Home Blog Page 263

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு பாதீட்டுக்கு முன் தீர்வு காண முயற்சி!

🛑 “மலையகம் மகிழ்ச்சி” : காணி
உரிமை வழங்க ஏற்பாடு: 12 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நிகழ்வு!

🛑 மலையக மக்களுக்கான இந்தியாவின் 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தின் 4 ஆம் கட்டமாக 4 ஆயிரத்து 700 வீடுகளை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

🛑 இதன் ஆரம்பக்கட்டமாக 2 ஆயிரத்து 56 பயனாளிகளுக்கு வீடுகள் அமைக்கப்படுகின்றன. இதற்குரிய காணி
உரித்து கையளிக்கும் ( காணி
உரித்துக்குரிய ஆவணம்) நிகழ்வு எதிர்வரும் 12 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் பண்டாரவளையில் நடைபெறுகின்றது. இந்திய தூதரக அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர்.

🛑 பதுளை, கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, மாத்தளை, காலி, மாத்தறை, மொனறாகலை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இருந்தே பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். அதிக மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

🛑 மலையக மக்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி வழங்கப்படும். இதன் ஆரம்பக்கட்டமாக ஏற்கனவே வீடுகளைப் பெற்றவர்களுக்கு காணி உரித்து வழங்கும் நிகழ்வும் 12 ஆம் திகதி பண்டாரவளையில் நடைபெறும்.

🛑 மாடி லயன் திட்டம் அல்ல. மலையக மக்களுக்கு தனி வீடுகளே அமைக்கப்படும்.

🛑 மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கு எதிர்பார்க்கின்றோம்.

🛑 மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு வரவு- செலவுத் திட்டத்துக்கு முன்னர் தீர்வொன்றை காண்பதற்கு எதிர்பார்க்கின்றோம்.

ஆர்.சனத்

(அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது பெருந்தோட்டத்துறை அமைச்சர், பிரதி அமைச்சர் ஆகியோர் வெளியிட்ட கருத்துகளின் சுருக்கம்.)

வீடியோ கருத்து பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது

மலையகம் மகிழ்ச்சி: 2000 பேருக்கு 12 ஆம் திகதி காணி உரிமைக்கான ஆவணம்

மலையக மக்களுக்கான இந்தியாவின் 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தில் 4 ஆம் கட்டமாக 4 ஆயிரத்து 700 பயனாளிகளுக்கு வீடுகளை கையளிக்க திட்டமிட்டுள்ளோம். இதன் முதற்கட்டமாக 2 ஆயிரம் வீட்டு அலகுகளுக்குரிய உரிமைப் பத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வு எதிர்வரும் 12 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் பண்டாரவளையில் நடைபெறும்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இந்த தகவலை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் வெளியிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அழகான இல்லம், ஆரோக்கியமான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் மலையக மக்களுக்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. 200 வருடகால வரலாற்றைக்கொண்ட எமது மக்களுக்குரிய வீட்டுரிமை, காணி உரிமை என்பன மிக முக்கிய கோரிக்கைகளாக அமைந்தன.

எமது மக்களுக்காக இந்தி அரசாங்கத்தால் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டது. இந்த 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தில் 4 ஆம் கட்டமாக 4 ஆயிரத்து 700 பயனாளிகளுக்கு வீடுகளை கையளிக்க திட்டமிட்டிருந்தோம். இதன் முதற்கட்டமாக 2 ஆயிரம் பேருக்கு எதிர்வரும் 12 ஆம் திகதி ஜனாதிபதியால் பண்டாரவளையில் வைத்து கடிதங்கள் கையளிக்கப்படும். 10 பேர்ச்சஸ் காணியும், அந்த காணிக்குரிய உரித்தும் அன்றைய தினம் வழங்கப்படும். இந்நிகழ்வானது மலையக மக்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்.

மலையக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு காத்திருக்கின்றோம். மிகுதியான வீடுகளையும் விரைவில் கட்டி முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். எமது மக்களுக்காக இந்தியா வழங்கிவரும் உதவிகளுக்கு நன்றி.” – என்றார்.

மலையக மக்களுக்கான டில்லியின் உதவிகள் தொடரும்!

 

இலங்கைக்கான இந்திய தூதுவருக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம் மற்றும் வே. இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்திய வீட்டுத் திட்டம், மலையக மக்களுக்குரிய உரிமைகள் உட்பட முக்கிய சில விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

மலையகச் சமூகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கான முயற்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கப்படும் என இதன்போது இந்திய தூதுவர் உறுதியளித்துள்ளார்.

ஹெரோயினுடன் யாழில் இளைஞன் கைது: வாள்களும் மீட்பு!

 

யாழ்ப்பாணம் பாஷையூர் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் மூன்று வாள்கள் மற்றும் கையடக்க தொலைபேசி என்பனவும் மீட்கப்பட்டன.

யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் 24 வயதான குறித்த சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நீண்டகாலமாக தலைமறைவாக இருந்த குறித்த சந்தேக நபருக்கு எதிராக ஏற்கனவே சில குற்றச் செயல்கள் தொடர்பிலான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு

அமெரிக்​கா, பிரிட்​டன், பிரான்ஸை சேர்ந்த 3 விஞ்​ஞானிகளுக்கு இயற்​பியலுக்​கான நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்டு உள்​ளது.

மருத்​து​வம், இயற்​பியல், வேதி​யியல், இலக்​கி​யம், அமை​தி, பொருளா​தா​ரம் ஆகிய துறை​களில் சாதனை படைப்​போருக்கு ஆண்​டு​தோறும் நோபல் பரிசு வழங்​கப்​படு​கிறது. மருத்​துவ நோபல் பரிசு நேற்று முன்​தினம் அறிவிக்​கப்​பட்​டது.

இதைத் தொடர்ந்து இயற்​பியலுக்​கான நோபல் பரிசு விவரங்​களை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்​சஸ் அமைப்பு சுவீடன் தலைநகர் ஸ்டாக்​ஹோமில் வெளி​யிட்​டது.

அமெரிக்​காவை சேர்ந்த ஜான் எம். மார்​டினிஸ், பிரிட்​டனை சேர்ந்த ஜான் கிளார்க், பிரான்ஸை சேர்ந்த மைக்​கேல் டெவோரெட் ஆகியோர் இந்த ஆண்டு இயற்​பியல் நோபல் பரிசுக்கு தேர்வு செய்​யப்​பட்டு உள்​ளனர். மூன்று விஞ்​ஞானிகளும் தற்​போது அமெரிக்​கா​வின் கலி​போர்​னியா பல்​கலைக்​கழகத்​தில் பணி​யாற்றி வரு​கின்​றனர்.

குவாண்​டம் ஊடுரு​வல் குறித்த ஆய்​வுக்​காக அவர்​களுக்கு நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்டு இருக்​கிறது.

ஒரு பந்தை சுவரில் எறிந்​தால், அந்த பந்து திரும்பி வரும். இது அனை​வரும் அறிந்த இயற்​பியல் நிகழ்வு ஆகும். ஆனால் சில நுண்​ணிய துகள்​கள் சுவரை துளைத்து மறு​பக்​கம் செல்​கின்​றன. இதுவே குவாண்​டம் ஊடுரு​வல் என்று அழைக்​கப்​படு​கிறது.

கடந்த 1984, 1985-ம் ஆண்​டு​களில் குவாண்​டம் ஊடுரு​வலை 3 விஞ்​ஞானிகளும் அறி​வியல்​பூர்​வ​மாக நிரூபித்​தனர். இந்த சாதனைக்​காக அவர்​கள் நோபல் பரிசுக்கு தேர்வு செய்​யப்​பட்டு உள்​ளனர். மருத்​து​வம், விண்​வெளி, பாது​காப்பு தொழில்​நுட்​பங்​கள், சூப்​பர் கம்ப்​யூட்​டர் தயாரிப்பு உட்பட பல்​வேறு துறை​களில் குவாண்​டம் ஊடுரு​வல் தொழில்​நுட்​பம் பயன்​படுத்​தப்​படுகிறது.

காசாவில் நிலவளத்தை மீட்டெடுக்க 25 ஆண்டுகள் செல்லும்: ஐ.நா. மதிப்பீடு!

 

இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கி நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, பாலஸ்தீன நகரமான காசாவில் ஏற்பட்டுள்ள பேரழிவை மதிப்பீடு செய்து ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அறிக்கைபடி, இஸ்ரேலியத் தாக்குதல்களால் காசாவின் 80 சதவீத கட்டிடங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன. மொத்த சேத மதிப்பு 4.5 டிரில்லியன் டாலர் ஆகும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் காசாவில் இடிபாடுகள் உள்ளிட்ட 51 மில்லியன் டன் குப்பைகள் குவிந்துள்ளன . போரினால் ஏற்பட்ட இடிபாடுகளை முழுமையாக அகற்ற 10 ஆண்டுகள் ஆகலாம். மேலும், காசாவின் வளமான நிலப்பரப்பை மீட்டெடுக்க 25 ஆண்டுகள் வரை ஆகலாம்.

குப்பைகளை அகற்றுவதற்கான உபகரணங்கள் கிடைப்பதில் உள்ள சிரமங்களே மறுகட்டமைப்புக்கு நீண்ட காலம் எடுக்கக் காரணம். இஸ்ரேலியத் தாக்குதல்களால் காசாவில் உள்ள 94 சதவீத மருத்துவமனைகள் மற்றும் 90 சதவீத பள்ளிகள் அழிக்கப்பட்டுள்ளன.

காசாவின் 2.3 மில்லியன் மக்கள் தொகையில் 90 சதவீதம் பேர் வீடற்றவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். பாதிக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையான பட்டினியை எதிர்கொள்கின்றனர்.

காசாவின் 80 சதவீத பகுதி இராணுவ மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.காசாவில், 1,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

போருக்கு முன் பயிரிடப்பட்ட நிலங்களில், தற்போது 232 ஏக்கர் மட்டுமே சாகுபடி செய்யக்கூடியதாக உள்ளது. அதாவது, வேளாண் நிலங்களில் 98.5 சதவீதம் இப்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

வளமான மண் இல்லாதது உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. போருக்கு முன்பு காசா தனது மொத்த ஏற்றுமதியில் 32 சதவீதம் ஸ்ட்ராபெர்ரிகள், 28 சதவீதம் தக்காளி மற்றும் 15 சதவீதம் வெள்ளரிகளை ஏற்றுமதி செய்து வந்தது. இஸ்ரேலியத் தாக்குதல்கள் 83 சதவீத பாசனக் கிணறுகளை அடைத்துள்ளன.

வெடிபொருட்கள் மற்றும் இரசாயனங்கள் காரணமாக காசாவின் மண்ணில் ரசாயன அளவு மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்த போரினால் ஏற்பட்ட சமூகம், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் பல தசாப்தங்களுக்கு நீடிக்கும் என்று ஐ.நா. அறிக்கை எச்சரித்துள்ளது.

இஸ்ரேலின் தாக்குதல்களில் இதுவரை 66,158 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஐநா முன்னதாக தெரிவித்திருந்தது. ஐநாவின் சுயாதீன விசாரணை கமிஷன் காசாவில் இஸ்ரேல் செய்து வருவது இனப்படுகொலை என வரையறுத்துள்ளது.

மரக்கறி விலைப்பட்டியல் (08.10.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

13 பற்றி பேசுவோர் மாகாணசபைத் தேர்தலை இழுத்தடிக்கின்றனர்

“போரை முடிவுக்கு கொண்டுவந்து வடக்கிலும் மாகாணசபைத் தேர்தலை மஹிந்த ராஜபக்ச நடத்தி இருந்தார். ஆனால் அவருக்கு பிறகு வந்த ஜனாதிபதிகளால் மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியாமல் உள்ளது.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” எமக்கு பொருத்தமான அரசியல், பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகளுடன் முன்னோக்கி பயணிக்க வேண்டும். அதிகாரத்துக்காக தமது கொள்கையைக் காட்டிக்கொடுக்கும் கட்சி அல்ல எமது கட்சி. தேர்தலில் வென்றாலும், தோற்றாலும் கொள்கைகளை கைவிட்டது கிடையாது. சில கட்சிகள் தேர்தல் வெற்றிக்காக தமது கொள்கையை மாற்றுகின்றன. அதேபோல பொய்களையும் கூறுகின்றன. இப்படியான கட்சிகளுக்கு அழிவு நிச்சயம்.

செய்யக்கூடிய விடயங்களை மட்டுமே எமது கட்சி கூறிவருகின்றது. 13 ஐ தருகின்றோம், அதைத் தருகின்றோம், இதைத் தருகின்றோம் என எம்மாலும் கூறி இருக்க முடியும். 13 ஐ தருகின்றோம் எனக் கூறுபவர்கள் வடக்கில் மாகாணசபைத் தேர்தலை நடத்தவில்லை.

மஹிந்த ராஜபக்சதான் வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்தினார். அவருக்கு முன்னால் இருந்த ஜனாதிபதிகளாலும் அது முடியாமல் போனது. போரை முடித்து கொடுத்தும் மஹிந்தவுக்கு பின்னால் வந்த ஜனாதிபதிகள் மாகாணசபைத் தேர்தலை நடத்தவில்லை.”- என்றார் நாமல்.

போர் முடியுமென தெரிந்தால் ஆயுதம் வாங்க எதற்காக பொன்சேகா சீனா சென்றார்?

” போர் முடியப்போகின்றது என்பது தெரிந்திருக்குமானால் எதற்காக ஆயுதம் வாங்க பொன்சேகா இறுதிநேரத்தில் சீனா சென்றார்? இது பற்றி அவர் தெளிவுபடுத்த வேண்டும். பொன்சேகாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளால் ஏன் பயணத்தடை விதிக்கப்படவில்லை என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.”

இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு.

” இறுதிப்போரை முடிப்பதற்கு முன்னர் மஹிந்த ராஜபக்சவால் போர் நிறுத்தம் வழங்கப்பட்டது என சரத்பொன்சேகா கூறிவருகின்றார். இது பொய்யான அறிவிப்பாகும்.

இவ்வாறு போர் முடிவுக்கு வரப்போகின்றது என்பது தனக்கு தெரிந்திருக்குமானால் முள்ளிவாய்க்கால் போர் நடக்கும்போது பொன்சேகா சீனா சென்றார்? ஆயுதம் கொள்வனவு செய்வதற்காகவே அவர் அங்கு சென்றிருந்தார். போர் முடியப்போகின்றது என்பது உறுதியாக தெரிந்திருந்தால் நாட்டிலேயே இருந்திருக்கலாம்தானே?

போர் முடியும் என அவர் நினைக்கவில்லை. அவ்வாறு எண்ணி இருந்தால் அவர் நாட்டில் இருக்க வேண்டும். ஏன் சீனா சென்றார் என்பது பற்றி அவர் தெளிவுபடுத்த வேண்டும்.

பொன்சேகாதவிர ஏனைய படைத்தளபதிகளுக்கு போர்க்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பயணத்தடைகள் விதிக்கப்படுகின்றன. ஆனால் பொன்சேகாவுக்கு எதிராக ஏன் போர்க்குற்றச்சாட்டு இல்லை? இது பற்றி நாட்டு மக்கள் சந்திக்க வேண்டும். இதன் இரகசியம் என்ன? படையினரைக் காட்டிக்கொடுத்ததாலேயே பொன்சேகாவுக்கு ஐரோப்பிய நாடுகளால் பயணத்தடை விதிக்கவில்லை. போர்க்குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை.” – என்றார் மனோ கமகே.

பொருளாதார மீட்சிக்கு அரசு எடுத்துக்கு நடவடிக்கைகளுக்கு ஐஎம்எப் பாராட்டு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

கடன் மறுசீரமைப்பு செயல்பாட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆறாவது தவணையை வழங்குவதற்கு முன்னதாக நடத்தப்படும் ஐந்தாவது மீளாய்வின் இடைக்காலக் கலந்துரையாடலாக இது நடத்தப்பட்டது.

பொருளாதார ரீதியாக வங்குரோத்து நிலையிலிருந்த நாட்டை, அதிலிருந்து விடுவித்து அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்வதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும் என்றும், இதற்காக அரசாங்கத்திடம் மூலோபாயத் திட்டம் இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இங்கு தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு, சர்வதேச நாணய நிதியம் வழங்கும் ஆதரவை தான் பெரிதும் பாராட்டுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பொருளாதார மறுமலர்ச்சியை அடையக்கூடிய நாடாக இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு, சர்வதேச நாணய நிதியம் நிர்ணயித்த இலக்குகளைத் தாண்டிச் செல்ல வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் இனங்கண்டுள்ளதாகவும், அதற்காக அரசாங்கம் முறையான திட்டத்தை வகுத்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

பொருளாதார மறுமலர்ச்சி இலக்கை அடைவதற்கு, அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பது அவசியம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அதற்காக முதலீட்டிற்கு உகந்த சூழலை நாட்டில் உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பாராட்டியதுடன், எதிர்காலத்தில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஆர். அபொன்சு, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினரும் சர்வதேச நாணய நிதியத்தின் சார்பாக, அதன் தூதுக்குழுத் தலைவர் Evan Papageorgiou, இந்நாட்டிற்கான அதன் நிரந்தரப் பிரதிநிதி Martha Woldemichael உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

இறைவரித் திணைக்களத்தின் திறனை மேம்படுத்துவது குறித்து ஆராய்வு!

0
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. வரி வருவாயை விரிவுபடுத்துதல், வரி இணக்கத்தை அதிகப்படுத்துதல் மற்றும் நிலுவையில் உள்ள...

களுத்துறை மண்ணில் கல்வி கௌரவ விழா!

0
களுத்துறை மண்ணில் கல்வி கௌரவ விழா! கல்வி அமைச்சின் பெருந்தோட்டப் பாடசாலைகள் அபிவிருத்திக் கிளையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சின்னையா ஜெயக்குமாருக்கான வரவேற்பு நிகழ்வும், களுத்துறை மாவட்டத்தின் தமிழ் பெருந்தோட்ட பாடசாலைகளின் அதிபர்களையும், ஓய்வுநிலை அதிபர்களையும்...

கலமுதுனை தமிழ் வித்தியாலயத்தில் உதயமாகிறது பழைய மாணவர் சங்கம்!

0
நூற்றாண்டு நோக்கிய பயணம்: கலமுதுனை தமிழ் வித்தியாலயத்தில் உதயமாகிறது பழைய மாணவர் சங்கம்! தொலஸ்பாகை, கலமுதுனை தமிழ் வித்தியாலய பழைய மாணவர் சங்க அங்குரார்ப்பன நிகழ்வு எதிர்வரும் மே 2 ஆம் திகதி பாடசாலை...