Home Blog Page 3510

நுவரெலியா உட்பட மேலும் 12 மாவட்டங்களில் ஜுன் 8 முதல் தடுப்பூசி ஏற்றல்!

நுவரெலியா உட்பட மேலும் 12 மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணி ஜுன் 8 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது – என்று கொவிட் – 19 தடுப்பு செயற்பாட்டு மையத்தின் பிரதானியும், இராணுவத்தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

சீனத் தயாரிப்பான சினோ பாம் தடுப்பூசியின் முதலாவது டோஸே இவ்வாறு ஏற்றப்படவுள்ளது.

குறித்த 12 மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவக்கூடிய அபாயமுள்ள கிராம சேவகர் பிரிவுகளில் முதலில் தடுப்பூசி திட்டம் ஆரம்பமாகும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பணி தாய்மார் மற்றும் அரச ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தடுப்பூசி செலுத்தப்படவுள்ள 12 மாவட்டங்கள் வருமாறு,

  1. நுவரெலியா.
  2. மாத்தளை.
  3. கேகாலை
  4. திருகோணமலை
  5. அம்பாந்தோட்டை
  6. பதுளை
  7. அநுராதபுரம்
  8. புத்தளம்
  9. அம்பாறை
  10. மட்டக்களப்பு
  11. மொனறாகலை
  12. பொலன்னறுவை

‘பதுளை மாவட்டத்தில் இதுவரை 34 பேரின் உயிரை பலியெடுத்த கொரோனா’

கொரோனா வைரஸ் தொற்றால் பதுளை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களில் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது – என்று பதுளை மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

ஹாலி எல மற்றும் தியத்தலாவை ஆகிய இடங்களில் ஆணொருவரும் , பெண்ணொருமாக இருவர் நேற்றும் இன்றும் உயிரிழந்த்யடுதே மேற்படி அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது.

பதுளை மற்றும் ஹாலிஎலயில் 10பேர் , தியத்தலாவையில் 08பேர், வெளிமடையில் 07பேர், பண்டாரவளையில் 06பேர், பசறையில் 02பேர் மஹியங்கனையில் 01 என்றடிப்படையிலேயே 34பேர் கோவிட் 19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

எம். செல்வராஜா, பதுளை

நாட்டில் மேலும் 2,568 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 568 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 809 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் வைரஸ் தொற்றிலிருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 714 பேர் மீண்டனர்.

ஜுன் 14 இற்கு பிறகும் பயணக்கட்டுப்பாடு தொடருமா?

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது என்று கொவிட் – 19 தடுப்பு செயற்பாட்டு மையத்தின் பிரதானியும், இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்தார்.

நாட்டில் அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு ஜுன் 7 ஆம் திகதி காலை 4 மணிக்கு தளர்த்தப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கில் பயணக்கட்டுப்பாட்டை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஜுன் 14 ஆம் திகதி கடும் நிபந்தனைகளுடனேயே பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது. உரிய மீளாய்வின் பின்னரே அது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்.

பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும், மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடையை தளர்த்துவதா, எத்தகைய நிபந்தனைகளை விதிப்பது என்பது தொடர்பில் அடுத்துவரும் நாட்களில் தீர்மானம் அறிவிக்கப்படும்.

நயன்தாராவின் மூன்று படங்கள் குறித்து வெளியான அறிவிப்பு

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, தனது கைவசம் உள்ள 3 படங்களை நேரடியாக ஓடிடியில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால் புதிய படங்களை ஓ.டி.டி.யில் வெளியிட தயாரிப்பாளர்கள் முனைப்பு காட்டி வருகிறார்கள். ஏற்கனவே சூரரைப் போற்று, பூமி, பொன்மகள் வந்தாள், பென்குயின், க.பெ.ரணசிங்கம், லாக்கப், டேனி, பரமபதம் விளையாட்டு உள்ளிட்ட பல படங்கள் ஓ.டி.டி.யில் வந்துள்ளன. தற்போது நரகாசுரன், வாழ், எப்.ஐ.ஆர் ஆகிய படங்களையும் ஓ.டி.டிக்கு கொடுக்க முயற்சி நடக்கிறது.

இந்நிலையில் நயன்தாராவின் 3 படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படம் ஓ.டி.டியில் வந்தது. தற்போது அவரது நெற்றிக்கண், ராக்கி, கூழாங்கல் ஆகிய படங்களை வாங்கி வெளியிட ஓ.டி.டி. தளங்கள் அணுகி இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

இதில் நெற்றிக்கண் படத்தில் நயன்தாராவே நடித்து இருக்கிறார். ராக்கி படத்தின் வெளியீட்டு உரிமையை விலைக்கு வாங்கி இருக்கிறார். கூழாங்கல் படத்தை விக்னேஷ் சிவனுடன் இணைந்து தயாரித்துள்ளார். விரைவில் இப்படங்களின் ஓ.டி.டி. வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் குறித்து ஐ.சி.சி. எடுத்துள்ள முக்கிய முடிவு

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு சர்வதேச கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

இதன்படி 2027 மற்றும் 2031 ஆம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் 14 அணிகள் பங்கேற்கவுள்ளன. மொத்தமாக 54 போட்டிகள் நடைபெறவுள்ளன.

அத்துடன், ரி – 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை 20 ஆக அதிகரிப்பதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

‘புதிய பொலிஸ் தலைமையகத்தை நிர்மாணிக்க 10 பில்லியன் ரூபா செலவாகும்’

புதிய பொலிஸ் தலைமையகத்தை நிர்மாணிப்பதற்கு 10 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு 01 இல் தற்போது அமைந்திருக்கும் பொலிஸ் தலைமையகத்தை புதியதொரு இடத்தில் நிர்மாணிப்பதற்கு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி இலங்கை பொலிசுக்கு சொந்தமான பெப்பிலியான பிரதான வீதியில் – இலக்கம் 142, பெல்லன்தொட்ட சந்தி, அத்திடிய வீதி, தெஹிவல எனும் முகவரியில் அமைந்துள்ள சுமார் 14.5 ஏக்கர் காணியில் புதிய பொலிஸ் தலைமையகம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

மேற்படி நிர்மாணப்பணிகளுக்கு சுமார் 10 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது என அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

” தற்போது பொலிஸ் தலைமையகம் யோர்க் வீதியும் விகாரை வீதியும் தொடர்புபடும் வீதிக்கு இடையில் 100 வருடங்களுக்கு அதிகமான பழைய 03 கட்டிடங்களில் இயங்கி வருவதுடன், குறித்த கட்டிடத்தொகுதியில் போதியளவு இடவசதியின்மையால் சிவில் நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட மேலும் சில பிரிவுகள் வாடகைக்கு அமர்த்தப்பட்ட  கட்டங்களில் இயங்கிவருகின்றன. இதற்கு மாதாந்தம் 25 மில்லியன் ரூபா  வாடகை செலுத்தப்படுகின்றது. எனவேதான் புதிய தலைமையகத்தை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.” – என்றும் அவர் கூறினார்.

இலங்கைக்கு 20 லட்சம் தடுப்பூசிகள் கிடைக்கும் திகதிகள் வெளியாகின

சீனாவிடமிருந்து இலங்கை கொள்வனவு செய்யவுள்ள 20 மில்லியன் தடுப்பூசிகள் ஜுன் 6 மற்றும் 09 ஆம் திகதிகளில் கையளிக்கப்படும் – என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” சீனாவிடமிருந்து இலங்கை கொள்வனவு செய்யவுள்ள தடுப்பூசிகளில் 10 லட்சம் சினோ பாம் தடுப்பூசிகள் ஜுன் 06 ஆம் திகதியும் மேலும் 10 லட்சம் தடுப்பூசிகள் ஜுன் 09 ஆம் திகதியும் கையளிக்கப்படவுள்ளன.

அத்துடன், பைசர், ஸ்புட்னிக் – பை, சினோவெக் ஆகிய தடுப்பூசிகளும் எதிர்காலத்தில் நாட்டுக்கு வரவுள்ளன.” – என்றார்.

நுவரெலியாவில் மேலும் 95 பேருக்கு கொரோனா – இதுவரை 4,214 பேர் பாதிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 95 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஹங்குராங்கெத்த சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 22 பேருக்கும், ஹட்டன் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும், கொத்மலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவருக்கும், நோட்டன் பிரிட்ஜ் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 54 பேருக்கும், நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேருக்கும், பூண்டுலோயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவருக்கும், உடபுஸல்லாவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 9 பேருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இன்று காலை 6 மணிவரை நுவரெலியா மாவட்டத்தில் 4 ஆயிரத்து 214 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்படுமா? 06 ஆம் திகதி முடிவு வெளியாகும்!

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது குறித்து எதிர்வரும் 6 ம் திகதி தீர்மானிக்கப்படும் என அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி ,நாட்டின் தற்போதைய கொரோனா நிலைமை குறித்து, தேசிய பாதுகாப்பு சபை ஜனாதிபதி தலைமையில் நேற்று கூடிய போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணக் கட்டுப்பாடு காரணமாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பயணக் கட்டுப்பாடு தொடரும் பட்சத்தில், தற்போது கொவிட் தொற்றில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை மேலும் குறைக்க முடியும் என அதிகாரிகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

எதிர்வரும் 7ம் திகதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை, எதிர்வரும் 14 அல்லது 15ம் திகதி வரை நீடிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.

எனினும்,எதிர்வரும் 6 ம் திகதி ஜனாதிபதி தலைமையில் கூடும் கொவிட் செயலணியின் கூட்டத்தில் இறுதி தீர்மானம் எட்டப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நன்றி – தமிழன் நாளிதழ்

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

செம்மணியில் மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

0
  யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி, மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 25வது நாள் அகழ்வுப் பணி இன்று...

சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தனக்கு தொடர்பு இல்லையெனில், சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு...

வத்தளை ஹேக்கித்தை சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்: விரிவான ஏற்பாடுகள் தயார்!

0
  வரலாற்றுச் சிறப்புமிக்க வத்தளை, ஹேக்கித்தை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் மூன்றாவது மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் ஜூன் மாதம் 25ஆம்திகதி மிக விமரிசையாக நடைபெறவுள்ள நிலையில், அது தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு...