Home Blog Page 3514

‘கொரோனா’வால் கொட்டகலையில் மேலும் ஒருவர் பலி – 10 குடும்பங்கள் தனிமையில்!!

கொட்டகலை பொரஸ்ட்கிறிக் தோட்டத்தில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேர் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம்  தெரிவித்துள்ளது.

மேற்படி தோட்டத்தில் வசித்த 72 வயதான ஆண் ஒருவர் நேற்று (30) திடிரென உயிரிழந்தார்.

அவ்வாறு உயிரிழந்தவர் தொடர்பில் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவில் அவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

இதனையடுத்தே மரணித்தவர் வசித்த தொடர் குடியிருப்பு தொகுதியில் உள்ள மேற்குறித்தவர்கள் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிமையில் உள்ளவர்கள் தொடர்பில் பீ.சீ.ஆர் பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கொவிட் தொற்றால் அண்மையில் உயிரிழந்தமையும் குறிப்பிடதக்கது.

க.கிசாந்தன், நீலமேகம் பிரசாந்த்

சினோ பாம் தடுப்பூசி ஏற்றியவர்களுக்கான அறிவித்தல்…

சினோ பாம் தடுப்பூசியின் 2ஆவது டோஸ் ஜுன் 8 ஆம் திகதி முதல் ஏற்றப்படும் என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று தெரிவித்தார்.

முதலாம் டோஸை பெற்ற நிலையங்களிலேயே இரண்டாவது டோஸையும் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.

சினோ பாம் தடுப்பூசியின் முதலாவது டோஸை பெற்றவர்களுக்கே, 8 ஆம் திகதி முதல் இவ்வாறு 2ஆவது டோஸ் ஏற்றப்படவுள்ளது.

‘கொரோனா’வுக்கு மத்தியில் கொண்டாட்டம் – அழகுக்கலை நிபுணரும், நடிகையும் கைது!

2ஆம் இணைப்பு

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய குற்றச்சாட்டில் கைதான இருவரும் பிணையில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்தே, 10 லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

…….

அழகுக்கலை நிபுணரான சந்திக ஜயசிங்கவும், நடிகை பியூமி ஹன்சமாலியும் கொழும்பு, கோட்டை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறி, கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலொன்றில் பிறந்தநாள் நிகழ்வை நடத்திய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் கடும் பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ளது. அனைத்துவிதமான களியாட்ட நிகழ்வுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் டார்சன் புகழ் நடிகரும், அவரின் மனைவியும் பலி!

1989 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி திரைப்படமான “டார்சான் இன் மன்ஹாட்டனில்” டார்சானாக லாரா நடித்திருந்தார்.

அமெரிக்காவின் டென்னசி விமான நிலையத்திலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானி உட்பட 7 பேர் இருந்தனர்.

புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள பெர்சி பிரைஸ்ட் ஏரி ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 7 பேரும் ஏரியில் மூழ்கி உயிரிழந்தனர்.

விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் அமெரிக்காவின் பிரபல நடிகர் ஜோ லாரா மற்றும் அவரது மனைவி க்வென் ஷாம்ப்ளின் லாரா ஆகியோரும் அடங்குவர்.

1989 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி திரைப்படமான “டார்சன் இன் மன்ஹாட்டனில்” டார்சானாக லாரா நடித்திருந்தார். பின்னர் அவர் 1996-1997 வரை வெற்றிகரமாக ஓடிய “டார்சன்: தி எபிக் அட்வெஞ்சர்ஸ்” என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்தார். இதன்மூலம் அவர் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகராக வலம் வந்தார்.

அவரது மனைவி க்வென் ஷாம்ப்ளின் லாரா, ‘வெயிட் டவுன் மினிஸ்ட்ரீஸ்’ என்ற உடல் எடை குறைப்பு தொடர்பான பயிற்சிக் குழுவின் தலைவர் ஆவார். 1986 இல் அந்த குழுவை நிறுவினார். பின்னர் 1999ல் டென்னசியின் பிரென்ட்வுட்டில் ஒரு தேவாலயத்தை நிறுவினார்.

கணவன்-மனைவி இருவரும் தேவாலயத்தை நிர்வகித்து வந்த நிலையில் இருவரும் விமான விபத்தில் இறந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

‘கண்டியில் 9,278 – நுவரெலியாவில் 4,106 – மாத்தளையில் 3,473 பேருக்கும் கொரோனா’

கொரோனா வைரஸ் தாக்கத்தால் மத்திய மாகாணத்தில் 2020 ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இன்று காலை 6 மணிவரை 16 ஆயிரத்து 847 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி நுவரெலியா மாவட்டத்தில் 4,106 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 9,278
பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 3,473 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, கண்டி மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 108 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 14 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில்1 7 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

 

ஒரு புறம் கொரோனா – மறுபுறம் டெங்கு! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

2021 ஜனவரி முதல் மே மாதம் 30 ஆம் திகதிவரை நாட்டில் 7 ஆயிரத்து 674 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் பலியாகியுள்ளனர் என்று தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மே மாதத்தில் மாத்திரம் 766 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மழைக்காலம் ஆரம்பித்துள்ளதால் எதிர்காலத்தில் டெங்கு நோய் வேகமாக பரவக்கூடிய அபாயம் இருப்பதாகவும் அப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே, பொதுமுடக்கம் அமுலில் உள்ள இக்காலப்பகுதியில் வீட்டையும், வீட்டு சுழலையும் டெங்கு நோய் பரவாத விதத்தில் சுத்தமாக வைத்து, டெங்குவை ஒழிக்க ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதார அமைச்சு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கர்ப்பிணி பெண்கள், ஒரு வயதுக்கும் குறைந்த குழந்தைகள், நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  டெங்கு நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடன் வைத்தியசாலைக்கு செல்லுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

21/4 தாக்குதல் – குற்றவாளிகளுக்கு எதிராக ஒரிரு வாரங்களுக்குள் வழக்கு!

21/4 தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளுக்கு எதிராகவும் இன்னும் ஒரிரு வாரங்களுக்குள் சட்டமா அதிபரால் வழக்கு தொடுக்கக்கூடியதாக இருக்கும் – என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நேற்று தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில், 21/4 தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தேக்கமடைந்துள்ளனவா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 21/4 தாக்குதல் தொடர்பான விசாரணைகள் எந்தவிதத்திலும் ஸ்தம்பிதமடையவில்லை. அத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட அனைத்து குற்றவாளிகளுக்கு எதிராகவும் இன்னும் ஒரிரு வாரங்களுக்குள் சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல்செய்யக்கூடியதாக இருக்கும்.

அமெரிக்காவின் நடைபெற்ற செப்டம்பர் 11 தாக்குதலுடன் தொடர்புபட்ட பிரதான சூத்திரதாரிக்கு எதிராக 18 ஆண்டுகள் கடந்தும் இன்னும் வழக்கு தொடுக்கப்படவில்லை. லக்‌ஷ்மன் படுகொலையுடன் தொடர்புபட்டவருக்கு வழக்கு தொடுப்பதற்கு மூன்று ஆண்டுகள் சென்றன.

21/4 தாக்குதல் நடைபெற்று ஈராண்டுளே கடந்துள்ளன. எனினும், இன்னும் ஒரிரு வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சட்டமா அதிபரால் சுட்டிக்காட்டப்பட்டிருந்த குறைபாடுகளில் 75 வீததத்தை நிவர்த்தி செய்து அனுப்பியுள்ளோம். இது விடயம் தொடர்பில் சட்டமா அதிபருடன் பணியாற்றுவதற்காக சி.ஐ.டி மற்றும் ரி.ஐ.டியைச் சேர்ந்த 54 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.” – என்றார்.

‘மேல் மாகாணத்தில் ஒரு லட்சத்தை நெருங்குகிறது தொற்றாளர்களின் எண்ணிக்கை’

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இன்று காலைவரை மேல் மாகாணத்தில் 99 ஆயிரத்து 841 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இன்று காலைவரை கொழும்பு மாவட்டத்தில் 49 ஆயிரத்து 247 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 33 ஆயிரத்து 360
பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 17 ஆயிரத்து 234 பேருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அத்துடன் மேல் மாகாணத்திலேயே அதிகளவு உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு மாவட்டத்தில் நேற்று 608 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 547 பேருக்கு களுத்துறை மாவட்டத்தில் 447 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2022 ஆஸ்கர் விருது வழங்கும் விழாவுக்கான திகதி அறிவிப்பு

அடுத்த ஆண்டு ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா மார்ச் 27 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திரைத்துறையின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாகவும், திரைக்கலைஞர்களுக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய கௌரவமாகவும் ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதுகளை வழங்கும் விழாவானது, அமெரிக்காவில் மிக பிரம்மாண்டமாக நடைபெறும்.

இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக 2 மாதங்கள் தாமதமாக ஏப்ரல் 25 ஆம்  திகதி  ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிலையில், 2022-ம் ஆண்டு நடைபெற இருக்கும் 94-வது ஆஸ்கர் விருது விழாவிற்கான திகதி  அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி பெப்ரவரி மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட விழாவானது, ஒரு மாதம் தாமதமாக மார்ச் 27-ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரில் விழா நடக்கும் என்றும் ஆஸ்கர் அகாடமி தெரிவித்துள்ளது.

வியட்நாமில் அதிக வீரியமிக்க புதிய உருமாறிய கொரோனா கண்டுபிடிப்பு!

வியட்நாமில் உருமாறிய கொரோனா வைரஸ் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. இது காற்றில் அதிவேகமாக பரவும் தன்மையைக் கொண்டது என தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா வைரஸ் கடந்த 2019 டிசம்பரில் சீனாவின் உகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது 200 உலக நாடுகளில் பரவிவிட்ட இந்த வைரஸ் உருமாறி வருகிறது.

உருமாறிய வைரஸ் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் என பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.

இந்தநிலையில் வியட்நாம் நாட்டில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் அதிக வீரியமிக்கது. இது காற்றிலும் பரவும் தன்மையைக் கொண்டுள்ளது என தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

இதுபற்றி அந்த நாட்டின் சுகாதார மந்திரி அமைச்சர் தன் லாங் கூறியதாவது:-

புதிய உருமாறிய வைரஸ் ஒன்றை கண்டுபிடித்துள்ளோம். இது அதிக வீரியமிக்க வைரசாகும். இது இந்தியாவிலும், இங்கிலாந்திலும் முதலில் காணப்பட்ட உருமாறிய வைரஸ்களின் கலப்பினம் ஆகும்.

இந்த வைரசின் தனித்தன்மை என்னவென்றால், இது காற்றில் வேகமாக பரவக்கூடியதாகும். தொண்டை திரவத்தில் இந்த வைரசின் செறிவு வேகமாக அதிகரிக்கிறது. சுற்றுச்சூழலிலும் வலுவாக பரவுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதே நேரத்தில் இந்த வைரஸ் பாதிப்பு அங்கு எத்தனை பேருக்கு உள்ளது என்பது குறித்து அவர் வாய்திறக்கவில்லை.

அதே நேரத்தில் வியட்நாம் மத்திய சுகாதாரம் மற்றும் தொற்றுநோயியல் நிறுவனம் இதையொட்டி கூறுகையில், “எங்கள் விஞ்ஞானிகள் 32 நோயாளிகளில் 4 பேரில் மரபணு மாற்றம் கொண்ட வைரஸ்களை மரபணு வரிசை முறை மூலம் கண்டறிந்துள்ளனர்” என கூறியது.

இதற்கு முன்பாக வியட்நாமில் 7 கொரோனா வைரஸ் வகைகள் கண்டறியப்பட்டுள்ளதாக வியட்நாம் சுகாதார அமைச்சகம் கூறியது.

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

செம்மணியில் மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

0
  யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி, மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 25வது நாள் அகழ்வுப் பணி இன்று...

சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தனக்கு தொடர்பு இல்லையெனில், சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு...

வத்தளை ஹேக்கித்தை சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்: விரிவான ஏற்பாடுகள் தயார்!

0
  வரலாற்றுச் சிறப்புமிக்க வத்தளை, ஹேக்கித்தை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் மூன்றாவது மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் ஜூன் மாதம் 25ஆம்திகதி மிக விமரிசையாக நடைபெறவுள்ள நிலையில், அது தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு...