Home Blog Page 262

காசா அமைதித் திட்டம்: இஸ்ரேல், ஹமாஸ் ஒப்புதல்!

காசா அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இரண்டு வருடமாக நீடிக்கும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதில், இது ஒரு வரலாற்று மற்றும் முன்னெப்போது நிகழாத நிகழ்வாகும் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

எகிப்தில் நடந்த அமைதி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையின் மூன்றாவது நாளில், ஹமாஸ் குழுவினர் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பதற்கும், அதே நேரத்தில் இஸ்ரேல் தனது படைகளை திரும்பப் பெறவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்,
‘ இஸ்ரேலும், ஹமாசும் அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன என்பதை அறிவிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இதனால் அனைத்து பிணைக் கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அமைதியை உருவாக்க, முதல்கட்ட ஒப்பந்தத்தின் படி தனது பாதுகாப்பு படையினரை இஸ்ரேல் திரும்ப பெறும். அனைத்து தரப்பினரும் நியாயமாக நடத்தப்படுவார்கள். அரபு, முஸ்லிம் நாடுகள், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கும் இது ஒரு சிறந்த நாள்.

இதற்காக, எங்களுடன் இணைந்து பணியாற்றிய கத்தார், எகிப்து மற்றும் துருக்கியின் மத்தியஸ்தர்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். அமைதியை ஏற்படுத்துபவர்கள் பாக்கியவான்கள்.” – எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மரக்கறி விலைப்பட்டியல் (09.10.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

ஊழல், மோசடி விசாரணைகளை குழப்புவதே எதிரணியின் நோக்கம்

“இலங்கையில் ஊழல், மோசடிகள் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு ஒவ்வொருவராகக் கைது செய்யப்படும் இந்தச் சந்தர்ப்பத்தில், ஆணைக்குழுவின் பணிப்பாளர் மீது எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைக்கின்றன. முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளைக் குழப்புவதே அவர்களின் நோக்கமாகும்.”

– இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“இலஞ்ச, ஊழல் தொர்பான விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் நியமனம் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அவரால் பதிலளிக்கப்பட்டுள்ளது. செயற்பாட்டு ரீதியில் அவர் அவரது நடவடிக்கைகளை நாட்டுக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்.

எனவே, இவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக் கொண்டிருப்பதால் எவ்வித பிரயோசனமும் இல்லை. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு இது குறித்த சட்டம் தொடர்பில் அனுபவம் இருப்பதாக நம்புகின்றோம்.

அதற்கமைய நாடாளுமன்றத்தில் அரசமைப்பு சபையின் ஊடாக இடம்பெற்ற தேர்வு மோசடியானது என்றால், அந்த நியமனத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்ல முடியும்.

அதுவே சரியான அணுகலாகும். அதனை விடுத்து ஆங்காங்கு விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருப்பதால் எவ்வித பிரயோசனமும் இல்லை.

ஊழல், மோசடிகள் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு ஒவ்வொருவராகக் கைது செய்யப்படும் இந்தச் சந்தர்ப்பத்தில், இலஞ்ச, ஊழல் தொர்பான விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் மீது அவதூறு பரப்புவதன் ஊடாக, கம்மன்பில போன்றோரின் தேவை என்ன என்பது தெளிவாகின்றது. இலஞ்ச, ஊழல் குறித்த விசாரணைகளைக் குழப்புவதே இவர்களின் நோக்கமாகும்.” – என்றார்.

ஜெனிவா தீர்மானம்: வெளிவிவகார அமைச்சர் இன்று விசேட அறிவிப்பு!

“ஜெனிவா விவகாரமானது கடந்த காலங்களில் அரசியல் உதைப்பந்தாட்டமாகவே பயன்படுத்தப்பட்டுவந்துள்ளது. அவ்வாறானதொரு நிலையை நாம் ஏற்படுத்தமாட்டோம். எமது நாட்டு மக்களுக்குரிய சுதந்திரம், உரிமைகளைப் பாதுகாப்பதற்கு சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அத்துடன், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை விவகாரம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் சபையில் இன்று (09) விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளார் எனவும் அவர் கூறினார்.
அமைச்சரவைப் பேச்சாளர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் தெளிவுபடுத்திவிட்டார். ஜெனிவா தீர்மானத்துடன் உடன்படவில்லை என்பது திட்டவட்டமாக எடுத்துரைக்கப்பட்டது.

கடந்தகாலங்களில் இலங்கையின் நீதித்துறை சுயாதீனம் பற்றி சர்வதேசத்துக்கு சந்தேகம் இருந்தது. ஆனால் நீதிமன்ற கட்டமைப்பு சுயாதீனமாகவே உள்ளது என்பதை கடந்த ஒரு வருடமாக நாம் நிரூபித்துக்காட்டியுள்ளோம். எவ்வாறான குற்றச்சாட்டாக இருந்தாலும் எமது நீதிமன்ற கட்டமைப்புக்குள் விசாரித்து, நீதியை பெற்றுக்கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எமது நாட்டு மக்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு சட்ட மறுசீரமைப்புகள் அவசியம் எனில் அதனையும் செய்வதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்.” -என்றார்.

காட்டு யானைகள்  அட்டகாசம்! 33 தென்னை மரங்கள் நாசாம்!!

காட்டு யானைகள்  அட்டகாசம்!
33 தென்னை மரங்கள் நாசாம்!!

அட்டாளைச்சேனை பிரதேச சபை அமைந்துள்ள புறத்தோட்டம்  பகுதியில் இன்று அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் பயன்தரக்கூடிய 33 தென்னை மரங்களை அழித்து நாசப்படுத்தியுள்ளன.

அதிகாலை 2 மணியளவில் புறத்தோட்டம் பகுதிக்குள் மூன்று காட்டு யானைகள் உட்புகுந்து ஏ.ஆர். உபைதுல்லா என்பவரின் காணியில் பராமரிக்கப்பட்டு வந்த சுமார் 33 பயன்தரும் தென்னை மரங்களை அழித்து நாசப்படுத்தியுள்ளன.

மேலும், குறிப்பிட்ட இந்த மூன்று காட்டு யானைகளும், இந்தப் பகுதியிலுள்ள வீடுகளுக்குச் செல்ல முற்பட்ட போதிலும் மக்கள் வீதிகளுக்கு வந்து சத்த வெடில் சுட்டு யானைகளை விரட்டியுள்ளனர். இதன் மூலம் இன்னும் பாரிய அழிவுகள் தடுக்கப்பட்டுள்ளன என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

அட்டாளைச்சேனை பிரதேச சபை அமைந்துள்ள புறத்தோட்டம் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது எனவும், இதற்குப் பிரதான காரணம் பிரதேச சபையின் அருகில் உள்ள தனியார் காணியொன்றில்  பிரதேச சபையால் தொடர்ச்சியாகக் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதேயாகும் எனப் பாதிக்கப்பட்ட தென்னம் தோட்ட உரிமையாளர் கவலையுடன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மேலும், எல்லைப் பகுதியில் யானை வேலிகள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை  மக்கள் நீண்ட காலமாக  முன்வைத்துள்ள போதிலும், இதுவரை யானை வேலிகள் அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

எனவே, புறத்தோட்டம் கிராமத்துக்குள் காட்டு யானைகள் உட்புகுந்து மக்களின் உடமைகளையும், பயிர்களையும், தென்னை மரங்களையும் அழித்துச் சேதப்படுத்துவதை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலாளர், பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் தடுப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மலையக அதிகார சபை குறித்து இனவாத கண்ணோட்டம்: சபையில் மனோ காட்டம்!

 

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,

” ஜனாதிபதி, எனக்கு எழுதிய கடிதத்தில், “இந்த #மலையக #அதிகாரசபை பற்றிய (under review) மீளாய்வு நடைபெறுகிறது” என பதில் வழங்கி விட்ட பிறகும், ஏன் சில மலையக அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் “அப்படி எதுவுமே, இல்லை” என்பது போல வெட்கமில்லாமல் பொய் பேச வேண்டும்?

இது பற்றி எதுவுமே தெரியாமல், அரசாங்கத்துக்கு உள்ளே இந்த மலையக எம்பீக்கள் “சும்மாவே” உட்கார்ந்து இருக்கிறார்கள், போலும்!

“இது தொடர்பான, மேல் நடவடிக்கைகள் பற்றி எனக்கு அறிவிப்பதாகவும்”, ஜனாதிபதி தனது கடிதத்தில் எனக்கு உறுதி கூறியுள்ளார்.

எதுவாயினும், “எக்காரணம் கொண்டும் இந்த சபையை மூடி விட வேண்டாம்” என நான் மீண்டும் பாராளுமன்றத்தில் இன்று வலியுறுத்தினேன்.

குறிப்பாக, பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் #பிரபாத்_சந்திரகீர்த்தி, மேலதிக செயலாளர் #தீப்திகா_குணரத்ன, சட்ட அதிகாரி #தில்ஷானி_பண்டார ஆகிய மூன்று அதிகாரிகள் இனவாத கண்ணோட்டத்தில் இந்த சபையை மூடி விடுவதில் உறுதியாக இருக்கிறார்கள் என பெயர் குறிப்பிட்டும் சபையில் கூறினேன்.

“இவர்கள் என்ன, அரசாங்க அமைச்சர்களை விட பலமானவர்களா? நாம் உருவாக்கும் சட்டத்தை அமுல் செய்யவே அதிகாரிகள் இருக்கிறார்கள். சட்டம், கொள்கைகளை உருவாக்குவது, பாராளுமன்றம்” என்றும் கூறினேன்.

“தமுசெலா எதனட வெலா பம்பு-கஹன்ன எபா” என்றும் சுத்த சிங்களத்தில் சொன்னேன்.

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து உருகுலைந்த நிலையில் சடலம் மீட்பு!

 

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏந்திச் செல்லும் கொத்மலை ஓயாவில் (08) அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் உருகுலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியின் லிந்துலை பகுதியில் கொத்மலை ஓயாவில் சடலம் ஒன்று மிதந்து கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு பொது மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பொலிஸாரால் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நுவரெலியா நீதவான் சம்பவ இடத்திற்கு வந்து பரிசோதித்த பின்னர், பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் சிறப்பு தடயவியல் வைத்தியரிடம் சடலம் ஒப்படைக்கப்படும் என லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் அடையாளம் காணமுடியாத நிலையில் உருக்குலைந்து காணப்படுவதாக இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

வி.தீபன்ராஜ், கௌசல்யா

வடக்கில் ஜனவரி முதல் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை

01.01.2026 இலிருந்து வடக்கு மாகாணம் முழுவதிலும் லஞ்ச் சீற் பாவனையை தடை செய்வது எனவும், பதிலீடாக வாழையிலையைப் பயன்படுத்துவது மற்றும் உணவுத்தட்டுக்களை கொதிக்க வைப்பது ஆகியவற்றை பின்பற்றலாம் என்றும் இது தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றாத உள்ளூராட்சி மன்றங்கள் தீர்மானம் நிறைவேற்றுவது எனவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் கௌரவ மேயர்கள், கௌரவ தவிசாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்திலுள்ள மாநகர சபைகளின் மேயர்கள், நகர சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் ஆகியோருக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (07.10.2025) நடைபெற்றது.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், பிரதேச சபைகளில் பணியாற்றுபவர்களின் எண்ணங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். மக்கள் பல்வேறு அனுமதிகள் தாமதமடைவதாக சுட்டிக்காட்டுகின்றார்கள். மக்களுக்கான சேவைகளை துரிதமாக செய்து கொடுக்க வேண்டும். தவிசாளர்களும், செயலாளர்களும் ஒன்றுபட்டுச் செயற்படுவதன் ஊடாகவே அபிவிருத்தி சாத்தியமாகும்.

திண்மக் கழிவு அகற்றல் உள்ளூராட்சி மன்றங்களுக்கு சவாலாகி வருகின்றன. திண்மக் கழிகளை தரம்பிரிக்கும் நிலையங்களை ஒழுங்காக செயற்படுத்தாதன் காரணமாக மக்கள் அதற்கு எதிர்ப்பு வெளியிடுகின்றார்கள். எனவே அது தொடர்பில் சபைகள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.

போக்குவரத்து நெரிசல்களைக் கட்டுப்படுத்துவதற்காக ஒருவழிப் பாதைகளை அறிமுகப்படுத்தல், கனரக வாகனங்களின் பாவனைக்கு நேரக்கட்டுப்பாடுகளை விதித்தல் ஆகியனவற்றை செயற்படுத்தவேண்டும். இது தொடர்பில் பொலிஸாரின் ஒத்துழைப்பு உள்ளூராட்சி மன்றங்களுக்கு பெற்றுத்தரப்படும்.

எதிர்வரும் மழை காலத்துக்கு முன்னர் சபைகளுக்கு உட்பட்ட அனைத்து வாய்க்கால்கள், மதகுகளை துப்புரவு செய்யுங்கள். சில சபைகள் ஏற்கனவே எங்களால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவான நடவடிக்கையை எடுத்துள்ளன. அதை ஏனைய சபைகளும் செய்ய வேண்டும். அதேநேரம், வெள்ளம் வடிந்தோடுவதற்கு தடையாக அமைந்துள்ள சட்டமுரணான கட்டுமானங்களை உடனடியாக அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கட்டங்களுக்கான குடிபுகு சான்றிதழைப் பெற்றுக் கொள்வதை கட்டாயமாக்குவதுடன் அவ்வாறு பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் உள்ளூராட்சி மன்றங்கள் ஆரம்பிக்கவேண்டும். அதேநேரம், உள்ளூராட்சி மன்றங்களுக்கு சொந்தமான கடைகள் பல உரிமம் மாற்றம் செய்யப்படாமல் நீண்ட காலமாக உள்ளன. அவற்றைத் தீர்ப்பதற்கு விரைவான பொறிமுறையைத் தயாரிக்கவேண்டும்.

உள்ளூராட்சி மன்றங்கள் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு விதமான முதலீட்டாளர்களையும் ஈர்க்கவேண்டும். முதலீட்டாளர்கள் அனுமதிகளைப் பெற்றுக் கொள்வதில் உள்ள இழுபறிகள் காரணமாக திரும்பிச் செல்கின்றனர். எனவே உள்ளூராட்சி மன்றங்கள் தங்கள் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் முதலீட்டாளர்களை ஈர்த்துக்கொள்ளவேண்டும். இதேநேரம், முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால குத்தகையை வழங்குவதற்கு உள்ளூராட்சி மன்றங்கள் தங்களின் சபைத் தீர்மானத்துடன் உரியவாறு அனுப்பி வைத்தால் அனுமதி வழங்க முடியும்.

அதேபோல தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்கள் கவனம் செலுத்த வேண்டும். ஆயிரக்கணக்கான மாணவர்கள் கற்கின்ற தனியார் கல்வி நிறுவனங்கள் உரிய சுகாதார வசதிகளைக் கொண்டிருப்பதில்லை. பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஊடாக அவற்றைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சபைகள் தங்களின் வருமானங்களை உயர்த்தும் வகையில், மிக நீண்ட காலம் மேற்கொள்ளப்படாதுள்ள சோலை வரி மீளாய்வை துரிதமாகச் செய்து முடிக்க வேண்டும். அதைப்போல உள்ளூராட்சி மன்றங்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நடமாடும் சேவைகள் மக்களிடத்தில் வரவேற்பை பெற்றுள்ளன. அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும். சபைகள் தங்களின் ஆளுகைக்கு உட்பட்ட மயனாங்களின் எல்லைகளை உரியமுறையில் அடையாளப்படுத்தி அவற்றை அழகுபடுத்தவேண்டும். அதேபோன்று தங்கள் பிரதேச எல்லைக்குள் மரம் நடுகையை ஊக்குவிக்கவேண்டும். ஏற்கனவே தன்னார்வமாக செயற்படுவதற்கு தயாராகவுள்ள நிறுவனங்களுடன் இணைந்து அதனைச் செயற்படுத்தலாம்.

வாகனப் பாதுகாப்பு தரிப்பிடங்கள் ஒழுங்குமுறைப்படுத்தப்படுவதுடன் அங்கு ரசீது வழங்குபவர்களுக்கு சீருடை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என ஆளுநர் குறிப்பிட்டார்.

இறைச்சிக்கடைகள் குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் வடக்கு மாகாணத்தில் சில பிரச்சினைகள் உள்ளமையை தவிசாளர்கள் ஆளுநருக்கு சுட்டிக்காட்டினர். இறைச்சிக்கடைகள் கேள்விகோரப்படும்போது செயற்கையாக அதிக தொகை நிர்ணயிக்கப்படுகின்றது என்றும் இதனால் இறைச்சியின் விற்பனை விலை அதிகரிக்கின்றது எனவும் குறிப்பிட்டனர். வடக்கு மாகாண ரீதியான ஒழுங்குபடுத்தலை மேற்கொள்ளுமாறு ஆளுநரைக் கோரினர். வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்துடன் கலந்துரையாடி இந்த விடயத்தை ஒழுங்குபடுத்துவதாக ஆளுநர் பதிலளித்தார்.

சந்தைகளில் விவசாயிகளின் கழிவுப் பிரச்சினை தொடர்பிலும் ஆராயப்பட்டது. அதை நடைமுறைப்படுத்துவதிலுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் பேசப்பட்டது. டிஜிட்டல் விலைப் பலகையைக் காட்சிப்படுத்தி ஏனைய சந்தைகளிலுள்ள விலை நிலவரங்களை தெரியப்படுத்துவதன் ஊடாக இடைத்தரகர்களை இல்லாமல் செய்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் சந்தைக் கழிவு முறைமையை நீக்குவதற்கு ஆளுநரால் அறிவிக்கப்படும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தயாராகவிருப்பதாகவும், சில இடங்களில் அதனைச் செயற்படுத்த பொலிஸாரின் ஒத்துழைப்பை பெற்றுத் தரவேண்டும் எனவும் தவிசாளர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்குரிய ஒழுங்குகளைச் செய்வதாக ஆளுநர் குறிப்பிட்டார்.

இந்தக் கலந்துரையாடலில் சர்வதேச நீர் மேலாண்மை நிறுவனத்தால், நீர் முகாமைத்துவம் தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்களால் செய்யப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன. குறிப்பாக குழாய் கிணறுகள் வர்த்தக மற்றும் விவசாய நோக்கங்களில் அமைக்கப்படும்போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் மற்றும் எதிர்காலத்தில் அதனை எவ்வாறு ஒழுங்குமுறைப்படுத்துவது என்பன தொடர்பில் ஆராயப்பட்டன.

மேலும், நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடபிராந்திய பணிப்பாளர் தலைமையிலான குழுவினரால் சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன. இதன்போது, பூர்வாங்க திட்டமிடல் அனுமதிக்கு தேசிய ரீதியாக ஓர் ஏற்பாடு உள்ளபோதும் வடக்கு மாகாணத்தில் பிறிதொரு நடைமுறை பின்பற்றப்படுவது தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது. அதனை தேசிய ரீதியில் பின்பற்றப்படும் நடைமுறையை எதிர்காலத்தில் பின்பற்றுவதற்கு தயாராகவுள்ளதாக, நகர அபிவிருத்தி அதிகார சபையினரால் பதிலளிக்கப்பட்டது.

உள்ளூராட்சி மன்றங்களின் தீர்மானங்களுக்கு அமைவாகவே உள்ளூராட்சி மன்றங்களுக்கு சொந்தமான வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்யுமாறு தவிசாளர்களால் ஆளுநரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இது தொடர்பில் மாவட்டச் செயலர்களுடன் கலந்துரையாடுவதாக ஆளுநர் குறிப்பிட்டார்.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு பாதீட்டுக்கு முன் தீர்வு காண முயற்சி!

🛑 “மலையகம் மகிழ்ச்சி” : காணி
உரிமை வழங்க ஏற்பாடு: 12 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நிகழ்வு!

🛑 மலையக மக்களுக்கான இந்தியாவின் 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தின் 4 ஆம் கட்டமாக 4 ஆயிரத்து 700 வீடுகளை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

🛑 இதன் ஆரம்பக்கட்டமாக 2 ஆயிரத்து 56 பயனாளிகளுக்கு வீடுகள் அமைக்கப்படுகின்றன. இதற்குரிய காணி
உரித்து கையளிக்கும் ( காணி
உரித்துக்குரிய ஆவணம்) நிகழ்வு எதிர்வரும் 12 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் பண்டாரவளையில் நடைபெறுகின்றது. இந்திய தூதரக அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர்.

🛑 பதுளை, கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, மாத்தளை, காலி, மாத்தறை, மொனறாகலை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இருந்தே பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். அதிக மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

🛑 மலையக மக்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி வழங்கப்படும். இதன் ஆரம்பக்கட்டமாக ஏற்கனவே வீடுகளைப் பெற்றவர்களுக்கு காணி உரித்து வழங்கும் நிகழ்வும் 12 ஆம் திகதி பண்டாரவளையில் நடைபெறும்.

🛑 மாடி லயன் திட்டம் அல்ல. மலையக மக்களுக்கு தனி வீடுகளே அமைக்கப்படும்.

🛑 மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கு எதிர்பார்க்கின்றோம்.

🛑 மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு வரவு- செலவுத் திட்டத்துக்கு முன்னர் தீர்வொன்றை காண்பதற்கு எதிர்பார்க்கின்றோம்.

ஆர்.சனத்

(அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது பெருந்தோட்டத்துறை அமைச்சர், பிரதி அமைச்சர் ஆகியோர் வெளியிட்ட கருத்துகளின் சுருக்கம்.)

வீடியோ கருத்து பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது

மலையகம் மகிழ்ச்சி: 2000 பேருக்கு 12 ஆம் திகதி காணி உரிமைக்கான ஆவணம்

மலையக மக்களுக்கான இந்தியாவின் 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தில் 4 ஆம் கட்டமாக 4 ஆயிரத்து 700 பயனாளிகளுக்கு வீடுகளை கையளிக்க திட்டமிட்டுள்ளோம். இதன் முதற்கட்டமாக 2 ஆயிரம் வீட்டு அலகுகளுக்குரிய உரிமைப் பத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வு எதிர்வரும் 12 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் பண்டாரவளையில் நடைபெறும்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இந்த தகவலை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் வெளியிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அழகான இல்லம், ஆரோக்கியமான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் மலையக மக்களுக்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. 200 வருடகால வரலாற்றைக்கொண்ட எமது மக்களுக்குரிய வீட்டுரிமை, காணி உரிமை என்பன மிக முக்கிய கோரிக்கைகளாக அமைந்தன.

எமது மக்களுக்காக இந்தி அரசாங்கத்தால் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டது. இந்த 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தில் 4 ஆம் கட்டமாக 4 ஆயிரத்து 700 பயனாளிகளுக்கு வீடுகளை கையளிக்க திட்டமிட்டிருந்தோம். இதன் முதற்கட்டமாக 2 ஆயிரம் பேருக்கு எதிர்வரும் 12 ஆம் திகதி ஜனாதிபதியால் பண்டாரவளையில் வைத்து கடிதங்கள் கையளிக்கப்படும். 10 பேர்ச்சஸ் காணியும், அந்த காணிக்குரிய உரித்தும் அன்றைய தினம் வழங்கப்படும். இந்நிகழ்வானது மலையக மக்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்.

மலையக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு காத்திருக்கின்றோம். மிகுதியான வீடுகளையும் விரைவில் கட்டி முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். எமது மக்களுக்காக இந்தியா வழங்கிவரும் உதவிகளுக்கு நன்றி.” – என்றார்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

கலமுதுனை தமிழ் வித்தியாலயத்தில் உதயமாகிறது பழைய மாணவர் சங்கம்!

0
நூற்றாண்டு நோக்கிய பயணம்: கலமுதுனை தமிழ் வித்தியாலயத்தில் உதயமாகிறது பழைய மாணவர் சங்கம்! தொலஸ்பாகை, கலமுதுனை தமிழ் வித்தியாலய பழைய மாணவர் சங்க அங்குரார்ப்பன நிகழ்வு எதிர்வரும் மே 2 ஆம் திகதி பாடசாலை...

ஈரான் தனித்துவிடப்படவில்லை: ரஷ்யாவுக்கு நன்றி தெரிவிப்பு!

0
ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடினை இன்று (27) சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இதன்போது ஈரானுக்கு ரஷ்யா வழங்கிவரும் உறுதியான தொடர் ஆதரவிற்கு அரக்ச்சி...

டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால தங்குமிடங்கள் அமைப்பது குறித்து ஆராய்வு!

0
‘தித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான இடைக்கால தங்குமிடங்கள் அமைப்பது தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம், பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) தலைமையில் நேற்று (ஏப்ரல் 26) இராணுவத் தலைமையகத்தில்...