Home Blog Page 3518

‘இலங்கை சீனாவின் கொலனியாகிவிட்டது – மிகப்பெரிய காட்டிக்கொடுப்பு’ – சந்திரிக்கா சீற்றம்

” அந்நியர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து பெரும் போராட்டங்களுக்கு மத்தியிலேயே எமது நாட்டுக்கு 1948 இல் சுதந்திரம் கிடைத்தது. அதன்பின்னர் 1972 இல் நாடு முழுமையாக சுதந்திரம் அடைந்தது. இந்நிலையில் கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் ஊடாக, இலங்கையை சீனாவின் கொலனியாக்கிவிட்டனர்.

இச்சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கியதன்மூலம் மீண்டுமொரு மிகப்பெரிய காட்டிக்கொடுப்பை மைத்திரிபால சிறிசேன செய்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அவர் மொட்டு கட்சியிடம் அடகு வைத்துள்ளார். கட்சி கொள்கை மற்றும் ஆதரவாளர்களையும் காட்டிக்கொடுத்துவிட்டார்.”

இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

நாட்டில் மேலும் 2,145 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 145 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 478 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் வைரஸ் தொற்றிலிருந்து  ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 995 பேர் மீண்டுள்ளனர். ஆயிரத்து 132 பேர் பலியாகியுள்ளனர்.

‘தமிழ் மொழி புறக்கணிப்பு’ – சீனாவுக்கு எதிராக போராட்டம் வெடிக்கும் ! மனோ எச்சரிக்கை!!

” தமிழ் மொழியை தொடர்ச்சியாக புறக்கணித்து மொழி சட்டத்தைமீறும் சீனாவுக்கு எதிராக தெருப்போராட்டம் நடத்த வேண்டிய நிலை உருவாகும்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட எம்.பியுமான மனோ கணேசன் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பான அவரின் டுவிட்டர் பதிவு வருமாறு,

” தமிழை தவிர்த்து, சீனர் மொழி சட்டத்தை மீறுகிறார்கள்.  சிங்களம்,  தமிழ் இரு மொழிகளையும் தவிர்த்த  சீன மொழி மட்டுமுள்ள பெயர் பலகைகளும் உள்ளன. நான் சீன தூதுவரை சந்தித்து இதுபற்றி விளக்கியுள்ளேன். எனினும் பயனில்லை. இந்நிலை தொடருமானால், நாம் #தெருப்போராட்டம் செய்ய வேண்டி வரும்.” – என்றுள்ளது.

பயணக்கட்டுப்பாட்டை மீறினால் கைது! 22 ஆயிரம் பொலிஸார் களத்தில்!!

பயணக் கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில், விதிமுறைகளை மீறுவோரை கைது செய்வதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.

இதற்காக 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் – என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் நேற்றிரவு 11 மணி முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 423 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

2020 ஒக்டோபர் முதல் நேற்றுவரை தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 11 ஆயிரத்து 743 ​பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெலிமடை – அம்பரகல தோட்டத்தில் ஆலய குருக்கள்மீது தாக்குதல் – விசாரணைக்கு பணிப்பு!

வெலிமடை அம்பரகல தோட்டத்திலுள்ள ஆலயத்தின் குருக்களை, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிலர் கடுமையாக தாக்கியுள்ளனர். அத்துடன், மரண அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர்.

குறித்த ஆலயத்துக்கு அண்மையில் சென்ற பெரும்பான்மை மூகத்தை சேர்ந்த பெண்ணொருவர், ஆலய விதிமுறைகளை மீறி வழிபாட்டு முறைகளை அவமதித்து செயற்பட்டதால் , ஆலய குருக்களுக்கும், பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் முரண்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து ஆலய குருக்கள் கடுமையாக தாக்கப்பட்டு , காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.

குருக்களுக்கு நீதி கோரி தோட்ட மக்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலய குருக்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இ.தொ.காவின் உப தலைவரும், பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமானின், கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுப்பட வேண்டும் என பொலிஸ் பொறுப்பு அதிகாரிக்கு , செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்தார்.

அத்துடன், சிங்கள,தமிழ் மக்களிடையே முறுகல் நிலை ஏற்படாத வகையில் பாதுகாப்பு வழங்கவும், இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மீது மேலதிக நடவடிக்கை எடுக்குமாறும் பணிப்புரை விடுத்தார் என செந்தில் தொண்டமானின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

26 ஆம் திகதி சிவப்பு நிறத்தில் தோன்றப்போகும் நிலவு

எதிர்வரும் 26 ஆம் திகதி நிகழும் சந்திரகிரணத்தின் போது, நிலவு சிவப்பு வண்ணத்தில் தோன்றும்.

சூரிய குடும்பத்தில் உள்ள பூமி, சூரியனை சுற்றி வருவதோடு, தன்னைத்தானேயும் சுற்றி வருகிறது. பூமியின் துணைக் கோளான சந்திரன், பூமியை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி நேர்கோட்டில் வரும்போது, சந்திரகிரகணம் ஏற்படுகிறது. இந்த ஆண்டு, வருகிற 26 ஆம் திகதி நிகழும் சந்திரகிரகணம் மிக சிறப்பானது.

அதாவது, நீள்வட்டபாதையில் பூமியை சுற்றும் சந்திரன், பூமிக்கு மிக அருகில் வரும்போது, இந்த சந்திரகிரகணம் நிகழ்கிறது. அப்போது, சந்திரன் மீது சூரியனின் கதிர்கள் விழுவதை பூமி முற்றிலுமாக தடுக்கிறது. இதனால் சந்திரன் இரத்த சிவப்பு நிறத்தில் தோன்றுகிறது. இது வானியல் விஞ்ஞானிகளால் Super Blood Moon என அழைக்கப்படுகிறது.

இந்த வானியல் அதிசயத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். இந்த சந்திரகிரகணம் சுமார் 3 மணி நேரம் நடைபெறுகிறது. முழு சந்திர கிரகணம் சுமார் 15 நிமிடங்கள் நீடிக்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 2.17 மணிக்கு தொடங்கும் சந்திரகிரகணம், இரவு 7.19 மணிக்கு நிறைவடைகிறது. இந்திய நேரப்படி பகலிலேய முழு சந்திரகிரகணம் நடைபெறுவதால், அதை முழுமையாக பார்க்க முடியாது.

சீனாவில் புதிதாக 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

சீன தலைநகரில் நேற்று புதிதாக 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அந்நாட்டின் தேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிதாகக் கிருமித்தொற்று பதிவான 10 பேரில் ஒருவர் உள்நாட்டை சேர்ந்தவர் எனவும், ஏனையோர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டியில் 8,008, நுவரெலியாவில் 3,082, மாத்தளையில் 2,908 பேருக்கு இதுவரை கொரோனா!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் மத்திய மாகாணத்தில் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இன்று காலை 6 மணிவரை 13 ஆயிரத்து 998 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி நுவரெலியா மாவட்டத்தில் 3,082 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 8,008
பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 2,908 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

அதேவேளை, கண்டி மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 172 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 118 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில் 59 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

இதற்கிடையில் மலையகத்தில் பல பகுதிகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதால், சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறு பொது மக்களிடம் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

3 அலைகளிலும் மேல் மாகாணத்தில் 87,884 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை மேல் மாகாணத்தில் 87 ஆயிரத்து 884 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்று வரை கொழும்பு மாவட்டத்தில் 44 ஆயிரத்து 677 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 29 ஆயிரத்து 186 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 14 ஆயிரத்து 21 பேருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அத்துடன் மேல் மாகாணத்திலேயே அதிகளவு உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு மாவட்டத்தில் நேற்று 800 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 617 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 280 பேருக்கும் நேற்று வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

‘சட்டமா அதிபர் திணைக்களத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பு’ – செந்தில் தொண்டமான் சீற்றம்!

சட்டமா அதிபர் அலுவலகத்தில் சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள மின் நூலகத்தின் பெயர் பலகையில் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியான தமிழ் மொழியை சீன அதிகாரிகள் புறக்கணித்துள்ளனர்.

இலங்கையின் சட்டத்தை பாதுகாக்கும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தலைமை சட்ட அலுவலகத்திலேயே தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டால் தமிழ் மொழிக்கு இலங்கையில் உள்ள அங்கீகாரம் என்னவென்றே கேள்வியெழுகிறது.

இது தொடர்பாக அறிந்த இதொகாவின் உபத் தலைவரும் பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான், உடனடியாக நீதி அமைச்சர்   அலி சப்ரியைதொடர்பு கொண்டு, இதற்கான உடனடி நடவடிக்கையை எடுத்து தமிழ் மொழி புறக்கணிப்பை நிவர்த்தி செய்யுமாறு வேண்டுகோள்
விடுத்தார்.

உடனடியாக இந்த விடயத்தில் நடவடிக்கை எடுப்பதாக நீதி அமைச்சர் செந்தில் தொண்டைமானிடம் உறுதியளித்தார்.

 

சினிமா

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

பாரதிராஜா உடலுக்கு முழு அரச மரியாதை: தமிழக முதல்வர் அறிவிப்பு!

0
மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தி குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் இயக்குநர் இமயம்...

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்!

0
இயக்குநர் இமயம் எனப் போற்றப்படும் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று (10) காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 1977-ம் ஆண்டு வெளியான '16 வயதினிலே'...

செய்தி

தென்மாகாண முன்னாள் முதல்வர் கைது!

0
தெற்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சான் விஜயலால் டி சில்வா கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டில் பொதுப் பணத்தை தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் லஞ்ச ஊழல் ஆணையம் இந்த...

எதிர்க்கட்சி தலைவர் சஜித்துடன் அமெரிக்க தூதுக்குழு சந்திப்பு!

0
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அமெரிக்க House Democracy Partnership (HDP) தூதுக்குழுவினருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று நடைபெற்றது. நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, இரு தரப்பினரிடையேயான நாடாளுமன்ற...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...