Home Blog Page 3516

ஜுன் 6 ஆம் திகதி மேலும் 10 லட்சம் தடுப்பூசிகள் இலங்கை வருகின்றன

சீனாவிடமிருந்து இலங்கை கொள்வனவு செய்யவுள்ள 20 லட்சம் சினோபாம் தடுப்பூசிகளில், 10 லட்சம் தடுப்பூசிகள் ஜுன்6 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளன என்று ஔடதங்கள் தயாரிப்பு , விநியோக மற்றும் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

அதே மாதம் மேலும் 10 லட்சம் சினோ பாம் தடுப்பூசி இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இலங்கைக்கு இதுவரை 11 லட்சம் சினோபாம் தடுப்பூசிகளை சீனா அன்பளிப்பாக வழங்கியுள்ளது. முதற்கட்டமாக 6 லட்சமும், அடுத்தக்கட்டமாக 5 லட்சமும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிலையில் மேலும் 20 மில்லியன் தடுப்பூசிகளை விலைக்கு வாங்குவதற்கான திட்டத்தை இலங்கை முன்னெடுத்திருந்தது. அதன்பிரகாரமே ஜுன் 6 ஆம் திகதி 10 லட்சம் தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளன.

‘பயணத்தடைக்கு மத்தியில் பயணித்த ஆட்டோ விபத்து – இருவருக்கு காயம்’

புஸல்லாவை, மெல்போர்ட் தோட்டத்தில் இன்று (30) முற்பகல் ஆட்டோவொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

நாட்டில் தற்போது பயணத்தடை அமுலில் உள்ள நிலையில், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதற்கு நடமாடும் வணிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி மெல்போர்ட் தோட்டப்பகுதியில் வாழும் மக்களுக்கு பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளை விற்பனை செய்வதற்குச்சென்ற ஆட்டோவே இவ்வாறு, வீதியை விட்டுவிலகி – வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஆட்டோ ஓட்டுநரும், அதில் பயணித்த ஒருவருக்கும் சிறு அளவியான காயம் ஏற்பட்டுள்ளது.

படங்கள் – மெல்போர்ட் ஶ்ரீ.
www.kuruvi.lk

சர்வதேச தொழிலாளர் மகாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக பாரத் அருள்சாமி

ஜெனிவாவில் நடைபெறும் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் 109வது சர்வதேச தொழிலாளர் மகாநாட்டில் (சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக இலங்கை பிரதிநிதியாக காங்கிரஸின் உப செயலாளரும் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பாளருமான பாரத் அருள்சாமி பங்கேற்கின்றார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களினால் இவர் பரிந்துரைக்கபட்டுள்ளார். வரலாற்றில் முதல் முறையாக இணைய வழியாக நடைபெறும் இம் மகாநாட்டில் இளம் தொழிலாளர் பிரதிநிதியாக பாரத் பங்கேற்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொவிட் 19 பாதிப்பின் காரணமாக கடந்த ஆண்டு இந்த கூட்ட தொடர் நடைபெறாவிடினும் இவ்வாண்டு இணையவழியினுடாக 187 நாடுகள் பங்கேற்கும் இம்மாநாடு ஜூன் மாதம் 3 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க உள்ளதாகவும் கடந்த மே மாதம் 20ஆம் திகதி இதற்கான குழுநிலை கூட்டம் ஆரம்பித்துள்ளதாகவும் ஒவ்வொரு உறுப்பு நாடுகளும் மாநாட்டிற்கு அரசு பிரதிநிதிகள், முதலாளி பிரதிநிதி மற்றும் தொழிலாளர் பிரதிநிதி ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தும் என பாரத் எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.

இம்மகாநாட்டில் கொவிட் 19 தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் தொழில் துறைகள் சம்பந்தமாக விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது எனவும் இதில் கொவிட் 19 தாக்கம் காரணமாக இலங்கையின் தொழித்துறை முகம் கொடுத்த சவால்கள் தொடர்பாகவும் விசேடமாக பெருத்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் நாளாந்த தொழில் புரியும் தொழிலாளர்கள் தொடர்பாக பாரத் உரை நிகழ்த்தவுள்ளார்.

மேலும் இக் கூட்டத்தொடரின் இறுதியில் வெளிவர இருக்கும் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் ஆவணத்தில் கொவிட் 19 தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களளின் தொழில் உறுதி, அனைத்து தொழிலார்களுக்கான தடுப்பூசி பெறுவதற்கான வாய்ப்பு, தொழில் புரியும் ஸ்தானத்தில் சுகாதாரபாதுகாப்பு, தொழிலார்களுக்கான தகவல் தொழில்நுட்ப கல்வி மற்றும் பெண் தொழிலார்களுக்கான பாதுகாப்பும் முன்னுரிமையும் போன்ற விடயங்களை வலியுறுத்த உள்ளதாகவும் பாரத் அருள்சாமி மேலும் தெரிவித்தார்.

கண்டியில் வசிக்கும் மாற்றுத் திறனாளி சிறுவன் கின்னஸ் சாதனை

கண்டியில் தற்போது வசித்துவரும் இந்திய நாட்டைச் சேர்ந்த சர்வஜித் கிருஸ்ணபிரசாத் (வயது 14) என்ற மாற்றுத் திறனாளியான சிறுவன் ஆன்லைன் நிகழ்வில் பங்கேற்று கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளார்.

நிர்ணயிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் சித்திரக் கலைஞர்கள் தங்களுடைய சித்திரங்களை முகநூல் ஊடாக அதிகளவான ஒவியங்களை பதிவேற்றுவதன் மூலமாக இந்த போட்டியில் பங்குபற்ற முடியும்.

குறித்த போட்டியில் இலங்கை, இந்தியா உட்பட 26 நாடுகளைச் சேர்ந்த 200 மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குபற்றியதுடன் போட்டியாளர்களால் 1149 சித்திரங்களை இந்த போட்டிக்காக முகநூல் ஊடாக பதவேற்றியிருந்ததுடன் இதில் 797 சித்திரங்கள் போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சித்திரங்களை போட்டியாளர்கள் ஒரு மணி நேரத்தில் பூர்த்தி செய்துள்ளதுடன் பதிவேற்றத்தின் பொழுது போட்டியாளர்கள் தாங்கள் சித்திரத்தை தீட்டுகின்ற புகைப்படம் ஒன்றையும் பதவேற்ற வேண்டும் என்பதே இதன் நிபந்தனையாகும்.

மேலும் இந்த போட்டியானது விசேடமாக இந்த கொரோனா தொற்று காலத்தில் விசேட திறனாளிகள் முடங்கிவிடக்கூடாது என்பதற்காகவே நடத்தப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.இந்த போட்டியில் செல்வன் சர்வஜித் கிருஸ்ணபிரசாத் (வயது 14) வெற்றி பெற்றுள்ளதாக கிண்ணஸ் நிறுவனம் அங்கீகரித்து அவருக்கான சான்றிதளையும் ஒன்லைன் மூலமாக வழங்கியுள்ளது.

அவருடைய மூலப் பிரதி மிகவிரைவில் அவருடைய கைகளுக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மாற்றுத் திறனாளியான செல்வன் சர்வஜித் கிருஸ்ணபிரசாத் (வயது 14) ஒவியங்களை வரைவதில் சிறுவயது முதல் அதிக ஆர்வம் காட்டிவந்துள்ளதுடன் அவர் ஏற்கனவே பல சர்வதேச போட்டிகளிலும் பங்குபற்றியுள்ளார்.

அவர் தற்பொழுது கண்டியில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் ஏனைய மாணவர்களுக்கு முன் உதாரணமாக திகழும் செல்வன் சர்வஜித் கிருஸ்ணபிரசாத் தொடர்ந்து முழுமையாக ஒவியங்களை தீட்டுவதில் ஈடுபட்டு வருவதுடன் எதிர்வரும் காலத்தில் இன்னும் பல சர்வதேச போட்டிகளில் பங்குபற்ற வேண்டும் என்பதே அவருடைய எதிர்பார்ப்பாகும்.

நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு

.

நுவரெலியாவில் மேலும் 205 பேருக்கு கொரோனா – இதுவரை 4,089 பேர் பாதிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மேலும் 205 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பொகவந்தலா, டிக்கோயா, திம்புள்ள பத்தன, கந்தபளை, கொத்மலை, மஸ்கெலியா, நானுஓயா, நுவரெலியா, பூண்டுலோயா, ராகலை மற்றும் தலவாக்கலை ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இருந்தே தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, 2020 ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை நுவரெலியா மாவட்டத்தில் 4 ஆயிரத்து 89 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் இதுவரை 15 லட்சத்து 41 ஆயிரத்து 734 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது

இலங்கையில் 2021 ஜனவரி 29 ஆம் திகதி முதல் மே 29 ஆம் திகதிவரை 15 லட்சத்து 41 ஆயிரத்து 734 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இன்றைய தினமும் தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுக்கப்படுகின்றது.

இலங்கையில் தற்போது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் ஆஸ்ட்ரா செனகா நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொவிஷீல்ட் (Covishield) , சீனாவின் தயாரிப்பான சினோ பாம் (Sinopharm), ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் – பை (Sputnik – V) ஆகிய தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுவருகின்றன.

இதன்படி கொவிஷீல்ட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 9 லட்சத்து 25 ஆயிரத்து 242 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளது. இவ்வாறு முதலாவது டோஸை பெற்றுக்கொண்டவர்களில் 3 லட்சத்து 43 ஆயிரத்து 293 பேருக்கு இரண்டாம் டோஸ் ஏற்றப்பட்டுள்ளது. சுமார் 5 லட்சத்து 81 ஆயிரத்து 949 பேருக்கு இரண்டாம் டோஸ் ஏற்றவேண்டியுள்ளது.

2021 மார்ச் 26 ஆம் திகதி முதல் மே 28 ஆம் திகதிவரை இலங்கையில் உள்ள 2 ஆயிரத்து 435 சீனப்பிரஜைகள் உட்பட 6 லட்சத்து ஆயிரத்து 508 பேருக்கு சினோ பாம் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இதன் இரண்டாவது டோஸை 2 ஆயிரத்து 435 பேர் பெற்றுள்ளனர்.

ஸ்புட்னிக் – பை தடுப்பூசி ஏற்றும் பணி ஏப்ரல் 30 ஆம் திகதி ஆரம்பமானது. மே 28 வரை 14 ஆயிரத்து 984 பேருக்கு அந்த தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ளது. இன்னும் இரண்டாவது டோஸ் ஏற்றும் பணி ஆரம்பமாகவில்லை.
அதேவேளை, ரஷ்யாவிடமிருந்து கிடைக்கப்பெற்ற 50 ஆயிரம் ஸ்புட்னிக் -பை தடுப்பூசி, இன்று முதல் கண்டி மாவட்டத்தில் மக்களுக்கு ஏற்றப்படவுள்ளது.

ஜுன் 6 ஆம் திகதியளவில் சீனாவிடமிருந்து 10 இலட்சம் சினோ பாம் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளன. அதற்கு அடுத்த வாரம் மேலும் 10 லட்சம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும்.

இலங்கைக்கு சீனா இதுவரை 11 லட்சம் சினோ பாம் தடுப்பூசிகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. அந்நாட்டிடமிருந்து 20 லட்சம் தடுப்பூசிகளை இலங்கை விலைக்கு வாங்கவுள்ளது.

பைசர் தடுப்பூசியை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளையும் அரசு செய்துவருகின்றது.

ஆர்.சனத்

கைது வேட்டை தொடர்கிறது – ஒரே நாளில் 914 பேர் சிக்கினர்!

முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியை பேணாமை உட்பட தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 914 பேர் கடந்த 24 மணி நேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய குற்றச்சாட்டின்பேரில் நாளொன்றில் கைது செய்யப்பட்ட அதிகளவானவர்களின் எண்ணிக்கை இதுவாகும்.

அதேவேளை, தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாளிலிருந்து இன்று காலை 6 மணிவரை அச்சட்டத்தைமீறிய 17 ஆயிரத்து 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 6 ‘கொரோனா’ மரணங்கள் பதிவு – (விபரம் இணைப்பு)

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 42 பேர் பலியாகியுள்ளனர். நேற்றைய தினம் 6 பேரும், மே 14 முதல் 28 ஆம் திகதிவரை 36 மரணங்களும் பதிவாகியுள்ளன. இதில் நுவரெலியா மாவட்டத்தில் 6 மரணங்கள் பதிவாகியுள்ளன.

அத்துடன், வைரஸ் தொற்றால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 405 ஆக அதிகரித்துள்ளது.

ஐ.பி.எல். போட்டிகள் குறித்து வெளியாகியுள்ள விசேட தகவல்….

எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிர்வரும் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் நடைபெறும் என்று ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் சபையின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு இந்திய கிரிக்கெட் சபைத் தலைவர் சவுரவ் கங்குலி தலைமை தாங்கினார்.

இதில் இந்தியாவில் நிலவும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் வருங்கால கிரிக்கெட் போட்டிகளை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா, “ எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்” என்றார்.

இந்தியாவில் நடந்து வந்த 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்தையும் (பயோ பபுள்) மீறி 4 அணியை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் கடந்த 4 ஆம் திகதி இந்த போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 29 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் இன்னும் 31 ஆட்டங்கள் எஞ்சி இருக்கின்றன.

‘பதுளை மாவட்டத்திலும் தடுப்பூசி திட்டத்தை முன்னெடுக்க திட்டம் வகுப்பு’

அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளைக் கூடிய விரைவில் பதுளை மாவட்டத்திலும் முன்னெடுக்குமாறு ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.

பதுளை மாவட்ட கொவிட் கட்டுப்பாட்டுக் குழுக் கூட்டம்  இன்று பதுளை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

பதுளை மாவட்டத்தில் கொவிட் தடுப்பூசி நடவடிக்கைகளை முன்னெடுக்க 513,325 தடுப்பூசிகள் தேவைப்படுவதாகவும், அவற்றைக் கிராம சேவகர் பிரிவுகளின் ஊடாக முன்னெடுக்க 266 இடங்கள் தற்பொழுது தயார் நிலையில் காணப்படுவதாகவும் பதுளை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

அதற்கு மேலதிகமாக மாவட்டத்தில் காணப்படும் ஆயுர்வேத மருத்துவ நிலையங்களையும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளுக்கு உள்வாங்குமாறு ஆளுநரால் ஆலோசனை வழங்கப்பட்டது.

அதேவேளைப் பொதுமக்களுடன் எந்நேரமும் நேரடித் தொடர்புகளைப் பேணிவரும் சுகாதார பிரிவினர், பாதுகாப்பு பிரிவினர், கிராம சேவகர்கள், சமூர்த்தி அதிகாரிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் நபர்களுக்கு முன்னுரிமை வழங்கி, முன்னுரிமை கோரிக்கை பட்டியலொன்றைத் தயாரித்து சுகாதார அமைச்சுக்கு வழங்குமாறு மாவட்ட சுகாதார அதிகாரி மற்றும் மாவட்டச் செயலாளருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

மேலும் கொவிட் சிகிச்சை நிலையங்களில் காணப்படும் கட்டில்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.

அதற்கமைய தற்பொழுது காணப்படும் சிகிச்சை நிலையங்களுக்கு மேலதிகமாக பதுளை நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 260 கட்டில்களைக் கொண்ட கொவிட் இடைநிலை சிகிச்சை மையத்தைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

மேலும் இந்த இக்கட்டான காலகட்டத்தில் கல்வி நடவடிக்கைகள் ஒன்லைன் தொழிநுட்பத்தில் நடைபெற்று வருகிறது. என்றாலும் தற்பொழுது நாடளாவிய ரீதியில் விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு காரணமாக தொலைபேசிகளுக்கு தேவையான இன்டர்நெட் Data அட்டைகளைப் பெற்றுக்கொள்வதில் பாரிய பிரச்சினைகள் காணப்படுவதாகக் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அதற்குத் தீர்வாக இணையச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு வீட்டுக்கு வீடு தமது சேவைகளை வழங்குவதற்கு அனுமதியை வழங்கவும், கிராமங்களுக்குச் செல்லும் மொபைல் லாரிகளில் தேவையான தொலைபேசி அட்டைகளையும் அனுப்பவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில், இராஜாங்க அமைச்சர் தேனுக விதங்கமகே, பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷன் டெனிபிடிய, மாகாண பிரதான செயலாளர், பதுளை மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள் கலந்துகொண்டதுடன், Zoom தொழிநுட்பத்தை ஊடக அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

எம்.செல்வராஜா, பதுளை

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

செம்மணியில் மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

0
  யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி, மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 25வது நாள் அகழ்வுப் பணி இன்று...

சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தனக்கு தொடர்பு இல்லையெனில், சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு...

வத்தளை ஹேக்கித்தை சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்: விரிவான ஏற்பாடுகள் தயார்!

0
  வரலாற்றுச் சிறப்புமிக்க வத்தளை, ஹேக்கித்தை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் மூன்றாவது மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் ஜூன் மாதம் 25ஆம்திகதி மிக விமரிசையாக நடைபெறவுள்ள நிலையில், அது தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு...