Home Blog Page 3517

‘இன்றும், நாளையும் 9 மணி முதல் 2 மணிவரை தபாலகங்கள் திறக்கப்பட்டிருக்கும்’

நாட்டிலுள்ள தபாலகங்களும், உப தபாலகங்களும் இன்றும், நாளையும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை திறக்கப்பட்டிருக்கும் என்று தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

மே மாதத்துக்கான ஓய்வூதியம், விவசாயிகள், மீனவர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு, முதியோர் கொடுப்பனவு உள்ளிட்ட கொடுப்பனவுகளை மாத்திரமே தபாலகங்கள் திறக்கப்பட்டிருக்கும்.

நாட்டில் தற்போது பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ளதால், மேற்படி கொடுப்பனவுகளை பெறவேண்டியவர்கள், தமது ஓய்வூதிய அடையாள அட்டை, விவசாயம், மீனவர் ஓய்வூதிய அடையாள அட்டை, முதியோர் மற்றும் பொதுசன கொடுப்பனவுகளுக்காக வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி தபாலகங்களுக்கு வரமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து சிரமங்களால் ஏதேனும் அலுவலகங்கள் திறக்கப்படாவிட்டால், 1950 துரித அழைப்பு இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியுமெனவும் எனவும் தபால்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா? 3ஆவது போட்டி இன்று!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று டாக்காவில் நடைபெறவுள்ளது.

முதல் இரு போட்டிகளிலும் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றுள்ளன.

குசல் பெரேரா இலங்கை அணியின் தலைவராக அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் தலைமை தாங்கிய முதல் தொடர் இதுவாகும்.

எனவே, முதல் இரு போட்டிகளில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து, இலங்கை ஆறுதல் வெற்றியையாவ பதிவு செய்யவேண்டும் என்பதே இலங்கை இரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாகும்.

மாத்தளை, கண்டி வாசிகள் உட்பட கொரோனாவால் மேலும் 27 பேர் பலி!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 27 மரணங்கள் பதிவாகியுள்ளன. நேற்றைய தினம் நால்வரும், மே 22 முதல் மே 26 ஆம் திகதிவரை 26 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 325 ஆக அதிகரித்துள்ளது.

லயன் சுவர் இடிந்து விழுந்ததில் இரு வீடுகள் சேதம் – 12 பேர் பாதிப்பு!

அடை மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால், நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டொக்கம் தோட்டம் தொழிற்சாலை பிரிவில் 13 ஆம் இலக்க  நெடுங்குடியிருப்புமீது சுவர் உடைந்து வீழ்ந்துள்ளது.

 20 வீடுகளை கொண்ட குறித்த தொடர் குடியிருப்பில் இன்று காலையே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இதில் இரண்டு வீடுகள் முழுமையாக சேதமாகியுள்ளன.  12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீடுகளின் கூரைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீடுகளின் தளபாடங்கள் மற்றும் பொருட்களும் சேதமடைந்துள்ளன.

அதேவேளையில் பாதிக்கப்பட்டவர்களை தோட்ட நிர்வாகத்தின் அதிகாரிகள் பார்வையிட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் இப்பகுதி கிராமசேவகர் ஊடாக நோர்வூட் பொலிஸார் மற்றும் மாவட்ட இடர்முகாமைத்துவ மத்திய நிலையம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களை தோட்ட ஆலய மண்டபத்தில் பாதுகாப்பு கருதி தங்கவைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவர்களுக்கான நிவாரண உதவிகளை மஸ்கெலியா பிரதேச சபையின் ஊடாக மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபை தவிசாளர் தெரிவித்தார்.

அத்தோடு, இந்த நெடுங்குடியிருப்பில் உள்ள ஏனைய 5 வீடுகளிலும் வெடிப்புகள் காணப்படுவதன் காரணமாக இடிந்து விழும் அபாயம் இருப்பதாக குடியிருப்பாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

எனவே, உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என குடியிருப்பாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

க.கிசாந்தன்

நாட்டில் மேலும் 1,782 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

நாட்டில் மேலும் ஆயிரத்து 782 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 59 ஆக அதிகரித்துள்ளது.

‘பற்றி எரிந்த கப்பலால் அமில மழை பெய்யும் சாத்தியம்’

தீ பரவியுள்ள MV X-Press Pearl கப்பலிலிருந்து வௌியேறும் புகையால் அமில மழை பெய்வதற்கான சாத்தியமுள்ளது என கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் தர்ஷனி லஹதபுர தெரிவித்தார்.
தீ பரவும் கப்பலிலிருந்து Nitrogen Dioxide வாயு வௌியேறுவதால், அது காற்றுடன் கலந்து அமில மழையாக பெய்யும் வாய்ப்புள்ளதாகவும்,
கரையோரங்களில் மாத்திரமன்றி, கரையோரத்தை அண்மித்த பகுதிகளிலும் அமில மழை பெய்யக்கூடும் என அவர் கூறினார்.
 
இதனால், வீடுகளுக்கு வௌியில் வாகனங்கள் உள்ளிட்ட உலோகப் பொருட்கள் இருக்குமாயின் அவற்றை மூடி வைக்குமாறும் கரையோரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலுள்ளவர்கள் மழையில் நனைவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

கொழும்பில் 573, கண்டியில் 257, நுவரெலியாவில் 57 பேருக்கு நேற்று கொரோனா!

நாட்டில் மாவட்ட ரீதியில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை.

கொழும்பு – 573

கம்பஹா –530

களுத்துறை – 128

குருணாகல் – 63

காலி – 92

மாத்தறை –26

கேகாலை – 24

பதுளை – 15

அம்பாறை –31

திருகோணமலை –151

மாத்தளை – 09

அனுராதபுரம் – 34

வவுனியா – 14

முல்லைதீவு – 10

மன்னார் – 12

நுவரெலியா – 57

கண்டி – 257

இரத்தினபுரி –129

புத்தளம் – 34

யாழ்ப்பாணம் – 39

கிளிநொச்சி –36

பொலன்னறுவை – 10

அம்பாந்தோட்டை – 13

மொனறாகலை –06

மட்டக்களப்பு – 32

கொழும்பு துறைமுக நகர சட்டமூலத்துக்கு சபாநாயகர் சான்றுரை

பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று கையொப்பமிட்டார்.

சட்டமூலமொன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும், அதற்கு சபாநாயகர் சான்றுரை வழங்கிய தினத்தில் இருந்தே அச்சட்டம் அமுலுக்குவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

சீரற்ற காலநிலையால் நுவரெலியாவில் 300 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு – 15 வீடுகள் சேதம்!

சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 300 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், அடை மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் 15 வீடுகள் பகுதிளயவு சேதமடைந்துள்ளன.

சுமார் 52 குடும்பங்களைச் சேர்ந்த 202 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் இன்றைய தினமும் கடும் மழை பெய்துவருகின்றது.

‘கொரோனா’வின் தோற்றம் குறித்து கண்டறியுமாறு புலனாய்பு பிரிவுக்கு ஜோ பைடன் பணிப்பு!

கொரோனா வைரஸின் தோற்றம் தொடர்பில் ஆராய்ந்து – கண்டறிந்து அது தொடர்பில் விரிவானதொரு அறிக்கையை முன்வைக்குமாறு புலனாய்வு அமைப்புகளுக்கு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

புலனாய்வு அமைப்புகள், தங்களின் முயற்சிகளை இரட்டிப்பாக்கி, 90 நாட்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் பணித்துள்ளார்.

சீனாவின் வுஹான் நகரில் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. சர்வதேச ரீதியில், இதுவரையில் 168 மில்லியனுக்கும் அதினமானோர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 3.5 மில்லியன் பேர் மரணித்தனர்.

சீனாவின் வுஹான் நகரில் உள்ள கடலுணவு சந்தையிலிருந்து கொரோனா வைரஸ் பரவியதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.அத்துடன், முதலில் விலங்குகளிலிருந்து இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவியதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.எனினும், அமெரிக்க ஊடக தகவல்களின்படி, சீனாவின் ஆய்வகம் ஒன்றிலிருந்து கொரோனா வைரஸ் வெளிவந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே அமெரிக்க ஜனாதிபதி இவ்வாறானதொரு கட்டளையை பிறப்பித்துள்ளார்.

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

அமெரிக்க, ஈரான் அமைதி ஒப்பந்தம் ஜெனிவாவில் கைச்சாத்து!

0
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான அமைதி ஒப்பந்தம், விரைவில் சுவிட்சர்லாந்தில் கைச்சாத்திடப்படவுள்ளதென தெரியவருகின்றது. ஜெனிவாவில் இதற்குரிய நிகழ்வு இடம்பெறலாம் என ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இரு தரப்பு அமைதி பேச்சில் முக்கிய மத்தியஸ்தராகச் செயல்படும் பாகிஸ்தானின்...

காணாமல்போன 6 வயது சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

0
காணாமல்போன 6 வயது சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு! - பருத்தித்துறையில் சோகம் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை, புலோலி வல்லிபுரக்குறிச்சி பகுதியில் கிணற்றில் விழுந்து 6 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என்று பருத்தித்துறை...

2029 இல் நாமலே ஜனாதிபதி: மஹிந்த முன்னிலையில் அர்ச்சுனா சூளுரை!

0
" 2029 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்சதான் ஜனாதிபதி. அவருடன் பேசி தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன்." என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். மஹிந்த ராஜபக்சவும் பங்கேற்ற...