Home Blog Page 3511

‘பலாலி விமான நிலையத்தை மேம்படுத்த ரூ. 300 மில்லியனை வழங்குகிறது டில்லி’

இந்தியாவின் நிதிப்பங்களிப்புடன் யாழ்ப்பாணத்திலுள்ள பலாலி சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வேலைத்திட்டத்துக்காக இந்தியாவிடமிருந்து 300 மில்லியன் ரூபாவை நன்கொடையாக பெற்றுக்கொள்வதற்கு அந்நாட்டுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இணையவழி ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இதற்கான பத்திரத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசண்ண ரணதுங்க முன்வைத்துள்ளார்.

‘கொழும்புக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு விசேட ஸ்டிக்கர்’

அத்தியாவசிய சேவைகளுக்காக கொழும்பு நகருக்கும் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு விசேட ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை இன்று காலை முதல் ஆரம்பமானது.

ஒரு வாகனம் பல இடங்களில் சோதனைக்கு உட்படுத்தப்படுவதை தவிர்ப்பதற்காகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஸ்டிக்கரின் பாவனைக்காலம் ஒரு நாளாகும்.

அதன்படி நாளை காலையும் ஸ்டிக்கர் ஒட்டும் நடைமுறை முன்னெடுக்கப்படும்.

ஒரு இடத்தின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டாலும், ஏதேனும் சந்தேகம் இருந்தால் அவ்வாகனம் மற்றுமொரு இடத்திலும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

‘மேல் மாகாணத்தில் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 494 பேருக்கு கொரோனா’

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இன்று காலை 6 மணிவரை மேல் மாகாணத்தில் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 494 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இன்று காலைவரை கொழும்பு மாவட்டத்தில் 50 ஆயிரத்து  383 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 34 ஆயிரத்து 336
பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 17 ஆயிரத்து 775 பேருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அத்துடன், கடந்த 24 மணிநேரத்துக்குள் கொழும்பு மாவட்டத்தில் 646 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 654  பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 281 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட ரீதியில் பதிவான தொற்றாளர்களின் விபரம்,

‘தடுப்பூசி செலுத்த எவராவது பணம் கோரினால் பொலிஸாருக்கு அறிவிக்கவும்’

” கொவிட் – 19 தடுப்பூசிகள் தொடர்பில் பரவும் வதந்திகளை நம்பவேண்டாம். அனைவருக்கும் இலவசமாகவே தடுப்பூசி ஏற்றப்படும். எவராவது பணம் கோரி அழுத்தம் கொடுத்தால் அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கவும்.” – என்று ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன நேற்று கோரிக்கை விடுத்தார்.

தடுப்பூசி விவகாரம் தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் – பை தடுப்பூசியின் முதலாவது டோஸை மட்டும் பெற்றுக்கொள்வது திருப்தியளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், அது தொடர்பான பரிசோதனை அறிக்கைகள் உள்ளதாகவும் ஸ்புட்னிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தடுப்பூசி நிறுவனத்தால் எமக்கும் சில தகவல்கள் தெரியப்படுத்தப்பட்டுள்ளன.

முழுமையான தகவல்கள் அதிகாரப்பூர்வமாக உற்பத்தி நிறுவனம் மற்றும் அந்நாட்டு விஞ்ஞானிகளால் அறிவிக்கப்பட்ட பின்னர், முதலாவது டோஸை மட்டும் ஏற்றினால் போதுமா என்பது தொடர்பில் எம்மால் தீர்மானம் எடுக்கப்படும். ஆனால் தற்போது அவ்வாறானதொரு முடிவு எடுக்கப்படவில்லை.

அத்துடன், தடுப்பூசி தொடர்பில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். உங்களுக்கான தடுப்பூசி இலவசமாக ஏற்றப்படும். தடுப்பூசி ஏற்றுவதற்கோ, வரிசையில் நிற்பதற்கோ எவருக்கும் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. அவ்வாறு எவராவது பணம் கோரினால் பொலிஸாருக்கு அறிவிக்கவும்.” – என்றார்.

‘கொரோனா’வால் வீட்டிலேயே மேலும் 7 மரணங்கள் பதிவு’

நாட்டில் மேலும் 43 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. நேற்று ஒருவரும், மே 20 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை 42 பேரும் உயிரிழந்துள்ளனர்.

31 ஆண்களும், 12 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் இருவர் 39 வயதுக்கும் குறைவானவர்கள்.

வைத்தியசாலையில் சிகிச்சைபெறும்போது 36 பேரும், வீட்டிலேயே 7 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை கொரோனாவால் நாட்டில் இதுவரை ஆயிரத்து 527 ஆக அதிகரித்துள்ளது.

‘தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய 20,140 பேர் இதுவரை கைது’

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் ஆயிரத்து 38 பேர் கடந்த 24 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டம் அமுலுக்குவந்த கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இன்று காலை 6 மணிவரை அச்சட்டத்தைமீறிய 20 ஆயிரத்து 140 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

‘கொரோனா ஒழிப்பு சமரில் 2ஆவது அஸ்திரத்தையும் களமிறக்கியது சீனா’

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான புதிய தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

உலக அளவில் உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரமளித்துள்ள ஆறாவது கோவிட் தடுப்பூசியான சினோவெக் (Sinovac) சீனாத்தயாரிப்பாகும்.

அவசரத்துக்கு பயன்படுத்தக்கூடியது என்று அங்கீகாரமளித்துள்ள சீனாவின் இந்த இரண்டாவது தடுப்பூசியில் 2 பில்லியனை, இந்த வருடம் தங்களால் தயாரித்து உலக அளவில் விநியோகிக்கமுடியும் என்று Sinovac தடுப்பூசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சினோ பாம் என்ற தடுப்பூசியையும் சீனா தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அது தற்போது பயன்பாட்டில் உள்ளது.

”எக்ஸ் பிரஸ் பேர்ள்” கப்பல் குறித்து ஜனாதிபதி பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

தீக்கிரையான ”எக்ஸ் பிரஸ் பேர்ள்” கப்பலை உடனடியாக ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கடலில் அனர்த்தத்திற்கு உள்ளான கப்பலை, ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்வது தொடர்பில் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டது.

கடந்த மே 09ஆம் திகதி  ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து புறப்பட்டு, 19ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு அருகே மேற்படி கப்பல் வந்து சேர்ந்தது முதல் நடந்த அனைத்து விவரங்களையும் துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன இன்று விபரித்தார்.

அனர்த்தத்திற்கு உள்ளான மேற்படி கப்பல் மூழ்கிவிடும் அபாயத்தில் இருப்பதனை, கடல் சார் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் இன்று சுட்டிக்காட்டினர்.

அவ்வாறாக நிகழ்ந்தால், அதனால் கடற் சூழலுக்கு ஏற்படக்கூடிய சேதத்தை குறைப்பதற்காக, கப்பலை ஆழ்கடலுக்குள் கொண்டு செல்வது மிகவும் பொருத்தமான நடவடிக்கையாக அமையும் என்பது அவர்களின் முன்மொழிவாக இருந்தது.

அதன்படி – தொழில்நுட்ப அம்சங்களின் அடிப்படையில், சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் – கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்து கொண்டு செல்ல உடனடியாக உத்தரவு பிறப்பிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இந்த விடயத்தில் எடுக்கப்படும் தீர்மானமானது – தொழில்நுட்ப விடயங்களின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதோடு அரசியல் விடயங்களை அதனுடன் சம்பந்தப்படுத்தக்கூடாது என்பதனையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர, நாலக கொடஹேவா, சட்ட மா அதிபர் சஞ்ஞெய் ராஜரத்தினம், ஜனாதிபதி செயலாளர் பி. பீ. ஜயசுந்தர, பாதுகாப்பு செயலாளர் (ஓய்வு பெற்ற) ஜெனரல் கமல் குணரத்ன, கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள், துறைமுகங்கள், சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை, நாரா உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

‘ தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையமும் கொரோனா சிகிச்சை மையமாகிறது’

ஹட்டன் தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையம் கொவிட் இடைநிலை வைத்தியசாலையாக மாற்றப்பட்டுள்ளதாக பிரஜா சக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் பாரத் அருள்சாமி கூறியுள்ளார்.

ஹட்டனில் இன்று (01.06.2021) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்…

” இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கு அமைய அட்டன் தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையம் கொவிட் இடைநிலை வைத்தியசாலையாக மாற்றப்பட்டுள்ளது.

அதற்கமைய 260 படுக்கைகளை கொண்ட நவீன வசதிகளுடன் கூடிய இடைநிலை வைத்தியசாலையாக மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே ரம்பொடை கலாச்சார நிலையமும் இடைகால சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டது.

மலையகத்தில் கொவிட் பரவலை கட்டுப்படுத்த ஏற்கனவே தடுப்பு செயலணி ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே தடுப்பு விழிப்புணர்வு உள்ளிட்ட செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. மத்திய மாகாணத்தில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களுக்கான நிவாரணமும் வழங்கப்பட்டு வருகின்றது.

நுவரெலியா, கண்டி, பதுளை, இரத்தினபுரி, கேகாலை போன்ற மலையக மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் கொவிட் பாதுகாப்பு செயற்றிட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. கண்டி மாவட்டத்தில் தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுகின்றது.

கடந்த மூன்று நாட்களாக இந்த செயற்பாடு இடம்பெறுகின்றது. நாளைய தினம் கண்டி மஹியவா உள்ளிட்ட கண்டியின் புற நகர் பகுதிகளிலும் தடுப்பூசி வழங்கப்படும். ஆகவே முறையான சுகாதார வழிக்காட்டல்களுடன் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.” – என்றார்.

க.கிசாந்தன்

‘கொரோனா’வை பயன்படுத்தி வெளிநாடுகளில் நிதி வசூலிக்க கூட்டமைப்பு முயற்சி’

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நிதியுதவி வழங்க வேண்டாம் என வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்று இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ஜன்ன ஜயசுமன கோரிக்கை விடுத்துள்ளார்.

” கொவிட் -19 இற்கான தடுப்பூசி உட்பட மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு நிதியுதவி வழங்குவதற்கு வெளிநாட்டில் உள்ளவர்கள் தயாராகவே இருக்கின்றனர். இதற்கான அனுமதியை அரசு வழங்கினால் திட்டத்தை செயற்படுத்தக்கூடியதாக இருக்கும்.” –  என்று கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் விடுத்துள்ள அறிவிப்புக்கு பதிலடி கொடுக்கும் விதத்திலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

” இந்நாட்டில் வாழும் மக்களுக்கு 30 வருடங்கள் கூட்டமைப்பினர் எவ்வாறான ஊசியை ஏற்றினர் என்பது எமக்கு தெரியும். அரசால் மட்டுமே தடுப்பூசி கொள்வனவு செய்யமுடியும். தனியார் நிறுவனத்தால் கொள்வனவு செய்யமுடியாது.

எனவே, தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்தி நிதி திரட்டிக்கொள்வதற்கான முயற்சியில் கூட்டமைப்பு இறங்கியுள்ளது. அவர்களின் போலி பரப்புரையை நம்ப வேண்டாம் என வெளிநாட்டில் வாழும் அனைத்து இன மக்களிடமும் கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

செம்மணியில் மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

0
  யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி, மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 25வது நாள் அகழ்வுப் பணி இன்று...

சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தனக்கு தொடர்பு இல்லையெனில், சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு...

வத்தளை ஹேக்கித்தை சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்: விரிவான ஏற்பாடுகள் தயார்!

0
  வரலாற்றுச் சிறப்புமிக்க வத்தளை, ஹேக்கித்தை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் மூன்றாவது மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் ஜூன் மாதம் 25ஆம்திகதி மிக விமரிசையாக நடைபெறவுள்ள நிலையில், அது தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு...