Home Blog Page 265

அமெரிக்க, ஜப்பான் விஞ்ஞானிகள் மூவருக்கு மருத்துவ நோபல் பரிசு அறிவிப்பு

அமெரிக்க, ஜப்பான் விஞ்ஞானிகள் மூவருக்கு மருத்துவ நோபல் பரிசு அறிவிப்பு

மருத்துவத்துக்கான நோபல் பரிசு, நோய் எதிர்ப்புத் தன்மை தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக மேரி இ பிரன்கோவ், ஃப்ரெட் ராம்ஸ்டெல், ஷிமோன் சகாகுச்சி ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக உயர்ந்த விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசை வெல்பவர்கள் குறித்த அறிவிப்பு இன்று முதல் வெளியாகத் தொடங்கி உள்ளது.

இன்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மேரி இ பிரன்கோவ், ஃப்ரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகியோர் இந்த ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசை வென்றுள்ளனர்.

இவர்கள், உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் பாதுகாவலர்கள், ஒழுங்குமுறை டி செல்கள் ஆகியவற்றை அடையாளம் கண்டுள்ளனர். இவை, புதிய ஆராய்ச்சித் துறைக்கு வித்திட்டுள்ளன. இந்த கண்டுபிடிப்புகள், மருத்துவ பரிசோதனைகள் மூலம் மதிப்பீடு செய்யப்படும் சிகிச்சை முறையின் வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளன. குறிப்பாக, புற்றுநோய் சிகிச்சைகளை வழங்குவதில் இந்த கண்டுபிடிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

 

கம்பளை, தொலுவ பகுதியில் கோர விபத்து: மூன்று பெண்கள் பலி!

கம்பளை, தொலுவ பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் பலியாகியுள்ளனர்.

கம்பளை நகரில் இருந்து தொலுவ வழி ஊடாக குருகலை நோக்கி பயணித்த காரொன்று, பாதசாரிகள்மீது மோதியுள்ளது.

அதன்பின்னர் வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறிமீதும் மோதியுள்ளது.

கார் மோதியதால் தூக்கி வீசப்பட்ட இரு பெண்கள்மீது லொறியின் பின் டயரும் ஏறியுள்ளது. அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அப்பகுதியில் நின்றுக்கொண்டிருந்த மேலும் ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளார்.

காரை செலுத்திய பெண் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.

உயிரிழந்தவர்கள் சுமார் 60 வயது மதிக்கத்தக்கவர்கள் என தெரியவருகின்றது. விபத்து தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றனர்.

க.யோகா

யாழ். பல்கலைக்கழகத்தின் பொன்விழா கோலாகலமாக முன்னெடுப்பு!

 

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்று பொன் விழா கொண்டாட்டங்கள் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் கோலாகலமாக இடம்பெற்றுவருகின்றன.

ஈழத் தமிழர்களின் தனிப்பெரும் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்து, இன்று பொன்னகவைப் பெருவிழா காண்கிறது.

இலங்கை பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகமாக 1974 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 06 ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்ட இவ் உயர்கல்வி நிலையம், இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாக வியாபித்து நிற்கிறது.

ஐம்பதாவது ஆண்டைக் கடந்திருக்கும் இப்பல்கலைக்கழகத்தின் பன்னிரண்டு பீடங்களும் இணைந்து பொன்விழா நிகழ்வை வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றன.

காலை 09.00 மணிக்கு ஆரம்பமான பொன் விழா நிகழ்வில் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனிவிரத்ன பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கே. எல். வசந்தகுமார அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டிருந்தனர்

பல்கலைக்கழகத்தின் ஐம்பது வருடகால கல்விப் பணி வரலாற்றை எடுத்தியம்பும் வகையில் அமைந்த வரலாற்றுப் பொக்கிஷமான “யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொன்அகவை வரலாறு” எனும் நூலும், பல்கலைக்கழகத்தின் பொன்னகவையை நினைவு கூரும் வகையிலான நினைவு முத்திரை வெளியீடும் இந் நிகழ்வில் சிறப்பாக நடைபெற்றது.

காசாவில் கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க மறுத்தால் அழிவு நிச்சயம்! ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை!

 

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அமைதி திட்டத்தை ஏற்று இஸ்ரேல் பணய கைதிகளை ஒப்படைப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை ஹமாஸ் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து காசா மீதான தாக்குதலை உடனே நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு டிரம்ப் அறிவுறுத்தினார்.

அதை ஏற்று தாக்குதல்களை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் அறிவித்தார்.
ஆனால் நேற்று காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் உதவிப்பொருட்களுக்காக காத்திருந்த இருவர் உட்பட 16 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பட்டினியால் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த தாக்குதல் தொடர்பாக கருத்து வெளியிட்ட இஸ்ரேல் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர், சில குண்டுவீச்சுகள் நிறுத்தப்பட்டாலும், இப்போதைக்கு காசாவில் முழுமையான போர் நிறுத்தம் எதுவும் நடைமுறையில் இல்லை என்று கூறினார்.

இந்நிலையில், காசாவின் கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க மறுத்தால் ஹமாஸ் முழுமையாக அழிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே இஸ்ரேலிய பேச்சு குழு ஒன்று, கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக பாலஸ்தீன குழுவான ஹமாஸ் அமைப்புடன் இன்று எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக் நகரில் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது.

சுற்றுச்சூழல் ஆர்வலர் துன்புறுத்தல்: இஸ்ரேல் மறுப்பு!

காசாவுக்கு கப்பலில் நிவாரண பொருட்கள் எடுத்துச் செல்ல முயன்ற குழுவினரை இஸ்ரேல் ராணுவம் கைது செய்த நிலையில், அதில் இருந்த ஸ்வீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் துன்புறுத்தப்பட்டதாக வெளியான செய்தியை, பொய் என இஸ்ரேல் மறுத்துள்ளது.

மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் காசாவில் 67,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும், பட்டினியால் பலர் இறந்து வருகின்றனர்.

இந்நிலையில், 400க்கும் மேற்பட்ட தன்னார்வ குழுவினர் ‘குளோபல் சுமூத் பிளோடில்லா’ என்ற பெயரில் கப்பல் வழியாக காசாவுக்கு நிவாராண பொருட்களை ஏற்றிக்கொண்டு கடந்த மாதம் கிளம்பினர். இதில் ஐந்து ஆஸ்திரேலியர்களும் இடம்பெற்றிருந்தனர்.

அவர்களை இஸ்ரேல் ராணுவம் சமீபத்தில் சர்வதேச கடல் எல்லையிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்தது. 130க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் நாடு கடத்தப்பட்டனர்.

அதில் மலேஷியாவைச் சேர்ந்த ஹஸ்வானி ஹெல்மி மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த வின்ட்பீல்ட் பீவர் ஆகிய இரு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இஸ்ரேலின் நடவடிக்கை குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டனர்.

‘இஸ்ரேல் ராணுவம் எங்களை விலங்குகள் போல நடத்தியது. ஸ்வீடன் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரெட்டாவை தள்ளிவிட்டனர்.

அவரை இஸ்ரேல் கொடியை அணியும் படி துன்புறுத்தினர்’ என தெரிவித்தனர்.
இதை கண்டித்து சர்வதேச அளவில் போராட்டங்கள் நடந்தது.

இந்நிலையில், இது குறித்து இஸ்ரேல் ராணுவம் அளித்துள்ள விளக்கத்தில்,

” கிரெட்டா தன்பெர்க் மற்றும் சுமூத் பிளோட்டில்லா கப்பலில் வந்த குழுவினர் மீது துன்புறுத்தல் நிகழ்த்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்.
கைதிகளின் அனைத்து சட்ட உரிமைகளும் பாதுகாக்கப்பட்டன. இதில் விசித்திரமான விஷயம் என்னவென்றால் கிரெட்டா மற்றும் பிற செயற்பாட்டாளர்கள் வேண்டுமென்றே தங்கள் நாடு கடத்தலை தாமதப்படுத்தி காவலில் நீண்ட காலம் இருக்க விரும்பினர்.” – என்று கூறப்பட்டுள்ளது.

தமிழருக்கு சர்வதேச நீதி வேண்டும்: ஜெனிவாவில் சிறீதரன் எடுத்துரைப்பு!

 

 

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள், தமிழினப் படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் – சர்வதேச நீதியை எதிர்பார்க்கும் தமிழ் சிவில் சமூகத்துக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

ஜெனிவாவில் நடைபெறும் 60 ஆவது கூட்டத் தொடரின் உபஅமர்வில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

 

‘ 2008 டிசம்பர் முதல் 2009 மே மாதம் வரை இலங்கை அரசு  தமிழர்களைக் கொன்றதன் மூலம் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்தது.

 

இந்த இனப்படுகொலைக்கு ஈழத் தமிழர்கள் சர்வதேச – பாரபட்சமற்ற – நீதியான விசாரணைகளைக் கோருகின்றனர். கடந்த 16 ஆண்டுகளாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றிடம் முறையிட்டு வருகின்றனர்.

 

ஈழத்தமிழர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதையும் நிலைமாறு கால நீதியை மேம்படுத்துவதையும் உறுதி செய்வதற்கான முயற்சிகளுக்கு ஆதரவாக தமிழ் சிவில் சமூகத்துக்கு முழு ஒத்துழைப்பையும் உதவியையும் வழங்க அனைத்து உறுப்பு நாடுகளையும் கேட்டுக்கொள்கிறேன்.” எனவும் சிறிதரன் எம்.ப. குறிப்பிட்டார்.

 

ஐ.நா. பொதுச் சபையின் 3ஆவது குழு உறுப்பினர்கள், இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பரிந்துரைக்க வேண்டும். இலங்கை மீதான மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக்கு நிதி உதவி அளிக்க வேண்டும்.

 

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை நடத்தினர். இதன் இறுதி நாளில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகளுக்குச் சர்வதேச நீதி கோரப்பட்டது.” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மரக்கறி விலைப்பட்டியல் (06.10.2025)

மரக்கறி விலைப்பட்டியல் (06.10.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (06) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

சிட்னியில் 100 தடவைகள் துப்பாக்கிச்சூடு: பயங்கரவாதத் தாக்குதலா?

 

சிட்னி குரோய்டன் பூங்காவில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பயங்கரவாதத் தாக்குதல் அல்ல என உயர் மட்ட பொலிஸ் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

சிட்னி மேற்கில் நேற்றிரவு இடம்பெற்ற இந்த பயங்கரமான துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.

பூங்காவை சூழவுள்ள பகுதிகளின் வீதிகள் மூடப்பட்டதுடன், பொது மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

60 வயது நபரொருவர் கைது செய்யப்பட்டார். அதி உயர் திறன் கொண்ட துப்பாக்கியால் அவர் 100 தடவைகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இரு பொலிஸ் வாகனங்கள் உட்பட பல வாகனங்கள் துப்பாக்கிச்சூட்டால் சேதமடைந்துள்ளன.

கூரைமீதிருந்தே குறித்த நபர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 50 வயது டாக்ஸி சாரதிக்கு வைத்திசாலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.

துப்பாக்கிச்சூட்டுக்குரிய சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 20 பேர்வரை சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

 

மக்களுடனான என் இதயபூர்வமான பிணைப்பை உடைக்க முயன்றால் அது மேலும் வலுவடையும்!

 

– அநுர அரசுக்கு மஹிந்த மறைமுக எச்சரிக்கை

நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதையை அடிப்படையாகக் கொண்ட மக்களின் அன்பு இலாப நோக்கங்களுக்கு அப்பாற்பட்டது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகபூர்வ பேஸ்புக் வலைத்தளத்தில், தமது வாழ்நாளின் பெரும்பகுதியை மக்களிடையே கழித்ததால், மக்களின் அன்பை நன்கு அறிந்திருப்பதாக அவர் பதிவேற்றம் செய்துள்ளார்.

இதன் காரணமாக, அதன் மதிப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மேலும் அதிகமாகி உள்ளது எனவும், இது ஓர் அரசியல் உறவு மட்டுமல்ல, கடினமான ஓர் இதயபூர்வமான பிணைப்பு என்றும் அந்தப் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, அவற்றை உடைக்கும் முயற்சிகள் மூலம் இன்னும் அதிகமான பிணைப்புகளை வலுப்படுத்த முடியும் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதி, மக்களுடன் செலவிடும் இந்த நேரம் முழுவதும் ஒரு தலைவராகத் தான் பெறக்கூடிய மிகப் பெரிய மகிழ்ச்சியை அனுபவிப்பதாகவும் பதிவேற்றம் செய்துள்ளார்.

கோர விபத்து: மூவர் பலி!

 

நாரம்மல, குருணாகல் வீதியில் நாரம்மல நகருக்கு அருகில் லொறியொன்று, இபோச பஸ்சுடன் மாதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குருநாகலிலிருந்து நாரம்மல நோக்கி பயணித்த லொறியின், சாரதி கட்டுப்பாட்டை இழந்து வீதியின் வலது பக்கத்தை விட்டு விலகி, கட்டுநாயக்காவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பஸ்ஸ_டன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் லொறி சாரதி, ஆண் ஒருவர், பெண்கள் இருவர் மற்றும் சிறுவர்கள் இருவர் ஆகியோர் காயமடைந்து நாரம்மல மற்றும் குருநாகல் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது, சிகிச்சை பலனின்றி லொறியின் சாரதி, ஆண் ஒருவர் மற்றும் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் பொலன்னறுவையைச் சேர்ந்த 41, 80 மற்றும் 82 வயதுடையவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

இறைவரித் திணைக்களத்தின் திறனை மேம்படுத்துவது குறித்து ஆராய்வு!

0
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. வரி வருவாயை விரிவுபடுத்துதல், வரி இணக்கத்தை அதிகப்படுத்துதல் மற்றும் நிலுவையில் உள்ள...

களுத்துறை மண்ணில் கல்வி கௌரவ விழா!

0
களுத்துறை மண்ணில் கல்வி கௌரவ விழா! கல்வி அமைச்சின் பெருந்தோட்டப் பாடசாலைகள் அபிவிருத்திக் கிளையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சின்னையா ஜெயக்குமாருக்கான வரவேற்பு நிகழ்வும், களுத்துறை மாவட்டத்தின் தமிழ் பெருந்தோட்ட பாடசாலைகளின் அதிபர்களையும், ஓய்வுநிலை அதிபர்களையும்...

கலமுதுனை தமிழ் வித்தியாலயத்தில் உதயமாகிறது பழைய மாணவர் சங்கம்!

0
நூற்றாண்டு நோக்கிய பயணம்: கலமுதுனை தமிழ் வித்தியாலயத்தில் உதயமாகிறது பழைய மாணவர் சங்கம்! தொலஸ்பாகை, கலமுதுனை தமிழ் வித்தியாலய பழைய மாணவர் சங்க அங்குரார்ப்பன நிகழ்வு எதிர்வரும் மே 2 ஆம் திகதி பாடசாலை...