Home Blog Page 3507

‘ நாட்டுக்கு தலையிடியாக மாறிய புத்தாண்டு கொத்தணி’ – ஒரு லட்சத்து 1,932 பேருக்கு கொரோனா!

புத்தாண்டு கொத்தணியால் ஒரு லட்சத்து ஆயிரத்து 932 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

2021 ஏப்ரல் 15 முதல் ஜுன் 5 ஆம் திகதி காலை 6 மணிவரையான காலப்பகுதியிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 254 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 281 பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

மண்ணுக்குள் புதையுண்ட நால்வரும் சடலமாக மீட்பு – மாவனல்லையில் சோகம்

மாவனல்லை, தெவனகல பகுதியில் மண்ணுக்குள் புதையுண்டு காணாமல்போயிருந்த மேலும் மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

தந்தை, தாய் மற்றும் மகனின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

இப்பகுதியிலுள்ள வீடொன்றின்மீது இன்று மண்மேடு சரிந்து விழுந்ததில் வீட்டுக்குள் இருந்த நால்வர் மண்ணுக்குள் புதையுண்டனர். இதனையடுத்து இராணுவத்தின் உதவியுடன் மீட்பு பணி முன்னெடுக்கப்பட்டது.

யுவதியொருவரின் சடலம் காலையில் மீட்கப்பட்ட நிலையிலேயே தற்போது ஏனையோரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

நுவரெலியாவில் மேலும் 237 பேருக்கு கொரோனா – இதுவரை 4,588 பேர் பாதிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 237 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும், தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் வருமாறு,

பொகவந்தலாவ – 15

திம்புள்ள – பத்தன – 25

ஹங்குராங்கெத்த – 01

ஹட்டன் – 14

கந்தபளை – 01

கொத்மலை – 02

லிந்துலை – 16

மஸ்கெலியா – 25

மத்துரட்ட – 17

நுவரெலியா – 17

பூண்டுலோயா – 32

ராகலை – 33

தலவாக்கலை 19

உடபுஸல்லாவை – 5

வலப்பனை – 15

அதேவேளை, 2020 ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை நுவரெலியா மாவட்டத்தில் 4 ஆயிரத்து 588 ஆக அதிகரித்துள்ளது.

சீரற்ற காலநிலையால் 5000 ரூபா கொடுப்பனவு ‘ஆமை வேகத்தில்’ முன்னெடுப்பு

நாட்டில் தற்போது நிலவும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையல் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை தாமதமடையக்கூடும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மழையுடனான வானிலையால், 5 மாவட்டங்களில் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகள் தாமதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கொடுப்பனவை வழங்கும் உத்தியோகத்தர்களின் சுகாதார பாதுகாப்பை கருத்திற் கொண்டு திட்டம் செயற்படுத்தப்படுவதாலேயே சிறு தாமதம் ஏற்பட்டுள்ளது எனவும், எனவே, 5000 ரூபாவை பெறுவதற்கு தகுதியுடையவர்களுக்கு நிச்சம் அக்கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

ஆகவே, இது விடயத்தில் எவரும் வீண் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேல் கொத்மலை, லக்‌ஷபான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு!

மத்திய மலைநாட்டில் பெய்துவரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் மேல் கொத்மலை  நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு இன்று திறக்கப்பட்டுள்ளது.

அத்துடன் லக் ஷபான நீர்த்தேக்கத்தின் வாக் கதவொன்றும் திறக்கப்பட்டுள்ளது.

 

வட்டவளையில் விபத்து – உப பொலிஸ் அதிகாரி பலி! மேலும் அறுவருக்கு காயம்!!

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவரின் சடலத்தை ஹட்டனிலிருந்து ஓட்டமாவடிக்கு கொண்டுச்சென்ற வாகனத்துக்கு பாதுகாப்பை வழங்கிய வேன் விபத்துக்குள்ளானதில் உப பொலிஸ் அதிகாரியொருவர் பலியாகியுள்ளார். அத்துடன் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

57 வயதான எஸ்.பெனடிக் என்ற பொலிஸ் அதிகாரியே பலியாகியுள்ளார்.  காயமடைந்தவர்கள் வட்டவளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேனில் பயணித்த மூன்று பொலிஸ் அதிகாரிகளும், சாரதியும், உயிரிழந்தவரின் இரு உறவினர்களுமே காயமடைந்துள்ளனர்.

ஹட்டன் – கினிகத்தேன வீதியில் –  வட்டவளை கரோலினா தோட்ட பகுதியில்  வைத்தே இன்று காலை 7 30 மணியளவில் வீதியை விட்டு சுமார் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து வேன் விபத்துக்குள்ளாகியுள்ளது.

‘இலங்கையில் 1.9 மில்லியன் பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது’

இலங்கையில் 2021 ஜனவரி 29 ஆம் திகதி முதல் ஜுன் 04 ஆம் திகதிவரை 19 லட்சத்து 20 ஆயிரத்து 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இன்றைய தினமும் தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுக்கப்படுகின்றது.

இலங்கையில் தற்போது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் ஆஸ்ட்ரா செனகா நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொவிஷீல்ட் (Covishield) , சீனாவின் தயாரிப்பான சினோ பாம் (Sinopharm), ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் – பை (Sputnik – V) ஆகிய தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுவருகின்றன.

இதன்படி கொவிஷீல்ட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 9 லட்சத்து 25 ஆயிரத்து 242 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளது. இவ்வாறு முதலாவது டோஸை பெற்றுக்கொண்டவர்களில் 3 லட்சத்து 51 ஆயிரத்து 459 பேருக்கு இரண்டாம் டோஸ் ஏற்றப்பட்டுள்ளது.

2021 மார்ச் 26 ஆம் திகதி முதல் ஜுன் 04 ஆம்  திகதிவரை இலங்கையில் உள்ள 2 ஆயிரத்து 435 சீனப்பிரஜைகள் உட்பட 9 லட்சத்து 30 ஆயிரத்து 573 பேருக்கு சினோ பாம் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

ஸ்புட்னிக் – பை தடுப்பூசி ஏற்றும் பணி ஏப்ரல் 30 ஆம் திகதி ஆரம்பமானது. ஜுன் 04 ஆம் திகதிவரை 64 ஆயிரத்து 986 பேருக்கு அந்த தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ளது.

‘கொரோனா சட்டத்தை மறந்த 22,950 பேர் கைது’

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 975 பேர் கடந்த 24 மணி நேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதன்படி தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய குற்றச்சாட்டில் கைதானவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 950 ஆக அதிகரித்துள்ளது.

சீரற்ற காலநிலையால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு – இன்றும் கடும் மழை!

நாட்டில் பல பாகங்களில் இன்றைய தினமும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதன்படி மேல், சப்ரகமுவ , மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இடையிடையே மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

மேல், சப்ரகமுவ, மத்திய ஆகிய மாகாணங்களில் ஒரு சில இடங்களில் 100 மி.மீ. அதிக மழைவீழ்ச்சி எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் நாட்டில் 6 மாவட்டங்களில் 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 470 இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

அதேவேளை, கொழும்பு , காலி, களுத்துறை, மாத்தறை, மாத்தளை, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் மேலும் 48 பேர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 1,656 ஆக உயர்வு!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.

மே 11 முதல் ஜுன் 3 ஆம் திகதிவரையான காலப்பகுதியிலேயே குறித்த மரணங்கள் பதிவாகியுள்ளன.

25 ஆண்களும், 23 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கொரோனாவால் நாட்டில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 656 ஆக அதிகரித்துள்ளது.

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

50 ஆண்டு கால இரும்புப் பாலம் துருப்பிடித்து சேதம்: உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்!

0
#பெயாவெல் தோட்டம் 50 ஆண்டு கால இரும்புப் பாலம் துருப்பிடித்து சேதம்: உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்! மக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதி இன்றியமையாததாகும். ஆனால் மலையகப் பகுதிகளில் வாழும் மக்கள்...

பாதுகாப்பு பிரதி அமைச்சர், சீன தூதரக பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு!

0
இலங்கைக்கான சீன தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் Fu Xiao, பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை நேற்று கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார். இதன்போது, பாதுகாப்பு...