Home Blog Page 3513

கண்டியில் 261, இரத்தினபுரியில் 98, பதுளையில் 65 பேருக்கும் நேற்று கொரோனா!

கண்டி மாவட்டத்தில் மேலும் 261 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன்,  இரத்தினபுரி மாவட்டத்தில் 98 பேருக்கும், பதுளை மாவட்டத்தில் 65 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட ரீதியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் விவரம் வருமாறு,

‘கொரோனா’ வகைகளுக்கு பெயர் சூட்டியது உலக சுகாதார அமைப்பு!

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகைக்கு உலக சுகாதார அமைப்பு பெயர்களை அறிவித்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அமெரிக்கா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட சில நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ்கள் பாதிப்பைப் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்தியாவில் B.1.617 வகையை இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா என அழைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இதற்கிடையே, வைரஸ்கள் அல்லது மாறுபாடு அடைந்த வைரஸ்கள் அவை கண்டறியப்பட்ட நாடுகளின் பெயர்களால் அடையாளம் காணப்படக் கூடாது என உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

 இந்நிலையில், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலும் கண்டறியப்பட்ட கொரோனா வகைக்கு பெயர்களை அறிவித்துள்ளது உலக சுகாதார அமைப்பு.

கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட B.1.617 வகை கொரோனா வைரசுக்கு டெல்டா என பெயரிட்டுள்ளது.

இதேபோல், பிரிட்டனில் கடந்த ஆண்டு செப்டம்பரில் கண்டறியப்பட்ட கொரோனா ஆல்பா எனவும், தென் ஆப்பிரிக்காவில் 2020 மே மாதம் கண்டறியப்பட்ட கொரோனா பீட்டா எனவும், பிரேசிலில் கடந்த ஆண்டு நவம்பரில் கண்டறியப்பட்ட வகை காமா எனவும், அமெரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா எப்சிலான் எனவும் உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.

கொரோனாவின் தோற்றம் – பிரிட்டிஷ் உளவுத்துறை வெளியிட்டுள்ள ‘பகீர்’ தகவல்!

கொரோனா வைரஸ், சீனாவின் வுகான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கு வாய்ப்புள்ளது என இப்போது நம்புவதாக பிரிட்டிஷ் உளவுத்துறை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரசால் உலக அளவில் ஏற்பட்ட தாக்கம் இன்றளவும் நீடிக்கிறது.

சீனாவின் உகான் ஆய்வு மையத்தில்தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு நீடிக்கும் சூழலில் உலகெங்கும் அதுதொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பிரிட்டன் பேராசிரியர் மற்றும் நார்வே விஞ்ஞானி ஆகியோர் தலைமையில் நடந்த ஆய்வின் முடிவுகளை டெய்லி மெயில் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

அதில், கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானதல்ல என கூறியுள்ள விஞ்ஞானிகள், வுகான் ஆய்வு மையத்திலேயே அது உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆய்வு மையத்தில் இருந்து வைரஸ் வெளியானதை மறைக்க, வவ்வாலில் இருந்து அது உருவானதாக கூறி சீனா தப்பிக்க முயற்சிப்பதாக விஞ்ஞானிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கு வாய்ப்புள்ளது என இப்போது நம்புவதாக பிரிட்டிஷ் உளவுத்துறை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

தி சண்டே டைம்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ள நிலையில், கொரானா வைரஸ் வுகான் ஆய்வகத்தில் தான் உருவாக்கப்பட்டதா என்பது குறித்து, முழுமையாக உலக சுகாதார நிறுவனம் விசாரணை நடத்தவேண்டும் என பிரிட்டிஷ் அரசின் தடுப்பூசித் துறை அமைச்சர் நதீம் சகாவி கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரசின் மூலாதாரம் குறித்து முதலில் இதுபோன்ற செய்திகள் வெளியானாலும் அதற்கு வாய்ப்பில்லை என பரவலாக கூறப்பட்டது.

ஆனால் இப்போது அது குறித்து பல தரப்பில் இருந்தும் செய்திகள் வெளியாகும் நிலையில், ஆய்வகத்துடன் நெருங்கிய தொடர்புடைய சில நபர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் இந்த சந்தேகம் மீண்டும் வலுப்பெற்றுள்ளது.

‘தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 1,047 பேர் கைது’

முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியை பேணாமை உட்பட தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் ஆயிரத்து 47 பேர் கடந்த 24 மணி நேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய குற்றச்சாட்டின்பேரில் நாளொன்றில் கைது செய்யப்பட்ட அதிகளவானவர்களின் எண்ணிக்கை இதுவாகும்.

அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டம் அமுலுக்குவந்த கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரை அச்சட்டத்தைமீறும் வகையில் செயற்பட்ட 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

‘கொரோனா’வின் தாண்டவம் தொடர்கிறது – நாட்டில் மேலும் 43 பேர் பலி!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று 4 கொரோனா மரணங்களும், மே 20 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதிவரை 39 மரணங்களும் பதிவாகியுள்ளன.

இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 484 ஆக அதிகரித்துள்ளது.

‘அத்தியாவசிய சேவைக்கான அனுமதியை தவறாக பயன்படுத்துபவர்கள் குறித்து விசாரணை’

” இன்றைய தினம் சேவை அழைப்புக் கடிதங்களுடன் கொழும்புக்கு வந்த அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்கள், தங்கள் அலுவலகங்களில் கடமையில் இருந்தார்களா என்பதை அறிய பொலிசார் விசேட நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அத்தியாவசிய சேவைகளில் வேலை செய்வதாகக் கூறி இன்று பலர் நிறுவன அடையாள அட்டைக்கு மேலதிகமாக நிறுவனத் தலைவரின் கடிதங்களுடன் வந்திருந்ததாக தெரியவந்துள்ளது. இருப்பினும், அவர்களிடமிருந்த கடிதங்கள், ஒழுங்கற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது தெரியவந்துள்ளதாக கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, மஹரகம, கல்கிஸ்ஸ, வத்தளை,களனி மற்றும் பேலியகொடை ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள பொலிஸ் வீதித் தடைகளில், தங்களை அத்தியாவசிய சேவையாளர்கள் என்று அறிமுகப்படுத்தி வந்த கிட்டத்தட்ட ஆயிரம் பேரிடமிருந்த சேவை அழைப்G கடிதங்களின் புகைப்படங்களை பொலிசார் எடுத்துள்ளனர்.

இந்த கடிதங்களுக்கமைய குறித்த நபர்கள், இன்றைய தினம் சேவையில் இருந்தார்களா? இல்லையா? என்பதை கண்டறிய பொலிசார் விசேட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இதன் மூலம் குறித்த நபர் சேவைக்கு அழைக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டால் அல்லது அவர் சேவையில் இருக்கவில்லை என்றால் கடிதத்தை வழங்கிய நபர், மோசடி ஆவணங்கள் மற்றும் அவர் வேலைக்குச் செல்வதாக தவறான அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார்.

தடைகளைத்தாண்டி பாராளுமன்றம் செல்கிறார் ரணில்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டில் பாராளுமன்ற உறுப்பினராக, கட்சித் தலைவரை நியமிப்பதற்கு அக்கட்சியின் மத்திய செயற்குழு இன்று அனுமதி வழங்கியுள்ளது.

ரணில் பெயரை கட்சி தவிசாளர் வஜிர அபேவர்தன முன்மொழிய, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த குலரத்ன வழிமொழிந்தார்.

கட்சியின் இந்த முடிவை அடிப்படையாகக்கொண்டு, ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை கட்சி செயலாளர், தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கவுள்ளார்.

கடந்த பொதுத்தேர்தலில் ஐ.தே.க. ஓர் ஆசனத்தைக்கூட கைப்பற்றவில்லை. தேசியப்பட்டில் ஊடாகவே ஓர் ஆசனம் கிடைத்தது. அந்த இடத்துக்குகூட சில மாதங்களாக எவரும் நியமிக்கப்படவில்லை. இந்நிலையிலேயே ரணில் பாராளுமன்றம் செல்லவுள்ளார்.

21/4 தாக்குதல் – விரைவில் வழக்கு தாக்கல்! பிரதமரிடம் சட்டமா அதிபர் உறுதி!!

நாட்டின் 48 ஆவது சட்டமா அதிபராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜய் ராஜரட்ணம், பிரதமர் மஹிந்த ராஜபசவை இன்று (31) அலரி மாளிகையில் சந்தித்தார்.

சட்டமாதிபர் பதவிக்கான கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜய் ராஜரட்ணத்துக்கு இதன்போது பிரதமர் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

கொழும்பு துறைமுக கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எம். வி எக்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பிலும், தீ பரவலினால் சமுத்திர வள சுற்று சூழல் பாதிப்பு தொடர்பிலும் முன்னெடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து  பிரதமர்  இதன்போது கவனம் செலுத்தினார்.

அதற்கான சட்ட நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படும் என தெரிவித்த சட்டமா அதிபர், ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பிலான விசாரணை குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளுக்கு எதிராக விரைவில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

இதன்போது சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு புதிய கட்டிடத் தொகுதியை வழங்கியமை தொடர்பில்   பிரதமருக்கு நன்றி தெரிவித்த சட்டமா அதிபர், பழைய சட்டமா அதிபர் திணைக்கள கட்டிடத் தொகுதி தொல்பொருள் பழமையினை கொண்டுள்ளது. ஆகையால் அக்கட்டிடத் தொகுதியை புனரமைக்க அரசாங்கம் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

கொலை வழக்கு தொடர்பில் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வரும் விசாரணைகளின் போது ஆரம்பத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் ஆலோசனை வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அவ்வாறான தன்மை காணப்படாத காரணத்தினால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து சுட்டிக்காட்டிய கௌரவ பிரதமர் இது குறித்து நீதி அமைச்சுடன் கலந்துரையாடி உரிய தீர்வை எடுக்குமாறு ஆலோசனை வழங்கினார்.

இச்சந்திப்பில் பிரதமரின் செயலாளர்  காமினி செனரத், பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி  யோஷித ராஜபக்ச, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சேத்திய குணசேகர, மற்றும் பிரதமரின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன, கனேஷ் தர்மவர்தன ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

மடுல்சீமையில் குடும்பநல உத்தியோகத்தருக்கும், அவரின் மகளுக்கும் கொரோனா!

மடுல்சீமை பகுதியில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மூவரும் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

மடுல்சீமை பட்டவத்தை பகுதியில் யுவதியொருவருக்கு  நேற்று கொரோனா வைரஸ் தொற்று  உறுதிப்படுத்தப்பட்டது.  இதனையடுத்து அவரின் குடும்ப உறுப்பினர்களும், தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குடும்ப உறுப்பினர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மடுல்சீமை கல்லுள்ள பகுதியில் 46 வயதுடைய பெண் ஒருவருக்கும், 11 வயதுடைய சிறுமி ஒருவருக்கும் கொரோனா இன்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரையும் தனிமைப் படுத்தல் முகாமுக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டு வருவதோடு இவர்களுடன் தொடர்புகளை பேணியோருக்கும் PCR பரிசோதனைகளை மேற்கொள்ளவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்விருவரும் தாயும் மகளும் என்பதோடு தாய் மெட்டிகாத்தன்ன பகுதியில் குடும்ப நல உத்தியோகத்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராமு தனராஜா

‘தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறி மேயருக்காக கேக் வெட்டிய பொலிஸார்’ – விசாரணை ஆரம்பம்!

” குருணாகல் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை இடம்பெறுகின்றது. தனிமைப்படுத்தல் விதிமுறைகளைமீறிச்செயற்பட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் சட்டம் அமுலில் உள்ளது. அச்சட்டத்தைமீறும் வகையில் எவராவது செயற்பட்டால் அவர்களை கைது செய்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு இருக்கின்றது. நேற்றைய தினம்கூட தனிமைப்படுத்தல் விதிமுறைகளைமீறிய 755 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் களியாட்ட நிகழ்வுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மரண சடங்குகள்கூட கடும் கட்டுப்பாட்டுகளுக்கு மத்தியிலேயே இடம்பெறவேண்டும். இதற்கான சுகாதார வழிகாட்டல்கள்கூட வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் விரைவில் கட்டுக்குள் வரவேண்டும், நாடும் மக்களும் தொற்று அபாயத்திலிருந்து மீள வேண்டும் என்பதற்காக குருணாகல் பொலிஸாரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘பிரித் ஓதும்’ ஆன்மீக வழிபாட்டு நிகழ்வு பொலிஸ் வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

நேற்றைய தினமும் ஆன்மீக நிகழ்வு நடைபெற்றது. இதில் குருணாகல் மாநகர மேயர் துஷார சஞ்சீவ விதாரணவும் பங்கேற்றார். நேற்று மேயரின் பிறந்தநாள் என்பதால், பொலிஸாரால் ‘கேக்’ வெட்டுவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. சுகாதார விதிமுறைகளைமீறியே ‘கேக்’ வெட்டப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் கடும் எதிர்ப்புகள் வலுத்துள்ளன. சட்டத்தை சரிவர அமுல்படுத்த வேண்டிய தரப்பே, சட்டத்தைமீறும் வகையில் செயற்படுவதை அனுமதிக்கலாமா என்ற தொனியிலும் கருத்தாடல் இடம்பெற்றுவருகின்றது.

இந்நிலையில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ஹோரன இச்சம்பவம் தொடர்பில் இன்று நடைபெற்ற தொலைக்காட்சி கலந்துரையாடலொன்றின்போது கருத்து வெளியிடுகையில்,

” இத்தகைய நடவடிக்கையை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். கொண்டாட்டம் குறித்த காணொளியும் கிடைத்துள்ளது. இது தொடர்பில் வடமேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடினேன்.

விசாரணைக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. விசாரணையின் பின்னர் தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறியவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொலிஸாரால் இப்படியான நிகழ்வை (பிறந்தநாள்) ஏற்பாடு செய்யமுடியாது.” – என்றார்.

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

செம்மணியில் மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

0
  யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி, மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 25வது நாள் அகழ்வுப் பணி இன்று...

சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தனக்கு தொடர்பு இல்லையெனில், சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு...

வத்தளை ஹேக்கித்தை சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்: விரிவான ஏற்பாடுகள் தயார்!

0
  வரலாற்றுச் சிறப்புமிக்க வத்தளை, ஹேக்கித்தை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் மூன்றாவது மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் ஜூன் மாதம் 25ஆம்திகதி மிக விமரிசையாக நடைபெறவுள்ள நிலையில், அது தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு...