Home Blog Page 271

எரிபொருள் விலை குறைப்பு!

நாட்டில் இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் எரிபொருள் விலை மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரொன்றின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை ரூ. 335.

ஒட்டோ டீசல் லீற்றரொன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்படுவதுடன் அதன் புதிய விலையாக 277ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் லீற்றரொன்றின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை ரூ. 180.

ஒக்டேன் 92 ரக பெற்றோல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. ஒரு லீற்றர் பெற்றோல் 299 ரூபாவுக்கே விற்கப்படுகின்றது.

சுப்பர் டீசல் விலையில் மாற்றம் இல்லை. லீற்றரொன்று 313 ரூபாவுக்கு விற்கப்படுகின்றது.

முன்பைவிட வலுவாக அரசியல் பயணம் தொடரும்

கரூர் சம்பவம் தொடர்பாக 3 நாட்கள் கழித்து மவுனம் கலைத்துள்ள தவெக தலைவர் விஜய், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, கரூருக்கு நேரில் வருவேன் என்றார்.

மேலும், இந்தச் சம்பவத்தில் தன்னைப் பழிவாங்க வேண்டுமென்றால், தன்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம், தனது கட்சித் தொண்டர்களை ஏதும் செய்ய வேண்டாம் என்று தமிழக முதல்வருக்கு வெளிப்படையாக சவால் விட்டுள்ளார்.

மேலும், முன்பைவிட வலுவாக அரசியல் பயணம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் இன்று மதியம் 3 மணிக்கு மேல் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: “அனைவருக்கும் வணக்கம். என் வாழ்க்கையில் இது மாதிரியான வலி மிகுந்த நிகழ்வை நான் சந்தித்ததே இல்லை. மனது முழுவதும் வலி மட்டுமே இருக்கிறது.

இந்தச் சுற்றுப்பயணத்தில் மக்கள் என்னைப் பார்க்க வருகிறார்கள். அதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது. அது அவர்கள் என் மீது வைத்துள்ள பாசமும், அன்பும் . அதற்கு நான் மிகுந்த கடமைப்பட்டிருக்கிறேன். அதனால் தான், அவர்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்துவிடக் கூடாது என்ற எண்ணம் என் மனதில் ஆழமாக இருக்கும்.

அரசியல் காரணங்களை ஒதுக்கிவைத்துவிட்டு மக்கள் பாதுகாப்புக்கான இடங்களை கேட்பதில் கவனமாக இருப்போம். ஆனால், நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. நானும் மனிதன் தானே. அப்படி ஒரு சம்பவம் நடந்தபோது எப்படி அந்த இடத்தை விட்டு வர முடியும்?. நான் திரும்ப அங்கு சென்றால், அது வேறு சில அசம்பாவிதங்கள், பதற்றங்களை ஏற்படுத்தக் கூடும். அதனால் தான் திரும்பிச் செல்லவில்லை.

இந்தத் தருணத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த உயிரிழப்புகளுக்கு நான் என்ன ஆறுதல் சொன்னாலும் அது ஈடாகாது. காயமடைந்தவர்கள் சீக்கிரம் குணமடைந்து வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். உங்கள் எல்லோரையும் நான் சந்திக்கிறேன். இந்த நேரத்தில் எங்களுடைய வலிகளை புரிந்து கொண்டு எங்களுக்காகப் பேசிய அரசியல் கட்சிகள், தலைவர்களுக்கு நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கிட்டத்தட்ட 5 மாவட்டங்களில் நான் பிரச்சாரம் செய்துள்ளேன். ஆனால், கரூரில் மட்டும் ஏன் இப்படி நடக்க வேண்டும். மக்களுக்கு எல்லாம் உண்மையும் தெரியும். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கரூரைச் சேர்ந்த மக்கள் உண்மையைச் சொல்லும் போது, கடவுளே நேரில் வந்து இறங்கி உண்மையைச் சொல்வது போல் இருந்தது. சீக்கிரமே எல்லா உண்மையும் வெளியே வரும்.

எங்களுக்குத் தரப்பட்ட இடத்தில் நாங்கள் பேசினோம். அதைத் தவிர நாங்கள் வேறேதும் செய்யவில்லை. ஆனால் எங்கள் கட்சியின் தோழர்கள், நிர்வாகிகள் மீது எஃப்ஐஆர் போட்டு கைது செய்கிறார்கள். சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்தோரையும் கைது செய்கிறார்கள்.

சிஎம் சார் உங்களுக்கு என்னை ஏதாவது பழிவாங்கும் எண்ணம் இருந்திருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். நான் ஒன்று வீட்டில் இருப்பேன். இல்லாவிட்டால் ஆஃபீஸில் இருப்பேன். நண்பர்களே, தோழர்களே நம் அரசியல் பயணம் இன்னும் வலுவாக இருக்கும். இன்னும் தைரியத்தோடு தொடரும்.

விபத்தில் இரு இளைஞர்கள் பலி!

ஹொரவபத்தானை – கபுகொல்லாவ புகுலேவ சந்தியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ்ஸும் – மோட்டார் சைக்கிளும் மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து இன்று (30) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ்ஸுடன் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

இவ்விபத்தில் ஹொரவபொத்தானை- நெலுகொல்லாவ பகுதியைச் சேர்ந்த பாதில செஹான் (21) மற்றும் பிரவீன் காவிந்த இலங்கசிங்ஹ (20) ஆகிய இருவரே உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் ஹொரவபொத்தானை பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பஸ்ஸின் சாரதியை கைது செய்துள்ளதுடன் விபத்து தொடர்பிலான விசாரணைகளில் மேற்கொண்டு வருவதாக ஹொரவபொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

ஜப்பானிய வர்த்தக சமூகத்திற்கு ஜனாதிபதி அழைப்பு!

ஜப்பான்-இலங்கை இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதோடு, தனியார் துறையை அதற்கு ஊக்குவிப்பதற்கும், இலங்கையில் வளர்ந்து வரும் பொருளாதார வாய்ப்புகளை ஆராய்வதற்கும், கைகோர்க்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஜப்பானிய வர்த்தக சமூகத்திற்கு அழைப்பு விடுத்தார்.

ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு (JETRO) தலைமையகத்தில் நேற்று (29) நடைபெற்ற ஜப்பான் – இலங்கை வர்த்தக மன்றத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு (JETRO) தலைமையகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் ஜப்பான் வர்த்தக சமூகத்தின் சுமார் 200 சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டதோடு, ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு (JETRO), பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சு (METI), ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதரகம், ஜப்பான்-இலங்கை வர்த்தக ஒத்துழைப்புக் குழு மற்றும் இலங்கை முதலீட்டுச் சபை (BOI) ஆகியவை இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.

இங்கு உரையாற்றிய டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, தேசிய டிஜிட்டல் மயமாக்கல் செயற்பாட்டிற்கான இலங்கை அரசாங்கத்தின் மூலோபாய முயற்சிகளை சுட்டிக்காட்டினார். தரவு மத்திய நிலைய அபிவிருத்திக்கான பிராந்திய மையமாக இலங்கையை நிலைநிறுத்துவதில் விசேட கவனம் செலுத்தி, டிஜிட்டல் பரிமாற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற துறைகளில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும் சுட்டிக்காட்டினார்.

மேலும், இலங்கை முதலீட்டுச் சபையினால் (BOI), ஜப்பானிய முதலீட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள முக்கிய துறைகளான, உற்பத்தி, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்டவைகள் குறித்து இங்கு விளக்கமளிக்கப்பட்டது. அதன் மூலம் வலுவான கொள்கை ஆதரவு மற்றும்  முறையான செயல்முறைகள் ஊடாக முதலீட்டுத் தேவைகளுக்கான வசதிகளை வழங்குவதற்கு இலங்கையின் தயார்நிலையை எடுத்துக்காட்டியது.

இலங்கை வர்த்தகப் பிரதிநிதிகள் மற்றும் ஜப்பானிய வர்த்தக சமூகத்தின் பிரதிநிதிகளுக்கு இடையில் ஒரு கேந்திர வலையமைப்பு அமர்வும் இடம்பெற்றது.

இதற்கு இணையாக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் JETRO தலைவர் இஷிகுரோ நொரிஹிகோ (ISHIGURO Norihiko) ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடலும் நடைபெற்றது.

இலங்கையுடன் தொடர்ச்சியான தொடர்பு மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டாண்மைகளை அபிவிருத்தி செய்வதற்கு இரு நாடுகளின் வர்த்தக சமூகங்களுக்கிடையில் பாலமாக செயற்படுவதற்கான தனது அர்ப்பணிப்பை JETRO இன் தலைவர் இங்கு மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், மேல் மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசுப், ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க, பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஜப்பானின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை இராஜாங்க அமைச்சர் கலாநிதி ஒகுஷி மசாகி (Ogushi Masaki), ஜப்பான்-இலங்கை வர்த்தக ஒத்துழைப்புக் குழுவின் தலைவர் கொபயாஷி ஃபுமிஹிகோ(KOBAYASHI Fumihiko) மற்றும் இலங்கை வர்த்தக சபை மற்றும் ஜப்பான்-இலங்கை வர்த்தக மன்றத்தின் உயர்மட்ட வர்த்தகப் பிரதிநிதிகள் குழுவினரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நாட்டில் மீண்டெழும் இனவாத பிசாசுகள்!

இனவாதத்தை கிளப்பும் பிசாசுகள் மீண்டெழுந்துள்ளன. அதிகாரத்துக்காக சதி குறித்தும், சூழ்ச்சி பற்றியும் அவை மந்திராலோசனை நடந்துகின்றன. இந்த பிசாசுகளிடமிருந்து நாட்டை பாதுகாக்க மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் மீள் ஆரம்பிப்பு நிகழ்வு மட்டுவிலில் இன்று காலை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராசா, ஜெ.றஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது உரையாற்றிய அமைச்சர் கூறியவை வருமாறு,

‘ பொருளாதார ரீதியில் இலங்கை வேகமாக முன்னேறி வருகின்றது என தரவுகள் கூறுகின்றன. அதேபோல இலஞ்ச, ஊழல் ஒழிக்கப்பட்டு வருகின்றது. இனவாதம் மற்றும் மதவாதம் என்பவற்றுக்கும் முடிவு கட்டப்பட்டு வருகின்றது.

இலங்கையில் வாழும் மூவின மக்களும் ஓரணியில் திரள வேண்டும். அவ்வாறு நடந்தால் இலகுவில் முன்னோக்கி சென்று விடலாம். இதனையே எமது ஜனாதிபதி தோழர் எல்லா இடங்களிலும் வலியுறுத்தி வருகின்றார்.

எனவே, இந்த இனவாதம் என்ற பிசாசுக்கு எமது நாட்டில் நிரந்தமாக முடிவு கட்ட வேண்டும். அதற்குரிய நடவடிக்கையை நாம் முன்னெடுக்கும் போது பழைய பிசாசுகள் மீண்டெழுவதை காண முடிகின்றது. பழைய திருடர்கள் ஓரணியில் திரண்டுள்ளனர். அதிகாரத்துக்கா சதி மற்றும் சூழ்ச்சிகளை செய்ய முடியுமா என்பது பற்றி ஆராய்கின்றனர்.

இனவாதத்தை தூண்டியேனும் தமது இருப்பை தக்க வைத்துக்கொள்ள முடியுமா என்பது பற்றியும் கதைக்கின்றனர். இது பற்றியே ரணிலும், மஹிந்தவும் அவரது வீட்டில் மந்திராலோசனை செய்கின்றனர். ரணிலும், மஹிந்தவும் நம்பர் வன் திருடர்கள். கடந்த காலங்களில் மத்திய வங்கியில் கொள்ளையடித்தவர்தான் ரணில். இந்நாட்டில் போதைப்பொருள் வியாபாரிகளை பாதுகாத்தவர்தான் ராஜபக்ச.

எனவே, இவர்களிடமிருந்து நாட்டை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் எமது பிள்ளைகளின் எதிர்காலம் பாதுகாக்கப்படும்.” – என்றார் அமைச்சர்.

 

ஆயுதங்களை ஒப்படையுங்கள்: ஹமாஸ் அமைப்புக்கு ஆஸ்திரேலியா அழைப்பு

 

இஸ்ரேல் மற்றும் ஹ​மாஸ் அமைப்புக்கு இடையிலான போரை நிறுத்தும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் முன்வைக்கப்பட்டுள்ள 21 அம்ச அமை​தித் திட்டத்தை ஆஸ்திரேலியா வரவேற்றுள்ளது.

மேற்படி திட்டத்தை ஆதரித்து பிரதமர் அந்தோனி அல்பானீஸியால் இன்று விசேட அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

” போர்நிறுத்தம், பணயக்கைதிகள் விடுதலை மற்றும் காசாவிற்கு உதவி வழங்குதல் என்பன தொடர்பில் சர்வதேச சமூகத்துடன் இணைந்து ஆஸ்திரேலியா ஆதரவளித்துவருகின்றது.

காசாவின் எதிர்கால நிர்வாகத்தில் ஹமாஸ் அமைப்புக்கு எந்தப் பங்கையும் மறுப்பதற்கான திட்டத்தின் உறுதிப்பாட்டை ஆஸ்திரேலியா உறுதிப்படுத்துகின்றது.

மேலும் இந்தத் திட்டத்திற்கு உடன்படுமாறும், ஆயுதங்களைக் களையுமாறும், மீதமுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்குமாறும் ஹமாஸ் அமைப்புக்கு அழைப்பு விடுகின்றோம். – எனவும் அல்பானீஸி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

” பாலஸ்தீன ஆணையம் காசாவை மீண்டும் கட்டுப்பாட்டில் எடுப்பதையும் நாங்கள் பாராட்டுகிறோம். பாலஸ்தீனியர்களை இணைப்பது மற்றும் கட்டாயமாக இடம்பெயர்வதை ஜனாதிபதி டிரம்பின் திட்டம் தெளிவாக நிராகரிப்பதை பிரதிபலிக்கிறது.” – எனவும் அல்பானீஸி சுட்டிக்காட்டியுள்ளார்.

காஷ்மீரில் மூடப்பட்ட 12 சுற்றுலா தலங்கள் திறப்பு!

 

காஷ்மீரின் பஹல்​காமின் பைசரன் பள்​ளத்​தாக்​கில் கடந்த ஏப்​ரல் 22-ம் திகதி பாகிஸ்​தான் ஆதரவு தீவிர​வா​தி​கள் நடத்​திய கொடூர தாக்​குதலில் 26 பேர் உயி​ரிழந்​தனர். இதையடுத்து பாது​காப்பு காரணங்​களுக்​காக 50 சுற்​றுலா தலங்​களை ஜம்மு காஷ்மீர் நிர்​வாகம் மூடியது.

இந்​நிலை​யில் விரி​வான பாது​காப்பு மறுஆய்​வுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் 12 சுற்​றுலாத் தலங்​கள் நேற்று மீண்​டும் திறக்​கப்​பட்​டன.

ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலை​மை​யில் ஸ்ரீநகரில் கடந்த வெள்​ளிக்​கிழமை நடை​பெற்ற கூட்​டத்​தில் இதற்​கான முடிவு எடுக்​கப்​பட்​டது.

இதுகுறித்து எக்ஸ் தளத்​தில் மனோஜ் சின்ஹா வெளி​யிட்ட பதி​வில், “முழு​மை​யான பாது​காப்பு மறுஆய்வு மற்​றும் கலந்​துரை​யாடலுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் கூடு​தல் சுற்​றுலா தலங்​களை மீண்​டும் திறக்க உத்​தர​விட்​டுள்​ளேன்.

காஷ்மீர் பிராந்​தி​யத்​தில் அருபள்​ளத்​தாக்​கு, ராஃப்​டிங் முனையன்​னர், அக்​காட் பூங்​கா, பத்​ஷாஹி பூங்​கா, கமான் போஸ்ட் உள்ளிட்ட ஏழு சுற்​றுலா தலங்​களும், ஜம்மு பிராந்​தி​யத்​தில் ராம்​பனில் உள்ள டாகன் டாப், கது​வா​வில் உள்ள தாகர், சலாலில் உள்ள சிவ குகை உள்​ளிட்ட 5 சுற்​றுலா தலங்​களும் மீண்​டும் திறக்​கப்​படும்” என்று கூறி​யிருந்​தார்.

கடந்த ஜூன் மாதம் காஷ்மீரில் 8 சுற்​றுலா தலங்​களை திறக்க சின்ஹா உத்​தர​விட்​டார் என்பது குறிப்பிடத்தக்கது.

டயஸ்போராக்களின் நிகழ்ச்சி நிரலையே அரசு செயல்படுத்துகிறது: மஹிந்த அணி குற்றச்சாட்டு

டயஸ்போராக்களின் நிகழ்ச்சி நிரலையே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயல்படுத்தி வருகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” தேசிய மக்கள் சக்தியை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு டயஸ்போராக்கள் மற்றும் வெளிநாட்டு சக்திகள் உதவி வழங்கின. இது இரகசியமான விடயம் அல்ல.

இலங்கையின் கலாசாரத்தை சீரழிப்பது இத்தரப்புகளின் பிரதான நோக்கமாகும். ஏனெனில் கலாசாரம் சீரழிந்த நாடொன்றை அழிப்பதென்பது மிக எளிது.

எனவே, வெளிநாட்டு சக்திகள் மற்றும் டயஸ்போராக்களின் நிகழ்ச்சி நிரலுக்கமைய இந்த அரசாங்கம் செயற்படுகின்றதா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது.” – எனவும் சாகர காரியவசம் மேலும் குறிப்பிட்டார்.

ஜப்பானின் முன்னணி வர்த்தகர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

 

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் அங்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (29) ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பின் (JETRO) தலைமையகத்தில் ஜப்பானின் முன்னணி வர்த்தகர்களுடன் வட்டமேசை கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பின் (JETRO) தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி இஷிகுரோ நொரிஹிகோவின் (ISHIGURO Norihiko) பங்கேற்புடன் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் ஜப்பான் இலங்கை வர்த்தக ஒத்துழைப்புக் குழுவின் (JSLBCC) தலைவர் மற்றும் ITOCHU இன் தலைவர் புமிஹிகோ கொபயாஷி (Fumihiko Kabayashi) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இலங்கையில் காணப்படும் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாட்டில் முதலீட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்கி மோசடி மற்றும் ஊழலை ஒழிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் தெளிவுபடுத்தினார்.

இலங்கையின் முக்கிய பொருளாதார பங்காளியாக இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் அவசியத்தையும், அதன் ஊடாகப் பெறக்கூடிய பரஸ்பர நன்மைகள் குறித்தும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்தக் கலந்துரையாடலின் பின்னர், அவர்கள் குழு புகைப்படத்திலும் இணைந்துகொண்டனர்.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், மேல் மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசுப், ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2025-09-30

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

ஐ.பி.எல். தொடரில் 9,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர்!

0
IPL வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார் ஆர்சிபி முன்னாள் தலைவர் விராட் கோஹ்லி. ஐபிஎல் தொடரில் 9,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்தார். டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில்...

மழை தொடரும் சாத்தியம்!

0
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தென் மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையிலும்...

இறைவரித் திணைக்களத்தின் திறனை மேம்படுத்துவது குறித்து ஆராய்வு!

0
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. வரி வருவாயை விரிவுபடுத்துதல், வரி இணக்கத்தை அதிகப்படுத்துதல் மற்றும் நிலுவையில் உள்ள...