Home Blog Page 3515

‘பற்றி எரிந்தது கப்பல்’ – விசாரணைக்கு 10 பேரடங்கிய சிறப்பு சி.ஐ.டி.குழு!

எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த விடயம் தொடர்பில் கப்பலின் கெப்டன் , தலைமை பொறியிலாளர் ஆகியோரிடம் இன்று (31) வாக்குமூலம் பதிவுசெய்யப்படவுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஹோட்டலில் வைத்தே இவ்வாறு வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

அதேவேளை, எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த விடயம் தொடர்பான விசாரணைகள், பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய, குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளுக்காக 10 அதிகாரிகள் கொண்ட சிஐடி குழு நியமிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மேலும் 66,784 பேருக்கு நேற்று தடுப்பூசி ஏற்றல்! நுவரெலியா மாவட்டத்துக்கு எப்போது?

இலங்கையில் நேற்றைய தினமும் 66 ஆயிரத்து 784 பேருக்கு கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

65 ஆயிரத்து 104 சினோ பாம் தடுப்பூசிகளும், ஆயிரத்து 680 ஸ்புட்டின் – பை தடுப்பூசிகளும் இவ்வாறு மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன், கொவிஷீல்ட்  தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுக்கொண்டவர்களுள் 193 பேருக்கு 2ஆம் டோஸ் வழங்கப்பட்டது.

இலங்கையில் 2021 ஜனவரி 29 ஆம் திகதி முதல் மே 30 ஆம் திகதிவரை 16 லட்சத்து 8 ஆயிரத்து 518 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இன்றைய தினமும் தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுக்கப்படுகின்றது. தடுப்பூசி பட்டில் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொவிஷீல்ட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 9 லட்சத்து 25 ஆயிரத்து 242 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளது. இவ்வாறு முதலாவது டோஸை பெற்றுக்கொண்டவர்களில் 3 லட்சத்து 45 ஆயிரத்து 789 பேருக்கு இரண்டாம் டோஸ் ஏற்றப்பட்டுள்ளது. சுமார் 5 லட்சத்து 79 ஆயிரத்து 453 பேருக்கு இரண்டாம் டோஸ் ஏற்றவேண்டியுள்ளது.

2021 மார்ச் 26 ஆம் திகதி முதல் மே 30 ஆம் திகதிவரை இலங்கையில் உள்ள 2 ஆயிரத்து 435 சீனப்பிரஜைகள் உட்பட 6 லட்சத்து 66 ஆயிரத்து 612 பேருக்கு சினோ பாம் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இதன் இரண்டாவது டோஸை 2 ஆயிரத்து 435 பேர் பெற்றுள்ளனர்.

ஸ்புட்னிக் – பை தடுப்பூசி ஏற்றும் பணி ஏப்ரல் 30 ஆம் திகதி ஆரம்பமானது. மே 30 வரை 16 ஆயிரத்து 664 பேருக்கு அந்த தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ளது. இன்னும் இரண்டாவது டோஸ் ஏற்றும் பணி ஆரம்பமாகவில்லை.

அதேவேளை, நுவரெலியா கண்டி, இரத்தினபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பமாகியுள்ள நிலையில், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள், ஆடைத்தொழிற்சலை பணியாளர்களுக்கும் தடுப்பூசி விரைவில் ஏற்றப்படவேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்டுள்ளது. 

 

மலையக பகுதிகளில் மேலும் 10 கொரோனா மரணங்கள் பதிவு

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 36 மரணங்கள் பதிவாகியுள்ளன. நேற்றைய தினம் ஏழு பேரும், மே 2 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதிவரை 29 பேரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 441 ஆக அதிகரித்துள்ளது.

கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் பதுளை உள்ளிட்ட மலையக மாவட்டங்களில் 10 மரணங்கள் பதிவாகியுள்ளன.

“ஆறுமுகன் தொண்டமான் புலமைப்பரிசில் திட்டம்” அங்குரார்ப்பணம்

மலையக பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட வறிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி செலவுகளுக்கு உதவும் முகமாக “ஆறுமுகன் தொண்டமான் புலமைப்பரிசில் திட்டம்” அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது என்று இ.தொ.காவின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களினது வங்கி கணக்குகளில் அவர்களின் கல்விக்கு தேவையான ஒருதொகை பணம் வைப்பு செய்யப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று பரவல் காரணமாக தெரிவு செய்யப்பட்டோருடனான ஒன்று கூடலை தவிர்த்து இணைய வழியாக  வ இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானால் இந்நிகழ்வு அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச்செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்டம் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த சித்தியைப் பெற்ற மலையகத்தின் வறிய மாணவர்களுக்கு மடிக்கணணிகள் வழங்கும் செயற்திட்டத்துடன் வெகு விரைவில் தொடரும் .

“இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எதிர்காலத்தில் மே தின செலவீனங்களைக் கட்டுப்படுத்தி கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்ககும்” என அண்மையில்   இராஜாங்க அமைச்சர் தெரிவித்திருந்ததற்கு அமைய, அதன் ஆரம்பக்கட்ட செயற்பாடாகவே இத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டது.

குறித்த செயற்றிட்டங்களுக்கான ஒருங்கிணைப்பு மற்றும் ஏற்பாடுகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி மேற்கொண்டது.

மலையகத்தின் கல்வி வளர்ச்சிக்கு தொடர்ச்சியாக தங்களது பங்களிப்பை இது போன்ற செயற்றிட்டங்கள் ஊடாக எதிர்காலத்திலும் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொது செயலாளர்  அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

‘தடுப்பூசி திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கும் முன்னுரிமை’ – ராதா கோரிக்கை

கொவிட் – 19 தடுப்பூசி திட்டத்தில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும், ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அல்லாவிடின் கொரோனா உப கொத்தணிகள் உருவாகக்கூடிய அபாயம் இருக்கின்றது – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கையில் இரசாயன உரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் சீனா இருக்கின்றதா என்ற சந்தேகம் தமக்கு எழுவதாகவும் அவர் கூறினார்.

கொவிட் 19 விவகாரம் மற்றும் இரசாயன உரபயன்பாட்டுக்கான தடை என்பன தொடர்பில் இன்று (30) நுவரெலியாவில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இவை குறித்து அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. தொற்றாளர்களுக்கு சிகிச்சைப்பெறுவதற்கு வைத்தியசாலைகளில் கட்டில்கள் இல்லை. வெளிமாவட்டங்களுக்கு அவர்களை கொண்டுசெல்லும் நிலைமை காணப்படுகின்றது.

நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா பரவலுக்கு ஆடைத்தொழிற்சாலைகளும் பிரதான காரணமாக அமைகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலைகளுக்கு கிராமம் மற்றும் தோட்டப்புறங்களில் இருந்து ஊழியர்கள் வருகின்றனர். அனைவரும் ஒரு இடத்தில் இருந்து வருவதில்லை. வெவ்வேறான பகுதிகளில் இருந்தே வருகின்றனர். எனவே, ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால் அதன்மூலம் பலருக்கு ஏற்படக்கூடிய அபாயமும், உப கொத்தணி உருவாகக்கூடிய சூழ்நிலையும் காணப்படுகின்றது.

எனவே, ஆடைத்தொழிற்சாலைகளை மூடுவதற்கு அல்லது அத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் தடுப்பூசி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இது தொடர்பில் மாவட்டத்துக்கு பொறுப்புக்கூறவேண்டிய அரச இயந்திரம் முழு கவனமும் செலுத்த வேண்டும்.

அதேபோல பெருந்தோட்டத் தொழிலாளர்களும் தமது பணிகளை முன்னெடுத்துவருகின்றனர். நெருக்கடியான காலகட்டத்திலும் அவர்கள் உழைக்கின்றனர். நாட்டு பொருளாதாரத்துக்கு பங்களிப்பு வழங்குகின்றனர். எனவே, அவர்களுக்கும் கொவிட் தடுப்பூசி ஏற்றப்படவேண்டும். அதற்காக திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

அதேவேளை, நாட்டில் இரசாயன உரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எதிர்காலத்தில் நன்மை பயக்கக்கூடும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள உரத்தட்டுப்பாட்டால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இரசாயன உர பயன்பாட்டுக்கு படிமுறை ரீதியாக தடை விதித்திருக்கலாம். அதனைவிடுத்து அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு தவறானதாகும்.

இரசாயன உரத்துக்கு மண் பழக்கப்பட்டுவிட்டது. ஹைபிரிட் வதைகள், இரசாயன உரம் இல்லாவிட்டால் சிறந்த விளைச்சலை வழங்காது. எனவே, அரசு தவறான முடிவை எடுத்துள்ளது. சீனா போன்ற நாடுகளில் செயற்கை பயிர்செய்கை இடம்பெறுகின்றது. எனவே, இரசாயன உரத்துக்கான தடையின் பின்னணியில் சீனா இருக்கின்றது என்ற சந்தேகமும் எழுகின்றது.’ – என்றார்.

க.கிசாந்தன்

இரத்தினபுரியில் தேயிலை தொழிற்சாலை பஸ் விபத்து – 15 பேர் படுகாயம்!

இரத்தினபுரி, நிவித்திகல பகுதியில் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஏனைய சிலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.

கலவான பகுதியிலுள்ள தேயிலை தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச்சென்ற மினி பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். படுகாயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகின்றது.

5000 ரூபா கொடுப்பனவை பெற தகுதியுடையோர் விபரம் வெளியானது….

பயணக்கட்டுப்பாட்டுக்கால உதவித்தொகை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முகநூல் பக்கத்தல் தெரிவிக்கப்பட்டுள்ள விடயம் வருமாறு,

கோவிட் 19 தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது நடைமுறையில் உள்ள நடமாட்ட கட்டுப்பாட்டுக் காலத்தில் மக்களுக்கு உதவித் தொகை ஒன்றினை வழங்க ஏற்பாடுகளைச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்.

அதற்கமைய – ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட இருக்கும் 5000 ரூபாய்கள் உதவித் தொகையினைப் பெற தகுதியுடையோர்கள் விபரம் வருமாறு:

1.நிரந்தர வருமானம் பெறும் அரச ஊழியர்கள் மற்றும் அதிக வருமானம் ஈட்டுகின்ற வர்க்கத்தினரை தவிர ஏனைய அனைத்து குடும்ப உறுப்பினர்கள்.

2. சமுர்த்தி பெறும் குடும்ப உறுப்பினர்கள்.

3. சமுர்த்திபெற தகுதி இருந்தும் இதுவரை சமுர்த்தி உணவு முத்திரை கிடைக்காது காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்கள்.

4. 70 வயதினைக் கடந்த மூத்தவர்கள்.

5. 70 வயது பூர்த்தியடைந்தும் இதுவரை மூத்தோர் கொடுப்பனவிற்கான முத்திரையினைப் பெறாது காத்திருப்புப் பட்டியலில் உள்ளவர்கள்.

6. மாற்றுத் திறனாளிகள்.

7. இதுவரை கொடுப்பனவினைப் பெறாது காத்திருப்பு பட்டியலில் உள்ள மாற்றுத்திறனாளிகள்.

8. PMA (மஞ்சள் நிற அட்டை) பெறுகின்றவர்களும் மற்றும் அதற்கு விண்ணப்பித்து காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களும்.

9. சிறுநீரக பாதிப்பு போன்ற பாரிய நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியுருப்போர்கள்.

10. ஒருவர் சமுர்த்தி பெறுகின்றவர்அல்லது சமுர்த்தி பெற தகுதியுடையவர், அத்துடன் அவர் மூத்தோர் கொடுப்பனவினைப் பெறுகின்றவர், அல்லது அதனை பெற தகுதியுடையவராயின் – அவர் மேற்படி இரண்டு வகைக்குட்பட்ட பெறுவனவினைகளையும் (5000 + 5000 = 10,000/=) பெறுவதற்கு தகுதி உடையவராவார்.

11. இந்த உதவி தொகையினை பெற தகுதியுடையோர் எவர் என்ற முழுமையான தகவல்களை மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில், கிராம சேவகர்கள் ஊடாக மக்கள் பெற முடியும்

இந்த சேவையினை ஒருங்கிணைப்பதற்காக ஜனாதிபதி செயலகம் 24 மணி நேரமும் பொது மக்களுக்காகச் செயற்பட்டுக்கொண்டீருக்கின்றது.

எனவே, இந்த சேவைக்கு பொறுப்பான அதிகாரிகளை பிரதேச செயலக மட்டங்களில் தொடர்பு கொண்டு இந்த கொடுப்பனவினை மக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

இங்கிலாந்து பிரதமருக்கு இரகசியமாக டும்…டும்…டும்…!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அவரது காதலி ஹேரி சைமண்ட்ஸ் இடையே  இரகசியத்திருமணம் நடைபெற்றது.

இங்கிலாந்து பிரதமராக செயல்பட்டு வருபவர் போரிஸ் ஜான்சன்(56). இவர் தனது காதலியான ஹேரி சைமண்ட்ஸ் (33) உடன் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார்.

இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு குழந்தை ஒன்று பிறந்தது. இதனை தொடர்ந்து தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக ஜான்சன் – ஹேரி சைமண்ட்ஸ் தம்பதி அறிவித்தனர்.

இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அவரது காதலி ஹேரி சைமண்ட்ஸ் இடையே இன்று ரகசியத்திருமணம் நடைபெற்றது என தகவல் வெளியாகியுள்ளது.

லண்டனில் உள்ள ஒரு கிருஸ்தவ மத வழிபாட்டு தளத்தில் இந்த திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் மிக சிறிய எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.

போரிஸ் ஜான்சனுக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்து விவாகரத்து ஆகியுள்ளது. ஜான்சனுக்கு இது 3-வது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. காதலி ஹேரி சைமண்ட்ஸை திருமணம் செய்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மலையகத்தின் சிரேஷ்ட தொழிற்சங்கவாதி டீ.மாதவன் கொரோனாவால் உயிரிழப்பு

நுவரெலியாவில் சிரேஸ்ட தொழிற்சங்க அரசியல் வாதியாக செயல்பட்டு வந்த தனுஸ்கோடி மாதவன் இன்று (30) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நுவரெலியா பொது வைத்தியசாலையில் காலமானார்.இறக்கும் போது இவருக்கு வயது (71).

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 17 ஆம் திகதி நுவரெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளதுடன் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதணையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் இவர் நுவரெலியா பொது வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை பிரிவு விசேட வார்ட்டில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று (30) அதிகாலை உயிரிழந்ததாக நுவரெலியா மாவட்ட கொரோனா தடுப்பு பிரிவின் பிராந்திய தொற்றியியல் பணிப்பாளர் மதுர செனிவிரத்ன தெரிவித்தார்.

நுவரெலியா பரிசுத்த திருத்துவ கல்லூரியில் ஆரம்ப கல்வியை கற்ற அமரர் டி.மாதவன், ஐந்து பிள்ளைகளின் தந்தையாவார். இவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நுவரெலியா மாநில பிரதநிதியாக 1976 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான்(ஐயா)வின் நன்மதிப்பு பெற்று செயற்பட்ட மூத்த தொழிற்சங்கவாதியாவார்.

நுவரெலியா, பதுளை மற்றும் அட்டன் பொன்ற இடங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாநில பிரதிநிதியாகவும் தொழிலுறவு அதிகாரியாகவும் சேவையாற்றியுள்ளார்.

1992ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஊடாக உலக தொழிலாளர் சம்மேளனத்தின் இலங்கைக்கான பிரதநிதியாக நியமிக்கப்பட்டவர். இவர் ஸ்ரேல், ஜப்பான்,இந்தியா மலேசியா,சிங்கபூர் உட்பட பல உலகநாடுகளுக்கு சென்று பல்வேறு கருத்தரங்குகளில் கலந்து கொண்டுள்ள அவர் வெளிநாடுகளுடன் விவசாயம் மற்றும் பெருந்தோட்ட தேயிலை தொழிலாளர்களின் பிரச்சிணைகளை சர்வதேச ரீதியில் அனுகிவந்தவராவார்.

இவர் கடந்த 1992 ஆம் ஆண்டு இ தொ கா வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து நுவரெலியா மாநகரசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நுவரெலியா மாநகரசபை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டார். அதன் பின்
ஐக்கிய தேசிய கட்சி சார்பிலும் போட்டியிட்டு வெற்றி
பெற்றார்.

மூன்றாவது தடவையாக சுயேட்சையாகவும் போட்டியிட்டு மூன்றாவது தடவையும் நுவரெலியா மாநகர சபை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டார். இவர் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக நுவரெலியா மாநகர சபையில் மூன்று முறை சிரேஸ்ட உறுப்பினராக இருந்து நுவரெலியா மக்களுக்கு சேவை செய்துள்ளார்.

கடந்த 1979 ஆம் ஆண்டு முதல் மறைந்த முன்னாள் இ தொ கா பொதுச்செயலாளர் எம்.எஸ். செல்லசாமி தலைமையிலான இலங்கை விவசாயிகள் சங்கத்தின் சிரேஸ்ட பொது செயலாளராக செயற்பட்டு நுவரெலியா மாவட்ட விசாயிகள் எதிர் நோக்கிவந்த பிரச்சிணைகளுக்கு பல தீர்வுகளை கண்டதுடன் முதல் முறையாக விதை உருளைக்கிழங்கு நுவரெலியாவில் பயிர் செய்கை செயற்பாடுகளுக்கு சக்தியாக இவர் செயல்பட்டவர்.

அவர் காலப்போக்கில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்றிருந்த இவர் இலங்கை விவசாயிகள் சங்கத்தினை வழிநடத்தினார்.

இவர் நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சுப்பையா சதாசிவம், முன்னாள் பிரதியமைச்சரான வடிவேல் புத்திரசிகாமணி ஆகியோரின் இணைப்பிரியாத நண்பராவார்.

இவரின் பூதவுடல் நுவரெலியா மாநகர சபை பொது தகன சாலையில் கொரோனா சட்டவிதிகளுக்கமைய இன்று பிற்பகல் தகனம் செய்யப்படவுள்ளது.

நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு

‘பாராளுமன்றத்துக்கு தெரிவான முதல் பௌத்த துறவி கொரோனாவால் உயிரிழப்பு’

லங்கா சமசமாஜக்கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பத்தேகம சமித தேரர் (வயது – 68) இன்று காலமானார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அவர், மாத்தறையிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையிலேயே, ‘கொவிட் நிமோனியாவால்’ உயிரிழந்துள்ளார்.

2001 முதல் 2004 வரை இவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். இலங்கை பாராளுமன்றத்துக்கு தெரிவான முதல் துறவி இவராவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

செம்மணியில் மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

0
  யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி, மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 25வது நாள் அகழ்வுப் பணி இன்று...

சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தனக்கு தொடர்பு இல்லையெனில், சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு...

வத்தளை ஹேக்கித்தை சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்: விரிவான ஏற்பாடுகள் தயார்!

0
  வரலாற்றுச் சிறப்புமிக்க வத்தளை, ஹேக்கித்தை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் மூன்றாவது மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் ஜூன் மாதம் 25ஆம்திகதி மிக விமரிசையாக நடைபெறவுள்ள நிலையில், அது தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு...