண்டும். ஏற்கெனவே நான் உக்ரைன், ரஷ்யா போரையும் நிறுத்தும் முயற்சியில் உள்ளேன நான் போர்களை நிறுத்துவதில் வல்லவன் என ட்ரம்ப் மேலும் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் ஹமாஸ் தரப்பு தான் விடுவிக்கவுள்ள 20 பிணைக் கைதிகளின் பெயர்களை அறிவித்துள்ளது.

முன்னாள் எம்.பிக்கள் பலர் மாகாணசபைத் தேர்தலில் போட்டி!

மாகாணசபைத் தேர்தலுக்குரிய ஆரம்பக்கட்ட ஏற்பாடுகளை பிரதான கட்சிகள் உள்ளக ரீதியில் முன்னெடுத்துள்ளன. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தகுதியான வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரியுள்ளது.

ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி, வடக்கு, கிழக்கில் களமிறங்கவுள்ள தமது கட்சியின் முதல்வர் வேட்பாளர்கள் பற்றி அவதானம் செலுத்தியுள்ளது.

குறிப்பாக வடக்கு முதல்வர் வேட்பாளரை தெரிவுசெய்யும் பொறுப்பு அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இராமலிங்கம் சந்திரசேகரன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிமல் ரத்நாயக்க அண்மையில் யாழ். வந்தபோதுகூட இது சம்பந்தமாக இராமலிங்கம் சந்திரசேகரிடம் கலந்துரையாடியுள்ளார் என அறியமுடிகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் எம்.பிக்கள் பலர், மாகாணசபைத் தேர்தலில் களமிறங்குவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் நான்கு இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர், மாகாண சபைத் தேர்தல்களில் களமிறங்குவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகி மாகாண சபை முதல்வர் வேட்பாளராக களமிறங்க திட்டமிட்டுள்ளனர். இது பற்றி கட்சி தலைவருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர் என அறியமுடிகின்றது.

கடந்த பொதுத்தேர்தலில் பெருமளவான எம்.பிக்கள் தோற்கடிக்கப்பட்டதால் மாகாணசபைத் தேர்தலில் அதிகளவான முன்னாள் எம்.பிக்கள் போட்டியிடக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா இரட்டை வேடம்: சீனா சீற்றம்!

வரிவிதிப்பு விவகாரத்தில் அமெரிக்கா இரட்டை வேடம் போடுகிறது எனவும், இதற்கு சீனா அஞ்சாது எனவும் அந்நாட்டு அதிகாரியொருவர் அறிவித்துள்ளார்.

சீன பொருட்களுக்கு அமெரிக்க அரசு தற்போது 30 சதவீத வரியை விதித்து வருகிறது. இந்த சூழலில் அரிய வகை தனிமங்களை வழங்க சீனா மறுப்பதால் அந்த நாட்டின் பொருட்களுக்கு நவம்பர் 1-ம் திகதி முதல் கூடுதலாக 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சீன வர்த்தக துறையின் மூத்த அதிகாரி ஒருவர் பெய்ஜிங்கில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில்,

” சீனாவின் சுமார் 3 ஆயிரம் வகையான பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. சீனாவை பொறுத்தவரை சுமார் 900 பொருட்களுக்கு மட்டுமே தடை விதித்து இருக்கிறோம். அமெரிக்காவின் நடவடிக்கைகளால் சீன நிறுவனங்களுக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டு உள்ளன.” என்று குறிப்பிட்டார்.

தற்போது வரி விதிப்பு மூலம் அமெரிக்கா மிரட்டல் விடுத்து வருகிறது. நாங்கள் எதற்கும் அஞ்ச மாட்டோம். வர்த்தக போரை சீனா விரும்பவில்லை. அமெரிக்க அரசு தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் சீனாவை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.

வரிவிதிப்பு விவகாரத்தில் அமெரிக்கா இரட்டை வேடம் போடுகிறது. இதேபோல வணிக கப்பல் போக்குவரத்தில் அமெரிக்கா தொடர்ந்து ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருகிறது. ” எனவும் சீன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மரக்கறி விலைப்பட்டியல் (13.10.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (13) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

பொன்சேகாவுக்கு நாமல் பதிலடி!

“பொன்சேகா வசம் குரல் பதிவு இருந்தால் அதனை அவர் வெளியிடட்டும்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

ராஜபக்சக்கள்மீதான பொன்சேகாவின் விவகாரம் மற்றும் காணொளி வெளியிடும் விவகாரம் என்பன தொடர்பில் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே நாமல் ராஜபக்ச இவ்வாறு கூறினார்.

” பொன்சேகாவின் இயல்பு அது. முன்னரும் அவர் அப்படிதான். குரல் பதிவு இருந்தால் அதனை அவர் வெளியிடட்டும். அதற்குரிய உரிமை அவருக்கு உள்ளது. கோட்டாபய ராஜபக்ச, பொன்சேகாவுடன் நம்பி கதைத்திருகக்கூடும். ஆக அதனை வெளியிட்டால் தற்போது பொன்சேகாவை நம்புபவர்களின் நிலை என்னவென்று சொல்வது?” – என்றார் நாமல் ராஜபக்ச.

விரைவில் வீடியோ ஆதாரத்தை வெளியிடுவேன்: பொன்சேகா பரபரப்பு அறிவிப்பு

வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பில் இடம்பெற்ற உரையாடல் தொடர்பான காணொளி தன் வசம் இருப்பதாகவும், அதனை விரைவில் வெளியிடவுள்ளதாகவும் முன்னாள் இராணுவ தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

முன்னாள் படை அதிகாரிகள் சிலருடன் இணைந்து நடத்திய ஊடக சந்திப்பின்பொன்றிபோதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 17 ஆம் திகதி காலை மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, பஸில் ராஜபக்ச ஆகியோர் எரிக் சொல்ஹைம், சர்வதேச மன்னிப்பு சபை பிரதிநிதி, ஐசிஆர் பிரதிநிதி ஆகியோருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாதிகளை சரணடைய வைப்பதற்குரிய வழிமுறை பற்றி இதன்போது ஆராயப்பட்டுள்ளது. இதன்போதுதான் வெள்ளைக்கொடி ஏந்தி வருதல் உள்ளிட்ட விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளன.

எனினும், பயங்கரவாதிகளை முற்றாக ஒழிக்க வேண்டும் என்பதே எனது கட்டளையாக இருந்தது. ஏனெனில் சரணடைய வைத்திருந்தால் பிரபாகரனை மஹிந்த ராஜபக்ச முதலமைச்சர் ஆக்கி இருக்கக்கூடும். கேபி, பிள்ளையான் ஆகியோருக்கு தாலாட்டப்பட்டதுபோல செய்யப்பட்டிருக்கும்.

மேற்படி சந்திப்பு தொடர்பில் ஊடகவியலாளர்களும் அறிந்திருந்தனர். என்னிடம் வீடியோவொன்று உள்ளது. அதனை விரைவில் வெளியிடுவேன்.
‘ 17 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச, சவேந்திர சில்வாவுக்கு தொலைபேசி அழைப்பொன்றை ஏற்படுத்தியுள்ளார்.

குறித்த அழைப்பை எடுத்து கதைத்த பின்னர் தொலைபேசியை சவேந்திர சில்வா வைத்துள்ளார். அவரை சூழ ஊடகங்களின் கமராக்கள் இருப்பதை அவர் மறந்திருந்தார்.
‘ பாதுகாப்பு செயலாளரே எனக்கு அழைப்பை ஏற்படுத்தினார், சரணடைவதற்கு வெள்ளைக்கொடி ஏந்தி வருவது பற்றி கலந்துரையாடப்பட்டது எனக் கூறினார்.

நாம் எல்லோரையும் கொல்வோம் என்றெல்லாம்.” என்றெல்லாம் தனக்கு முன்னால் இருந்த அதிகாரிகளிடம் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
எனக்கு இராணுவத்தினர் இது பற்றி தெரியப்படுத்தவில்லை. களத்தில் இருந்தவர்களுக்குதான் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் இவற்றை செவிமடுத்துக்கொண்டிருந்தனர். ஒலிப்பதிவு செய்யப்பட்டது என்னிடமும் உள்ளது. விரைவில் அதனை வழங்குவேன்.
இவற்றை செவிமடுத்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர்கள்தான் வெள்ளைக்கொடி பற்றி கதைத்தனர்.

2010 ஜனாதிபதி தேர்தலின்போது பிரட்ரிக்கா ஜேம்ஸ் என்ற பத்திரிகை ஆசிரியர் என்னை நேர்காணல் செய்வதற்கு வந்திருந்தார்.
‘ வெள்ளைக்கொடி ஏந்தி வருவபர்கள்மீது சூடு நடத்தும் கதை ஏதும் இருந்ததா” என வினவினார்.

இது பற்றி ஏற்கனவே இரு ஊடகவியலாளர்கள் என்னிடம் வினவினர் என்று மாத்திரமே நான் பதிலளித்திருந்தேன். இதை மட்டும்தான் நான் கூறினேன். ஆனால் வெள்ளைக்கொடி ஏந்தி வருபவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்துமாறு நான் கூறினேன் என அவர் செய்தி வெளியிட்டார். இது அப்பட்டமான பொய்யாகும். எனக்கு எதிராக சேறு பூசுவதற்காகவே வெள்ளைக்கொடி வழக்கு பயன்படுத்தப்பட்டது.” – என்றார் பொன்சேகா.

சிரேஷ்ட தொழிற்சங்க தலைவர் அமரர் வேலாயுதத்தின் 10 ஆவது நினைவு தினம் நாளை!

மலையகத்தில் மூத்த தொழிற்சங்க வாதிகளில் ஒருவரான அமரர் கே. வேலாயுதம் அவர்களின் 10 ஆவது ஆண்டு நினைவு தினம் நாளை (13) அனுஷ்டிக்கப்படுகின்றது.

இதனை முன்னிட்டு பதுளை மாவட்டத்தில் நினைவஞ்சலிக் கூட்டமும், பூஜையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், பொது இடங்களில் மரம் நடும் நிகழ்வும் ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 6 ஆம் திகதிக்குள் 23 ஆயிரத்து 932 மரங்களை நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

சில பெருந்தோட்டப் பாடசாலைகளில் சதுரங்க போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி என்பனவும் இடம்பெறவுள்ளன. இப்போட்டிகள் இம்மாத இறுதியிலும், அடுத்த மாதம் ஆரம்பத்திலும் இடம்பெறவுள்ளன.

தொழிற்சங்க தலைவர், ஊவா மாகாணசபை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் இராஜாங்க அமைச்சர் என முக்கிய பதவிகளை வகித்து, அதன்மூலம் மலையக மக்களுக்கு பல சேவைகளை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இராஜாங்க அமைச்சராக இருந்த காலப்பகுதியிலேயே பசுமைபூமி காணி உரிமை திட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

காகிதத் தாள்களே கையளிப்பு: விளம்பரத்துக்காகவே நிகழ்வு!

 

இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் சமூகவலைத்தள பதிவு வருமாறு,

” இன்று வழங்கப்பட்ட இந்த ஆவணமானது வழக்கமாக பயனாளர்களுக்கு அஞ்சல் மூலம் அனுப்பப்படும், மேலும் வீடுகள் ஒப்படைக்கப்படும்போது ஒரு நிகழ்வு நடத்தப்படும். (அவை முடிந்ததும்)
இந்நிகழ்வானது “2000 வீடுகளை கையளிப்பது அல்ல!”, ஆனால் 2000 காகிதத் தாள்களை கையளிப்பதை உள்ளடக்கிய ஒரு விளம்பர நிகழ்வு மாத்திரமே.

இந்த காகித ஆவணம் வழங்கும் நிகழ்வுக்கு எந்த தேவைப்பாடுகளும் இல்லை.

கடந்த ஒரு வருடமாக மலையகத்தில் அல்லது மலையக சமூகத்திற்காக எந்த ஒரு வேலையும் செய்யப்படவில்லை என்ற உண்மையிலிருந்து பொதுமக்களை திசைதிருப்புவதற்கான இது ஒரு தந்திரோபாயம் மட்டுமே.

குறிப்பாக வேதனம் அதிகரிப்பு இல்லை, வீடுகள் கட்டப்படவில்லை, அபிவிருத்திகள் ஏதும் இடம்பெறவில்லை.”

அடை மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

 

நானுஓயா பகுதியில் இன்று பெய்துவரும் அடை மழையால் நானுஒயா கிரிமெட்டிய பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் உட் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு பாதிக்கப்பட்டுள்ளது.

நானுஓயா கிரிமெட்டிய பகுதியில் அடிக்கடி மழை பெய்யும் போது இவ்வாறு வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுவதால் மக்கள் பெரும் அசௌகரிய நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளனர்.

இந்த விடயம் சம்பந்தமாக கடந்த காலங்களிலும் அதிகாரிகளுக்கு தெரிவித்த போதும் இதுவரை காலமும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு நுவரெலியா பிரதேசத்தை பொறுத்தவரையில் அடிக்கடி மழை பெய்யக்கூடிய ஒரு இடமாகும்.இருப்பினும் ஒவ்வொரு தடவையும் மழை பெய்யும் போது வெள்ளநீர் வீடுகள் உட்பகுதியில் மக்களின் உடைமைகளும் நாசமாகின்றது.

இதற்கு தீர்வு தான் என்ன என மக்கள் தமது விமர்சனத்தை தெரிவிக்கின்றனர்.

வ. கார்த்திக்

அரசின் சம்பள சூத்திரம் என்ன?

 

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி இன்று விடுத்த அறிவிப்பு சம்பந்தமாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் எக்ஸ் தள பதிவு வருமாறு,

” இன்று, அடிப்படை சம்பளம் ரூ. 1,350 ஆகும். கேள்வி இதுதான்: அரசு அடிப்படை சம்பளத்தை உயர்த்த உள்ளதா, அல்லது பிற மேலதிக கொடுப்பனவுகள் மூலம் ரூ. 1,750 வருகிறதா?

ஜனாதிபதியை முதலில் மூன்று அரச பெருந்தோட்ட நிறுவன தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்தி விட்டு,  பின்னர் தனியார் கம்பனிகளுடன் பேச வேண்டும்.

அடிப்படை சம்பளம் மட்டுமே EPF பங்களிப்புக்கு உட்பட்டது.  கொடுப்பனவுகள் அல்ல.

கம்பனிகளின் நிலையான நிலைப்பாடு எப்போதும் உறுதியானது. தொழிலாளரின் அதிக  கொழுந்து பறித்தால், கூடுதல் சம்பளம் வழங்க தயார். இது தான் அவர்களின் சூத்திரம். “அதிக கொழுந்து, அதிக சம்பளம்”. ஜனாதிபதியின் சூத்திரமும் இதுவென்றால்,  இதில் புதியதொன்றும் இல்லை.

தொழிலாளர்கள் அதிக கொழுந்து  பறிக்க முடியாததற்கு காரணம் என்ன?  ஏனெனில் தோட்டங்கள் பல தசாப்தங்களாக பராமரிக்க படவில்லை. ஆகவே, கொழுந்து குறைந்துள்ளது.

தமுகூவின் நிலைப்பாடு, ஐ.ம.கூட்டணியுடனான எமது உடன்படிக்கையின்படி, தொழிலாளர்கள் பங்குதாரர்களாக மாற  வேண்டும். இதை சிறு தோட்ட  கூட்டுறவுகள் மூலம் இதை  சாத்தியமாகும்.

இதில் அரசு, தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியோருக்கிடையில் கூட்டு ஒப்பந்தம் உருவாக வேண்டும். இதுதான் நிரந்தர தீர்வு.”

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

வாட்ஸ்அப் குழு மூலம் போதைப்பொருள் விற்பனை: பண்டாரவளை பகுதியில் 9 பேர் கைது!

0
பண்டாரவளை பகுதியில் வாட்ஸ்அப் குழுக்களைப் பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஹோட்டல் சமையல்காரர் ஒருவர் உட்பட 9 பேரை, பண்டாரவளை பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் நேற்று (26) கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து...

‘நில உரிமையே நிஜ உரிமை’: பசறையில் மேதினக் கூட்டம் ஏற்பாடு!

0
மலையக ஊழியர் சங்கத்தின் இம்முறைக்கான மேதினக் கூட்டத்தை, பசறை பிரதேச சபை மண்டபத்தில் உள்ளகக் கூட்டமாக (Indoor Meeting) நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகச் சங்கத்தின் பொதுச் செயலாளர் கண்மணி சிவனேசன் தெரிவித்தார். சங்கத்தின் தொழில் சங்க...

அர்ச்சுனா எம்.பி. கைது!

0
கைத்துப்பாக்கியைகாட்டி மிரட்டல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். இளவாலைப் பொலிஸாரினால் அவர் இன்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பெரியவிளான் பகுதியிலுள்ள காணி தொடர்பில்...