Home Blog Page 3505

தனியார் வங்கிகளுக்கு பூட்டு – மீள திறக்கப்படும் திகதியும் அறிவிப்பு

இலங்கையிலுள்ள தனியார் வங்கிகள் இன்று முதல் சில நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிவித்தலை குறித்த வங்கிகள் விடுத்துள்ளன. அத்துடன், ஒன்லைன் ஊடாக வங்கி சேவையை முன்னெடுக்கலாம் எனவும் அறிவித்துள்ளன.

பயணக்கட்டுப்பாடு, கொரோனா வைரஸ் பரவலுடனான தற்போதைய சூழ்நிலையைக்கருத்திற்கொண்டே தனியார் வங்கிகள் இவ்வாறு மூடப்பட்டுள்ளன.

இதன்படி ஜுன் 7 முதல் ஜுன் 17 வரை தமது வங்கி மூடப்பட்டிருக்கும் என அமானா வங்கி அறிவித்துள்ளது.

ஜுன் 13 வரை யூனியன் வங்கியும், ஜுன் 12வரை நேஷன் ட்ரஸ்ட் வங்கியும், ஜுன் 8வரை ஹட்டன் நஷனல் வங்கியும், ஜுன் 11 வரை என்.டி.பி. வங்கியும், ஜுன் 13 வரை கொமர்ஷல் வங்கியும், ஜுன் 11 வரை சம்பத் வங்கியும் மூடப்பட்டிருக்கும். அத்துடன், ஒன்லைன் ஊடாக சேவையை முன்னெடுக்குமாறு செலான் வங்கியும் கோரிக்கை விடுத்துள்ளது.

வெள்ளம், மண்சரிவால் 995 வீடுகளுக்கு சேதம் – 2 லட்சத்து 71 ஆயிரம் பேர் பாதிப்பு

அடை மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. ஐவர்  காயமடைந்துள்ளனர். இருவர் காணாமல்போயுள்ளார் – என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை விடுத்துள்ள நாளாந்த நிலைவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 10 மாவட்டங்களில் 67 ஆயிரத்து 613 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 71 ஆயிரத்து 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், 978 வீடுகள் பகுதியளவும், 17 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன என்றும் மேற்படி மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 ஆயிரத்து 107 குடும்பங்களைச் சேர்ந்த 26 ஆயிரத்து 806 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களில் 106 பாதுகாப்பு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, புத்தளம், களுத்துறை, நுவரெலியா, கேகாலை, காலி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் வாழ்பவர்களே சீரற்ற காலநிலையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இணையவழி கல்விக்காக மலையேறும் மாணவர்கள்!

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் பாடசாலைகள் காலவரையறையின்றி மூடப்பட்டு மாணவர்களின் கல்விச் செயற்பாடு இணைவழியின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அரசாங்கம் மாணவர்களுக்கு கற்பித்தலை வளவாளர்களைக் கொண்டு தொலைக்காட்சி ஊடாக வீடியோ பாடங்களை நடாத்தினாலும் மாணவர் நலன் கருதியதான சில ஆசிரியர்களின் தன்னார்வ செயற்பாடுகளினாலும் மாகாண, வலயக்கல்வி காரியாலயங்களின் பணிப்புரைக்கமைய பாடசாலை அதிபர்களின் வேண்டுதலின் அடிப்படையிலும் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வட்ஸ்அப் மற்றும் ZOOM நிகழ்நிலையின் ஊடாகவும் கற்பித்தலை தொடர்ந்து வருகின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில் இந்த இணையவழி வகுப்புகளுக்கு அண்ணளவாக 50வீதமான மாணவர்களே பங்குகொள்கின்றனர். இதற்கு காரணம் பெரும்பாலான மாணவர்களின் வீடுகளில் கணணி வசதி இல்லாமை மற்றும் கையடக்க ஸ்மார்ட் தொலைபேசி இல்லாமையும். அப்படி இருப்பினும் தமது பிரதேசங்களில் தொலைப்பேசிக்கான வலையமைப்பு வசதி இல்லாமை பெரும் குறைபாடாக உள்ளது.

அந்தவகையில் கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முருத்தெட்டுவ, யோகம உட்பட ஆறு கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு இணைய வசதியை பெற்றுக்கொள்ளக்கூடிய வலையமைப்பு இல்லாமையால் குறித்த பிரதேசத்தை சேர்ந்த மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார்கள்.

தமது பாடசாலைகளில் நடாத்தப்படும் இணைய வகுப்புகளுக்கு பங்குகொள்வதற்காக அம்மாணவர்கள் வலையமைப்பை பெற்றுக்கொள்ளுமுகமாக தமது இருப்பிடத்தில் இருந்து உயர்ந்த இறப்பர் மலைப்பிரதேசங்களுக்கு சென்று இணைய வழியில் கல்வியை தொடர்கின்றனர்.

இவ்வாறு செல்லும்போது காட்டுவழியின் ஊடாகவே பயனிக்கவேண்டும். தற்பொழுது தொடர்ந்து மழை பெய்துவருவதால் மலை உச்சியில் கூடாரம் அமைத்து கல்விக் கற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மாணவர்களும் பெற்றோர்களும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதாகவும் இதற்கு தீர்வாக அரசாங்கம் தொலைப்பேசி நிறுவனங்களுடன் தொடர்புக்கொண்டு குறித்த பிரதேசங்களுக்கு வலையமைப்பை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தொலைப்பேசி கோபுரங்களை அமைக்க ஆவணம் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.

11 மாவட்டங்களில் 77 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு!

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக தனிமைப்படுத்தப்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து மேலும் 77 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் விடுவிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு, கம்பஹா, நுவரெலியா, மாத்தளை, திருகோணமலை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, களுத்துறை, காலி ஆகிய மாவட்டங்களில் தனிமைப் படுத்தப் பட்டிருந்த கிராமசபை பிரிவுகளை இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளன.

நாட்டில் பயணத்தடை அமுலில் உள்ளதால், விடுவிக்கப்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் உள்ளவர்களுக்கும் அந்த நடைமுறை பொருந்தும்.

 

இணையவழி கல்வி வழிகாட்டல் கோவை வெளியீடு ( முழு விபரம் இணைப்பு)

மாணவர், ஆசிரியர், பெற்றோரின் ஆரோக்கியத்தை காக்கும் வகையில் இணையவழி கல்வி சேவைக்கான வழிகாட்டல் கோவை கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது.

ஜுன் மாதம் முழுதும் நாடு முடக்கப்படுமா? 11 ஆம் திகதி இறுதி முடிவு!

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடையை நீடிப்பதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் எதிர்வரும் 11 ஆம் திகதி இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது என அறியமுடிகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (11) நடைபெறும் செயலணிக்கூட்டத்தின்போதே இது குறித்து ஆராய்ந்து தீர்மானிக்கப்படும் என சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக ஜுன் மாதம் முழுவதும் பயணத்தடையை அமுல்படுத்துமாறும், குறைந்தபட்சம் ஜுன் 21 ஆம் திகதிவரையாவது கடும் கட்டுப்பாடுகள் அவசியம் என சுகாதார தரப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பயணத்தடை நீடிப்பு குறித்து அரச தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. 11 ஆம் திகதியன்றே அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

கொரோனாவால் மேலும் 46 பேர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 1,742 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 46 பேர் உயிரிழந்துள்ளனர்.

23 ஆண்களும், 23 பெண்களுமே மே 17 முதல் ஜுன் 5 ஆம் திகதிவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கொரோனாவால் நாட்டில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 742 ஆக அதிகரித்துள்ளது.

பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு – மூவர் மாயம் -நூற்றுக்கணக்கான வீடுகளுக்கு சேதம்

அடை மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. ஐவர்  காயமடைந்துள்ளனர். மூவர் காணாமல்போயுள்ளார் – என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை விடுத்துள்ள நாளாந்த நிலைவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 10 மாவட்டங்களில் 67 ஆயிரத்து 564 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 70 ஆயிரத்து 902 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், 935 வீடுகள் பகுதியளவும், 15 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன என்றும் மேற்படி மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, புத்தளம், களுத்துறை, நுவரெலியா, கேகாலை, காலி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் வாழ்பவர்களே சீரற்ற காலநிலையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பதுளை மாவட்டத்துக்கும் 50,000 தடுப்பூசிகள் – ஜுன் 9 முதல் ஏற்றல் பணி ஆரம்பம்

பதுளை மாவட்ட கொவிட் 19 தொற்றுப் பரவல் மற்றும் தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடலொன்று, பதுளை மாவட்டச் செயலகத்தில், அரசாங்க அதிபர் தமயந்தி தலைமையில் இன்று (06) இடம்பெற்றது.

இராஜாங்க அமைச்சர்களான தேனுக விதானகமகே, டி.பி.சானக்க, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மேஜர் தெனிபிட்டிய, சாமர சம்பத் தசநாயக்க, அ.அரவிந்தகுமார், பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான செந்தில் தொண்டமான் ஆகியோரின் பங்குபற்றலுடன், இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

இதன்போது, ஊவா மாகாணத்துக்குட்பட்ட பதுளை மாவட்ட மக்களுக்கென, அரசாங்கத்தினால் 50,000 கொவிட் 19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்தத் தடுப்பூசிகள், இம்மாதம் 9ஆம் திகதியன்று செலுத்தப்படவுள்ளன என்று, இக்கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தடுப்பூசிகளை, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

இதன்போது கருத்துத் தெரிவித்த செந்தில் தொண்டமான்  , பதுளை மாவட்டத்தில், 60 வயதுக்கும் மேற்பட்டோர் 1 இலட்சத்து 82 ஆயிரத்து 466 பேர் உள்ளனர் என்று எடுத்துரைத்த நிலையில், அவற்றை எவ்வகையில் பகிர்ந்தளிக்கப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

அந்த வகையில், கொவிட் 19 தொற்றுப் பரவல் அதிகமாகவுள்ள பிரதேசங்களை முன்னிலைப்படுத்தியே இந்தத் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன என்று, அரசாங்கத் தரப்பினரால் எடுத்துரைக்கப்பட்டது.

தவிர, பதுளை மாவட்டத்தில் 7 ஆயிரம் கர்ப்பிணித் தாய்மார்கள் உள்ள நிலையில், அவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்தாண்டு (2020) ஒக்டோபர் 3ஆம் திகதி முதல் இன்று (06) வரையான காலப்பகுதியில், 4,620 பேர், பதுளை மாவட்டத்தில் கொவிட் 19 தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். நேற்றைய தினத்தில் (05) மாத்திரம், 142 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் செந்தில் தொண்டமான்   எடுத்துரைத்தார்.

இவ்வாறான சூழ்நிலையில், கொவிட் 19 தொற்றுப் பரவல் அதிகமாகக் காணப்படும் பகுதிகளிலுள்ள பெருந்தோட்டத் தொழிற்சாலை ஊழியர்களையும் தடுப்பூசி ஏற்றலில் உள்வாங்க வேண்டுமென்று, செந்தில் தொண்டமான்   வலியுறுத்தினார்.

இதேவேளை, பெருந்தோட்டங்களில் பணியாற்றும் தோட்டச் சமூகநல அதிகாரிகளையும் இந்தத் தடுப்பூசி ஏற்றலுக்குள் உள்வாங்க வேண்டுமென்றும் செந்தில் தொண்டமான் அவர்கள் வலியுறுத்திய நிலையில், அவ்வதிகாரிகளும் உள்ளடக்கப்பட்டு தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும்,

கொவிட் 19 தொற்றுப் பரவலால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளாக, ஹப்புத்தளை, எல்ல, பதுளை, கிராந்துருகோட்ட போன்றன அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இவ்விடங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இந்தக் கலந்துரையாடலின் போது எடுத்துரைக்கப்பட்டது.

பதுளை மாவட்டம் முழுவதும், 226 கொவிட் 19 தடுப்பூசி ஏற்றல் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. அவற்றில், வைத்தியசாலை வசதிகளற்ற பெருந்தோட்டப் பகுதி மக்கள், போக்குவரத்துப் பிரச்சினைகளையும் எதிர்நோக்குவதால், அந்தத் தோட்டங்களில் காணப்படும் தொழிற்சாலைகள், கலாசார நிலையங்கள் போன்றவற்றை, இந்தத் தடுப்பூசி ஏற்றல் பணிகளுக்காகப் பயன்படுத்துமாறு, செந்தில் தொண்டமான்  வலியுறுத்தினார்.

தோட்டங்களிலுள்ள மேற்கண்டவாறான பொது இடங்களில் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி ஏற்றல் பணியின் போது, அம்பியூலன்ஸுடன் கூடிய வைத்திய அதிகாரிகளை அச்சந்தர்ப்பத்தின் போது கடமையில் ஈடுபடுத்துமாறும், செந்தில் தொண்டமான்   வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் மேலும் 1,921 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

நாட்டில் மேலும் ஆயிரத்து 921 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 4 ஆயிரத்து 278 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் வைரஸ் தொற்றிலிருந்து மேலும் ஆயிரத்து 72 பேர் இன்று குணமடைந்துள்ளனர். வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 304 ஆக அதிகரித்துள்ளது.

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

பதுளை – ஹாலிஎல வீதியின் ஒருபகுதியை புனரமைக்க அமைச்சரவை அனுமதி!

0
பதுளை – செங்கலடி வீதியை மேம்படுத்தும் கருத்திட்டத்திற்காக சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியம் மற்றும் சவூதி அபிவிருத்தி நிதியம் ஒருங்கிணைந்து நிதியனுசரணை வழங்கியுள்ளது. அதன்கீழ் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் கடன் தொகை மூலம் அமுல்படுத்தப்படும்...

முடிவுக்கு வந்தது போர்: 19 ஆம் திகதி ஒப்பந்தம் கைச்சாத்து! ஈரான் அறிவிப்பு

0
அமெரிக்காவுடனான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி இன்று (16) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வரும் வெள்ளிக்கிழமை முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு...

தன்னை கைது செய்ய தடை உத்தரவுகோரி கோட்டாபய மனு!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு அமைய, பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தான் கைது செய்யப்படுவதற்கு தடை விதிக்ககோரி , முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சட்டத்தரணி சனத் விஜேவர்தன...