Home Blog Page 3512

தீப்பற்றிய கப்பலின் கெப்டன் உள்ளிட்ட மூவருக்கு நாட்டைவிட்டு வெளியேறத் தடை

இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய MV X-Press Pearl கப்பலின் கெப்டன், பிரதான பொறியியலாளர் மற்றும் இரண்டாம் நிலை பொறியியலாளர் ஆகியோர் நாட்டிலிருந்து வெளியேற, கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு துறைமுக அதிகார சபையால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தில் மேலும் 42 பேருக்கு இன்று கொரோனா

பதுளை மாவாட்டத்தில்  மேலும் 42 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்றாளர்கள், பிந்துனுவேவ மற்றும் ககாகொள்லை கோவிட் 19 சிகிச்சை நிலையங்களுக்கு இன்று பிற்பகல் அனுப்பட்டுள்ளனர் என்று பதுளை மாவாட்ட பொது சுகாதாரப் பரிசோதகர் சங்க பிரதானி சுப்ரமணியம் சுதர்சன் தெரிவித்தார்.

பதுளை பொது சுகாதாரப் பிரிவில் 09 பேர் , ஹாலி எல பொது சுகாதாரப்பிரிவில் 12 பேர் , ஹல்துமுள்ள சுகாதாரப்பிரிவில் 14பேர் , வெலிமடை சுகாதாரப்பிரிவில் இரண்டுபேர், மகியங்கனை சுகாதாரப்பிரிவில் மூன்றுபேர், பசறை சுகாதாரப்பிரிவில் இரண்டுபேர் என்ற வகையில் 42 பேர் கோவிட் 19 தொற்றுக்கிலக்காகியுள்ளனர்.

கடந்த 30 ந் திகதி மாலை மேற்கொள்ளப்பட்ட பி.சிஆர். பரிசோதனை அறிக்கை இன்று   வெளியான போதே 42 பேர் தொற்றாளார்களாக இனங்காணப்பட்டிருந்தனர்.

எம். செல்வராஜா, பதுளை

பத்தேகம சமித்த தேரரின் மறைவு பேரிழப்பு – செந்தில் தொண்டமான் இரங்கல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தென் மாகாண சபை உறுப்பினருமான சங்கைக்குரிய பத்தேகம சமித்த தேரர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு காலமானார். அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிராத்தித்திப்பதாக பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளரும், இ.தொ.காவின் உபதலைவருமான செந்தில் தொண்டமான் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் .

பத்தேகமவில் 1952 ஜனவரி 4 பிறந்த இவர், தனது பல்கலைகழக காலத்திலேயே அரசியலில் ஆர்வம் உடையவராக திகழ்ந்தார். அவர் தனது பட்டப்படிப்பை ஜெர்மனில் உள்ள பல்கலைக்கழகத்தில் முடித்தார்.

இடதுசாரிக் கட்சியான லங்கா சம சமாஜக் கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்தி, காலி மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்குத் தெரிவான இவர், 2001 தொடக்கம் 2004ஆம் ஆண்டு வரை அந்தப் பதவியை வகித்து வந்தார்.

இவர் இலங்கையின் முதல் முறையாக பாராளுமன்றம் சென்ற பௌத்த பிக்குவாகும். இளமைக் காலம் முதல் – இடதுசாரிக் கட்சியான லங்கா சம சமாஜக் கட்சியுடன் இணைந்து – சமித தேரர் செயற்பட்டு வந்தார்.

துறவிகள் அரசியலில் பங்கேற்க முடியுமா என்ற வாதப்பிரதவாதங்கள் சமூகத்தில் ஆழமாக ஏற்ப்பட்ட சூழலில்,துறவிகளின் கௌரவத்தைப் பாதுகாத்த வண்ணம் அவர் அந்த பணியை மேற்கொண்ட விதம் அரசியலில் ஆர்வமுள்ள அனைவருக்கும் ஒரு வழிகாட்டுதலாகும்.

பன்முகத்தன்மையில் ஒற்றுமை மற்றும் ஒரு இலங்கை தேசத்தின் இருப்பு என்பன எப்போதும் அவரது தூரநோக்காகவும், அரசியல் நடைமுறையின் முதல் முன்னுரிமையாகும் இருந்தது.அதற்காக தைரியமாக குரல் எழுப்பிய அவர்,ஒரு வலுவான ஆளுமை கொண்டவர் என்பதை எடுத்துறைத்தது.

இலங்கையில் இன, மத நல்லிணக்கத்துக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்தவர் பத்தேகம சமித்த தேரர்.

சங்கமித்த தேரருடன் நான் கலந்துரையாடிய பல தருணங்களில், பெருந்தொட்ட தமிழர்களின் நிலை குறித்த கரிசணை அதிகம் இவரிடம் இருந்ததை உணர்ந்தேன். அவர் முற்போக்கான ஒரு பௌத்த பிக்கு. தமிழ், முஸ்லிம் மக்களின் நலன்களில் தீவிர அக்கறை கொண்டவராக இருந்தார். சிறுபான்மை மக்களுக்கு அரசியல் தீர்வொன்று கிடைக்க வேண்டும் என்பதற்காக குரல்கொடுத்தார்.

இவர் பெளத்ததிற்கும், சமூக நலனிற்கும் தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர். தமிழ் சமூகத்தின் மீது அக்கறையும் கரிசனையும் கொண்டவராகவும் இருந்தார்.

மத நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, மனித குலத்தின் சமத்துவம், மனித உரிமைகள் மற்றும் உலகளாவிய நீதிக்கான தனது பணியை முன்னெடுப்பதற்கான அவரது முயற்சிகளை ஒரு போதும் மறக்க முடியாது.

இவ்வாறு முற்போக்கு சிந்தனை கொண்ட பத்தேகம சமித்த தேரரின் இழப்பு பெருந்துயர். அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிராத்திக்கின்றேன்.

குளவிக்கொட்டுக்கு இலக்காகி தோட்டத் தொழிலாளி பலி – ஹாலிஎலயில் சோகம்!

பதுளை, ஹாலிஎல பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண் தோட்டத் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹாலிஎல – ரொசட் தோட்டத்தை சேர்ந்த இவர், தேயிலை தோட்டத்தில் கொழுந்து கொய்துகொண்டிருக்கையிலேயே நேற்று இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.

 அதன்பின்னர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார்.

71 வயதான இப்பெண் ஏற்கனவே ஓய்வு பெற்றிருந்தாலும், வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதற்காக தோட்டத்தில் ‘கைக்காசுக்கு’ (பதிவுசெய்யப்படாத தொழிலாளி) வேலை செய்துள்ளார்.

நாட்டில் மேலும் 83 ஆயிரத்து 44 பேருக்கு கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றல்

நாட்டில் நேற்று 83 ஆயிரத்து 44 பேருக்கு கொவிட் – 19 தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ளது.

72 ஆயிரத்து 887 சினோ பாம் தடுப்பூசிகளும், 10 ஆயிரத்து 157 ஸ்புட்னிக் – பை தடுப்பூசிகளுமே இவ்வாறு மக்களுக்கு ஏற்றப்பட்டுள்ளன.

இலங்கையில் தற்போது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் ஆஸ்ட்ரா செனகா நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொவிஷீல்ட் (Covishield) , சீனாவின் தயாரிப்பான சினோ பாம் (Sinopharm), ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் – பை (Sputnik – V) ஆகிய தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுவருகின்றன.

இதன்படி கொவிஷீல்ட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 9 லட்சத்து 25 ஆயிரத்து 242 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளது. இவ்வாறு முதலாவது டோஸை பெற்றுக்கொண்டவர்களில் 3 லட்சத்து 47 ஆயிரத்து 310 பேருக்கு இரண்டாம் டோஸ் ஏற்றப்பட்டுள்ளது.

2021 மார்ச் 26 ஆம் திகதி முதல் மே 31 ஆம் திகதிவரை இலங்கையில் உள்ள 2 ஆயிரத்து 435 சீனப்பிரஜைகள் உட்பட 7 லட்சத்து 39 ஆயிரத்து 499 பேருக்கு சினோ பாம் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இதன் இரண்டாவது டோஸை 2 ஆயிரத்து 435 பேர் பெற்றுள்ளனர்.

ஸ்புட்னிக் – பை தடுப்பூசி ஏற்றும் பணி ஏப்ரல் 30 ஆம் திகதி ஆரம்பமானது. மே 31  வரை 26 ஆயிரத்து 821 பேருக்கு அந்த தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ளது. இன்னும் இரண்டாவது டோஸ் ஏற்றும் பணி ஆரம்பமாகவில்லை.

நாட்டில் இன்னும் தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுக்கப்படுகின்றது.

தோட்டத் தொழிலாளர்களுக்காக மேலுமொரு வீட்டுத்திட்டம் – அமைச்சரவை அனுமதி

தெரணியகல, மாலிபொட பகுதியில் தோட்டத் தொழிலாளர்களுக்காக வீடமைப்பு திட்டமொன்றை மேற்கொள்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி அப்பகுதியில் 171 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

மேற்படி திட்டத்தின் முதற்கட்டமாக 60 வீடுகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அரச பொறியிலாளர் கூட்டுத்தாபனத்திற்கு வழங்குவதற்கு,  நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக  பிரதமர்  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் தெரணியகல பிரதேசத்தில் நடைபெற்ற ‘கிராமத்துடன் உரையாடல்’ நிகழ்ச்சித்திட்டத்தில் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கமையவே, மாலிபொடவை சுற்றியுள்ள பிரதேசத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்காக வீடமைப்பு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை,  ஜனாதிபதியின் கோரிக்கைக்கமைய முன்மொழியப்பட்ட வீடுகள் அடங்கலாக 480 தோட்ட வீடுகளை அமைப்பதற்காக 500 மில்லியன் ரூபாய்களை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. 

தடுப்பூசிக்காக கண்டியில் கையொப்பம் வாங்குவது ஏன் – வேலுகுமார் கேள்வி!

” ஒரு தடுப்பூசி மட்டுமே என்றாலும் விரும்பி ஏற்றுக்கொள்கிறேன் என கையொப்பம் இடுபவர்களுக்கே கண்டி மாவட்டத்தில் தடுப்பூசி ஏற்றப்படுகின்றது. எந்த அடிப்படையில், யாரால் இந்த நிபந்தனை கொண்டுவரப்பட்டிருக்கின்றது? என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

கண்டி மாவட்டத்தில் கோவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.

ரஷ்ய நாட்டினது தயாரிப்பான ஸ்புட்னிக் பை தடுப்பூசிகள் இங்கு வழங்கப்படுகின்றன. முதல் கட்டத்தில் 50, 000 தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது. எனினும் ஒரு தடுப்பூசி மட்டுமே என்றாலும் விரும்பி ஏற்றுக்கொள்கிறேன் என கையொப்பம் இடுபவர்களுக்கே கண்டி மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கப்படுகின்றது. எந்த அடிப்படையில், யாரால் இந்த நிபந்தனை கொண்டுவரப்பட்டிருக்கின்றது?

ரஷ்ய நாட்டின் தயாரிப்பான ஸ்புட்னிக் பை தயாரிப்புகள் இரண்டு வழங்கப்பட வேண்டும் என்பது மிக தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. மருத்துவ துறை சார்ந்த நிபுணர்களால் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. முதலாவது தடுப்பூசி வழங்கி 21 நாட்கள் ஆகின்ற போது இரண்டாவது தடுப்பூசி வழங்கப்பட வேண்டும். எனினும் அதனை இரண்டு மூன்று வாரங்களுக்கு பிற்போடலாம் எனவும் தடுப்பூசி நிறுவனம் கூறுகின்றது. ஆனால் எங்கேயும் ஒரு தடுப்பூசி போதுமானதென கூறப்படவில்லை.

இவ்வாறான சூழலில் ஒரு தடுப்பூசியாக இருந்தாலும் அதனை விரும்பி ஏற்றுக்கொள்கிறேன் என மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி கையொப்பம் பெறுவது எந்த வகையில் நியாயம்? இறுதியில் மக்கள் ஒப்புக்கொண்டதால் தான் ஒன்றை வழங்கினோம், இரண்டாவதை வழங்க எங்களால் முடியவில்லை என கூறுவதற்கு முன்கூட்டியே செய்கின்ற திட்டமாகவே இது இருக்கின்றது. தங்களது இயலாமையை மக்கள் மீதான தவறாக சுமத்தப்பார்க்கும் அரசாங்கமாக இது மாறியிருக்கின்றது.

ஸ்புட்னிக் பை தடுப்பூசியாக இருப்பினும், இரண்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டால் மட்டுமே அது பிரயோசனமானதாக அமையும். அவ்வாறு இல்லாத போது அதில் எந்த பயனும் கிடைக்கப்போவது இல்லை. பெயரளவில் அரசாங்கம் தடுப்பூசி வழங்கிவிட்டோம் என கூறும் முயற்சியாக மட்டுமே இருக்கும். எனவே தடுப்பூசி ஒன்று பெற்றிருந்தாலும் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி காணப்படப்போவதில்லை.

அத்தோடு வெளிநாட்டு பயணங்களில் ஈடுபடுகின்ற போது இதனை ஏற்றுக்கொள்ளப்போவதும் இல்லை. மக்களை இரண்டும் கெட்ட நிலைக்கு தள்ளுகின்ற வேலையை செய்யப்பார்க்காதீர்கள். ஏனைய பிரதேசங்களை போலவே கண்டி மாவட்டத்திலும் ஸ்புட்னிக் வீ தடுப்பூசியாக இருக்கலாம், அல்லது சினோபர்ம் தடுப்பூசியாக இருக்கலாம், முறையாக இரண்டு தடுப்பூசிகளும் வழங்கப்பட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை உரிய வகையிலே அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இதனை விடுத்து உயிராபத்து எதிர்நோக்கியிருக்கும் மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி, நிபந்தனையிட்டு, கையொப்பம் வாங்கி மக்கள் மீதே பழியை சுமத்த பார்க்காதீர்கள்.” – என்றுள்ளது.

14 ஏக்கர் காணியில் புதிய பொலிஸ் தலைமையகம் – அமைச்சரவை அனுமதி

பொலிஸ் தலைமையகத்தில் புதியதொரு இடத்தில் நிர்மாணிப்பதற்காக முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி தற்போது கொழும்பு 1 இல் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகம், பெபிலியான பகுதிக்கு மாற்றப்படவுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் வருமாறு,

” கொழும்பில் தற்போது பொலிஸ் தலைமையகம் யோர்க் வீதியும் விகாரை வீதியும் தொடர்புபடும் வீதிக்கு இடையில் 100 வருடங்களுக்கு அதிகமான பழைய 03 கட்டிடங்களில் இயங்கி வருவதுடன், குறித்த கட்டிடத்தொகுதியில் போதியளவு இடவசதியின்மையால் சிவில் நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட மேலும் சில பிரிவுகள் வாடகைக்கு அமர்த்தப்பட்ட கட்டிடங்களில் இயங்கி வருகின்றன.

பொலிஸ் தலைமையகக் கட்டிடத் தொகுதியை மிரிஹான பிரதேசத்தில் நிர்மாணிப்பதற்காக 2012 யூலை மாதம் 11 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தாலும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலைமையில் இலங்கை பொலிசுக்குச் சொந்தமான பெப்பிலியான பிரதான வீதியில் இலக்கம் 142, பெல்லன்தொட்ட சந்தி, அத்திடிய வீதி, தெஹிவல எனும் முகவரியில் அமைந்துள்ள 14 ஏக்கர் 02 ரூட் 38.50 பேர்ச்சஸ் காணியில் பொலிஸ் தலைமையகத்தை நிர்மாணித்தல் மிகவும் பொருத்தமென அடையாளங்காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, பொலிஸ் தலைமையக கட்டிடத்தொகுதி மிரிஹான பிரதேசத்தில் அல்லாமல், இலங்கை பொலிசுக்குச் சொந்தமான குறித்த காணியில் நிர்மாணிப்பதற்கும், தேவைக்கேற்ற வகையில் வேறு வேறாக கட்டிடங்களின் கட்டுமானக் கருத்திட்டங்களுக்கான பெறுகை செயன்முறையை மேற்கொள்வதற்கும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்   சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நாட்டில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படுமா?

” எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தையடுத்து நாட்டில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படும் என வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது.” – என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில இன்று தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று நடைபெற்றது.

இதன்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர்,

” எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்ததால் அதன் சிதைவுகள் , இரசாயனம் என்பன கடலுடன் கலந்துள்ளதால் உப்பு உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படும்.  இதனால் எதிர்காலத்தில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என வதந்தி பரப்பட்டுவருகின்றது. அவ்வாறு எந்தவொரு தட்டுப்பாடும் ஏற்படாது. உப்பு உற்பத்திக்கு எவ்வித தாக்கமும் ஏற்படவில்லை.” – என்றார்.

‘கப்பலை நாட்டுக்குள் அனுமதித்தது தவறு’ – விசாரணை கோருகிறது சுதந்திரக்கட்சி

” பிறநாடுகளின் துறைமுகங்களால் நிராகரிக்கப்பட்ட எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலை இலங்கைக்குள் அனுமதித்தமை தவறான செயலாகும். எனவே,இதற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” – என்று அரச பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர கூறியவை வருமாறு,

” அனர்த்த நிலையிலுள்ள துறைமுகத்தை எமது நாட்டு கல் எல்லைக்குள் அனுமதிக்ககூடாது என்பதை துறைமுக அதிகார சபை தெரிந்துவைத்திருக்க வேண்டும்.பிற துறைமுகங்களால் நிராகரிக்கப்பட்ட கப்பல் ஏன் இங்கு கொண்டுவரப்படவேண்டும்? இது விடயத்தில் உரிய விசாரணை அவசியம்.

இவ்வனர்த்தத்தால் எமது நாட்டு கடல் வளத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தவறானதொரு செயலாகும். ஆகவே உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். ” – என்றார்.

அதேவேளை, இக்கப்பல் பிற நாட்டு துறைமுகங்களால் நிராகரிக்கப்பட்டனவா என்பது உட்பட அனைத்து விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு துறைசார் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

செம்மணியில் மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

0
  யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி, மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 25வது நாள் அகழ்வுப் பணி இன்று...

சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தனக்கு தொடர்பு இல்லையெனில், சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு...

வத்தளை ஹேக்கித்தை சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்: விரிவான ஏற்பாடுகள் தயார்!

0
  வரலாற்றுச் சிறப்புமிக்க வத்தளை, ஹேக்கித்தை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் மூன்றாவது மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் ஜூன் மாதம் 25ஆம்திகதி மிக விமரிசையாக நடைபெறவுள்ள நிலையில், அது தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு...