Home Blog Page 261

ஐ.எம்.எவ். தாளத்துக்கு ஆடுகிறது அநுர அரசு!

” தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையின் 105 ஆவது பக்கத்தில், புதிய கடன் மறுசீரமைப்பின் கீழ் புதிய நிபந்தனைகளுடன் கூடிய சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் எட்டப்படும் என்று கூறப்பட்டிருந்தாலும், அது முன்னெடுக்கப்படாது, முந்தைய அரசாங்கத்தின் இணக்கப்பாடு அதே வடிவத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இது போன்ற இன்னும் பல விடயங்கள் வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் கொள்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. மின்சாரக் கட்டணத்தை 33% ஆல் குறைப்போம், ரூ.9000 கட்டணத்தை ரூ.6000 ஆகவும், ரூ.3000 கட்டணத்தை ரூ.2000 ஆகவும் குறைத்து நிவாரணம் வழங்குவதாகச் சொன்னாலும் அது எதுவும் நடக்கவில்லை. மின்சாரக் கட்டணத்தை 15% குறைத்தனர். இப்போது மீண்டும் 6.8% ஆல் மின்சார கட்டணத்தை அதிகரிக்கப் போகின்றனர். செலவுகளைச் சரியாகக் கணக்கிடாமலே இவ்வாறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.” என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

159 பெரும்பான்மையை வைத்துக் கொண்டு, IMF இன் தாளத்திற்கு ஆடுவது ஏன்? என்பதில் எமக்கு பிரச்சினை காணப்படுகின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு ஆடாமல், மாற்றத்தை வேண்டியே, தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்தே   மக்கள் ஆணையைப் பெற்றுத் தந்தனர். 2028 முதல் நாம் ரூ. 5 பில்லியன் கடனைச் திருப்பிச் செலுத்த வேண்டும். நமது நாட்டின் முதலீட்டுச் சூழலில் பல குறைபாடுகள் காணப்படுவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கூறுகிறது.

கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது, நிறுவன மற்றும் அதிகாரிகள் மற்றும் அதிகாரத்துவ தோல்வி, ஒழுங்குமுறை நடவடிக்கைகள் தொடர்பில் முன்கூட்டியே கணிக்க இயலாமை, வெளிப்படைத்தன்மையில் காணப்படும் பிரச்சினைகள், கட்டமைப்பு சார் பிரச்சினைகள், அரச நிறுவனங்கள் தொடர்பான பாரதூரமான பிரச்சினைகள் என குறிப்பிட்டு முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்குவதில் பல சிக்கல்கள் காணப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளன. நமது நாட்டின் ஆடை ஏற்றுமதிக்கான மிகப்பெரிய சந்தை வாய்ப்பைக் கொண்ட அமெரிக்கா கூட இப்போது இதைச் சொல்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

🟩 நாட்டில் வறுமை அதிகரித்துள்ளது.

உலக வங்கியின் அறிக்கையின் படி, நமது நாட்டில் வறுமை மிக உயர்ந்த மட்டத்தில் காணப்படுகின்றன. வறுமை அதிர்வுகள் உருவாகி, 2019 உடன் ஒப்பிடும்போது உண்மையான ஊதியங்களும் தொழிலாளர் படை பங்கேற்பும் குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றன. ஒரு வீட்டலகின் பண்டங்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல், வேலைவாய்ப்பு உருவாக்கம் பலவீனமான மட்டத்தில் காணப்படுகின்றன, ஊட்டச்சத்து குறைபாடு உயர் மட்டத்தில் காணப்படுகின்றன, உணவு பாணங்களின் விலைகள் அதிகரித்து காணப்படுகின்றன என்று உலக வங்கி கூறுகிறது. செல்வந்த குடும்பங்களை விட வறிய குடும்பங்கள் மூன்று மடங்கு அதிகமாக உணவுக்காகச் செலவிடுகின்றன. வறுமைக் கோட்டிற்கு உள்ளேயும், அதற்கு அண்மித்த நிலையில் ஏராளமான மக்களும் காணப்படுகின்றனர் என்று உலக வங்கி குறிப்பிடும் போது, நமது நாட்டில் 50% ஆனோர் ஏழ்மை நிலையை அடைந்துள்ளனர் என்று Center For poverty analysis குறிப்பிடுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

🟩 2028 இல் கடனை எவ்வாறு திருப்பிச் செலுத்துவது?

இத்தகைய சூழ்நிலைக்கு மத்தியில், நமது நாடு திருப்திப்படக் கூடிய நேரடி அந்நிய முதலீட்டைப் பெறுகிறதா, புதிய தொழில்முயற்சிகளை உருவாக்குகின்றனவா, வேலையின்மை விகிதத்தைக் குறைக்கின்றதா என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். மக்களின் கைகளில் பணப்புழக்கம் அதிகரித்து வருகிறதா? வறுமையை ஒழிக்க சரியான வேலைத்திட்டம் காணப்படுகின்றனவா? என்ற விடயங்களைப் பார்க்கும்போது, ​​2028 ஆம் ஆண்டில் ஆண்டுதோறும் 5 பில்லியன் டொலர் கடன் தொகையை திருப்பிச் செலுத்த பல சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது தெளிவாகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜெனீவா தீர்மானத்தின் மீது நடத்தப்பட்ட விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்களின் போது, ​​47 நாடுகளில் 43 நாடுகள் நமது நாட்டின் அரச கொள்கை குறித்து நேர்மறையாகப் பேசின என தெரிவிக்கப்பட்டன. அவ்வாறு சாதகமாக பேசினால், ஒரு நாடாக எம்மால் முன்வைக்கப்பட்ட திட்டத்தை எதிர்த்திருந்தால், எங்களுக்கு சாதகமாகப் பேசிய 43 நாடுகளின் வாக்குகளை எமக்கு சாதகமாக பெற முடியாமல் போனது ஏன் என்ற விடயத்தில் பிரச்சினை காணப்படுகின்றன என்று எதிர்க்ட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

🟩 ஜெனீவாவில் எங்களுக்கு ஆதரவான 43 நாடுகளின் வாக்குகளைப் பெற முடியாமல் போனதற்கான காரணம் தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.

இந்த 47 நாடுகளில் 43 நாடுகள் நமக்கு ஆதரவாக இருந்தால், அந்நாடுகளை எமக்கு ஆதரவான வாக்குகளாக மாற்ற முடியாமல் போனமை பிரச்சினைக்குரிய விடயமாகும். இது நமது நாட்டின் இராஜதந்திரக் கொள்கையில் காணப்படும் ஓர் பலவீனமாகும். 2009 யுத்த வெற்றியைத் தொடர்ந்து இலங்கையால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை வெல்ல முடிந்தது. அன்று, எமக்கு ஆதரவாக 29 வாக்குகளும், எதிராக 12 வாக்குகளும் கிடைத்தன. இதற்கான முக்கிய காரணம் வெற்றிகரமான மற்றும் வலுவான இராஜதந்திர தலையீடு காணப்பட்டமையாகும். மனித உரிமைகள் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த கலாநிதி தயான் ஜயதிலக, தனியாக 29 வாக்குகளைத் திரட்டினார். இப்போது நடந்திருப்பது கடுமையானதொரு பிரச்சனையாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 முற்போக்கு தேசியவாதத்தால் நாம் ஒன்றாய் இணைந்து முன்னோக்கிச் செல்வோம்.

எனவே, இந்த தருணத்திலாவது கூட, இந்தத் தோல்வியில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, ஒரு நாடாக, இன, மத, நிறம், சாதி, வர்க்க மற்றும் கட்சி வேறுபாடுகளை களைந்து, முற்ப்போக்கு தேசியவாதத்தை, இலங்கையர் என்ற அடையாளத்தை எமது பக்க பலமாக மாற்றி, அனைவரும் ஒன்றாய் இணைந்து, ஒரு தாய் பிள்ளைகள் போல, நல்லிணக்கம், புரிந்துணர்வு, சகோதரத்துவம், ஒற்றுமை என்பவற்றை வலிமையாகக் கொண்டு, நாட்டின் பிரச்சினைகளை நாட்டிற்குள்ளேயே தீர்த்துக் கொண்டு, இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் காண வேண்டும். உள்நாட்டில் நல்லிணக்க செயல்முறை முறையாக முன்னெடுத்தால், வருடாந்தம் ஜெனீவா செல்லும் பிரச்சினையை தீர்ததுக் கொள்ள முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

 

ரூ. 1700 நிச்சயம் கிடைக்கும்: ஓரிரு வாரங்களுக்குள் பேச்சு!

 

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் இன்று நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளது.

நாளாந்த சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை வழங்குவது தொடர்பிலேயே இச்சந்திப்பில் கலந்துரையாடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், மேற்படி சந்திப்பு விரைவில் நடக்கும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

‘பெருந்தோட்ட கம்பனிகள் கால அவகாம் கோரி இருந்தன. ஒரு மாத காலப்பகுதிக்குள் அவர்களின் அறிக்கையை முன்வைக்குமாறு நாம் வலியுறுத்தி இருந்தோம்.

பெருந்தோட்ட நிறுவனங்கள் ஒன்றிணைந்துதான் தீர்வை முன்வைக்க வேண்டும். அந்தவகையிலேயே கால அவகாசம் கோரியுள்ளனர்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 700 ரூபா சம்பள உயர்வு நிச்சயம் பெற்றுக்கொடுக்கப்படும்.” -எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

 

மலையக அதிகார சபை வலுப்படுத்தப்படும்: இல்லாதொழிக்கப்படமாட்டாது!

மலையக அபிவிருத்தி அதிகார சபை இல்லாதொழிக்கப்படாதென்றும் அது தொடர்பில் அரசாங்கம் எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அந்த அதிகார சபையை விரிவாக்கம் செய்து முன்னெடுத்துச் செல்வதே அரசாங்கத்தின் தீர்மானம். மலையக மக்களையும் அவர்களுக்கான நிறுவனங்களையும் அரசாங்கம் பாதுகாக்கும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று மனோ கணேசன் எம்.பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் சந்திரசேகர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; மலையக அபிவிருத்தி

அதிகார சபையை அரசாங்கம் ஒரு போதும் இல்லாதொழிக்காது. அவ்வாறான ஒரு தீர்மானமும் கிடையாது.

பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையிலான குழுவில் மேற்படி அதிகார சபையை மேலும் விரிவு படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதே தவிர, அதனை இல்லாதொழிக்கும் தீர்மானம் எடுக்கப்படவில்லை.

அந்த வகையில் மலையக அபிவிருத்தி அதிகார சபை எந்த வகையிலும் இல்லாதொழிக்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் தெரிவித்தார் .இது தொடர்பில் சபையில் குறுக்கீடு செய்து கருத்து தெரிவித்த மனோ கணேசன் எம்பி;

அமைச்சர் இவ்வாறு தெரிவித்தாலும் ஜனாதிபதி எனக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேற்படி அதிகார சபை தொடர்பில் பிரச்சினை காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். அவ்வாறான சம்பந்தப்பட்ட அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் இது தொடர்பில் முறையாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மீண்டும் அதற்கு பதிலளித்த அமைச்சர் சந்திரசேகர்;

மேற்படி அதிகார சபையை இல்லாதொழிக்கப்போவதில்லை என்பது அரசாங்கத்தின் தீர்மானமாகும். அந்த வகையில் அதை விரிவாக்கம் செய்து முன்னெடுத்துச் செல்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

அதை விடுத்து மனோ கணேசன் எம்பி கூறுவது போன்று, பொது பிரச்சனைகள் காணப்பட்டால் அது தொடர்பில் நாம் உரிய கவனம் செலுத்தி பேச முடியும் என்றும் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய பல விடயங்கள் இருந்தும் அதனை மேற்கொள்ள முடியாமற் போயுள்ளது.எனினும் நாம், மலையக மக்களுக்கு சேவைகளை வழங்கக்கூடிய நிறுவனம் இருக்குமானால் எந்த விதத்திலும் அதனை இல்லாதொழிக்கப் போவதில்லை. அந்த வகையில் நாம் அவற்றையும் பாதுகாத்து மலையக மக்களையும் பாதுகாப்போம் என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றும் தெரிவித்தார்.மனோ கணேசன் எம்பி கூறுவது போன்று எமது அதிகாரிகள் எவரும் மேற்படி அதிகார சபை தொடர்பில் மாற்றுக் கருத்துக்களை கொண்டிருக்கவில்லை. அவர்கள் மலையக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று மனப்பாங்குடனேயே செயல்படுகின்றனர்.

அமைதி ஜனாதிபதி: ட்ரம்புக்கு அடைமொழி கொடுத்து அழகு பார்க்கிறது வெள்ளை மாளிகை!

 

அமைதிக்கான நோபல் பரிசு நாளை அறிவிக்கப்படவுள்ள நிலையில், அது ட்ரம்ப்புக்கு கிடைக்கும் வாய்ப்பில்லை என்பதும் தெரிந்துவிட்ட நிலையில், வெள்ளை மாளிகை ஜனாதிபதி ட்ரம்ப்பின் அண்மைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அதில் ‘அமைதி ஜனாதிபதி’ என்று அடைமொழி கொடுத்து அழகு பார்த்துள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் போர் உள்பட 7 போர்களை நிறுத்திவிட்டேன் என்று மீண்டும் மீண்டும் மார்தட்டிக் கொண்டிருந்த ட்ரம்ப், ‘நார்வேஜியன் நோபல் கமிட்டி தனக்கு அமைதிக்கான நோபல் பரிசைக் கொடுக்காமல் இருப்பதற்கான காரணங்களை எப்படியாவது தேடிக் கண்டுபிடிக்கும்’ என்று நம்பிக்கையிழந்து புலம்ப ஆரம்பித்துவிட்டார்.

ட்ரம்ப் முன்மொழிந்த அமைதி ஒப்பந்தத்துக்கு இஸ்ரேலும், ஹமாசும் ஒப்புக் கொண்டுள்ள நிலையில், காசாவில் முதற்கட்ட தற்காலிக போர்நிறுத்தம் அமுலாகவிருக்கிறது. இருந்தும் சூழலில்தான் ட்ரம்ப் தன் கனவான அமைதிக்கான நோபல் பரிசு மீதான நம்பிக்கையை இழந்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நிருபர் ஒருவர் ட்ரம்ப்பிடம், அமைதிக்கான நோபல் பரிசை நீங்கள் பெறுவதற்கான சாத்தியம் என்னவென்று கேட்க, அதற்கு ட்ரம்ப். “எனக்கு எந்தக் கருத்தும் இல்லை. மார்கோ ரூபியோவிடம் கேட்டால் நாங்கள் 7 போர்களை நிறுத்தியுள்ளோம் என்பதைச் சொல்வார். 8-வது போர் நிறுத்தத்துக்கு அருகில் வந்துவிட்டோம்.

ரஷ்யப் போரையும் விரைவில் நிறுத்துவோம். வரலாற்றில் இதுவரை இத்தனை போரை நிறுத்தியவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எனினும், நார்வேஜியன் நோபல் கமிட்டி தனக்கு அமைதிக்கான நோபல் பரிசைக் கொடுக்காமல் இருப்பதற்கான காரணங்களை எப்படியாவது தேடிக் கண்டுபிடிக்கும் ” என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.

ட்ரம்ப் இப்படி நம்பிக்கை இழந்துவிட்ட நிலையில்தான் அவரது புகைப்படத்துக்கு அமைதி ஜனாதிபதி என தலைப்பிட்டு பகிர்ந்துள்ளது வெள்ளை மாளிகை.

ஜனாதிபதி ட்ரம்ப்பின் முதல் பதவிக்காலத்திலும் அவர் அமைதிக்கான நோபல் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் அது அவருக்குக் கிடைக்கவில்லை. ஆனால், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு அவரது முதல் பதவிக்காலத்திலேயே அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து: கம்பனி பொறுப்பு கூறவேண்டும்!

மஸ்கெலியா, லக்சபான தோட்டம், வாழமலை பிரிவில் உள்ள தேயிலை தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் இவ்விபத்துக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

தேயிலை தொழிற்சாலை என்பது எமது மக்களின் வாழ்வாதாரம் என்பதோடு, அது எமது அடையாளம் எனவும்,அதை பாதுக்காக்க வேண்டிய பொறுப்பு கம்பனிகளுக்கு உள்ளது என செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தேயிலை தொழிற்சாலை தீக்கிரையாகியுள்ள நிலையில் இதற்கு தொழிற்சாலை பொறுப்பதிகாரிகள், கம்பனியினரின் தான்தோன்றி தனமே காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

10 ஆயிரம் வீட்டுத் திட்டம் 2027 இற்குள் நிறைவு பெறும்! காணி உரிமை வழங்குவது உறுதி!!

 

🛑 10 ஆயிரம் இந்திய வீட்டுத் திட்டத்தில் 2 ஆயிரத்து 56 வீடுகளுக்குரிய நிர்மாண பணி 12 ஆம் திகதி இடம்பெறும். 2026 இல் மேலும் 4 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம். 2027 ஆகும்போது இந்த 10 ஆயிரம் வீட்டுத் திட்ட பணியை நிறைவு செய்ய எதிர்பார்க்கின்றோம்.

🛑 பெருந்தோட்டப்பகுதிகளில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் வரையான குடும்பங்கள் லயன்களில் வாழ்கின்றன. மலையக மக்களுக்கென காணி இல்லை, வீடு இல்லை, முகவரிகூட இல்லை. இவற்றை நாம் கடந்த காலங்களில் சுட்டிக்காட்டினோம். தற்போது பிரச்சினைகளைப் பற்றி பேசும் உரிமை எமக்கு கிடையாது.
ஏனெனில் தற்போது தீர்வை வழங்க வேண்டிய தரப்பில் நாம் இருக்கின்றோம். அதனால் தீர்வை வழங்க முயற்சிக்கின்றோம்.

🛑 2 லட்சத்து 50 ஆயிரம் குடும்பங்கள் உள்ள நிலையில் 10 ஆயிரம் வீடுகளை அமைப்பதால் இப்பிரச்சினை தீரப்போவதில்லை. எனவே, மாற்று யோசனை பற்றி ஆராயப்படுகின்றது. காணியை வழங்கினால் வீடுகளை நிர்மாணித்துக்கொள்வதற்குரிய இயலுமை சிலருக்கு உள்ளது. இப்பிரச்சினை அடுத்த தலைமுறைக்கு செல்லகூடாது. பல ஆட்சிகள் வரும்வரை காத்திருக்கவும் கூடாது. எம்மால் முடிந்தளவுக்கு பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.

🛑 காணி உரிமையென்பது அரசுக்கானது, தோட்ட நிறுவனத்துக்கானது எனக் கூறி காணி வழங்குவதில் பயன் இல்லை. அவ்வாறு வழங்கினால் மீண்டும் லயன் சிஸ்டத்துக்கே சென்றுவிடும். காணி உரிமை , உரித்து சகிதம் வழங்கப்படும். 12 ஆம் திகதி பண்டாரவளையில் நடைபெறும் நிகழ்வின்போது ஏற்கனவே வீடுகளைப் பெற்றவர்களுக்கு காணி உரித்துக்குரிய பத்திரம் வழங்கப்படுகின்றது. எனவே, காணி உரிமையை வழங்குவோம்.

🛑 பெருந்தோட்டப்பகுதிகளில் எல்.ஆர்.சி. இடங்களே உள்ளன. எல்.ஆர்.சி. இடங்கள் மக்களுக்கு வழங்கப்படும் நடைமுறைகள் உள்ளன. சிலவேளை குத்தகை அடிப்படையில் வழங்கப்படுகின்றது. சிலவேளை மானியமாக வழங்கப்படுகின்றது. ஆனால் மக்களுக்கே உரிமையாகும் வகையில்தான் (12 ஆம் திகதி) காணி உரிமை வழங்கப்படுகின்றது.

“சின்னக்கர” (அசல்) என்ற வசனம் மாறுபட்டாலும் மக்களுக்கே இடத்தின் உரிமை இருக்கும்.

🛑 வழங்கப்படும் காணியை , வீட்டை மற்றைய நபருக்கு விற்பனை செய்துவிட்டு மீண்டும் லயத்துக்கு சென்றால் அதுவும் பிரச்சினையாகும். குறிப்பாக மகாவலி பிரதேசத்தில் காணி வழங்கும்போது, பயனாளி ஒருவர் தனது பிள்ளைக்கு கைமாற்றலாம். காலம் சென்ற பிறகே அதனை விற்க முடியும். ஆனால் 12 ஆம் திகதி வழங்கப்படும் உரித்தை பயனாளி அனுபவிக்கலாம். கைமாற்ற நினைத்தால் மாற்றலாம். எனினும், ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தீர்ப்பது பற்றி ஆராயப்படுகின்றது.

( சிரச தொலைக்காட்சியில் இன்று (09) ஒளிபரப்பான பெத்திகட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்த கருத்துகளில் சுருக்கமே மேல் தரப்பட்டுள்ளது. முழுமையான நேர்காணல் கருத்து பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.)

ஆர்.சனத்

காசா அமைதித் திட்டம்: இஸ்ரேல், ஹமாஸ் ஒப்புதல்!

காசா அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இரண்டு வருடமாக நீடிக்கும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதில், இது ஒரு வரலாற்று மற்றும் முன்னெப்போது நிகழாத நிகழ்வாகும் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

எகிப்தில் நடந்த அமைதி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையின் மூன்றாவது நாளில், ஹமாஸ் குழுவினர் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பதற்கும், அதே நேரத்தில் இஸ்ரேல் தனது படைகளை திரும்பப் பெறவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்,
‘ இஸ்ரேலும், ஹமாசும் அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன என்பதை அறிவிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இதனால் அனைத்து பிணைக் கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அமைதியை உருவாக்க, முதல்கட்ட ஒப்பந்தத்தின் படி தனது பாதுகாப்பு படையினரை இஸ்ரேல் திரும்ப பெறும். அனைத்து தரப்பினரும் நியாயமாக நடத்தப்படுவார்கள். அரபு, முஸ்லிம் நாடுகள், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கும் இது ஒரு சிறந்த நாள்.

இதற்காக, எங்களுடன் இணைந்து பணியாற்றிய கத்தார், எகிப்து மற்றும் துருக்கியின் மத்தியஸ்தர்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். அமைதியை ஏற்படுத்துபவர்கள் பாக்கியவான்கள்.” – எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மரக்கறி விலைப்பட்டியல் (09.10.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

ஊழல், மோசடி விசாரணைகளை குழப்புவதே எதிரணியின் நோக்கம்

“இலங்கையில் ஊழல், மோசடிகள் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு ஒவ்வொருவராகக் கைது செய்யப்படும் இந்தச் சந்தர்ப்பத்தில், ஆணைக்குழுவின் பணிப்பாளர் மீது எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைக்கின்றன. முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளைக் குழப்புவதே அவர்களின் நோக்கமாகும்.”

– இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“இலஞ்ச, ஊழல் தொர்பான விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் நியமனம் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அவரால் பதிலளிக்கப்பட்டுள்ளது. செயற்பாட்டு ரீதியில் அவர் அவரது நடவடிக்கைகளை நாட்டுக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்.

எனவே, இவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக் கொண்டிருப்பதால் எவ்வித பிரயோசனமும் இல்லை. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு இது குறித்த சட்டம் தொடர்பில் அனுபவம் இருப்பதாக நம்புகின்றோம்.

அதற்கமைய நாடாளுமன்றத்தில் அரசமைப்பு சபையின் ஊடாக இடம்பெற்ற தேர்வு மோசடியானது என்றால், அந்த நியமனத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்ல முடியும்.

அதுவே சரியான அணுகலாகும். அதனை விடுத்து ஆங்காங்கு விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருப்பதால் எவ்வித பிரயோசனமும் இல்லை.

ஊழல், மோசடிகள் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு ஒவ்வொருவராகக் கைது செய்யப்படும் இந்தச் சந்தர்ப்பத்தில், இலஞ்ச, ஊழல் தொர்பான விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் மீது அவதூறு பரப்புவதன் ஊடாக, கம்மன்பில போன்றோரின் தேவை என்ன என்பது தெளிவாகின்றது. இலஞ்ச, ஊழல் குறித்த விசாரணைகளைக் குழப்புவதே இவர்களின் நோக்கமாகும்.” – என்றார்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

பெருந்தோட்டங்களில் அடியாட்களை வைத்திருப்பது சட்டவிரோதம்: அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவு!

0
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என்ற போர்வையில் பெருந்தோட்ட பகுதிகளில் அடியாட்களை வைத்திருப்பது சட்டவிரோதம் எனவும், நீலகாமத்துக்கு சென்றவர்கள் தொடர்பில்...

மே தினக் கூட்டத்தில் இணையுமாறு ஐ.தே.கவுக்கு சஜித் பகிரங்க அழைப்பு

0
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள மே தினப் பேரணியில் தம்மோடு கைகோர்க்குமாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அழைப்பு...

செம்மணி மனிதப் புதைகுழி: 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்!

0
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இன்று காலை 9 மணியளவில் குறித்த வழக்கு விசாரணைக்கு...