Home Blog Page 3508

‘நுவரெலியாவில் 71 கொரோனா மரணங்கள் – 3,532 குடும்பங்கள் சுயதனிமையில்’

நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக நேற்று (03.06.2021) மாலை வெளியான அறிக்கையின்படி 4 ஆயிரத்து 602 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இவர்களில் 71 பேர் மரணமடைந்துள்ளனர். 3532 குடும்பங்கள் தன்மைப்படுத்தப்பட்டுள்ளன.

அம்பேகமுவ பகுதியில் 863 குடும்பங்களும் கொத்மலை பகுதியில் 750 குடும்பங்களும் ஹங்குரன்கெத்த பகுதியில் 286 குடும்பங்களும் வலப்பனை பகுதியில் 822 குடும்பங்களும் நுவரெலியாவில் 811 குடும்பங்களுமாக மொத்தமாக 3532 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொரேனா தொற்று உறுதியானவர்களில் அதிகமானவர்கள் அம்பேகமுவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் அம்பேகமுவ பகுதியில் 853 பேரும் பொகவந்தலாவ பகுதியில் 586 பேரும் ஹங்குரன்கெத்த பகுதியில் 372 பேரும்கொட்டகலை பகுதயில் 247 பேரும் கொத்மலையில் 366 பேரும் லிந்துலையில் 319 பேரும் மஸ்கெலியா 1740 பேரும்மதுரட்ட பகுதயில் 1200 பேரும் நுவரெலியா மாநகர சபை எல்லைக்குட்பட்டவர்களில் 335 பேரும் புதிய திஸ்பனை பகுதயில் 325 பேரும் நுவரெலியாவில் 347 பேரும் இராகலையில் 277 பேரும் வலப்பனை பகுதியில் 281 பேருமாக மொத்தமாக 4602 பேர் பி.சி.ஆர் பரிசோதனையின் மூலமாக தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர்.

தொற்றாளர்கள் அதிகம் இனம் காணப்பட்ட பிரதேசமாக மஸ்கெலியா பிரிதேசம் காணப்படுகின்றது.இங்கு 1740 பேர் இனம் காணப்பட்டுள்ளதுடன்.கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்த பகுதியில் அநேகமான பெருந்தோட்ட பகுதிகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் நுவரெலியா மாவட்டத்தில் 71 பேர் உயிரிழந்துள்ளதுடன்.அதில் அதிகமானவர்கள் நுவரெலியா பகுதியிலேயே உயிரிழந்துள்ளனர்.இங்கு 29 பேர் உயிரிழந்துள்ளனர்.இது தவிர அம்பேகமுவ பகுதியில் 25 பேரும் வலப்பனை பகுதயில் 11 பேரும் கொத்மலையில் 4 பேரும் ஹங்குரன் கெத்த பகுதயில் 2 பேருமாக 71 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீரற்ற காலநிலையால் மூவர் பலி! ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!!

நாட்டில் தற்போது நிலவும் அடை மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் மூவர் பலியாகியுள்ளனர். ஒருவர் காணாமல்போயுள்ளார். இருவர் காயமடைந்துள்ளனர்.

அத்துடன், சீரற்ற காலநிலையால் 31 ஆயிரத்து 990 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 280 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 வீடுகள் முழுமையாகவும் 468 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

ஆயிரத்து 145 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 182 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் 33 பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான உயிரியல் பூங்காவாக வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு மான், குரங்கு, சிங்கம், புலி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா 2ஆம் அலை காரணமாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கால வரையறையின்றி மூடப்பட்டது. இதற்கிடையில், பூங்கா ஊழியர்கள் மட்டுமே உள்ளே சென்றுவர அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 11 சிங்கங்களில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் நீலா என்ற 9 வயது பெண் சிங்கம் உயிரிழந்துள்ளது. இதனால் மற்ற சிங்கங்களை தனிமைப்படுத்தும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளி கிரகத்துக்கு 2 விண்கலங்களை அனுப்புகிறது நாசா

வீனஸ் என்று அழைக்கப்படுகிற வெள்ளி கிரகத்துக்கு 2 விண்கலங்களை அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பு நாசா அனுப்புவதாக அறிவித்துள்ளது.

இந்த திட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் 500 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாசாவின் நிர்வாகி பில் நெல்சன் கூறியதாவது:-

30 ஆண்டுகளாக ஆய்வு செய்யப்படாத வெள்ளி கிரகத்தை ஆராய்வதற்கான ஒரு வாய்ப்பாக இந்த திட்டங்கள் அமைந்துள்ளன.

இவ்விரு திட்டங்களும் வெள்ளி எவ்வாறு நரகத்தைப்போன்றதொரு உலகம் ஆனது, மேற்பரப்பில் ஈயம் உருகும் திறன் வந்தது எப்படி என்பதை ஆராய்வதுடன், இந்த கிரகத்தின் காற்று மண்டலம், பூகோளம் சார்ந்த அம்சங்களும் ஆராயப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வெள்ளி கிரகம் கடைசியாக 1990-ம் ஆண்டு மெகல்லன் ஆர்பிட்டர் மூலம் ஆராயப்பட்டது.

வெள்ளி கிரகம், சூரியனுக்கு அடுத்தபடியாக அதிக வெப்பமான கிரகம் ஆகும். இதன் மேற்பரப்பு வெப்ப நிலை, 500 டிகிரி செல்சியஸ் ஆகும்.

நாசாவின் வெள்ளி கிரக ஆய்வுப்பயணங்கள் 2028-2030 இடையே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மேலும் 2,735 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 735 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 579 ஆக அதிகரித்துள்ளது.32 ஆயிரத்து 690 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

அத்துடன் வைரஸ் தொற்றிலிருந்து ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 281 பேர் குணமடைந்துள்ளனர்.

‘மடுல்சீமை சம்பவம் – தோட்ட உதவி முகாமையாளர் இடமாற்றம்’

மடுல்சீமையில் தோட்டக்கள உத்தியோகத்தரை தாக்கிய தோட்ட உதவி முகாமையாளரை இடமாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப்போராட்டம் கைவிடப்படவுள்ளது. நாளை முதல் தொழிலாளர்கள் தொழிலுக்கு திரும்பவுள்ளனர்.

தோட்டகள உத்தியோகத்தரை, தோட்ட உதவி முகாமையாளர் தாக்கியதை கண்டித்து தோட்ட தொழிலாளர்களும், தோட்ட சேவையாளர்களும் பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.  மடுல்சீமை பகுதியின் அமுனுதோவ பெருந்தோட்ட பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றது.

இப் பணிபகிஸ்கரிப்பில் 500 தொழிலாளர்களும் 75 தோட்ட சேவையாளர்களும் ஈடுப்பட்டு இருந்தனர்.

தோட்ட உதவி நிருவாகினால் தாக்கப்பட்ட தோட்ட களஉத்தியோகத்தரான செல்வகுமார் கலைராஜ் என்ற ,இளைஞன் மெடிக்காதென்ன அரசினர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

தோட்டத்தின் உண்மை நிலையினை தோட்ட முகாமையாளருக்கு தோட்ட கள உத்தியோகத்தர் தௌிவு படுத்தி உள்ளார். இதனை ஜீரனிக்க முடியாத தோட்ட உதவி நிருவாகி தோட்ட கள உத்தியோகத்தரை பலமாக பல முறை தாக்கியுள்ளார். கடமைநேரத்தில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து தோட்ட முகாமையாளர்,  தோட்டத்திற்க்கு பொறுப்பான மடுல்சீமை பிளான்டேசன் நிறைவேற்று பணிப்பாளர் ஆகியோர் மேற்கொண்ட விசாரணையை அடுத்து தோட்ட உதவி நிருவாகியை 20 நாட்களுக்கு இடமாற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து பணிபகிஸ்கரிப்பு நாளை முதல் கைவிடப்பட்டு கடமைகள் வழமைபோல் ஆரம்பிக்கப்படும் என்று பணிபகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

எம். செல்வராஜா, பதுளை

‘சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்’ – பிரதமர் பணிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உடனடி நிவாரணம் வழங்குமாறு  பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (04) முற்பகல் அலரி மாளிகையில் வைத்து அறிவுறுத்தினார்.

அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச அது தொடர்பில் அறிவித்த   பிரதமர், பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையை அந்தந்த மாவட்ட செயலாளர்களின் ஊடாக உடனடியாக செயற்படுத்துமாறு தெரிவித்தார்.

அதற்கு தேவையான நிதியை ஒதுக்குமாறு  பிரதமர் இதன்போது நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல அவர்களுக்கு அறிவுறுத்தினார்.

நாட்டின் பல பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தாழ்வான பிரதேசங்கள் மழை நீரில் மூழ்கல், வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயங்கள் அவற்றில் பிரதானமாகும்.

மேல் மாகாணம், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை மேலும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு மக்களுக்கு தெரியப்படுத்துமாறு   பிரதமர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்தார்.

குறித்த சந்திப்பில் கௌரவ அமைச்சர்களான தினேஷ் குணவர்தன மற்றும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

‘உணவுப்பொருட்களின்றி நுவரெலியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்கள் தவிப்பு’

கொரோனா தொற்று பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்குவதில் தாமதம் காணப்படுவதாகவும் இதனால் தனிமைப்படுத்தப்பட்ட பல குடும்பங்கள், உணவின்றி பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக மக்கள் தரப்பில் இருந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பல பிரதேசங்களில் பல குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.  குறிப்பாக ஹட்டன் பொகவந்தலா, புளியாவத்தை, நோர்வூட், வெஞ்சர் வெலிஓயா உள்ளிட்ட பல பகுதிகளில் பல குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

எனினும் குறித்த குடும்பங்களுக்கு தேவையான உலர் உணவுகள் வழங்கும் பொறுப்பினை அப்பிரதேசத்தில் உள்ள கிராம சேவகர்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளன.

குறித்த கிராம சேவகர்கள் உரிய நேரத்தில் குறித்த குடும்பங்களுக்கு உணவு பொருட்களை பெற்றுக்கொடுக்காததன் காரணமாக இந்த குடும்பங்கள் பல துன்பங்களுக்கு முகம் கொடுத்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மலையகத்தினை பொறுத்த வரையில் பெரும்பாலான குடும்பங்கள் ஒரு வாரத்திற்கு தேவையான உணவுகளையே கையிருப்பில் வைத்திருப்பர். இன்னும் சில குடும்பங்கள் அன்றாடம் தங்களுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்கிக் கொள்வர். இந்நிலையில் திடீரென தனிமைப்படுத்தப்படுவதனால் அதிகமானவர்களுக்கு தங்களுக்கு தேவையான உணவு வகைகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலையும் ஏற்படுகின்றன.

இதனை நிவர்த்தி செய்வதற்காகவே அரசாங்கம் இரண்டு கிழமைக்கு தேவையான உணவு பொருட்கள் பெற்றுக்கொடுக்கப்படுகின்ற போதிலும் இதனை உரிய முறையில் உரிய நேரத்தில் முன்னெடுக்கப்படாததன் காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

சில கிராம சேவகர்கள் 14 நாட்கள் முடிந்த பின்பே இவர்களுக்கு குறித்த உணவு பொருட்கள் வழங்குவதாகவும் இன்னும் சிலர் முடிந்த பின் கூட வழங்காது இருப்பதாகவும் இது குறித்து எந்த ஒரு அரசியல் மற்றும் அதிகாரிகள் தேடிப்பார்ப்பதில்லை என்றும் இவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

தனது வாசலில் 14 நாட்களுக்கு எவரும் தொடர்பினை பேணக்கூடாது என்று ஒட்டிவிட்டு செல்வதனால் அவசரத்திற்கு ஒரு பொருட்கள் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் ஒரு சில அயலவர்களின் உதவிகள் காரணமாக ஒவ்வொரும் நாளும் சமாளித்துக்கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பலர் தெரிவிக்கின்றனர்

இது குறித்து இரானுவ தளபதி சவேந்திர சில்வா அவர்களுக்கும் ஜனாதிபதி அவர்களுக்கும் மின் அஞசல் மூலம் தங்கள் படும் துயரங்களை தெரிவித்துள்ளதாகவும் பலர் தெரிவிக்கின்றனர்.

எது எவ்வாறான போதிலும் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்படுவர்களின் நலன் குறித்து இதை அக்கறை செலுத்தி அவர்களுக்கு தேவையான வற்றை பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் கடமை என்றும் அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்கப்படுகின்ற உலர் உணவு பொருட்கள் உரிய நேரத்தில் உரியவர்களை சென்றடைகின்றனவா அல்லது அவை முறையாக பகிறப்படுகின்றனவா என்பது தொடர்பாக ஆராய்ந்து பார்க்க வேண்டியது பொறுப்பு வாய்ந்தவர்களின் கடமை என்றும்  சுட்டிக்காட்டுகின்றனர்.

கே. சுந்தரலிங்கம்.

‘கொரோனா’வின் கோட்டையாக மேல் மாகாணம் – மேலும் 1,687 பேருக்கு வைரஸ் தொற்று!

மேல் மாகாணத்தில் கடந்த 24 மணிநேரத்துக்குள் மேலும் ஆயிரத்து 687 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 630 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 648 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 409 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், மத்திய மாகாணத்தில் மேலும் 190 பேருக்கு கொவிட் 19 தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட ரீதியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை வருமாறு,

கட்டுக்கடங்காத கொரோனா – பதுளையில் மேலும் 187 பேருக்கு வைரஸ் தொற்று!

பதுளை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துவருகின்றது. கடந்த 24 மணிநேரத்துக்குள் மேலும் 187 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மஹியங்கன சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 89 பேருக்கும், எல்ல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 20 பேருக்கும், பண்டாரவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேருக்கும், ஹப்புத்தளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17 பேருக்கும் நேற்று வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தில் ஏனைய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 10 இற்கும் குறைவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

பாதுகாப்பு பிரதி அமைச்சர், சீன தூதரக பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு!

0
இலங்கைக்கான சீன தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் Fu Xiao, பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை நேற்று கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார். இதன்போது, பாதுகாப்பு...

பிபா விதியை மீறி கொடிகள்: ஈரான் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது மைதானத்தில் எதிர்ப்புக் குரல்!

0
லாஸ் ஏஞ்சல்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஈரான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான போரை முடிவுக்கு...