Home Blog Page 269

எனக்கு நோபல் பரிசு கிடைக்காவிடின் அது அமெரிக்காவுக்கு அவமானம்!

 

அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு வழங்காவிட்டால், அது நாட்டுக்கே அவமானம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்கா ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் பேசிய ட்ரம்ப்,

“எனக்கு நோபல் பரிசு தருவார்களா? நிச்சயமாக மாட்டார்கள். ஒரு துரும்பை கூட கிள்ளிப் போடாத யாரோ ஒருவருக்கு அதை கொடுப்பார்கள். அமைதிக்கான நோபல் விருது எனக்கு தரப்படாவிட்டால் அது நம் நாட்டுக்கு ஒரு பெரிய அவமானமாக இருக்கும். எனக்கு அது வேண்டாம், நாடு அதைப் பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நம் நாட்டுக்கு அது கிடைக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டார்.

யுத்தங்கள் எதுவும் முடியவே முடியாது என்று பலரும் சொன்னார்கள். 31 ஆண்டுகள் வரை சில போர்கள் நீடித்தன. ஒரு போர் 36 ஆண்டுகள் நீடித்தது. ஆனால் நான் ஏழு போர்களை முடிவுக்கு கொண்டு வந்தேன். அவற்றில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மாண்டு போனார்கள். நான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு மிகவும் தகுதியாவனன்” எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

வரும் அக்டோபர் 10ஆம் திகதி இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் யார் யாருக்கு வழங்கப்பட உள்ளன என்பது குறித்த அறிவிப்புகள் வெளியாக உள்ள நிலையில் ட்ரம்பின் இந்த பேச்சு கவனிக்கத்தக்கது.

தாஜுடீன் கொலை: உண்மையான குற்றவாளியை மூடிமறைக்கும் அபாயம் உள்ளதா?

13 வருடங்களு முன்னர் தலைநகரின் பிரதான வீதியில் ரக்பி வீரர் வசிம் தாஜுடீனை சுட்டுக் கொன்ற நபர், எட்டு மாதங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்ட ஒருவர் என, குற்றப்புலனாய்வு திணைக்களம் இப்போது அடையாளம் கண்டுள்ளது.

நான்கு அரசாங்கங்களின் ஆட்சியின் போது வழங்கப்படாத நீதியைத் தவிர்க்கும் அபாயத்தை ஏற்படுத்தும் இந்த ‘புதிய கண்டுபிடிப்பு’, இறந்த தாஜுடீனின் மாமா பயாஸ் லத்தீப், இது சித்திரவதை செய்து கொலை செய்ய்பபட்டுள்ளதாக பொது வெளியில் நம்பகமான கருத்துக்களை வெளியிட்ட மறுதினம் பொலிஸாரால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வருடம் பெப்ரவரி 18 ஆம் திகதி, மித்தெனிய பகுதியில் தனது இரண்டு பிள்ளைகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட விதானகமகே அனுர பிரியந்த குமார அல்லது கஜ்ஜா, தாஜுடீனை பின்தொடர்ந்ததாகவும், கஜ்ஜாவின் மனைவி சிசிடிவி காட்சிகள் மூலம் அவரை அடையாளம் கண்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் வாக்குமூலம் அளித்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அனுர பிரியந்த குமார கொலை தொடர்பாக பொலிஸார் ஆரம்பத்தில் அரசாங்க பாதுகாப்புப் படை உறுப்பினர்களையும் கைது செய்தனர். ஒருவர் ஒரு பொலிஸ் அதிகாரி. மற்ற இருவரும் முன்னாள் இராணுவ வீரர்கள் என பொலிஸார் கூறியிருந்தனர்.

முதுகுப் பிரச்சினை உள்ள குற்றவாளிகளைப் பிடிப்பது

“மேலும், வசிம் தாஜுடீன் கொலை சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது பெறப்பட்ட சிசிடிவி காட்சிகளை விசாரணை அதிகாரிகள் உயிரிழந்த கஜ்ஜா என்பவரின் மனைவியிடம் காட்டினர், மேலும் அந்தக் காட்சிகளில் உள்ள நபர், சுமார் 17 வருடங்களாக தன்னுடன் திருமண வாழ்வில் இருந்த அவரது கணவர் என அடையாளம் காணப்பட்டார்,” என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இறந்த சந்தேகநபருக்கு முதுகுப் பிரச்சினை இருந்ததாவும், அவர் தனது கைகளை முதுகுக்குப் பின்னால் பிடித்தவாறு இருந்த தோரணையின் அடிப்படையில் அவரை தனது கணவர் என அடையாளம் காண முடியும் என அவரது மனைவி பொலிஸாரிடம் கூறியதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் கூறியுள்ளது.

2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில், வசிம் தாஜுடீன் கொலை செய்யப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், விசாரணை தொடங்கப்பட்டதோடு, அந்த விசாரணைக்கு அமைய, ராஜபக்ச ஆட்சியின் பாதுகாப்புப் படையினர் மற்றும் துணை இராணுவப் பணியாளர்கள் மீது சந்தேகம் எழுந்தது.

அப்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த மூத்த பொலிஸ் அதிகாரி ஷானி அபேசேகர தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.

2019 ஆம் ஆண்டு கோட்டாய ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பணி இடைநீக்கத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவிலும் இது கூறப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு விசாரணைகளை மேற்கொண்ட ஷானி அபேசேகர, தாஜுடீனின் கொலைக்கான சந்தேகத்தை அரசியல் தொடர்புகளைக் கொண்ட துணை இராணுவப் படைகளைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிய போதிலும், 10 வருடங்களுக்குப் பின்னர், ஷானி அபேசேகர பணிப்பாளர் பதவியை வகிக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களமே, இறந்த ஒருவரை சந்தேகநபராகக் குறிப்பிடுகிறது.

அப்போது ஷானி இப்போது ஷானி

2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு அமைய அப்போதைய மூத்த பொலிஸ் அதிகாரி அனுர சேனநாயக்க, அப்போதைய கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர, நாரஹேன்பிட்ட பொலிஸ் குற்றப்பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர் மீது  ஆதாரங்களை மறைத்த குற்றச்சாட்டு குறித்து கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

ஏனெனில் தாஜுடீன் மதுபோதையில் வாகனம் ஓட்டியதால் இறந்ததாகக் கூறி குற்றவியல் உண்மைகளை மறைத்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

ஆரம்ப விசாரணைகளுக்கு 10 வருடங்களின் பின்னர், இரண்டு விசாரணைகளையும் நடத்திய ஒரே நபரின் கீழ் வெவ்வேறு சந்தேகநபர்களை அடையாளம் காண்பதில் உள்ள முரண்பாட்டிற்கு பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களமோ அல்லது பொலிஸ் ஊடகப் பேச்சாளரோ எந்த விளக்கத்தையும் வழங்கவில்லை.

கஜ்ஜா எனப்படும் அனுர பிரியந்த குமார பற்றிய விபரங்களை முதலில் வெளிப்படுத்தியவர், தற்போது பொலிஸ் காவலில் உள்ள, பொலிஸாரால் உண்மையான பெயர் வெளிப்படுத்தப்படாத, பெக்கோ சமன் என்ற புனைப்பெயரில் அறியப்பட்ட ஒருவரால் ஆகும். கஜ்ஜாவின் மனைவி பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்திற்கு அமைய பெக்கோ சமனிடமிருந்து கஜ்ஜாவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் பொலிஸ் தெரிவித்துள்ளது.

தாஜுடீன் கொல்லப்பட்ட நாளில் அவரது வாகனத்தைப் பின்தொடர்ந்த அடையாளம் தெரியாத வாகனம் மற்றும் வழியில் தாஜுடீனின் வாகனத்தில் ஏறிய நபரின் காட்சிகளைக் காட்டியபோது, அவர் தனது கணவர் என கஜ்ஜாவின் மனைவி அடையாளம் கண்டதாகவும் பொலிஸ் தெரிவிக்கின்றது.

“இதற்கமைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, மேலும் அன்றைய தினம் இறந்த வாசிம் தாஜுடீன் பயணித்த காரின் பின்னால் மற்றொரு சந்தேகத்திற்கிடமான வாகனம் பயணித்திருப்பது சிசிடிவி காட்சிகளில் தெரியவந்துள்ளது. அந்த வாகனத்தில் ஒருவர் ஏறியிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது, மேலும் அந்த நபரை அடையாளம் காண விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன,” என பொலிஸ் ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.

“சந்தேகத்திற்கிடமான வாகனம்” என்ன என்பது பொலிஸ் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

கொலை நடந்து எட்டு மாதங்களுக்குப் பிறகு

இறப்பதற்கு முன்பு, அனுர பிரியந்த குமார ஒரு சமூக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் ராஜபக்ச காலத்தில் செய்யப்பட்ட பல கொலைகள் மற்றும் குற்றங்கள் பற்றிய விடயங்களை வெளிப்படுத்தியதோடு, அவற்றில் சிலவற்றுடனான அவரது தொடர்பை பகிரங்கமாக குறிப்பிட்டார்.

அப்படியானால், அந்த செவ்வி வெளியாகி அவர் கொல்லப்பட்ட வரை, அவர் செய்ததாகக் கூறும் குற்றங்கள் குறித்து பொலிஸார் ஏன் அவரிடம் விசாரிக்கவில்லை என்ற பிரச்சினை எழுகிறது? அவர் கொல்லப்பட்ட எட்டு மாதங்களுக்குப் பின்னர் தாஜுடீனின் கொலையுடனான அவரது  தொடர்பை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வெளிப்படுத்தியுள்ளது.

தமது சமூக ஊடகங்களில் பதிவிடும் ஆர்வலர்களை சிறையில் அடைக்க பயங்கரவாதச் சட்டத்தைப் பயன்படுத்தும் பொலிஸார், சமூக ஊடகத்திற்கு கஜ்ஜா வழங்கிய வாக்குமூலத்தை விசாரித்ததா என்பது தெரியவில்லை.

2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட விசாரணைகள் மற்றும் புதிய சட்ட வைத்திய அறிக்கைகளுக்கு அமைய தாஜுடீன் கடுமையான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் இறந்தார். பொலிஸார் விபரித்த புதிய சூழ்நிலையில் பலம்மிக்க ரக்பி வீரர் தாஜுடீனின் வாகனத்தில் ஏறிய ஒரு நபர் அவ்வாறு செய்திருக்க முடியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

உண்மையான கொலையாளியை மூடிமறைக்கும் அபாயம் உள்ளதா?

இருப்பினும், தாஜுடீனின் கொலையில் சந்தேகநபராகக் கூறப்படும் அனுர பிரியந்த குமார அல்லது கஜ்ஜாவைக் கொலை செய்த குற்றச்சாட்டில் இரண்டு முன்னாள் இராணுவ வீரர்களும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளும் கைது செய்யப்பட்டனர்.

ரக்பி வீரர் வாசிம் தாஜுடீனின் கொலை, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீண்டும் விசாரணை நடத்துவதாக அறிவித்துள்ள மூடிமறைக்கப்பட்ட குற்றங்களின் பட்டியலில்  முன்னணியில் உள்ளது. பல சந்தர்ப்பங்களில் விசாரிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளக்கூடிய தகவல்களுடன் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட இத்தகைய குற்றம், இறந்த நபரின் பெயரைக் காரணம் காட்டி மறைக்கப்படுகிறதா என கடுமையான சந்தேகங்கள் எழுவதை தவிர்க்க முடியாதுள்ளது.

செம்மணிப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு!

யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கை எதிர்வரும் 13ஆம் திகதிக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிக்கான நிதி ஒதுக்கீடு கிடைக்கப் பெறாதமையாலேயே இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று புதன்கிழமை நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிக்கான பாதீட்டுக்கான அங்கீகார அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்க அரச சட்டத்தரணி கால அவகாசம் கோரினார். இதைத் தொடர்ந்தே வழக்கு எதிர்வரும் 13ஆம் திகதிக்குத்  தவணையிடப்பட்டது.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணி கடந்த மாதம் 6ஆம் திகதி நிறைவடைந்தது. 3 கட்டங்களாக 54 நாட்கள் நடைபெற்ற அகழ்வுப் பணிகளில் 240 எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டு 239 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.

இதேவேளை, அந்தப் பகுதியில் இன்னமும் எலும்புக்கூடுகள் இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. இதையடுத்து, அங்கு 8 வார காலம் ஆய்வைத் தொடர்வதற்குச் சட்ட மருத்துவ அதிகாரி செ.பிரணவன் நீதிமன்றிடம் கோரிக்கை வைத்தார். இதற்கான பாதீட்டு அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தாஜுடினின் மரணம் குறித்து வெளிப்படையான விசாரணை வேண்டும்!

முன்னாள் ரக்பி வீரர் வாசிம் தாஜுதீனின் மரணம் குறித்து அரசாங்கம் பாரபட்சமற்ற மற்றும் விரிவான விசாரணையை நடத்த வேண்டும் என்றும், அதை அரசியல் மயப்படுத்த முயற்சிக்கக்கூடாது என்றும், இல்லையெனில் அது அவரது மறைந்த ஆன்மாவை அவமதிப்பதாக இருக்கும் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச  கூறினார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மித்தெனியவில் கொலை செய்யப்பட்ட ‘கஜ்ஜா’ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரமுகர், 2012 இல் தாஜுதீன் இறப்பதற்கு முன்பு அவரைப் பின்தொடர்ந்த வாகனத்தில் இருந்ததாக பொலிஸார் சமீபத்தில் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து அவரது கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

ஊடகங்களுக்குப் பேட்டியளித்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல், தாஜுதீனின் மரணம் குறித்த தற்போதைய கவனத்தை ‘ICE வாரம்’ மற்றும் ‘ரணில் வாரம்’ போன்ற அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த கடந்த கால நிகழ்வுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து, சிலர் அதை தனிப்பட்ட அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் குறிக்கிறது.

இருப்பினும், வழக்கின் அனைத்து தொடர்புடைய விவரங்களும் முழுமையாக ஆராயப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

‘கஜ்ஜா’ என்ற நபரின் சமீபத்திய அடையாளம் குறித்து கருத்து தெரிவித்த நாமல், அந்த நபரின் குடியிருப்பு, கூட்டாளிகள் மற்றும் நடமாட்டங்களை அதிகாரிகள் கவனிக்க வேண்டும் என்றார்.

“அரசியல் காட்சியை உருவாக்காமல், தாஜுதீன் ஏதேனும் அநீதியை எதிர்கொண்டாரா என்பதை அதிகாரிகள் விசாரிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறுவது அவரது நினைவிற்கு அநீதி இழைப்பதாகும்,” என்று அவர் மேலும் கூறினார்.

 

பதுளை மாவட்டத்தில் கடும் வறட்சி: குடிநீர் பற்றாக்குறை!

பதுளை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நீடிக்கும் கடும் வெயிலுடன் கூடிய வறட்சியான காலநிலை காரணமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன் விவசாய நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பதுளை மாவட்டத்தில் தொடரும் வறட்சியான காலநிலை காரணமாக பதுளை, பண்டாரவளை, பசறை, வியலுவ, வெளிமடை மற்றும் மகியாங்கன ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பண்டாரவளை, வெளிமடை பகுதிகளில் காய்கறி விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள் கால்வாய்களிலும் , ஆறுகளிலும், ஓடைகளிலும் நீர் வற்றியுள்ளதன் காரணமாக விவசாய நடவடிக்கைகளை இடைநடுவில் கைவிடும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கடும் வெயிலின் காரணமாக நீரேந்து பிரதேசங்களில் நீர் வற்றியுள்ளதன் காரணமாக தேசிய நீர்வழங்கல் சபை மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை என்ற அடிப்படையில் நீீர் விநியோகம் இடம்பெறுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். கடும் வறட்சியின் காரணமாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேலை நாட்களும் குறைவடைந்துள்ளன.

பசறை டெமேரியா”பீ” தோட்டப் பகுதியில் உள்ள மக்களும் கடுமையான குடிநீீர் பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளனர். வறட்சி நிலைமை நீடிக்கும் பட்சத்தில் கடுமையான நீர் நெருக்கடியை எதிர்நோக்கும் அபாய நிலைக்கு இப்பகுதி மக்கள் தள்ளப்படுவார்கள் என்ற அச்சம் தோன்றியுள்ளது.

உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதி நாளில் தீப்பந்தப் போராட்டம்

செம்மணியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி நடத்தப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று நிறைவுக்கு வந்தது.

இறுதி நாளில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் பாரிய தீப்பந்தப் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி விவகாரத்திற்கு நீதி கோரியும் குறித்த உண்ணாவிரதப் போராட்டம் கடந்த 25ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்ககள், சிறிலங்காவில் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழ் இனவழிப்புக்கும் காணாமல் ஆக்கப்படுதல் போர் குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம், படுகொலை செய்யப்பட்ட பாலச்சந்திரனுக்கு நீதி வேண்டும், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் உள்ளிட்ட கோசங்களை எழுப்பியிருந்தனர்.

இப்போராட்டத்தில் அறிக்கை ஒன்று வாசிக்கப்பட்டு அந்த அறிக்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கபபடவுள்ள அதேவேளை, இலங்கை அரசாங்கத்தால் ஐ.நா வுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை போராட்டக்காரர்களால் தீ வைத்துக் கொழுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் அரச நிர்வாகம் முடக்கம்!

அமெரிக்காவில் அரச நிர்வாகம் முடக்கம்!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிதி சட்டமூலம் தோல்வியடைந்ததை தொடர்ந்து, அந்த நாட்டு அரசு நிர்வாகம் ஆறு ஆண்டுகளில் முதன்முறையாக முடங்கியது. இதனால் பெரும்பாலான அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படும் சூழல் உருவாகியுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிதி சட்டமூலத்துக்கு 60 சதவீத செனட் உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே, அரசில் செலவீனங்களுக்கான நிதி விடுவிக்கப்படும்.

இந்த நிலையில், நிதி சட்டமூலத்துக்கு ஆதரவாக குடியரசு கட்சி உறுப்பினர்கள் 53 சதவீதம் பேரும், ஜனநாயக கட்சியின் 47 சதவீத உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

நிதி சட்டமூலத்துக்கு 60 சதவீதம் உறுப்பினர்கள் வாக்களிக்காத காரணத்தால் அமெரிக்க அரசாங்கம் முடங்கியதாக அறிவிக்கப்பட்டது.

வெள்ளை மாளிகை சமூக ஊடகங்களில்
வெளியிட்ட படத்தில் ‘டெமாகிரட்டிக் ஷட் டவுன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அத்தியாவசிய பணிகளான விமான சேவை, அறிவியல் ஆராய்ச்சி, ராணுவம் ஆகியவற்றின் பணிகள் தொடர்ந்து இயங்கும். ஆனால், அந்த ஊழியர்களுக்கான ஊதியம் நிறுத்தி வைக்கப்படும்.

அதே நேரத்தில் அத்தியாவசியமற்ற பணிகளாக கருதப்படும் அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள் அல்லது பணிநீக்கம் செய்யப்படுவார்கள். இந்த வகை அரசு ஊழியர்களுக்கு அமெரிக்க அரசு ஒவ்வொரு நாளும் 400 மில்லியன் டாலர் செலவு செய்கிறது.

 

குளவிக்கொட்டு: 9 தோட்டத் தொழிலாளர்கள் பாதிப்பு!

 

மஸ்கெலியா, மவுஸ்ஸாக்கலை தோட்ட சீட்டன் பிரிவில் ஒன்பது தோட்டத் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இச்சம்பவம் இன்று ​புதன்கிழமை (01) நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொழுந்து பறித்துக்கொண்டிருந்த வேளையில், தேயிலைச் செடியின் கீழ் பகுதியில் இருந்த குளவி கூடு கலைந்து, கொட்டியுள்ளது.
பாதிக்கப்பட்ட ஒன்பது பேரும் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் நால்வர் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வெளியேறி உள்ளனர் என்றும் ஐந்து பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட வைத்திய சாலையில் உள்ள வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலரை கைது செய்ய தனிப்படை அமைப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அக்கட்சியின் மாநில இணைச் செயலாளர் நிர்மல் குமாரை கைது செய்ய தனிப்படை அமைத்துள்ளது மத்திய மண்டல காவல் துறை.

இந்த உத்தரவை மத்திய மண்டல காவல் துறையின் தலைவர் ஜோஷி நிர்மல் குமார் பிறப்பித்துள்ளார்.

கரூர் வேலு​சாமிபுரத்​தில் கடந்த 27 ஆம் திகதி நடை​பெற்ற தமிழக வெற்றிக் கழக பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர்.

இது தொடர்​பாக கரூர் மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் வி.பி.ம​தி​யழகன், பொதுச் செய​லா​ளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணைச் செய​லா​ளர் நிர்​மல்​கு​மார் ஆகியோர் மீது கரூர் நகர பொலிஸார் 5 பிரிவு​களின் கீழ் வழக்கு பதிவு செய்து விசா​ரணை நடத்தி வந்​தனர்.

இதில் தலைமறை​வாக இருந்த மாவட்​டச் செய​லா​ளர் மதி​யழகன், அவருக்கு அடைக்​கலம் கொடுத்த கட்சி நிர்​வாகி பவுன்​ராஜ் ஆகியோரை திண்​டுக்​கல் மாவட்​டம் குஜிலி​யம்​பாறை​யில் தனிப்​படை பொலிஸார் கடந்த 29-ம் திகதி கைது செய்​தனர்.

அவர்கள் இருவரையும் நேற்று கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் 15 நாள் நீதிமன்ற காவல் அறிவித்தார் நீதிபதி பரத்குமார்.

இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமாரை கைது செய்ய தனிப்படை அமைத்துள்ளது மத்திய மண்டல காவல் துறை. நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டு கரூர் விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 69 ஆக அதிகரிப்பு!

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று இரவு ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்கள் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 6.9, 7.0 மற்றும் 7.0 என மூன்று வலுவான நிலநடுக்கங்கள் சில நிமிடங்களுக்குள் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கங்களை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. இருப்பினும், இந்த பயங்கர நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி 69 பேர் உயிரிழந்துள்ளனர்.

படுகாயமடைந்த 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

இறைவரித் திணைக்களத்தின் திறனை மேம்படுத்துவது குறித்து ஆராய்வு!

0
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. வரி வருவாயை விரிவுபடுத்துதல், வரி இணக்கத்தை அதிகப்படுத்துதல் மற்றும் நிலுவையில் உள்ள...

களுத்துறை மண்ணில் கல்வி கௌரவ விழா!

0
களுத்துறை மண்ணில் கல்வி கௌரவ விழா! கல்வி அமைச்சின் பெருந்தோட்டப் பாடசாலைகள் அபிவிருத்திக் கிளையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சின்னையா ஜெயக்குமாருக்கான வரவேற்பு நிகழ்வும், களுத்துறை மாவட்டத்தின் தமிழ் பெருந்தோட்ட பாடசாலைகளின் அதிபர்களையும், ஓய்வுநிலை அதிபர்களையும்...

கலமுதுனை தமிழ் வித்தியாலயத்தில் உதயமாகிறது பழைய மாணவர் சங்கம்!

0
நூற்றாண்டு நோக்கிய பயணம்: கலமுதுனை தமிழ் வித்தியாலயத்தில் உதயமாகிறது பழைய மாணவர் சங்கம்! தொலஸ்பாகை, கலமுதுனை தமிழ் வித்தியாலய பழைய மாணவர் சங்க அங்குரார்ப்பன நிகழ்வு எதிர்வரும் மே 2 ஆம் திகதி பாடசாலை...