Home Blog Page 3509

‘நுவரெலியா மாவட்டத்தில் தடுப்பூசி திட்டத்தை முன்னெடுக்க 50 குழுக்கள்’

நுவரெலியா மாவட்டத்தில் கொவிட் – 19 ஐத் தடுப்பதற்காக, தடுப்பூசிக்கு மக்களை தயார்படுத்தும் திட்டத்தை விரைவாக தயாரிப்பதற்கு மாவட்ட செயலாளர் நந்தன கலபட, சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நுவரெலியா மாவட்ட செயலக ஆச்சர்ய மண்டபத்தில் நடைபெற்ற கோவிட் 19  தடுப்பதற்கான மாவட்டக் குழுவில் இணைந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மாவட்ட செயலாளர் எதிர்காலத்தில் நுவரெலியா மாவட்டத்திற்கு தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இதுபோன்ற ஒரு திட்டம் அமுல்படுத்தப்படுகின்றபொழுது தடுப்பூசியை வழங்கும் போது நெரிசலைக் குறைக்கும் மற்றும் பொதுமக்களுக்கு சிரமத்தைத் தடுக்கும் என்று மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் 491 கிராம அலுவலர் பிரிவுகளில் 30 வயதுக்கு மேற்பட்ட 384, 081 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் முதலில் அவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுவரெலியா பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.

இதற்காக 50 தடுப்பூசி குழுக்கள் நியமிக்கப்படும் என்றும் கிராம மட்டத்தில் இந்த அமைப்பு ஏற்படுத்தப்படுவதோடு இதில் கிராம அலுவலர் அபிவிருத்தி அதிகாரிகள் சமுர்தி அதிகாரிகள் மற்றும் ஏனைய அதிகாரிகளின் உதவி கோரப்படும் என்றும் அவர் கூறினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களை முன்னுரிமை அடிப்படையில் பதிவு செய்வது தொடர்பான தகவல்களை சேகரிப்பது தடுப்பூசி திட்டத்திற்கு முன் செய்யப்படும் என்று டாக்டர் மதுரா செனவிரத்ன மேலும் தெரிவித்தார்.
.
இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் நுவரெலியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் மனதுங்க கூடுதல் மாவட்ட செயலாளர் பி.ஏ. சரத்சந்திர பிரதேச செயலாளர்கள் மற்றும் நுவரெலியா டி.ஐ.ஜி மற்றும் போலீஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற இந்த நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த தடுப்பூசி வழங்கும் திட்டத்தை அரசாங்கம் அமுல் படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது எனவும் மாவட்ட செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு

‘கப்பல் கம்பனிக்கு எதிராக வழக்கு’ – மீனவர்களுக்கு பேராயர் அழைப்பு!

” நாட்டை பாதுகாப்போம் என அறிவிப்புவிடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள் தற்போது திசைமாறி பயணித்துக்கொண்டிருக்கின்றனர். நாட்டு வளங்கள் விற்கப்படுகின்றன. எனவே, நாட்டுக்கு தீங்கு விளைவிக்ககூடிய திசையில் பயணிப்பதை அரசு உடன் நிறுத்த வேண்டும்.” – என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தினார்.

கொழும்பில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டை பாதுகாப்போம் என அறிவித்து, ஆட்சி அதிகாரத்தை பொறுப்பேற்ற குழுவினர், நாட்டை சீரழிக்கும் திசையை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றனர்.

எமது மனங்களுக்குள் ஏற்பட்டிருந்த நம்பிக்கை சிதைவடையும் சூழ்நிலை உருவாகியிருப்பது வேதனைக்குரிய விடயமாகும். இந்நாடு எத்திசையை நோக்கி பயணிக்கின்றது, யார் நிர்வாகம் நடந்துவது, யார் தீர்மானம் எடுப்பது என்பன உள்ளிட்ட விடயங்களிலும் நம்பகத்தன்மையற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இவ்வாறானதொரு திசையில் பயணிப்பதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

நாட்டு வளங்களை இலகுவில் விற்பனை செய்யமுடியும். அவ்வாறு வளங்களை விற்பது அபிவிருத்தி கிடையாது. எமது நாட்டுக்கென ஆத்ம கௌரவம், ஆதம் நம்பிக்கை உள்ளது. இதனை பாதுகாக்க வேண்டியது அரசியல்வாதிகளின் பொறுப்பாகும்.

எம்சிசி உடன்படிக்கைக்கு நாம் எதிர்ப்பை வெளியிட்டபோது எம்முடன் இணைந்து அதற்கு எதிராக குரல் கொடுத்த தற்போதைய ஆட்சியாளர்கள், இன்று அச்செயலைவிடவும் பாரதூரமான விடயங்களை முன்னெடுப்பதை காணமுடிகின்றது.

அதேவேளை, கப்பல் தீப்பிடித்த சம்பவத்தால் எமது நாட்டு மீனவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. துறைமுகம் சார் அமைச்சரும் அவரின் பணியாட் தொகுதியினரும் இச்சம்பவம் குறித்து எமக்கு இன்னும் தெளிவான பதிலை வழங்கவில்லை. கப்பலிலில் தீப்பரவல் ஆரம்பித்தபோதே அதனை ஆழ்கடலுக்கு கொண்டுசெல்வதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது கடல் வளம் அழிவடைந்துள்ளது. கடல்வாள் உயிரினங்களும் அழிவடைந்துவருகின்றன.

இக்கப்பல் கடலில் மூழ்கினால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கும். அதற்கு இடமளிக்க முடியாது. கப்பல் நிறுவனத்துக்கு எதிராக மீனவர்கள் வழக்கு தொடுக்க வேண்டும். மீனவர்களைத்திரட்டி அதற்கான தலைமைத்துவத்தை நான் வழங்குவேன். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு மட்டும்போதாது. உரிய மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்ட நஷ்டஈடு வழங்கவேண்டும். மீனவர்கள் தொழிலை மீள ஆரம்பிப்பதற்கு ஏதுவான சூழ்நிலையை விரைவில் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.” – என்றார்.

‘ஒருநாள் போட்டிகளில் 502 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனை வீரன்’

பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றை இவரின் பெயர் இல்லாமல் எழுதிட முடியாது. சர்வதேச கிரிக்கெட்டில் 916 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் இவர். டெஸ்ட், ஒரு நாள் என இரு போட்டிகளிலும் தலா 400 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய இரு வீரர்களில் இவரும் ஒருவர். அதுவுமம் ஒருநாள் போட்டிகளில் 502 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையும் இவருக்கு உண்டு. இன்னமும் இந்தச் சாதனையை எந்த வேகப்பந்துவீச்சாளராலும் எட்டக் கூட முடியவில்லை.

உலகளவில் பேட்டிங்க்கு இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் எப்படியோ, அப்படிதான் உலகளவில் வேகப்பந்துவீச்சுக்கு ஒரு ஜாம்பவான் என்றால் ‘சுல்தான் ஆஃப் ஸ்விங்’ என்று புகழப்பட்ட பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் இன்று தனது 55 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

1985 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான வாசிம் அக்ரம், 1990 களில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக உலக பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தார். ‘லாங் ரன் அப்’ கிடையாது, 100 கிலோ மீட்டர் வேகத்தில் பந்தை வீசமாட்டார்.

ஆனால் “ஷார்ட் ரன் அப்”, தேவையான வேகம், இன் ஸ்விங், அவுட் ஸ்விங், ரிவர்ஸ் ஸ்விங், யார்கர், பவுன்சர் என அனைத்தும் அறிந்த ஒரு முழுமையான வேகப்பந்துவீச்சாளராக கொடிகட்டி பறந்தார் வாசிம் அக்ரம். மிக முக்கியமாக 1992 ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உலகக் கோப்பை வென்றதற்கு அக்ரமும் ஒரு முக்கியமான காரணம். ஆம் 1992 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக கடைசி கட்டத்தில் வாசிம் அக்ரம் எடுத்த 33 ரன்களும், பந்துவீச்சில் அவர் வீழ்த்திய 3 விக்கெட்டுகளும் பாகிஸ்தான் கோப்பை வெல்லக் காரணமானது. இறுதிப் போட்டியில் வாசிம் அக்ரம் ஆட்ட நாயகன் விருது பெற்றதே அதற்கு உதாரணம்.

சர்வதேசப் போட்டிகளில் 4 முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியவர் அக்ரம். டெஸ்ட், ஒரு நாள் போட்டியில் தலா இரு முறை இந்தச் சாதனையைச் செய்தவர் அக்ரம். 1989, 1990-ம் ஆண்டுகளில் ஷார்ஜாவில் நடந்த ஒரு நாள் போட்டிகளில் இரு முறையும்; 1999-ம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் இரு முறையும் ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தினார். சர்வதேச அளவில் இடக்கை வேகப்பந்துவீச்சாள்ரகளில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் இவர் மட்டுமே. இந்தச் சாதனையை இனி எவரேனும் நெருங்குவார்களா என கூட தெரியவில்லை.

அதேபோல பாகிஸ்தான் அணிக்கு பேட்டிங்கிலும் கைகொடுத்திருக்கிறார் வாசிம் அக்ரம். டெஸ்ட் கிரிக்கெட்டில் 8-வது பேட்ஸ்மேனாக களமிறங்கி அதிக ரன் குவித்த வீரர் என்ற சிறப்பைப் பெற்றவர் அக்ரம். 1996-ல் ஷேக்புராவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 8-வதாக களமிறங்கி 257 ரன்கள் குவித்து அவுட் ஆகாமல் இருந்தார் அக்ரம். 22 பவுண்டரிகள், 12 சிக்ஸர்களை விளாசினார். இந்தப் போட்டிக்கு முன்பு பாகிஸ்தான் அணியை பல முறை தனது பேட்டிங்காலும் காப்பாற்றியிருக்கிறார் வாசிம் அக்ரம்.

அதேபோல தனக்கு நிகழ்ந்த சோதனையையும் சாதனையாக்கியவர் வாசிம் அக்ரம். புகழின் உச்சியில் இருந்த வாசிம் அக்ரமுக்கு இளம் வயதிலேயே நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்பட்டது. 1997- ம் ஆண்டு பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்தபோது, அவருக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரியவந்தது. அப்போது, வாசிமுக்கு 29 வயதே ஆகியிருந்தது. ஆனால் 36 வயது வரை நீரிழிவு பாதிப்பிலும் தொடர்ந்து விளையாடினார். மைதானத்தில் சில நேரங்களில் சர்க்கரையின் அளவு குறைந்தால் மயக்கம் வரும். அப்போது சாக்லேட்டுகளை சுவைத்துக் கொண்டே விக்கெட்டையும் வீழ்த்திய சாதனையாளர் அக்ரம்.

சொந்த வாழ்க்கையில் சோகமாக 2009 இல் தன் மனைவியை இழந்தார் அக்ரம். செப்ஸிஸ் என்ற அரிய வகையான நோயால் பாதிக்கப்பட்ட அக்ரமின் மனைவி ஹூமா சிகிச்சைக்காக சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் பின்பு அக்ரம் 2013 இல் மறுமணம் செய்துக்கொண்டார். வாசிம் அக்ரம் தனது கிரிக்கெட் வாழ்க்கையை 2003 உலகக் கோப்பைக்கு பின்பு முடித்துக்கொண்டார். அதன் பின்பு பயிற்சியாளர், வர்ணனையாளர் என தொடர்ந்து பயணிக்கிறார். ஆனாலும் ரசிகர்களுக்கு அக்ரமின் அந்த “இன்ஸிவிங் கிங் யார்க்கர்கள்” இன்னும் கண்களை விட்டு அகலாமல் இருக்கிறது.

பதுளை மாவட்டத்தில் மேலும் 251 பேருக்கு கொரோனா!

பதுளை மாவட்டத்தில் மேலும் 251 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பதுளை உட்பட 7 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இருந்தே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும், தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கையும் வருமாறு,

‘மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்ககூடாது’ – ஜனாதிபதி பிறப்பித்துள்ள கட்டளை

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில், அத்தியாவசியச் சேவைகளைப் பேணுவதற்கு, ஆளுநர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தனிப்பட்ட முறையில் தலையீடு செய்ய வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

தற்போதைய நிலைமைகளுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்க முடியாதென்பதால், சவாலை வெற்றிகொண்டு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்லும்போது, அனைவரதும் பங்களிப்பு அவசியமாகும் எனவும் அவர் கூறினார்.

கைத்தொழில் நிலையங்கள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு ஆளுநர்களிடமும் மாவட்டச் செயலாளர்களிடமும் கோரினார்.

மாகாண ஆளுநர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுட நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற மாதாந்த சந்திப்பின்போதே ஜனாதிபதி இவற்றை தெரிவித்தார்.

கைத்தொழில் நிலையம் அல்லது அபிவிருத்தித் திட்டச் சூழலில் நோய்த் தொற்றாளர் ஒருவர் இனங்காணப்படும் பட்சத்தில், அந்தத் தொழிற்சாலையை அல்லது திட்டத்தை ஒரேயடியாக மூடிவிடுவதற்குப் பதிலாக – சுகாதாரப் பரிந்துரைகளைப் பின்பற்றித் தொடர்ச்சியாகப் பேணுவதற்கான சூழல் குறித்துக் கண்டறிய வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பயணக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இயல்பு வாழ்க்கைக்கு ஏற்பட்டிருக்கும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

உரிய சுகாதாரப் பரிந்துரைகளைப் பின்பற்றி, கைத்தொழில் மற்றும் அத்தியாவசிய சேவைகளைப் பேணுவதற்கு அரசாங்கம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ள நிலையில், பிரதேச மட்டத்தில் குறித்த நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்போது குறைபாடுகள் இடம்பெற்றிருப்பது தொடர்பில் தெரியவந்திருப்பதனையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

பிரதேச மட்டத்தில் விவசாயிகளின் மரக்கறி மற்றும் பழவகைகளை மேலதிக விலைக்குக் கொள்வனவு செய்து விநியோகிக்கும் பொறிமுறையைச் சரியாக நடைமுறைப்படுத்துமாறு   பணிப்புரை விடுத்ததுடன், விவசாயப் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்காதிருப்பது, அதனோடு தொடர்புபட்ட அனைத்துத் தரப்பினரினதும் பொறுப்பாகும் என்பதனையும் சுட்டிக்காட்டினார்.

கம்பஹாவில் 1,004,கொழும்பில் 501, இரத்தினபுரியில் 122 பேருக்கு கொரோனா

கம்பஹா மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்துக்குள் ஆயிரத்து 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் 501 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 110 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட ரீதியில் கடந்த 24 மணிநேரத்துக்குள் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை வருமாறு,

’20 கிலோ பறித்தால்தான் ஆயிரம் ரூபா – வேலை நாட்களும் குறைப்பு’

” 20 கிலோ கொழுந்து பறிக்குமாறு தோட்ட நிர்வாகம் வற்புறுத்துகின்றது. அதுமட்டுமல்ல வேலை நாட்களும் திட்டமிட்ட அடிப்படையில் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் எமது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.” – என்று பொகவந்தலாவ தோட்டத் தொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

” சுமார் ஐந்தாண்டுகள்வரை போராடியே நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா நிர்ணயிக்கப்பட்டது. தற்போது வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளதாலும், தொழில் சுமை அதிகரிக்கப்பட்டுள்ளதாலும் சம்பளம் அதிகரிக்கப்பட்டும் பயன் இல்லை. 1000 ரூபா வேண்டுமெனில் 20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்படுகின்றது.

கடந்த முதலாம் திகதி வேலை வழங்கப்பட்ட நிலையில், எதிர்வரும் 7 ஆம் திகதியே மீண்டும் வேலை வழங்கப்படும் என தோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.” – எனவும் பொகவந்தலாவ பகுதியில் உள்ள தொழிலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன், ஏப்ரல் , மே மாதங்களில் 7 தொடக்கம் 12 நாட்கள் மாத்திரமே இந்த மக்களுக்கான சம்பளம் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், இவர்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

’50 லட்சம் பைசர் தடுப்பூசிகள் இலங்கைக்கு’ – அமெரிக்க நிறுவனம் உறுதி!

இலங்கைக்கு இவ்வருடத்துக்குள் 5 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் வழங்கப்படும் என அமெரிக்க நிறுவனம் உறுதியளித்துள்ளது. இதன்முதற்கட்டமாக 3 லட்சம் தடுப்பூசிகள் அடுத்த மாதம் நாட்டுக்கு வரவுள்ளன – என்று ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் நேற்று (02) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இலங்கைக்கு வரவுள்ள தடுப்பூசிகள் தொடர்பான விபரத்தையும் இதன்போது அவர் வெளியிட்டார். அவர் கூறியவை வருமாறு,

” சீனாவிடமிருந்து ஜுன் 06 ஆம் திகதி 10 லட்சம் தடுப்பூசிகளும், அதன்பின்னர் ஜுன் 09 ஆம் திகதி மேலும் 10 லட்சம் தடுப்பூசிகளும் கிடைக்கப்பெறவுள்ளன.

14 மில்லியன் ஸ்புட்னிக் – பை தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு ரஷ்ய நிறுவனத்துடனும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக எவ்வளவு தொகை கிடைக்கும் என்பது ஒரிரு நாட்களுக்குள் அறிவிக்கப்படும்.

அமெரிக்காவின் பைசர் நிறுவனத்துடனும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளோம். இதன்படி இவ்வருடத்துக்குள் இலங்கைக்கு 5 மில்லியன் தடுப்பூசிகள் வழங்கப்படும் என அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக ஜுலை மாதத்தில் 3 அல்லது 4 லட்சம் தடுப்பூசிகள் வரவுள்ளன.

அத்துடன், சினோ வெக் மற்றும் ஜொன்ஸ்டன் என்ட் ஜொன்ஸ்டன் தடுப்பூசிகளை பெறுவதற்கான பேச்சுகளும் இடம்பெற்றுவருகின்றன.” – என்றார்.

‘மஸ்கெலியா, ஹட்டன், பொகவந்தலாவையில் கொரோனா மரணங்கள்’

நாட்டில் மேலும் 39 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. 20 ஆண்களும், 19 பெண்களுக்மே மே 17 முதல் ஜுன் முதலாம் திகதிவரையான காலப்பகுதியில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 566 ஆக அதிகரித்துள்ளது.

உபுல் ரோஹண ராஜிதவின் கையாளா?

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே தான் செயற்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை பொது சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண நிராகரித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தில் உள்ளவர்களே இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.எமது சங்கம் சுயாதீன சங்கமாகும். அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்பட்டது கிடையாது. அதேபோல நானும் அரசியல்வாதிகளின் கையாள் கிடையாது. அரசியல்வாதிகளிடம் சோரம்போனதும் இல்லை. எமது சங்க உறுப்பினர்களுக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்துவருகின்றேன். இந்நிலையில் எனது குரல் வளையை நசுக்குவதற்காகவே இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

ராஜின சேனாரத்ன சுகாதார அமைச்சராக இருந்தவர். சுகாதாரத்துறை என்பதால் அவருடன் இணைந்து செயற்பட்டோம். தற்போதைய சுகாதார அமைச்சருடனும் இணைந்து பணியாற்றிவருகின்றோம்.” – என்றார்.

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

செம்மணியில் மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

0
  யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி, மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 25வது நாள் அகழ்வுப் பணி இன்று...

சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தனக்கு தொடர்பு இல்லையெனில், சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு...

வத்தளை ஹேக்கித்தை சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்: விரிவான ஏற்பாடுகள் தயார்!

0
  வரலாற்றுச் சிறப்புமிக்க வத்தளை, ஹேக்கித்தை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் மூன்றாவது மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் ஜூன் மாதம் 25ஆம்திகதி மிக விமரிசையாக நடைபெறவுள்ள நிலையில், அது தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு...