Home Blog Page 3504

‘முரண்பாடு இல்லை – ஐக்கியமாகவே இருக்கிறோம்’ – விசேட தீர்மானம் நிறைவேற்றம்

ஐக்கிய மக்கள் சக்திக்குள் எவ்வித முரண்பாடும் கிடையாது எனவும், கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் புதியதொரு அரசை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அக்கட்சியின் உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமால் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இதில் சஜித் தலைமையில் தொடர்ந்தும் இயங்குவதென்றும், புதியதொரு அரசை உருவாக்குவதே இலக்கு எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த யோசனை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்திக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ளது எனவும், பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் வெளியேறவுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

‘ரி-20 தொடர்களால் 50 ஓவர்கள் போட்டிகளுக்கு ஆபத்து’

பல்வேறு நாடுகள் நடத்தும் டி20 லீக் தொடர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு ஆபத்தானவை என்று தென் ஆப்பிரிக்க அணியின் துடுப்பாட்ட வீரர் பாப் டூப்ளசிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

“10 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு 2 டி20 லீக் தொடர்களே நடந்து வந்தது. ஆனால் இப்போது பல்வேறு நாடுகளில் 7 டி20 லீக் தொடர்கள் இப்போது நடக்கிறது. இது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு ஆபத்தானது. மேலும் இது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு பல்வேறு நெருக்கடியை கொடுக்கும்” என்றார் டூப்ளசிஸ்.

 ” வெஸ்ட் இண்டீஸில்தான் முதல் முதலில் டி20 லீக் போட்டிகள் நடக்க ஆரம்பித்தது. அப்போது அந்நாட்டு வீரர்கள் உள்நாட்டு டி20 லீக் தொடர்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். அதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி பல திறமையான வீரர்களை இழந்தது. இப்போது தென் ஆப்பிரிக்காவிலும் இதே நிலைதான் நடக்கிறது” என்றார் டூப்ளசிஸ்.

பாகிஸ்தானில் கோர ரயில் விபத்து – 30 பேர் பலி – 50 பேருக்கும் மேற்பட்டோர் காயம்

பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதியதில் 30 பேர் உயிரிழந்தனர், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தின் கோட்கி மாவட்டத்தில் அமைந்துள்ள தர்கி என்ற நகரத்திற்கு அருகே கராச்சியில் இருந்து சர்கோதா செல்லும் வழியில் மில்லட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு, லாகூரிலிருந்து கராச்சி செல்லும் சர் சையத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதியது.

இந்த பயங்கரவிபத்தில் இதுவரை 30 பேர் உயிரிழந்தனர், 50 பேர் காயமடைந்தனர். இதன் காரணமாக கோட்கி, தர்கி, ஒபாரோ மற்றும் மிர்பூர் மாதெலோ ஆகிய மருத்துவமனைகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 13 முதல் 14 பெட்டிகள் தடம் புரண்டன, ஆறு முதல் எட்டு பெட்டிகள் வரை முற்றிலுமாக சிதைந்தன.

ரோஹ்ரியிலிருந்து ஒரு நிவாரண ரயில் புறப்பட்டுள்ளது, ரயிலில் சிக்கிய மக்களை விடுவிக்க மீட்புப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனர்.

‘விஜய் 65’ – தளபதியுடன் மீண்டும் இணைகிறார் யோகிபாபு

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் ‘விஜய் 65’ படத்தில் நடிகர் யோகிபாபு இணைந்துள்ளார்.

விஜய் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் யோகிபாபுவிடம் நீங்கள் “விஜய் 65” படத்தில் நடிக்கிறீர்களாக என்று கேள்வி எழுப்பினார். அதனைத்தொடர்ந்து தான் ’விஜய்’ 65 படத்தில் இருக்கிறேன் என்று அவர் பதில் அளித்துள்ளார்.

முன்னதாக ‘மெர்சல்’ ‘பிகில்’ உள்ளிட்ட படங்களில் விஜயுடன் இணைந்து யோகிபாபு நடித்திருந்தார். இந்த நிலையில் அவர் மீண்டும் விஜயுடன் இணைய இருக்கிறார்.

முன்னதாக, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் மக்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், அதனைத்தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகிவரும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இதனை அவரது ரசிகர்கள் ‘விஜய் 65’ என்று அழைத்து வருகின்றனர்.

இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்திற்கு அடுத்தப்படியாக நடிகர் விஜய் தமிழில் ‘தோழா’ படத்தை இயக்கிய இயக்குநர் வம்சியுடன் இணைய இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலுமொரு டொல்பினின் சடலம் கரையொதுங்கியது!

வாத்துவ – தல்பிட்டிய கடற்பரப்பில் உயிரிழந்த மற்றுமொரு டொல்பினின் உடல் இன்று (07) காலை கரையொதுங்கியுள்ளது.

கரையொதுங்கிய டொல்பின் உடல் தொடர்பிலான ஆரம்பகட்ட விசாரணைகள் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

அதேவேளை, நாட்டின் மேற்கு கடற்பரப்பில் உயிரிழந்த 7 ஆமைகள் மற்றும் டொல்பின் ஒன்றின் உடல் நேற்று (06) கரையொதுங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி – நியுஸ்பெஸ்ட்

‘மண்சரிவு அபாயத்திலிருந்து மீள மாலையோடு காத்திருந்த மக்களை ஏமாற்றிய ஜீவன்’

நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட டயகம நகரிலிருந்து சுமார் 7 கிலோமீற்றர் தொலைவிலேயே நட்போன் தோட்டம் அமைந்துள்ளது.

மலையடிவாரத்தில் அமைந்துள்ள இத்தோட்டத்துக்கு செல்லும் பாதையும் குன்றும், குழியுமாக காணப்படுகின்றது.

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் டயகம பகுதியும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நட்போன் கிராமம் மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.

தோட்டத்துக்கு மேல்பகுதியில் உள்ள மலை சரியக்கூடிய அபாயம் இருப்பதாகவும், அவ்வாறு நடந்தால் முழு தோட்டமுமே மண்ணுக்குள் மூழ்கிவிடும் அபாயம் உள்ளது எனவும் தோட்ட மக்கள் அச்சம் வெளியிடுகின்றனர்.
இந்நிலையில் தம்மை சந்தித்து

கலந்துரையாடுவதற்காக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் வருவதாக உறுதியளித்திருந்தார். எனினும், அவர் வரவில்லை. ஆனால் வேறு பகுதிகளுக்கு சென்றுள்ளார் என தோட்ட மக்கள் விசனம் வெளியிடுகின்றனர்.
” நாம் அரிசி, பருப்பு கேட்கவில்லை. பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்குமாறே கோருகின்றோம்.” – எனவும் பரிதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

ஜீவனை வரவேற்று, அவரிடம் குறைகளை எடுத்துரைப்பதற்கு ஆவலாக காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது.

நாட்டில் பயணத்தடை அமுலில் உள்ளது. ஆனால் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வரமுடியும். கீழுள்ள தோட்டங்களுக்கு வந்த ஜீவன், ஏன் மேல் தோட்டத்துக்கு வரவில்லை எனவும் கேள்வி எழுப்பிள்ளனர் தோட்ட மக்கள்.

பொலிசாரின் ஸ்டிக்கர்கள் : எந்தத் துறைக்கு என்ன நிறம்?

பயணக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த காலப் பகுதியில், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் பயணிக்கும் வாகனங்களை அடையாளம் கண்டுக்கொள்ளும் வகையில் 11 வகையிலான ஸ்டிக்கர்கள் இன்று (07) முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

பச்சை நிறம் : சுகாதார சேவை

இளம் நீல நிறம் : முப்படையினர் மற்றும் பொலிஸார்

ஊதா நிறம் : தனியார் துறை சார்ந்த அத்தியாவசிய சேவைகள்

இளம் பழுப்பு நிறம் : இறக்குமதி, ஏற்றுமதி, உற்பத்தி, தொழிற்சாலை துறைகளை சார்ந்தவர்களுக்கு

மஞ்சள் : அத்தியாவசிய சேவை வழங்குநர்

சிவப்பு நிறம் : அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்போர்

இளம் மஞ்சள் நிறம் : ஊடகம் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்

வெள்ளை நிறம் : வெளிநாடு செல்வோருக்கானது.

கருப்பு நிறம் : மனிதாபிமான நடவடிக்கைகள் (மரண வீடுகள், மருத்துவ பரிசோதனை, மருந்து கொள்வனவு)

சாம்பல் நிறம் : உணவு வகைகள் மற்றும் விநியோக சேவை

அரச சேவை மற்றும் அதன் ஏனைய நடவடிக்கைகளுக்காக விசேட நிறத்திலான ஸ்டிக்கர் ஒன்று அறிமுகப்படுத்தப்படுகின்றது.

இந்த வாகனங்களில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்களில், குறித்த வாகனத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை குறிப்பிடப்படும் என அவர் கூறுகின்றார்.

அந்த எண்ணிக்கையை மீறி, அதிகளவிலானோர் பயணிப்பார்களாயின், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

தமது தேசிய அடையாளஅட்டை இலக்கம், நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ள கடிதம் ஆகியவற்றை பரிசோதனை செய்ததன் பின்னரே இந்த ஸ்டிக்கர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறுகின்றார்.

இதன்படி, கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு இந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்படவுள்ளமையினால், இன்றைய தினம் கொழும்பிற்குள் பிரவேசிக்கும் நுழைவாயில்களில் கடும் வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என அவர் தெரிவிக்கின்றார்.

இந்த வாகனங்களில் வேறு நபர்கள் பயணிப்பார்களாயின், அல்லது வேறு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுமாயின், குறித்த வாகனம் பொலிஸாரின் பொறுப்பிற்கு எடுக்கப்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.

குறித்த ஸ்டிக்கர் நடைமுறையானது, பயணக் கட்டுப்பாடு முடிவுக்கு கொண்டு வரப்படும் வரை செலுப்படியாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

‘அடங்க மறுக்கும் கொரோனா – தாண்டவமாடும் புத்தாண்டு கொத்தணி’

புத்தாண்டு கொத்தணியால் கடந்த ஏப்ரல் 15 முதல் நேற்றுவரை ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 02 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, இலங்கையில் கொவிட் – 19 வைரஸ் பரவ ஆரம்பித்ததிலிருந்து நேற்று வரை 2 லட்சத்து 5 ஆயிரத்து 332 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 131 பேர் குணமடைந்துள்ளனர். 35 ஆயிரத்து 115 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர். ஆயிரத்து 742 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாணவர்களுக்கு முகநூல் வழியாக பிரஜா வித்தியா விசேட கல்வித் திட்டம் : பாரத் அருள்சாமி

பாடசாலை மாணவர்களுக்கான பிரஜா வித்தியா கல்வித் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரஜாசக்தி செயல்திட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

கொவிட் 19 பாதிப்பின் காரணமாக மாணவர்கள் தமது கல்வி செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பல சவால்களை எத்ரிக்கொள்ளும் நிலையில் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் எண்ண கருவிற்கமைய பிரஜாசக்தி செயல்திட்டத்தின் ஊடாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மேலும் விளக்கமளித்துள்ள பாரத் அருள்சாமி,

இந்த விசேட திட்டத்தின் ஊடாக பல பாடநெறிகள் ‘இலவசமாக’ பிரஜாசக்தி பேஸ்புக் தளத்தின் ஊடாக நேரடியாக தினமும் பதிவேற்றப்படும்.

மாணவர்களின் கல்வியை இலகுவாக்குதே எமது நோக்கம். இப்பாடநெறிகள் திறமையான ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், வளவாளர்கள், பல்கலைகழக மாணவர்கள் என பலரால் வழங்கப்பட உள்ளது.

கற்பித்தலில் ஆர்வமுள்ளோரும் எம்முடன் இணைந்துக்கொள்ளலாம். நேரடியாக மாணவர்கள் தமக்கு தேவையான கேள்விகளையும் ஆசிரியர்களிடம் கேட்டு,சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள முடியும்.

இதற்காக மென்பொருள் ஒன்றின் ஊடக இன்னும் சிறப்பாக நாம் இச்சேவையை வழங்க உள்ளோம்.

அத்துடன், யூ டியூப் தளத்தில் இக்காணொளிகள் பதிவேற்றப்படும். புலமை பரிசில் பரீட்சை சாதாரணதரம் மற்றும் உயர் தரம் ஆகிய பாடத்திட்டங்களில் நாம் விசேட கவனம் செலுத்தி உள்ளோம்.

மேலும் பல பாட நெறிகளை நாம் வழங்க உள்ளோம். ஒரு சமூகமாக “கல்வியால் உயர்வடைவோம்”. என்று பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.

https://www.facebook.com/prajashakthi.official மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

‘ஆயிரம் ரூபாவை வழங்கிவிட்டு கழுத்தை பிடிக்கும் கம்பனிகள்’ – ராதா சீற்றம்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்கிவிட்டு தொழில் சுமைகளை அதிகரித்து தொழிலாளர்களை உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் கம்பனிகள் வதைக்கின்றன. இது தொழிலாளர்களின் கழுத்தை நெறித்து அவர்களை கொலை செய்யும் செயலுக்கு ஒப்பானதாகும் – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

அத்துடன், தொழில் ஆணையாளர் அசமந்தபோக்குடன் செயற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் இராதாகிருஷ்ணன் எம்.பி. மேலும் கூறியதாவது,

” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்றது எனக்கூறப்பட்டாலும், கம்பனிகளின் கெடுபிடிகள், அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

அத்துடன், ஆயிரம் ரூபா சம்பளத்தை இன்னும் ஒரு சில கம்பனிகள் வழங்கவில்லை.  பல காரணங்களைக்கூறி தொடர்ந்தும் இழுத்தடிப்பு செய்துவருகின்றது. மறுபுறத்தில் சம்பளத்தை வழங்கும் நிறுவனங்களும் தொழிலாளர்களின் கழுத்தை இறுக்கி, அவர்களை வதைத்துவருகின்றன.

இது தொடர்பாக அனைத்து பகுதிகளில் இருந்தும் எங்களுடைய தோட்ட தொழிலாளர்கள் முறைப்பாடுகளை தெரிவித்து வருகின்றார்கள். இது தொடர்பாக அவர்கள் தோட்ட நிர்வாகத்தால் கொடுக்கப்படுகின்ற தேவையற்ற நெருக்குதல் தொடர்ந்தும் அதிகரித்த வண்ணமே உள்ளது.

இதன் காரணமாக தொழிலார்கள் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் தங்களுடைய தொழிலுக்கு செல்கின்ற பொழுது அதனை ஒரு பெரும் சுமையாகவும் ஒரு அலுத்தத்துடனுமே செல்கின்றனர்.

எனவே இந்த விடயங்கள் தொடர்பாக நாங்கள் ஒரு தொழிலாளர்களின் தொழிற்சங்கம் என்ற ரீதியில் தொழில் ஆணையாளருக்கும் தொழில் அமைச்சருக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளேன்.

இந்த கடிதத்தில் இந்த விடயங்கள் தொடர்பாக தோட்ட கம்பனிகளுடனும் தொழிற்சங்கங்களுடனும் கலந்துரையாடி தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கின்றேன். ஆனால் இது இதுவரையில் இது தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.இதன் மூலம் எங்களுடைய தொழிலார்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்படுகின்றது.

கொரோனா தொற்று ஆரம்பித்த காலம் இன்று வரை தொடர்ந்தும் தொழில் செய்து வருகின்ற ஒரே பகுதியினர் எங்களுடைய தொழிலார்கள் மாத்திரமே.ஆனால் அவர்களுடைய விடயம் தொடர்பாக தொழில் ஆணையாளர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை.

தொழிலாளர்கள் அமைதியாக இருப்பதாக நினைத்துக் கொண்டு இருக்காதீர்கள். அவர்கள் தங்களுடைய மௌனத்தை கலைத்தால் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும்.

பெருந்தோட்ட தொழிலார்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இரங்கினால் அது அரசாங்கத்தின் பொருளாதாரத்தை மிகவும் மோசமாக பாதிக்கும்.எனவே இது தொடர்பாக தொழில் ஆiணாயளர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசாங்கத்தின் வருமானம் கிடைக்கின்ற அனைத்து துறைகளும் பாரிய நட்டத்தையே இந்த கொரோனா காரணமாக அடைந்துள்ளது. ஆனால் இன்று வரை நட்டமில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கின்ற ஒரே துறை பெருந்தோட்ட துறை மாத்திரமே. எனவே இந்த துறையை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

நுவரெலியா – பதுளை வீதியில் விபத்து: 4 வாகனங்கள் சேதம்!

0
நுவரெலியா - பதுளை பிரதான வீதியின் ஹக்கல தாவரவியல் பூங்கா பகுதியில் இன்று (16) பிற்பகல் கனரக வாகனம் ஒன்று, மேலும் மூன்று வாகனங்களுடன் மோதி பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியாவிலிருந்து வெலிமடை நோக்கி அதிக...

பதுளை – ஹாலிஎல வீதியின் ஒருபகுதியை புனரமைக்க அமைச்சரவை அனுமதி!

0
பதுளை – செங்கலடி வீதியை மேம்படுத்தும் கருத்திட்டத்திற்காக சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியம் மற்றும் சவூதி அபிவிருத்தி நிதியம் ஒருங்கிணைந்து நிதியனுசரணை வழங்கியுள்ளது. அதன்கீழ் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் கடன் தொகை மூலம் அமுல்படுத்தப்படும்...

முடிவுக்கு வந்தது போர்: 19 ஆம் திகதி ஒப்பந்தம் கைச்சாத்து! ஈரான் அறிவிப்பு

0
அமெரிக்காவுடனான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி இன்று (16) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வரும் வெள்ளிக்கிழமை முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு...