Home Blog Page 3519

18 மாவட்டங்களில் 199 கிராம சேவகர் பிரிவுகள் இதுவரை முடக்கம்!

நாட்டில் மேலும் 9 கிராம சேவகர் பிரிவுகள் நேற்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி யாழ். மாவட்டத்தில் பலாலி வடக்கு கிராம சேவகர் பிரிவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்மடு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், மொனறாகலை மாவட்டத்தில் கிரிவெவ, செவனகல, பஹிராவ, ஹபரத்தவெல, ஹபருகல, மஹாம, இதிகொலபெலஸ்ஸ ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதேவேளை, நாட்டில் 18 மாவட்டங்களில் 199 கிராம சேவகர் பிரிவுகளிலும், ஒரு பொலிஸ் பிரிவிலும் தனிமைப்படுத்தல் நடைமுறை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

26 கிராம சேவகர் பிரிவுகளும், 3 பொலிஸ் பிரிவுகளும் இதுவரை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

கொரோனாவால் மேலும் 44 பேர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 1,132 ஆக அதிகரிப்பு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 44 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான தகவல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உறுதிப்படுத்தலுடன் இன்று அதிகாலை அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இதன்படி இலங்கையில் நாளொன்றில் பதிவான அதிகூடிய மரண எண்ணிக்கை இதுவாகும்.

அத்துடன், கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 132 ஆக அதிகரித்துள்ளது.

‘டிரஸ்ட்’ நிறுவனத்தின் பதுளை மாவட்ட பணிப்பாளர் கொரோனாவால் பலி!

பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் (டிரஸ்ட்) பதுளை மாவட்ட பிராந்திய பணிப்பாளர்  எல்.பி.என். சேனாரத்ன, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் இன்று உயிரிழந்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக இ.தொ.காவின் உபத் தலைவரும் பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான
பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

” எல்.பி.என். சேனாரத்ன   கடந்த 07 வருடங்களாக பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் (TRUST) பிராந்திய பணிப்பாளராக கடமை புரிந்திருந்தார்.

இவர் கொவிட்-19 தொற்று காலத்தில் மக்கள் நலன் கருதி அயராது செயற்பட்டார்.சேவை காலத்தில் அர்பணிப்புடன் சமூகத்திற்காக பணியாற்றிய இவருடைய இழப்பு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்திற்கும், இச்சமூகத்திற்கும் (TRUST) பாரிய இழப்பாகும்.

சேனாரத்ன அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, இவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கின்றேன்.” –  என்றும் இரங்கல் செய்தியில் செந்தில் தொண்டமான் கூறியுள்ளார்.

நாட்டில் மேலும் 2,891 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 891 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 677 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா சிகிச்சை நிலையமாகிறது தொண்டமான் கலாச்சார நிலையம்!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக, இறம்பொடை தொண்டமான் கலாச்சார நிலையம், சுமார் 270 படுக்கை வசதிகளுடன் கூடிய இடைநிலை சிகிச்சை நிலையமாக மாற்றப்படவுள்ளது.

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வழிகாட்டலின் கீழ் , சுகாதார அமைச்சு மற்றும் இராணுவத்தின் உதவியுடன் நிர்மாணப்பணிகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன.

எதிர்வரும் காலப்பகுதிகளில் மேலும் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் இதுபோன்ற இடைநிலை சிகிச்சை நிலையங்களை ஏற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மலையக பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு தகுந்த சிகிச்சை வசதிகளை வழங்கவும், நோய் கட்டுப்பாட்டு வழிமுறைகளை ஏற்படுத்தி கொடுக்கவும் சகல ஏற்பாடுகளும் சுகாதார அமைச்சு மற்றும் இராணுவத்தின் உதவியுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது என இ.தொ.காவின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மக்கள் அத்தியாவசிய காரணங்களுக்காக அன்றி வீட்டை விட்டு வெளியே செல்லுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனவும் கோரப்பட்டுள்ளது.

கம்பஹாவில் 822, கொழும்பில் 674, இரத்தினபுரியில் 190 பேருக்கு நேற்று கொரோனா!

நாட்டில் மாவட்ட ரீதியில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை.

கொழும்பு – 674

கம்பஹா –822

களுத்துறை – 287

குருணாகல் – 248

காலி – 182

மாத்தறை – 108

கேகாலை – 182

பதுளை – 60

அம்பாறை – 07

திருகோணமலை –204

மாத்தளை – 45

அனுராதபுரம் – 58

வவுனியா – 12

முல்லைதீவு – 02

மன்னார் – 02

நுவரெலியா – 48

கண்டி – 85

இரத்தினபுரி –190

புத்தளம் – 29

யாழ்ப்பாணம் – 84

கிளிநொச்சி – 08

பொலன்னறுவை – 43

அம்பாந்தோட்டை – 117

மொனறாகலை – 19

மட்டக்களப்பு – 10

‘தனிமைப்படுத்தப்பட்டுள்ள தோட்டப்பகுதிகளுக்கு சாராயம் கடந்தியவர் கைது’

பொகவந்தலாவ பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தோட்ட பகுதிகளுக்கு குறுக்கு வீதியில் மதுபான போத்தல்களை விற்பனைக்காக கொண்டுச் சென்ற சந்தேக நபர் ஒருவர் பொகவந்தலாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவரை இன்று (21.05.2021) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது சந்தேக நபரிடமிருந்து 25 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கொரோனா அச்சுறுத்தலை கருத்திற்கொண்டு மாலை 6 மணிவுடன் மதுபானசாலைகளை மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அட்டன் மற்றும் நோர்வூட் பகுதிகளில் அந்த உத்தரவு மீறப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

க.கிசாந்தன்

மத்திய மாகாணத்தில் இதுவரை 13,649 பேருக்கு கொரோனா தொற்று!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் மத்திய மாகாணத்தில் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இன்று காலை 6 மணிவரை 13 ஆயிரத்து 649 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி நுவரெலியா மாவட்டத்தில் 3,023 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 7,836
பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 2,790 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

அதேவேளை, கண்டி மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 85 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 45 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில் 48 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

இதற்கிடையில் மலையகத்தில் பல பகுதிகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதால், சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறு பொது மக்களிடம் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

க.கிசாந்தன்

இராகலையில் ‘ட்ரெக்டர்’ வண்டி விபத்து – 21 தோட்டத் தொழிலாளர்கள் படுகாயம்!

42 தோட்டத்தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற ‘ட்ரெக்டர்’ வண்டி விபத்துக்குள்ளானதில் 21 பேர் படுகாயமடைந்துள்ளளனர். இவர்களில் இருவர் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.

நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட இராகலை, நடுக்கணக்கு பகுதியிலேயே இன்று (21.05.2021) காலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இராகலை, ஸ்டாபோட் பிரிவிலுள்ள 42 தொழிலாளர்களை சுமார் 7 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள டிக்சன்கோனார் பகுதிக்கு வேலைக்கு ஏற்றிச்சென்ற ட்ரக்டர் வண்டியே, கொக்கி உடைந்ததால் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

ட்ரக்டர் வண்டியில் முன்பகுதியில் சாரதி அமர்வதற்கான பகுதி இருக்கும். அதன் பின்னர் உள்ள பகுதியிலேயே கொக்கிமூலம் பெட்டி பொருத்தப்படும். அவ்வாறு பொருத்தப்பட்டிருந்த பெட்டியில் பயணித்தவர்களே விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

காயமடைந்தவர்கள் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகின்றது. சமூகஇடைவெளி உட்பட சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் சிறியதொரு பெட்டியில் பொறுப்பற்ற விதத்தில் 42 பேர் ஏற்றிச்செல்லப்பட்டுள்ளனர் என பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

தொழில் பாதுகாப்பற்ற வகையிலேயே அவர்களை நிர்வாகம் அழைத்து வந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்விபத்தையடுத்து அப்பகுதியில் பதற்றமானதொரு சூழ்நிலை நிலவியது.

கொத்மலை ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 26 பேருக்கு கொரோனா!

கொத்மலை நியகங்தொர பகுதியில் உள்ள தனியார் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் மேலும் 26 ஊழியர்களுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

நேற்று (20) மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனை முடிவுகளுக்கு அமைய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக கொத்மலை பொது சுகாதார பரிசோதகர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

அங்கு பணிப் புரிந்த 82 ஊழியர்களுக்கு ஏற்கனவே தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அந்த தொற்றாளர்களுடன் தொடர்பை பேணிய 90 பேருக்கு நேற்று பி.சீ.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதன்போதே மேற்குறித்த 26 ஊழியர்களுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக கொத்மலை பொது சுகாதார பரிசோதகர் காரியாலய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

26 தொற்றாளர்களில் 18 பேர் பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்டவர்கள் என்பதுடன் மிகுதி 8 பேரும் புஸ்ஸலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

புதிய தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொத்மலை பொது சுகாதார பரிசோதகர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

சினிமா

பாரதிராஜா உடலுக்கு முழு அரச மரியாதை: தமிழக முதல்வர் அறிவிப்பு!

0
மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தி குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் இயக்குநர் இமயம்...

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்!

0
இயக்குநர் இமயம் எனப் போற்றப்படும் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று (10) காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 1977-ம் ஆண்டு வெளியான '16 வயதினிலே'...

ராஜா என்றும் ராஜாதான்! 84 ஆவது பிறந்தநாள் இன்று!

0
இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளுக்கு முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்: ”தேனி மாவட்டம், பண்ணைப் புரம் என்ற...

செய்தி

சுரேஷ் சலேவுக்கு சித்திரவதையா? அரசு மறுப்பு!

0
“சுரேஷ் சலே சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படவில்லை. விசாரணைகளை திசைதிருப்பவே சில அரசியல்வாதிகள் முற்படுகின்றனர். கோட்டாபய ராஜபக்ச உட்பட இருவருக்கு பயணம் தடை விதிக்கப்பட்ட பின்னரே குழப்பம் அடைந்துள்ளனர்.” இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ...

ஆட்சி மாற்றம் குறித்து கனவு காணும் பொருளாதாரக் கொளையாளிகள்!

0
“ராஜபக்சக்கள் பொருளாதாரக் கொலையாளிகள். அந்த பொருளாதாரக் கொலையாளிகளால்தான் சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டி ஏற்பட்டது.” என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது...