Home Blog Page 270

நாடு திரும்பினார் ஜனாதிபதி

 

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (01) காலை நாடு திரும்பினார்.

செப்டெம்பர் 27 ஆம் திகதி ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்த ஜனாதிபதி, ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்ற “எக்ஸ்போ 2025” கண்காட்சியில் இலங்கை தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நெருங்கிய நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட பல இருதரப்பு கலந்துரையாடல்களிலும் ஜனாதிபதி பங்கேற்றதுடன், ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா (Shigeru Ishiba), ஜப்பானிய நிதி அமைச்சர் கதோ கசுனொபு(KATO Katsunobu), பாதுகாப்பு அமைச்சர் டி.எம் நகடானி(DM Nakatani), நிப்பொன் மன்றத்தின் ஆரம்பத் தலைவர் யொஹெய் சசகாவா(Yohei Sasakawa) மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் (JICA) தலைவர் டனாகா அகிஹிகோ (Dr. TANAKA Akihiko) உள்ளிட்ட அந்நாட்டின் உயர்மட்ட பிரதிநிதிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.

மேலும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜப்பானிய பேரரசர் நருஹிதோவை ஜப்பான் பேரரசர் மாளிகையில் சந்தித்து சுமூகமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

ஜப்பானின் முன்னணி வர்த்தகர்களுடன் வட்டமேசை கலந்துரையாடலில் கலந்துகொண்ட ஜனாதிபதி, ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பின் (JETRO) தலைமையகத்தில் நடைபெற்ற ஜப்பான்-இலங்கை வர்த்தக மன்றத்திலும் இணைந்துகொண்டதுடன், இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் தற்போது இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள முதலீட்டுக்கு உகந்த சூழல் குறித்தும் விளக்கமளித்தார்.

ஜப்பான்-இலங்கை அபிவிருத்தி ஒத்துழைப்பில் ஒரு புதிய மைல்கல்லை குறிக்கும் வகையில், பால் உற்பத்தித் துறையில் செயற்திறனை மேம்படுத்தும் திட்டத்திற்கான(Project for the Enhancement of Productivity in the Dairy Sector) ஒப்பந்தத்தில் (Grant Agreement) கைச்சாத்திடும் நிகழ்வும் ஜனாதிபதியின் விஜயத்துடன் இணைந்த வகையில் மேற்கொள்ளப்பட்டது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் இந்த விஜயத்தில், வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இணைந்துகொண்டனர்.

ஹமாஸ் அமைப்புக்கு இறுதி எச்சரிக்கை விடுப்பு!

 

போர் நிறுத்தத்துக்கான 20 அம்ச திட்டம் தொடர்பில் ஹமாஸ் அமைப்புடன் பேச்சு நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என்ற கேள்விக்கு, இல்லை என டிரம்ப் பதிலளித்துள்ளார்.

ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக காசா மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போரால், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையில் மத்தியஸ்தம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவுக்கு நேற்று முன்தினம் சென்றார்.

அப்போது, வெள்ளை மாளிகையின் வாசலுக்கு வந்த டிரம்ப், காரில் இருந்து வெளியே வந்த நெதன்யாகுவை கைகுலுக்கி வரவேற்றார். அவர், டிரம்பை சந்தித்து பேச்சு நடத்தினார்.

வெள்ளை மாளிகையில் நடந்த இந்த சந்திப்பில் காசா போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் சார்பில் தீவிர அழுத்தம் தரப்பட்டது. இதனால் காசா போர் விரைவில் முடிவுக்கு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது. போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கான சாத்தியமும் அதிகரித்து உள்ளது.

காசா போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், 20 அம்சங்கள் கொண்ட திட்டத்தினை டிரம்ப் முன்வைத்துள்ளார். இதற்கு நெதன்யாகு சம்மதம் தெரிவித்து உள்ளார் என கூறப்படுகிறது.
டிரம்புக்கு எகிப்து, ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி, இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட 8 முஸ்லிம் நாடுகளும் ஆதரவாக நிற்கின்றன. மேற்படி திட்டத்துக்கு ஆஸ்திரேலியாவும் ஆதரவளித்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப்,

இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளின் தலைவர்கள் முன்பே 20 அம்ச திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து விட்டனர் எனக் குறிப்பிட்டார்.

எனினும், இந்த திட்டங்களை பற்றி ஹமாஸ் அமைப்புடன் பேச்சு நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என்று கேட்கப்பட்டதற்கு, இல்லை என டிரம்ப் கூறினார்.

ஹமாஸ் அமைப்பு அதனை ஏற்குமோ அல்லது இல்லையோ என்பதற்கு அப்பால் ஏற்காவிட்டால் அது வருத்தம் தரும் முடிவாக இருக்கும். இந்த திட்டத்திற்கு 3 அல்லது 4 நாட்களில் அவர்கள் பதிலளிக்க வேண்டும் என காலக்கெடுவும் விதித்துள்ளார்.

அவ்வாறு இல்லையேல் நரகத்திற்கான விலையை அவர்கள் கொடுக்க வேண்டி இருக்கும் என எச்சரிக்கும் வகையில் ட்ரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார்.

காசா திட்டத்தின்படி, காசா முனை பகுதியில் உடனடி போர் நிறுத்தம், இஸ்ரேல் பணய கைதிகள் விடுவிப்பு, காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வாபஸ், ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை கீழே போட வேண்டும் உள்ளிட்ட விசயங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்: 27 பேர் பலி!

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் குறைந்தபட்சம் 27 பேர் பலியாகியுள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று இரவு ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்கள் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 6.9, 7.0 மற்றும் 7.0 என மூன்று வலுவான நிலநடுக்கங்கள் சில நிமிடங்களுக்குள் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கங்களை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. இருப்பினும், இந்த பயங்கர நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

படுகாயமடைந்த 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஜெனிவா பறந்தார் சிறிதரன் எம்.பி.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடரின் பக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நேற்று செவ்வாய்க்கிழமை ஜெனிவாவைச் சென்றடைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன், அங்கு வேறு பல முக்கிய சந்திப்புக்களிலும் பங்கேற்கவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடர் கடந்த 8 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. இந்தக் கூட்டத் தொடரில் புதிதாக நிறைவேற்றும் நோக்கில் பிரிட்டன் தலைமையில் கனடா, மாலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணை அனுசரணை நாடுகளால் ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்ட இலங்கை தொடர்பான புதிய பிரேரணையின் முதலாவது வரைவு கடந்த 9 ஆம் திகதி வெளியிடப்பட்டதுடன், அதில் திருத்தங்கள் உள்வாங்கப்பட்ட முதலாவது மீளாய்வு வரைவு கடந்த வாரம் வெளியிடப்பட்டது.

இவ்வாறானதொரு நிலையில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிறீதரன் எம்.பி., அங்கு நடைபெறவுள்ள பக்க நிகழ்வொன்றில் பங்கேற்கவுள்ளார்.

அதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினதும், பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளினதும் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை அவர் நடத்துவார் என்றும், அதன்போது தமிழர்களின் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜப்பானின் பேரரசர் நருஹிதோவை சந்தித்தார் ஜனாதிபதி!

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அங்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (30) பேரரசர் மாளிகையில் ஜப்பானின் பேரரசர் நருஹிதோவை சந்தித்தார்.

டொகியோவில் உள்ள ஜப்பான் பேரரசரின் உத்தியோகபூர்வ இல்லமான பேரரசர் மாளிகைக்கு வருகை தந்த ஜனாதிபதியை, பேரரசர் அமோகமாக வரவேற்றதுடன், சுமூகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மரக்கறி விலைப்பட்டியல் (01.10.2025)

மரக்கறி விலைப்பட்டியல் (01.10.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (01) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

சர்வதேச நீதி கோரும் உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதி நாள் இன்று!

 

தமிழ் மக்களுக்குச் சர்வதேச நீதி கோரிய உண்ணாவிரதப் போராட்டத்தின்இறுதி நாளான இன்று புதன்கிழமைசகல தரப்பினரும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று வடக்கு -கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் அழைப்புவிடுத்துள்ளது.

உள்நாட்டுப் பொறிமுறையைநிராகரிக்கின்றோம், தமிழின அழிப்பு, காணாமல் ஆக்கப்படுதல், போர்க் குற்றங்கள், மனிதப் புதைகுழிகள் தொடர்பான விடயங்களுக்குச் சர்வதேச -சுயாதீன விசாரணையே வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துசுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் கடந்த 2 5ஆம் திகதி ஆரம் பமானது.

யாழ். செம்மணியில் அணையாவிளக்கு போராட்டம் நடைபெற்ற இடத்தில்தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சுழற்சிமுறையிலான இந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று புதன்கிழமை நிறை வடைகின்றது.

போராட்டத்தின் 6ஆவது நாளானநேற்று போராட்ட ஏற்பாட்டாளர்கள் ஊடகங்கள் மத்தியில் கருத்து வெளியி டுகையில்,

‘‘போராட்டத்தின் இறுதி நாளான இன்று புதன்கிழமை அனைத்துத் தரப்பினரும் பங்கேற்று எமது கோரிக்கைகளுக்குவலுச் சேர்க்க வேண்டும். போராட்டத்தின் இறுதியில் கோரிக்கைகள் அடங்கிய மனு வாசிக்கப்பட்டு,ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைக்கப்படும்.” – என்று கூறினர்.

எரிபொருள் விலை குறைப்பு!

நாட்டில் இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் எரிபொருள் விலை மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரொன்றின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை ரூ. 335.

ஒட்டோ டீசல் லீற்றரொன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்படுவதுடன் அதன் புதிய விலையாக 277ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் லீற்றரொன்றின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை ரூ. 180.

ஒக்டேன் 92 ரக பெற்றோல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. ஒரு லீற்றர் பெற்றோல் 299 ரூபாவுக்கே விற்கப்படுகின்றது.

சுப்பர் டீசல் விலையில் மாற்றம் இல்லை. லீற்றரொன்று 313 ரூபாவுக்கு விற்கப்படுகின்றது.

முன்பைவிட வலுவாக அரசியல் பயணம் தொடரும்

கரூர் சம்பவம் தொடர்பாக 3 நாட்கள் கழித்து மவுனம் கலைத்துள்ள தவெக தலைவர் விஜய், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, கரூருக்கு நேரில் வருவேன் என்றார்.

மேலும், இந்தச் சம்பவத்தில் தன்னைப் பழிவாங்க வேண்டுமென்றால், தன்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம், தனது கட்சித் தொண்டர்களை ஏதும் செய்ய வேண்டாம் என்று தமிழக முதல்வருக்கு வெளிப்படையாக சவால் விட்டுள்ளார்.

மேலும், முன்பைவிட வலுவாக அரசியல் பயணம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் இன்று மதியம் 3 மணிக்கு மேல் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: “அனைவருக்கும் வணக்கம். என் வாழ்க்கையில் இது மாதிரியான வலி மிகுந்த நிகழ்வை நான் சந்தித்ததே இல்லை. மனது முழுவதும் வலி மட்டுமே இருக்கிறது.

இந்தச் சுற்றுப்பயணத்தில் மக்கள் என்னைப் பார்க்க வருகிறார்கள். அதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது. அது அவர்கள் என் மீது வைத்துள்ள பாசமும், அன்பும் . அதற்கு நான் மிகுந்த கடமைப்பட்டிருக்கிறேன். அதனால் தான், அவர்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்துவிடக் கூடாது என்ற எண்ணம் என் மனதில் ஆழமாக இருக்கும்.

அரசியல் காரணங்களை ஒதுக்கிவைத்துவிட்டு மக்கள் பாதுகாப்புக்கான இடங்களை கேட்பதில் கவனமாக இருப்போம். ஆனால், நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. நானும் மனிதன் தானே. அப்படி ஒரு சம்பவம் நடந்தபோது எப்படி அந்த இடத்தை விட்டு வர முடியும்?. நான் திரும்ப அங்கு சென்றால், அது வேறு சில அசம்பாவிதங்கள், பதற்றங்களை ஏற்படுத்தக் கூடும். அதனால் தான் திரும்பிச் செல்லவில்லை.

இந்தத் தருணத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த உயிரிழப்புகளுக்கு நான் என்ன ஆறுதல் சொன்னாலும் அது ஈடாகாது. காயமடைந்தவர்கள் சீக்கிரம் குணமடைந்து வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். உங்கள் எல்லோரையும் நான் சந்திக்கிறேன். இந்த நேரத்தில் எங்களுடைய வலிகளை புரிந்து கொண்டு எங்களுக்காகப் பேசிய அரசியல் கட்சிகள், தலைவர்களுக்கு நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கிட்டத்தட்ட 5 மாவட்டங்களில் நான் பிரச்சாரம் செய்துள்ளேன். ஆனால், கரூரில் மட்டும் ஏன் இப்படி நடக்க வேண்டும். மக்களுக்கு எல்லாம் உண்மையும் தெரியும். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கரூரைச் சேர்ந்த மக்கள் உண்மையைச் சொல்லும் போது, கடவுளே நேரில் வந்து இறங்கி உண்மையைச் சொல்வது போல் இருந்தது. சீக்கிரமே எல்லா உண்மையும் வெளியே வரும்.

எங்களுக்குத் தரப்பட்ட இடத்தில் நாங்கள் பேசினோம். அதைத் தவிர நாங்கள் வேறேதும் செய்யவில்லை. ஆனால் எங்கள் கட்சியின் தோழர்கள், நிர்வாகிகள் மீது எஃப்ஐஆர் போட்டு கைது செய்கிறார்கள். சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்தோரையும் கைது செய்கிறார்கள்.

சிஎம் சார் உங்களுக்கு என்னை ஏதாவது பழிவாங்கும் எண்ணம் இருந்திருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். நான் ஒன்று வீட்டில் இருப்பேன். இல்லாவிட்டால் ஆஃபீஸில் இருப்பேன். நண்பர்களே, தோழர்களே நம் அரசியல் பயணம் இன்னும் வலுவாக இருக்கும். இன்னும் தைரியத்தோடு தொடரும்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

இறைவரித் திணைக்களத்தின் திறனை மேம்படுத்துவது குறித்து ஆராய்வு!

0
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. வரி வருவாயை விரிவுபடுத்துதல், வரி இணக்கத்தை அதிகப்படுத்துதல் மற்றும் நிலுவையில் உள்ள...

களுத்துறை மண்ணில் கல்வி கௌரவ விழா!

0
களுத்துறை மண்ணில் கல்வி கௌரவ விழா! கல்வி அமைச்சின் பெருந்தோட்டப் பாடசாலைகள் அபிவிருத்திக் கிளையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சின்னையா ஜெயக்குமாருக்கான வரவேற்பு நிகழ்வும், களுத்துறை மாவட்டத்தின் தமிழ் பெருந்தோட்ட பாடசாலைகளின் அதிபர்களையும், ஓய்வுநிலை அதிபர்களையும்...

கலமுதுனை தமிழ் வித்தியாலயத்தில் உதயமாகிறது பழைய மாணவர் சங்கம்!

0
நூற்றாண்டு நோக்கிய பயணம்: கலமுதுனை தமிழ் வித்தியாலயத்தில் உதயமாகிறது பழைய மாணவர் சங்கம்! தொலஸ்பாகை, கலமுதுனை தமிழ் வித்தியாலய பழைய மாணவர் சங்க அங்குரார்ப்பன நிகழ்வு எதிர்வரும் மே 2 ஆம் திகதி பாடசாலை...