Home Blog Page 264

நாய் குரைப்பதால் சிங்கம் அஞ்சாது: பொன்சேகாவுக்கு மஹிந்தவின் பேச்சாளர் பதிலடி!

 

” மஹிந்த ராஜபக்சதான் பொன்சேகாவை இராணுவத் தளபதி பதவிக்கு கொண்டுவந்தார். பொன்சேகாமீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் அவரை உலகில் எந்த நாட்டுக்கு கொண்டுசென்றாவது பாதுகாக்குமாறு கூறிய தலைவர்தான் மஹிந்த ராஜபக்ச. இப்படிபட்டவரையே அவர் இன்று கடுமையாக விமர்சித்துவருகின்றார்.”

இவ்வாறு மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.

அத்துடன், இறுதிப்போரின்போது மஹிந்த ராஜபக்சவால் போர் நிறுத்தம் வழங்கப்பட்டது என்பது உட்பட பொன்சேகாவால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளையும் அவர் முற்றாக நிராகரித்தார்.

அரசியல் ரீதியில் வங்குரோத்தடைந்துள்ள பொன்சேகா, இன்னமும் போர் மனோ நிலையிலேயே காணப்படுகின்றார் எனவும் மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

வெள்ளைக்கொடி கதையைக்கூறி படையினரை காட்டிக்கொடுத்த நபர்தான் பொன்சேகா. இது நாட்டு மக்களுக்கும் தெரியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மஹிந்தவின் திடீர் போர்நிறுத்தம் குறித்து விசாரணை கோருகிறார் பொன்சேகா!

” பிரபாகரன் உள்ளிட்ட புலித் தலைவர்களை தப்பிக்க வைப்பதற்காக இறுதிக்கப்பட்டப்போரின்போது மஹிந்த ராஜபக்சவால் 48 மணிநேர போர் நிறுத்தம் வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். அத்துடன், 2005 ஆம் ஆண்டு புலிகளுக்கு நிதி வழங்கப்பட்டமை குறித்தும் விசாரணை அவசியம். இதற்காக ஜனாதிபதி விசாரணைக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டும்.”

இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ராணுவத்தினர் தொடர்பில் ராஜபக்சக்கள் தற்போது அதிக அக்கறையுடன் கதைக்கின்றனர். தன்னை மஹிந்த ராஜபக்ச சிறை வைத்ததுகூட தவறு எனக் நாமல் ராஜபக்ச கூறிவருகின்றார். பிரபாகரன்கூட எமது குடும்பத்தினரை இலக்கு வைக்கவில்லை. நாம் உக்கிர போரில் ஈடுபட்டிருந்த தருணத்தில்கூட படையினரின் குடும்பத்தை பிரபாகரன் இலக்கு வைக்கவில்லை. ஆனால் ராஜபக்சக்கள் எனது குடும்பத்தினரைக்கூட விட்டுவைக்கவில்லை.

எனக்குகீழ் வேலை செய்த படையினர் ஓய்வூதியம் இன்றி வெளியேற்றப்பட்டனர். அவர்கள் வெளியே சென்ற பிறகுகூட அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு இடமளிக்கப்படவில்லை. தடையேற்படுத்தப்பட்டது. இதனால் சிலர் மாரடைப்பு வந்து மரணித்துவிட்டனர். இப்படி செய்த ராஜபக்சக்கள்தான் தற்போது படையினருக்காக குரல் கொடுப்பதாகக் கூறிக்கொள்கின்றனர்.

2009 ஜனவரி 31 முதல் பெப்ரவரி 1 வரை 48 மணிநேரம் போர் நிறுத்தம் வழங்குமாறு மஹிந்த ராஜபக்ச அழுத்தம் கொடுத்தார். அக்காலப்பகுதியில் நாம் முல்லைத்தீவை பிடித்துவிட்டோம். புதுகுடியிருப்பையும் மும்முனையில் சுற்றிவளைத்துவிட்டோம். இன்னும் 10 கிலோ மீற்றர்வரைதான் பிடிக்க வேண்டி இருந்தது. இதற்காகத்தான் இரண்டரை வருடகாலம் போர் நடந்தது. 4 ஆயிரத்து 500 வரையான படையினரை இழந்திருந்தோம்.

குறித்த போர் நிறுத்தத்தை மஹிந்த ராஜபக்ச வழங்கி இருக்காவிட்டால் 2009 மார்ச் நடுப்பகுதியில் போரை முடிவுக்கு கொண்டுவந்திருப்போம். போர் நிறுத்தம் வழங்கப்பட்ட பிறகு புலிகள் எம்மை திருப்பி தாக்கினர். நாம் ஆயுதங்களை கீழே வைத்திருந்தோம். ஐந்து கிலோ மீற்றர்வரை பின்னால் வரவேண்டி ஏற்பட்டது. பெருமளவு ஆயுதங்கள் அழிக்கப்பட்டன. 500 வரையான படையினரை இழந்தோம்.

எதற்காக போர் நிறுத்தம் வழங்கப்பட்டது? பிரபாகரன் உள்ளிட்ட புலித் தலைவர்களை தப்பிக்கவைப்பதற்காகவே இது நடந்திருக்கும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி எம்மை தாக்கலாம் என பிரபாகரன் சிந்தித்து தாக்குதல் நடத்தினார். அவர் வாய்ப்பை தவற விட்டிருந்தார்.
போர் முடிவடையப்போகின்றது என தெரிந்தும் எதற்காக போர் நிறுத்தம் வழங்கப்பட்டது?
மஹிந்தவின் இந்த தேசத்துரோக செயல் தொடர்பில் இந்த அரசாங்கத்துக்கு முதுகெலும்பிருந்தால் நிச்சயம் விசாரணை நடத்த வேண்டும்.

2005 ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ் மக்களின் வாக்குகள் ரணிலுக்கு விழுவதை தடுக்கும் நோக்கில் மஹிந்த தரப்பு பணம் வழங்கியது. அந்த பணத்தை வைத்தே கடற்புலிகளுக்கு கப்பல் கொள்வனவு செய்யப்பட்டது. புலிகளுக்கு பணம் வழங்கப்பட்டமை தொடர்பில் பஸில் ராஜபக்சவும் என்னிடம் தெரிவித்திருந்தார். எனவே, இது பற்றியும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

ஜனாதிபதி ஆணைக்குழு அல்லது உயர்மட்டக்குழுவொன்றை அமைத்தேனும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.” – என்றார் பொன்சேகா.

செம்மணி புதைகுழி அகழ்வாய்வுக்கு ரூ. 18 மில்லியன் கோரல்

 

இலங்கையில் இரண்டாவது பெரிய மனித புதைகுழியை இன்னும் இரண்டு மாதங்களுக்கு அகழ்வாய்வு செய்வதற்கு கோரப்பட்ட நிதி இரண்டு கோடி ரூபாயை அண்மித்த தொகை என்பது தெரியவந்துள்ளது.

எட்டு வார காலத்திற்கு அகழ்வாய்வுப் பணிக்காக தயாரிக்கப்பட்ட பாதீடு யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவனால் செப்டெம்பர் 18, 2025 அன்று நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதோடு, அந்த தொகை சுமார் ஒரு கோடியே என்பது இலட்சம் (18 மில்லியன் ரூபாய்) எனத் தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழி தொடர்பான கடந்த ஒக்டோபர் 1, 2025 அன்று யாழ்ப்பாண நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி கே. சுபாகர், அகழ்வாய்வுகளை மேற்கொள்வதற்காக கோரப்பட்ட நிதி நீதி அமைச்சினால் இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

சிறுவர்கள் உள்ளிட்ட 240 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ள, மனித புதைகுழியின் அகழ்வாய்வுகளை மேற்கொள்வதற்காக கோரப்பட்ட நிதி அங்கீகரிக்கப்படாததால் பணிகள் முடங்கியுள்ளன.

சட்ட வைத்திய அதிகாரியின் கோரிக்கை முன்வைக்கப்பட்டு இரண்டு வாரங்களின் பின்னர், செம்மணிப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் தடைபடாமல் இருக்க நிதியுதவியை வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு பரிந்துரைத்திருந்தது.

“நிதி தாமதமின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்காக, பாதீட்டு கோரிக்கைகளை விரைவாக செயல்படுத்தவும், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் வழங்கல்களை விரைவாக செயல்படுத்தவும், காணாமல் போனோர் அலுவலகம் உட்பட செம்மணிப் புதைகுழி விசாரணையில் ஈடுபட்டுள்ள அனைத்து அரச அதிகாரிகளுடனும் நெருக்கமாகப் பணியாற்றவும் நீதி அமைச்சின் ஒரு மத்திய அதிகாரி நியமிக்கப்பட வேண்டும்,” என ஆணைக்குழு ஒரு அறிக்கையில் கூறியிருந்தது. அந்த பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டதா என்பது தெரியவில்லை.

முன்னர் அங்கீகரிக்கப்பட்ட நிதியுடன் 45 நாட்கள் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வாய்வு, செப்டெம்பர் 6, 2025 அன்று பிற்பகல் நிறைவடைந்த நேரத்தில், 240 மனித எலும்புக்கூடுகளில் ஒன்றைத் தவிர ஏனைய அனைத்தும் புதைகுழியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன.

மனித எலும்புகளுடன், செம்மணி புதைகுழியில் இருந்து இதுவரை மீட்கப்பட்ட பிற பொருட்களில் குழந்தை பால் போத்தல், பொம்மை, சிறுவர் காலணிகள் மற்றும் பாடசாலை பைகள் ஆகியவை உள்ளடங்கும்.

பெப்ரவரி 11, 2025 அன்று மயானத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டிருந்தபோது, தற்செயலாக பல மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன.

எலும்புத் துண்டுகளை பரிசோதிப்பதற்காக யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவனுடன் வருகைத்தந்த அப்போதைய நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா, அவை மனித எச்சங்களா என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்க பெப்ரவரி 20 அன்று பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், மே 15, 2025 அன்று செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் அகழ்வாய்வுப் பணிகள் ஆரம்பமாகின.

சர்வதேசத்தை வென்று வருகிறது என்பிபி அரசு!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிறப்பான முறையில் சர்வதேச உறவை பேணிவருகின்றது. அதன் பயணப்பாதை சிறப்பாக உள்ளது.” – என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இடதுசாரி அரசுகளுடன் அவ்வளவு இலகுவில் சர்வதேச நாணய நிதியம் கொடுக்கல், வாங்கலில் ஈடுபடுவதில்லை. இப்படி இருந்தும் இந்த அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை சிறப்பாகக் கையாள்கின்றது.

இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடனும் நல்லுறவு கட்டியெழுப்படுகின்றது. ஜப்பான், அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளுடனும் உறவு பேணப்பட்டுவருகின்றது. வெளிவிவகாரக் கொள்கையில் மிகுந்த அவதானத்துடனும், சரியாகவும் இந்த அரசாங்கம் செயற்படுகின்றது. இது வரவேற்கத்தக்க விடயம்.

அதேவேளை, நாட்டில் எதிரணி வலுவிழந்துவருகின்றது. எதிரணிகளிடம் தெளிவானதொரு கொள்கை இல்லை.” – என்றார் எஸ்.பி. திஸாநாயக்க.

பதவியேற்று 27 நாட்களுக்குள் பிரான்ஸ் பிரதமர் ராஜினாமா!

 

பிரான்ஸ் பிரதமர் செபஸ்டியன் லெகோர்னு பதவி விலகியுள்ளார்.

கடந்த செப்டம்பர் 9 ஆம் திகதி பிரான்சின் 47வது பிரதமராக பதவியேற்று, வெறும் 27 நாட்களே ஆகியுள்ள நிலையில் அவர் இவ்வாறு பதவி விலகியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் பிரதமராக செபஸ்டியன் லெகோர்னு கடந்த மாதம் தெரிவுசெய்யப்பட்டார்.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான அவரை, ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் பிரதமராக நியமித்தார்.

இந்த நிலையில்தான், புதிய அமைச்சரவை நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அமைச்சரவையில் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது அரசியலில் விமர்சனத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது. மேலும், சிக்கன பட்ஜெட்டை அடுத்த வருடம் தாக்கல் செய்வதற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதலை பெற கடினமான பணியை செபஸ்டியன் லெகோர்னு எதிர்கொண்டார். இந்த நிலையில்தான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பிரான்சின் பொதுக்கடன் தொடர்ந்து உயர்ந்து கொண்டே உள்ளது. ஜடிபியில் கடன் விகிதம் கிரீஸ், இத்தாலிக்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றத்தில் பிரான்சில்தான் மோசமான நிலையை எட்டியுள்ளது.

ஓராண்டு காலப்பகுதிக்குள் பிரான்ஸில் 4 பிரதமர்கள் பதவி விலகியுள்ளமை அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹட்டன் பிரகடனத்தை மறந்து செயற்படுகிறது அநுர அரசு!

” மலையக அரசியல் தலைமைகள் பேரினவாத அரசியல் சக்திகளோடு சேர்ந்து கதிரை அரசியல் செய்ய நினைப்பதையும், வாக்களித்த மக்களுக்கு வாய்க்கரிசி போட நினைப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. மலையக மக்களின் தேசியம் காக்கவும், இருப்பு காக்கவும் கட்சி அரசியலுக்கு அப்பால் மக்கள் அரசியல் செய்ய மலையக அரசியல் தலைமைகளாக ஒன்று சேர வேண்டும். ”

இவ்வாறு மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை மா சத்திவேல் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு,

” தேசிய மக்கள் சக்தி நிறைவேற்று அதிகாரத்தை தமதாக்கி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில்; அதன் நாடாளுமன்ற தேர்தல் வெற்றியும் ஓராண்டை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் என்பவற்றின்போது வழங்கிய வாக்குறுதியையும், ஹட்டன் பிரகடனத்தையும் முழுமையாக நம்பியே மலையக மக்கள் வாக்களித்தனர்.

எனினும், இவற்றை தற்போது மறந்து ‘வளமான நாடு, அழகான வாழக்கை” வேலை திட்டத்திலிருந்து மலையக மக்களை தூரமாக்கும் பேரினவாத அரசியல் முன்னெடுக்கப்படுகின்றது. இதனை வன்மையாக கண்டிக்கின்றோம். இதனை இப்படியே வளர விடுவது இனவாத மற்ற ஆட்சி என்பதற்கு எதிரானது மட்டும் அல்ல அதுவே மலையக மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இன அழிப்பு வேலைத்திட்டம் எனவும் கூறுகின்றோம்.

மலையக மக்கள் தமிழர்கள் என்பதற்காகவும், தொழிலாளர் என்பதற்காகவும் ஒடுக்கப்படுகின்றனர். அவர்கள் அரை அடிமைகளாக வைக்கப்பட்டுள்ளனர் என சிறுபான்மை இனங்கள் தொடர்பாக ஆராய இலங்கை வந்த ஐ.நா அறிக்கையாளர் பகிரங்கமாக ஊடக சந்திப்பில் அறிவித்துவிட்டு ஐ. நா விலும் அது தொடர்பான அறிக்கை முன்வைத்தார்.

வளமான நாட்டை உருவாக்க 200 வருடங்களாக உழைக்கும் மலையக மக்களுக்கு அழகான வாழ்வு கொடுக்க கடந்த அரசாங்கங்களைப்போல புதிய அரசாங்கத்திடம் எந்தவித வேலைத்திட்டமும் இல்லை என்பது ஆட்சியாளர் மீது நம்பிக்கையீனத்தை ஏற்படுத்துவதோடு, இவர்கள் காலத்திலும் இன அழிப்பு தொடரும் எனும் அச்சத்தையே தோற்றுவித்ள்ளது.

மலையக மக்கள் சுதந்திரத்துக்கு முன்னரான காலனித்துவ ஆட்சியின் கீழ் ஏற்றுமதி பொருளாதரத்தின் தொழிலாளர்களாக பெருந்தோட்டமெனும் சிறைக்குள் அடைக்கப்பட்டவர்களாகவே வைக்கப்பட்டிருந்தனர். நாடு சுதந்திர ம் அடைந்த பின்னரும் சுதந்திர இலங்கையில் பொருளாதார, அபிவிருத்தி பொருளாதார வேலைத்திட்டங்களுக்குள் உள்வாங்காது சிதைவுகுள்ளாகும் மக்கள் சமூகமாகவே வைக்கப்பட்டிருந்ததே வரலாறு.

இந்நிலையில் கடந்த ஆட்சி காலத்தில் அவர்களுக்காக உருவாக்கப்பட்ட மலையக அதிகார சபை தேர்தல் ஆக இயங்குவதற்கான வழிவகைகளை செய்யாது அதனை ஓர் அமைச்சுக்கு கீழ் உள்வாங்கி அதிகார சபையை முடக்குவதற்கு இன்னொரு காலத்தில் முழுமையாக இல்லாத அளிப்பதற்கும் எடுக்கப்படும் முயற்சியானது மலையக தமிழர்கள் தேசிய இனமாக வளர்வதை தடுக்கும் மறைமுக இனவாத செயல்பாடு என்றே அடையாளப்படுத்தலாம்.

மாவலி அதிகார சபை வடக்கின் ஆணையிரவுக்கு அப்பால் யாழ் வளைகுடா வரை சிறகடித்து பறக்கையில் மலையக அதிகார சபையினை கொலை செய்ய எடுக்கும் தீர்மானம் மக்களாட்சி நிலவுகின்றது எனக் கூறும் தேசிய மக்கள் சக்தியின் கூற்று மலையக மக்களைப் பொறுத்தவரை போலியானதாகவே அமைகின்றது.

தேசிய மக்கள் சக்தி தமது ஹற்றன் பிரகடனத்திற்கு எதிராக செயல்படுவது ஏன்? மலையகத்தில் காணப்படும் வெற்று காணிகள், பயிரிடாத காணிகள் மலையக மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச காலத்தில் கூறியதும், தொழிலாளர்களுக்கு 10 பேர்ச்சஸ் கொடுக்கப்படும் என அதேப் பதவிவகித்த ரணில் விக்ரமசங்க கூறியதும் அரசமட்ட தீர்மானமாக அமையாத நிலையில் தேசிய மக்கள் சக்தி மலையக மக்களுக்கு காண கொடுக்கப்படும் எனக் கூறியதை மறந்து பயன்படுத்தாத பெருந்தோட்ட அரச காணிகள் வேறு பொருளாதார உருவாக்கத்திற்காக அதனை முதலாளித்துவத்தின் கைகளிலே ஒப்படைப்பது எந்த வகையில் நியாயமாகும்.

நாட்டினதும் நாட்டு மக்களினதும் வரலாற்று வாழ்வியல் தொன்மை கருதி பழமை வாய்ந்த கட்டடங்கள் பாவனையில் இருந்த பொருட்கள், பாண்டங்கள் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் பாதுகாக்கப்படுவது நாம் அறிந்ததே. மலையகத்தில் அவ்வாறான அவ்வாறானவை அடையாளம் காணப்பட்டுள்ளதா? அப் பிரதேசத்தை பாதுகாப்பதற்கானத் திட்டங்கள் வரையப்பட்டுள்ளன வா?

அண்மையில் நடந்த மலையகம் தொடர்பான நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பௌத்த சமய கலாச்சார அலுவலக அமைச்சர் சுனில் செனவி ‘உலக மரபுரிமை பிரதேசமாக மலையகம் உள்வாங்கவும் சுற்றுலா தலமாக மாற்றி அமைக்கப்படும்” என தெளிவாக கூறினார். இது மலை மக்களையும் அவர்களுடைய உழைப்பையும் காட்சிப் பொருளாக்கி நாட்டுக்கு பணம் உழைக்கும் செயற்பாடே தவிர வாழ்வை உயர்த்தும் செயற்பாடல்ல. அந் நிகழ்வில் 1981ல் எரிக்கப்பட்ட யாழ் நூலகத்திற்கு எவ்வளவு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது எனக் கூறினார். மலையக மக்களின் உயர்வுக்கான வேலை திட்டம் அதற்காக ஒதுக்கப்பட்ட பணம் எதனையும் அவர் கூறவில்லை.

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு உழைப்புக்கேற்ற, வாழ்வுக்கேற்றதும் நியாயமானதுமான ஊதியம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். கடந்த காலத்தில் பெற்றுக் கொடுப்பதாக கூறிய ரூபா 1700 நாங்கள் பெற்றுக் கொடுப்போம் என கூறுகின்ற ஆட்சியாளர்கள் அது காலத்திற்கு ஏற்ற ஊதியமா என சிந்திக்க தவறுவதும் காலத்துக்கேற்ற வாழ்வுக்கேற்ற கௌரவமான ஊதியத்தை கொடுக்காமல் இருப்பதும் மலையக மக்கள் ஏழ்மைக்குள்ளும் வறுமைக்குள்ளும் தள்ளி சிறைவைக்கவே வழிவகுக்கும்.

வடக்கு கிழக்கில் நிகழ்ந்த இனப்படுகொலை இன அழிப்பு இன சுத்திகரிப்பிற்கு எதிராக நீதி கேட்டு அங்கு ஏதோ ஒரு வகையில் நாளாந்தம் மக்கள் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறன. மலையக மக்களுக்கு எதிராக சலனமற்ற இன அழிப்பு நடக்கையில் மலையக அரசியல் தலைமைகள் மௌனம் காப்பது ஏன்?

மலையக கூட்டு கட்சிகளின் தலைவர் ஒருவர் தனித்து வடக்கின் போராட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். ஒடுக்கப்படும் மக்கள் ஒடுக்கப்படும் மக்களின் போராட்டத்தோடு ஒன்றினைய வேண்டும். அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் இவர் தனித்து கலந்து கொண்டதன் மர்மம் என்ன?மலையகத்தின் ஆதரவை வெளிப்படுத்த தவறியதேன் ?

மலையக அரசியல் தலைமைகள் பேரினவாத அரசியல் சக்திகளோடு சேர்ந்து கதிரை அரசியல் செய்ய நினைப்பதும்; வாக்களித்த மக்களுக்கு வாய்க்கரிசி போட நினைப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. மலைய மக்களின் தேசியம் காக்கவும், இருப்பு காக்கவும் கட்சி அரசியலுக்கு அப்பால் மக்கள் அரசியல் செய்ய மலையக அரசியல் தலைமைகளாக ஒன்று சேர வேண்டும். அதுவே மலையகக்கத்துக்கான பலமாக சக்தியாக அமையும். மலையகத்தின் எதிர்காலம் காக்கப்படும். இல்லையேல் மலையகம் காணாமல் போய்விடும் அபாயமுள்ளதையும் உணர்வோம்.” – என்றுள்ளது.

மொட்டு கட்சிக்கு அஞ்சுகிறது அரசு: அடுத்த தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுவோம்!

” 30 வருடகாலம் நிலவிய போரை முடிவுக்கு கொண்டுவந்த தலைவர் மஹிந்த ராஜபக்ச தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதால்தான் இந்நாடு வீழ்ந்தது.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர், முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கொடியைக் கண்டாலேயே இந்த அரசாங்கத்துக்கு நடுக்கம் ஏற்பட்டு விடுகின்றது. கட்சியின் கொடிக்கே இவ்வளவு பயமெனில் நாமல் தொடர்பில் ஆட்சியாளர்களுக்கு எவ்வளவு அச்சம் இருக்க வேண்டும்?

தற்போது வந்துள்ள பயம் தோல்வி பயமாகும்.  அந்த பயம் தொடரட்டும். எந்தவொரு கட்சியாலும் ஆட்சியில் நீடிக்க முடியாது. போரை முடிவுக்கு கொண்டுவந்த மஹிந்த ராஜபக்சகூட தோல்வி அடைந்தார். அது மக்களால் இழைக்கப்பட்ட பெறும் தவறு. அதனால்தான் இந்நாடு வீழ்ந்தது.
கட்சி கொடியை பிடுங்குவதால் எமது பயணம் தடைபடாது. அடுத்த தேர்தலில் நிச்சயம் ஆட்சியைப் பிடிப்போம். ” – என்றார்.

மரக்கறி விலைப்பட்டியல் (07.10.2025)

மரக்கறி விலைப்பட்டியல் (07.10.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (07) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

அநுர அரசு ஊழல்வாதிகளை பாதுகாக்கவில்லை: பொன்சேகா பாராட்டு!

” இலங்கைபோன்ற வீழ்ச்சியடைந்த நாட்டை மீட்டெடுக்க வேண்டுமானால் நாட்டை நேசிக்கக்கூடிய – நாட்டு மக்களுக்காக தன்னை அர்ப்பணிக்க கூடிய சர்வாதிகாரியொருவர் அவசியம்.” – என்று முன்னாள் இராணுவத் தளபதி பீலட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது இந்நாட்டை இதற்கு முன்னர் ஆண்ட அரசுகளைவிட 1000 மடங்கு சிறந்தது என்பதை எனது மனசாட்சியின் பிரகாரம் தெரிவிக்க முடியும். குறைந்தபட்சம் ஊழல் வாதிகளை பாதுகாக்காமல் இருப்பதற்குரிய முதுகெலும்பு இந்த ஆட்சிக்கு இருக்கின்றது. கடந்த காலங்களில் மோசடிகளில் ஈடுபட்டால் பண பலம் இருந்தால் இலகுவில் தப்பிக்க முடியும். ஆனால் இன்று அதற்கு தடைபோடப்பட்டுள்ளது.

சட்டத்தை அமுல்படுத்துவதற்குரிய முயற்சி இடம்பெறுகின்றது. நூற்றுக்கு 100 சதவீதம் வெற்றி இல்லை என்றபோதிலும் அதற்குரிய முயற்சியை பாராட்ட வேண்டும். நாட்டையும், நாட்டு மக்களையும் மேம்படுத்துவதற்குரிய வேலைத்திட்டங்களே எமக்கு அவசியம்.

ஆபிரிக்காவில் மிகவும் ஏழ்மையான நாடாக ரூவண்டா இருந்தது. ஆனால் இன்று ஆபிரிக்காவில் சிறந்த நாடாக அது மாறியுள்ளது. இரட்டை நட்சத்திரம் கொண்ட இராணுவ அதிகாரியொருவரே ஆட்சி பொறுப்பை ஏற்றிருந்தார்.

சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளும் அபிவிருத்தி கண்டுள்ளன. இந்நாடுகளில் இருந்தும் நாம் அனுபவங்களைப் பெறவேண்டும். அங்கிருந்த தலைவர்கள் நேர்மையுடன் செயற்பட்டனர். சட்டத்தை அமுல்படுத்தினர்.

எனவே, இலங்கைபோன்ற வீழ்ச்சியடைந்த நாட்டை மீட்க நல்லதொரு சர்வாதிகாரி இருக்க வேண்டும். அந்த சர்வாதிகாரி நல்ல சர்வாதியாகரியாக இருக்க வேண்டும். நாட்டை நேசிக்கும் சர்வாதிகாரியாக இருக்க வேண்டும். நாட்டுக்காக தன்னை அர்ப்பணிக்க கூடிய சர்வாதிகாரியாக இருக்க வேண்டும். மஹிந்தபோன்ற போலி தேசப்பற்றாளர் அல்லர். ஊழல், மோசடி அற்ற , நாட்டை நேசிக்ககூடிய சர்வாதிகாரி தேவை.” – என்றார்.

வவுனியாவில் விபத்து! இளைஞன் பலி

 

வவுனியா – இராசேந்திரம்குளம் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டர் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர் என்று நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, இராசேந்திரகுளம் பகுதியில இருந்து நெளுக்குளம் நோக்கி மோட்டார் சைக்கிள் ஒன்றில் மூன்று இளைஞர்கள் பயணித்துள்ளனர்.

அந்த மோட்டர் சைக்கிள் இராசேந்திரகுளம் பாடசாலை முன்பாகவுள்ள பஸ் தரிப்பு நிலையத்துடன் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குளளானது.

விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலயில் சிகிச்சைக்கக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் சாம்பல்தோட்டம் பகுதியைச் சேர்ந்த கோபால்ராஜ் நிலக்சன் (வயது 18) என்பவரே மரணமடைந்தவராவார்.

இது தொடர்பில் நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

இறைவரித் திணைக்களத்தின் திறனை மேம்படுத்துவது குறித்து ஆராய்வு!

0
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. வரி வருவாயை விரிவுபடுத்துதல், வரி இணக்கத்தை அதிகப்படுத்துதல் மற்றும் நிலுவையில் உள்ள...

களுத்துறை மண்ணில் கல்வி கௌரவ விழா!

0
களுத்துறை மண்ணில் கல்வி கௌரவ விழா! கல்வி அமைச்சின் பெருந்தோட்டப் பாடசாலைகள் அபிவிருத்திக் கிளையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சின்னையா ஜெயக்குமாருக்கான வரவேற்பு நிகழ்வும், களுத்துறை மாவட்டத்தின் தமிழ் பெருந்தோட்ட பாடசாலைகளின் அதிபர்களையும், ஓய்வுநிலை அதிபர்களையும்...

கலமுதுனை தமிழ் வித்தியாலயத்தில் உதயமாகிறது பழைய மாணவர் சங்கம்!

0
நூற்றாண்டு நோக்கிய பயணம்: கலமுதுனை தமிழ் வித்தியாலயத்தில் உதயமாகிறது பழைய மாணவர் சங்கம்! தொலஸ்பாகை, கலமுதுனை தமிழ் வித்தியாலய பழைய மாணவர் சங்க அங்குரார்ப்பன நிகழ்வு எதிர்வரும் மே 2 ஆம் திகதி பாடசாலை...