Home Blog Page 3506

பயணக்கட்டுப்பாடு ஜுன் 21வரை நீடிக்கும் சாத்தியம்!

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதிவரை நீடிக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தி, மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே பயணத்தடையை நீடிப்பது குறித்து தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அரச உயர்மட்ட வட்டாரங்களை மேற்கோள்காட்டி இது விடயம் தொடர்பில் தமிழ் வார இதழொன்றும் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பயணத்தடை அமுலில் உள்ள காலப்பகுதியிலும் வைரஸ் தொற்று வீதம் குறையவில்லை. எனவே, பயணத்தடை 21 ஆம் திகதிவரை நீடிக்குமாறு அரச உயர்பீடத்திடம் சில சுகாதார தரப்புகள் கோரிக்கை முன்வைத்துள்ளன.

எனினும், இது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

அதேவேளை, நாட்டில் நாளை முதல் பயணத்தடை விதிமுறைகள் கடுமையாக அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

‘தங்கப்பதக்கம் வென்ற எலி சேவையிலிருந்து ஓய்வு’

கண்ணிவெடிகளை கண்டுபிடிக்கும் திறன்கொண்ட ஆப்பிரிக்க எலி மகவாவிற்கு கடந்த வருடம் தங்கப்பதக்கம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

கம்போடியாவில் வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்க 7 வயதான ஆப்பிரிக்க எலி பயிற்சி பெற்று இருந்தது. இதன் மூலம் 2 லட்சத்து 25 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் வெடிகுண்டுகளை நுகர்ந்து கண்டுபிடிக்கும் திறன்கொண்டது.

தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் பயிற்சி அளிக்கப்பட்ட இந்த எலியானது, கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதைப்போல, உருவத்தில் சிறியதாக இருந்தாலும், இதுவரை 71 கண்ணி வெடிகளைக் கண்டு பிடித்து பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. இதனால், மகவாவிற்கு கடந்த வருடம் தங்கப்பதக்கம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஏராளமான கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்து பலரின் உயிரைக் காப்பாற்றி, கம்போடியாவின் நாயகனாக வலம் வந்த ஆப்பிரிக்க ராட்சத எலி “மகவா” தன் பணியிலிருந்து ஓய்வுபெற்றது.

சீனாவிடமிருந்து அடுத்தவாரம் மேலும் 10 லட்சம் தடுப்பூசிகள்!

சீனாவிடமிருந்து மேலும் 10 இலட்சம் சினோபாம் தடுப்பூசிகள் இன்று காலை இலங்கை வந்தடைந்தன.

இலங்கைக்கு ஒரே தடவையில் அதிகளவு தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இலங்கைக்கு ஏற்கனவே சுமார் 11 லட்சம் சினோ பாம் தடுப்பூசிகளை சீனா அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

இதனையடுத்து மேலும் 2 மில்லியன் தடுப்பூசிகளை விலைக்கு கொள்வனவு செய்வதற்கு இலங்கை நடவடிக்கை எடுத்தது. இதன் முதற்கட்டமாகவே 10 லட்சம் தடுப்பூசிகள் இன்று வந்தடைந்தன.

அடுத்த 10 லட்சம் தடுப்பூசிகள் அடுத்தவாரமளவில் கிடைக்கப்பெறும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

08 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலும் தலைதூக்கும் அபாயம்!

நாட்டில் தற்போது நிலவும் அதிக மழையுடனான காலநிலையால் 08 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பு, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலேயே டெங்கு காய்ச்சல் பரவும் அபாயமுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்த போதிலும் கடந்த மே மாதத்தில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்டுள்ள வௌ்ளத்தினால் நீர் தேங்குவதன் காரணமாக எதிர்வரும் ஒரு மாதத்தில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயமுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை, ஜனவரி மாதம் முதல் இதுவரை நாட்டில் 7 ஆயிரத்து 873 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

14 பேர் பலி – இருவர் மாயம் – 817 வீடுகள் சேதம் – 15,658 பேர் இடம்பெயர்வு!

அடை மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் நாட்டில் இதுவரை 14 பேர் பலியாகியுள்ளனர். இருவர் காயமடைந்துள்ளனர். இருவர் காணாமல்போயுள்ளார் – என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் 10 மாவட்டங்களில் 60 ஆயிரத்து 674 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 45 ஆயிரத்து  212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், 817 வீடுகள் பகுதியளவும், 14 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன என்றும் மேற்படி மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 ஆயிரத்து 520 குடும்பங்களைச் சேர்ந்த  15 ஆயிரத்து 658 பேர் 72 பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, புத்தளம், களுத்துறை, நுவரெலியா, கேகாலை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் வாழ்பவர்களே  சீரற்ற காலநிலையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேகாலை மாவட்டத்தில் 5 மரணங்களும், இரத்தினபுரி மாவட்டத்தில் 3 மரணங்களும், கம்பஹா மாவட்டத்தில் இரு மரணங்களும், புத்தளம், புத்தளம், களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு மரணம் வீதம் பதிவாகியுள்ளன.

பயணத் தடை முடியும் வரை விசேட நடைமுறை : நாளை முதல் விசேட ஸ்டிக்கர்

அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு நாளை விசேட ஸ்டிக்கர் ஒன்று வழங்கப்படவுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர், பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பயணத் தடை நீக்கப்படும் வரை இந்த ஸ்டிக்கரைப் பயன்படுத்த முடியும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தியுள்ள பொலிஸ் பேச்சாளர் :

”பயணத் தடை நீடிக்கிறது. அதனால் மக்கள் தொடர்ந்தும் வீடுகளில் தங்கியிருக்க வேண்டும். அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்த வாகனங்களுக்கு கடந்த வாரம், தினந்தோறும் விசேட ஸ்டிக்கர் ஒன்று வழங்கப்பட்டது.

நாளை புதிய ஸ்டிக்கர் ஒன்று அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஸ்டிக்கர், பயணத் தடைகள் தளர்த்தப்படும் வரை பயன்படுத்த முடியும். இந்த ஸ்டிக்கர் ஒட்டப்படும் போது குறித்த இடத்தில் தாமதம் ஏற்படக்கூடும். இந்த தாமதம் நாளை மட்டுமே இருக்கும். எனினும், இனிவரும் நாட்களில் அந்த சிரமம் இருக்கிறாது. எனினும், அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் வாகனங்களில் பயணிப்போர், நாளை சரியான தகவல்களை சோதனைச் சாவடிகளில் வழங்க வேண்டும். தேசிய அடையாள அட்டை, அலுவலக அடையாள அட்டை, நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ள கடிதம் ஆகியவற்றை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவற்றை வழங்கி, விசேட ஸ்டிக்கரைப் பெற்றுக்கொண்ட பின்னர், இனிவரும் நாட்களில் இடையூறு இன்றி, பணிகளுக்காக பயணிக்க முடியும்.

புதையுண்டு மாண்ட அன்புக்குரியவருக்காக இறுதிவரை அங்கு காத்திருந்த ஜீவன்!

மண்சரிவில் புதையுண்டுள்ள தனது அன்புக்குரியவர்களை மீட்பதற்காக இந்த ஜீவன், மீட்புப் பணியாளர்கள் உடல்களை தோண்டியெடுக்கும் வரை அங்கேயே நின்றுள்ளது.

வீட்டில் செல்லமாக இருந்த இந்த ஜீவன் மட்டும் மண்சரிவில் இருந்து உயிர் தப்பியுள்ளது.

மாவெனல்ல, தெவனகல மண்சரிவினால் புதையுண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருடன் வீட்டில் இருந்த ஜீவன் இது. மண்ணில் புதையுண்ட வீட்டாரை மீட்க வந்தவர்களுடன் தொடர்ச்சியாக அங்கே இருந்தது.

சம்பவ இடத்தில் இருந்து கிடைக்கும் தகவல்களின்படி, இந்த ஜீவன் தொடர்ச்சியாக தோண்டிய இடத்தில் தான் மாண்டவர்களின் உடல்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
நன்றியுள்ள ஜீவன்!!!

படம் : ©anushka perera

‘பற்றி எரிந்த கப்பலின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு’ – விசாரணைகள் தீவிரம்

கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும் X-Press Pearl கப்பலின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடற்படையினர் முன்னெடுத்த விசேட தேடுதலின் போது கண்டுபிடிக்கப்பட்ட கருப்புப் பெட்டி, மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்திடமுள்ள கருப்பு பெட்டி, நீதிமன்றத்தின் அனுமதியுடன் இரண்டு நாட்களில் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கப்பலிலுள்ள எரிபொருள் தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை, கப்பல் மீட்பு நிறுவனத்தின் கெப்டனுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பலினால் கடல், சுற்றுச்சூழல், கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகைள முன்னெடுக்குமாறு அறிவித்துள்ளதாகவும் கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

நுவரெலியா, மஸ்கெலியா வாசிகள் உட்பட மேலும் 40 பேர் பலி!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று ஒரு மரணமும், மே 11 முதல் ஜுன் 3 ஆம் 39 மரணங்கள் பதிவாகியுள்ளன.

23 ஆண்களும், 17 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கொரோனாவால் நாட்டில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 696 ஆக அதிகரித்துள்ளது.

இயற்கை சீற்றத்தால் 10 பேர் பலி! 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!!

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் 10 பேர் உயிரிழந்துள்ளனர் – என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள நாளாந்த நிலைவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா, இரத்தினபுரி உட்பட 8 மாவட்டங்களில் 54,126 குடும்பங்களைச் சேர்ந்த 219,027 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

15,499 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 724 வீடுகள் பகுதியளவும், 11 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.

10 உயிரிழப்பு சம்பவங்களில் 8 சம்பவங்கள் சப்ரகமுவ மாகாணத்தில் பதிவாகியுள்ளன. (கேகாலை – 05, இரத்தினபுரி – 03)

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

முடிவுக்கு வந்தது போர்: 19 ஆம் திகதி ஒப்பந்தம் கைச்சாத்து! ஈரான் அறிவிப்பு

0
அமெரிக்காவுடனான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி இன்று (16) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வரும் வெள்ளிக்கிழமை முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு...

தன்னை கைது செய்ய தடை உத்தரவுகோரி கோட்டாபய மனு!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு அமைய, பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தான் கைது செய்யப்படுவதற்கு தடை விதிக்ககோரி , முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சட்டத்தரணி சனத் விஜேவர்தன...

50 ஆண்டு கால இரும்புப் பாலம் துருப்பிடித்து சேதம்: உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்!

0
#பெயாவெல் தோட்டம் 50 ஆண்டு கால இரும்புப் பாலம் துருப்பிடித்து சேதம்: உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்! மக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதி இன்றியமையாததாகும். ஆனால் மலையகப் பகுதிகளில் வாழும் மக்கள்...