Home Blog Page 3520

50 சாராய போத்தல்களுடன் ஹப்புத்தளையில் இருவர் கைது!

ஹப்புத்தளையிலிருந்து தம்பேதன்னை, புதுக்காடு ஆகிய பெருந்தோட்டப்பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட 50  சாராய  போத்தல்களை ஹப்புத்தளை  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாகர தயாரட்ன தலைமை யிலான குழுவினர் இன்று கைப்பற்றினர்.

அத்துடன் இவற்றை கொண்டு சென்ற ஆட்டோவையும் பொலிசார் கைப்பற்றியதுடன், ஆட்டோ சாரதி உள்ளிட்ட இருவரையும் கைது செய்தனர்.

நடமாட்டம் தடை விதிக்கப்பட்ட 22,23 ஆகிய திகதிகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்கே மேற்படி சாராயப்போத்தல்கள கொண்டு செல்லப்பட்டதாக,கைது செய்யப்பட்டவர்கள் பொலிசாரிடம் தெரிவித்தனர்.

நமது நிருபர்கள்

கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் நிறைவேற்றம்!

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 148 பேரும் எதிராக 59 பேரும் வாக்களித்திருந்தனர்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டது.

குறித்த சட்டமூலம் தொடர்பான விவாதம் நேற்றும் இன்றும் நடைபெற்றிருந்த நிலையில், 89 மேலதிக வாக்குகளால் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக அறிவிப்பதற்கு பிரதமர் பணிப்பு

சபரிமலை ஐயப்பன் யாத்திரையை புனித யாத்திரையாக அறிவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்து கலாசார அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல், பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன்போதே மேற்படி பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இக்கலந்துரையாடலின் போது இந்து கலாசார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பான பல விடயங்கள் முன்வைக்கப்பட்டன.

அதில் பிரதமரின் இணைப்பு செயலாளரும், இ.தொ.காவின் உப தலைவருமான செந்தில் தொண்டமான்,  சபரிமலை செல்லும் ஐயப்பன் யாத்திரையை இலங்கை அரசால் புனித யாத்திரையாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

இது தொடர்பாக பல ஆவணங்கள் கடந்த காலங்களில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்பதையும் செந்தில் தொண்டமான், பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

அதனை தொடர்ந்து   பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இந்து கலாசார திணைகளத்திற்கு, சபரிமலை ஐயப்பன் யாத்திரையை புனித யாத்திரையாக அறிவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்தார்.

நுவரெலியா வைத்தியசாலைக்கு பி.சி.ஆர் இயந்திரத்தை பெற்றுக் கொடுத்த மாணிக்கவாசகம் ஐயா….

நுவரெலியா வைத்தியசாலைக்கு தனது சொந்த நிதியில் பி.சி.ஆர் இயந்திரத்தை பெற்றுக் கொடுத்த மாணிக்கவாசகம் ஜயாவிற்கு எங்களுடைய மக்களின் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன் – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராதாகிருஸ்ணன் எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

”  நாட்டில் தற்போது பரவிவருகின்ற கொரோனா தொற்று காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பி.சி.ஆர் செய்வதில் பல்வேறு சிக்கல் ஏற்பட்டுள்ளமை தொடர்பாக நான் கடந்த 13.05.2021 அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றியதுடன் இதன்போது நுவரெலியா மாவட்டத்திற்கு கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டுமாக இருந்தால் உடனடியாக இன்னும் ஒரு பி.சி.ஆர் இயந்திரத்தை சுகாதார அமைச்சு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்டினேன்.

இந்த விடயம் அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வெளிவந்தது.இந்த செய்தியை பார்த்த  அருண்பிரசாந்த் பவுன்டேசன் தலைவர் மாணிக்கவாசகம் ஜயா என்னுடன் தொடர்பு கொண்டு தான் தன்னுடைய பவுன்டேசன் நிதியில் இருந்து பி.சி.ஆர் இயந்திரம் ஒன்றை பெற்றுத் தருவதாக தெரிவித்தார்.

நான் உடனடியாக இந்த விடயம் தொடர்பாக நுவரெலியா பிராந்திய தொற்று நோய் பிரிவின் பொறுப்பாளர் டாக்டர் மதுர செனவிரத்னவிடம் தொடர்பு கொண்டு குறித்த பி.சி.ஆர் இயந்திரம் தொடர்பாக மாணிக்கவாசகம் ஜயாவுடன் தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொண்டேன்.இந்த விடயத்தில் ஊடகவியலாளர் எஸ்.தியாகு ,மாணிக்கவாசகம் ஜயாவுடன் தொடர்பை ஏற்படுத்தி தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இதன் பயனாக தற்பொழுது நுவரெலியா வைத்தியசாலைக்கு இந்த பி.சி.ஆர் இயந்திரம் கிடைக்கப்பெற்றுள்ளது. இதன் செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாணிக்கவாசகம் ஜயா இது மாத்திரமல்ல நான் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த பொழுது தனது சொந்த காணித்துண்டொன்றை வத்தளை பகுதியில் கல்வி அமைச்சிற்கு வழங்கி பாடசாலை கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கு தனது பங்களிப்பை செய்துள்ளார்.

மேலும் டிக்கோயா வைத்தியசாலைக்கும் இயந்திரம் ஒன்றை பெற்றுக் கொடுத்துள்ளதுடன் இன்னும் பல உதவிகளையும் பலருக்கும் செய்து வருகின்ற ஒரு மனிதாபிமானம் மிக்க ஒருவர்.

இவருடைய இந்த செயற்பாடு ஏனையவர்களுக்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.இவருக்கும் இவருடைய பவுன்டேசனுக்கும் மலையக மக்களின் சார்பாக எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்வதுடன்.

இந்த பி.சி.ஆர் இயந்திரத்தை பெற்றுக் கொள்வதற்கு அனைத்து ஊடகங்களும் இந்த செய்தியை வெளியிட்டு உதவியமைக்காக அனைத்து ஊடகங்களுக்கும் எனத நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

????????????????????????????????????

முஜிபுர் ரஹ்மான் எம்.பிக்கும் கொரோனா வைரஸ் தொற்று!

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

பாராளுமன்ற உறுப்பினருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

‘கணவன் கட்டளையிட்டால் சினிமாவுக்கு விடை கொடுப்பேன்’

கணவர் வற்புறுத்தினால் சினிமாவை விட்டுவிலகி விடுவேன் என நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

காஜல் அகர்வால் 2008-ல் தமிழில் பழனி படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.

பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகுராஜா, ஜில்லா, மாரி, பாயும் புலி, விவேகம், மெர்சல், போன்றவை அவருக்கு முக்கிய படங்களாக அமைந்தன.

கடந்த வருடம் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார். காஜல் அகர்வால் நடித்து கடைசியாக கோமாளி படம் 2019-ல் திரைக்கு வந்தது. அவரது பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வராமல் முடங்கி உள்ளது.

ஹேய் சினாமிகா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கும் இந்தியன் 2 படம் பாதியில் நிற்கிறது. சிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்தில் நடித்து வருகிறார்.

காஜல் அகர்வால் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது சினிமாவை விட்டு விலகுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்து காஜல் அகர்வால் கூறும்போது, “நான் எவ்வளவு காலம் நடிப்பேன் என்று எனக்கு தெரியாது. எனது கணவர் சினிமாவில் இருந்து விலகும்படி கூறினால் நடிப்பதை விட்டு விடுவேன். தற்போது கணவரும் குடும்பத்தினரும் எனக்கு ஆதரவாக உள்ளனர். ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் நடிக்க கவனம் செலுத்துகிறேன்” என்றார்.

‘போர் நிறுத்தத்துக்கு தயாரில்லை’ – இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் இராணுவம் இடையிலான மோதல் 2 ஆவது வாரமாக தொடர்ந்து வரும் நிலையில் சண்டை நிறுத்தத்துக்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை என இஸ்ரேல் இராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

ஜெருசலேம் நகரம் யாருக்கு சொந்தம் என்பதில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது.

இந்த சூழலில் ஜெருசலேம் விவகாரத்தில் பாலஸ்தீனத்தின் காசா நகரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும், இஸ்ரேல் இராணுவத்துக்கும் இடையில் கடந்த 10 ஆம் திகதி பயங்கர மோதல் வெடித்தது.

ஹமாஸ் போராளிகள் காசா நகரில் இருந்து இஸ்ரேல் நகரங்கள் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்த, அதற்கு பதிலடியாக காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல்களை நடத்துகிறது.

இப்படி இரு தரப்புக்கும் இடையிலான கடுமையான சண்டை 2-வது வாரமாக தொடர்கிறது. இஸ்ரேலின் வான்வழி தாக்குதல்களில் காசாவில் இதுவரையில் 219 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

அதேபோல் ஹமாஸ் போராளிகளின் ராக்கெட் தாக்குதலில் இஸ்ரேலில் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இரு தரப்புக்கும் இடையில் இடைவிடாமல் தொடரும் சண்டையால் அங்கு போர் பதற்றம் உருவாகியுள்ளது. இது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அப்பாவி மக்களின் உயிரிழப்பை தவிர்க்க இருதரப்பும் உடனடியாக மோதலை கைவிட வேண்டும் என சர்வதேச சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அமெரிக்கா எகிப்து உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா.வும் காசாவில் சண்டை நிறுத்தத்தை அமல்படுத்துவதற்கான முயற்சியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன. ஆனால் சர்வதேச சமூகத்தின் இந்த முயற்சிகளை வீணடிக்கும் விதமாக இஸ்ரேல் இராணுவம் காசா மீதான தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் காசா நகர் மீதான ராணுவ நடவடிக்கை முழுவேகத்தில் தொடர்வதாகவும், இப்போதைக்கு சண்டை நிறுத்தத்துக்கு வாய்ப்பில்லை எனவும் இஸ்ரேல் ராணுவம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அதேபோல் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ மத்திய கிழக்கில் நிரந்தர அமைதி ஏற்படும் வரை காசா நகர் மீதான தாக்குதல் தொடரும் என தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் 761, குருணாகலையில் 265, கேகாலையில் 233 பேருக்கு நேற்று கொரோனா!

நாட்டில் மாவட்ட ரீதியில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை.

கொழும்பு – 218

கம்பஹா – 761

களுத்துறை – 493

குருணாகல் – 265

காலி – 275

மாத்தறை – 106

கேகாலை – 233

பதுளை – 53

அம்பாறை – 31

திருகோணமலை –4

மாத்தளை – 62

அனுராதபுரம் – 139

வவுனியா – 09

முல்லைதீவு – 77

மன்னார் – 07

நுவரெலியா – 83

கண்டி – 124

இரத்தினபுரி –88

புத்தளம் – 94

யாழ்ப்பாணம் – 203

கிளிநொச்சி – 74

பொலன்னறுவை – 14

அம்பாந்தோட்டை – 113

மொனறாகலை – 29

மட்டக்களப்பு – 36

கண்டியில் 124, நுவரெலியாவில் 83, மாத்தளையில் 62 பேருக்கு நேற்று கொரோனா!

மத்திய மாகாணத்தில் 269 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி கண்டி மாவட்டத்தில் 124 பேரும், மாத்தளை மாவட்டத்தில் பேரும் 62 பேரும் , நுவரெலியா மாவட்டத்தில் பேரும் 83 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

துறைமுக நகர சட்டமூலம்மீது இன்று வாக்கெடுப்பு! முற்போக்கு கூட்டணி எதிர்ப்பு – இ.தொ.கா. ஆதரவு!!

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம்மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

மேற்படி சட்டமூலம்மீதான விவாதம் நேற்று ஆரம்பமான நிலையில் இன்றைய தினமும் தொடர்கின்றது. மாலையில் குழுநிலை விவாதத்தின்போது உயர்நீதிமன்றத்தால் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் உள்வாங்கப்படும்.

அதேவேளை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட கட்சிகளும் பல திருத்தங்களை முன்வைத்துள்ளன. அவற்றை அரசு ஏற்க மறுக்கும்பட்சத்தில் சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிக்க அக்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

இதன்படி ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் முற்போக்கு கூட்டணியின் 5 எம்.பிக்கள் சட்டமூலத்தை எதிர்க்கவுள்ளனர். இ.தொ.காவினர் ஆதரிக்கவுள்ளனர்.

சினிமா

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்!

0
இயக்குநர் இமயம் எனப் போற்றப்படும் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று (10) காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 1977-ம் ஆண்டு வெளியான '16 வயதினிலே'...

ராஜா என்றும் ராஜாதான்! 84 ஆவது பிறந்தநாள் இன்று!

0
இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளுக்கு முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்: ”தேனி மாவட்டம், பண்ணைப் புரம் என்ற...

மாரி செல்​வ​ராஜின் ‘மஞ்சணத்தி’

0
‘பரியேறும் பெரு​மாள்’, ‘கர்​ணன்’, ‘மாமன்​னன்’, ‘வாழை’, ‘பைசன் காள​மாடன்’ உள்​ளிட்ட படங்​களை இயக்​கிய மாரி செல்​வ​ராஜ் அடுத்து இயக்​கும் படத்​துக்கு ‘மஞ்​சணத்​தி’ என்று தலைப்பு வைக்கப்​பட்​டுள்​ளது. நவ்வி ஸ்டூடியோஸ் சார்​பாக திவ்யா மாரி செல்​வ​...

செய்தி

செம்மணிப் புதைகுழியில் இதுவரை 327 எலும்புக்கூடுகள் அடையாளம்!

0
- 311 முழுமையாக மீட்பு யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய (09) அகழ்வாராய்ச்சிப் பணிகளின் போது, பச்சிளம் சிசு மற்றும் சிறுவர்களுடையது என அடையாளம் காணப்பட்ட 8 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உட்பட...

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி: கிளிநொச்சியில் சோகம்!

0
கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி - நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் தொழிலகம் ஒன்றில் நேற்றுக் (09) காலை ஏற்பட்ட திடீர் மின்சார விபத்தில் சிக்கி இளம் தொழிலாளி ஒருவர்...

மரக்கறி விலைப்பட்டியல் (10.06.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...