Home Blog Page 3503

‘சஜித்தான் தலைவர்’ – நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றம்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் யோசனை ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதன்போது கொரோனா நெருக்கடி மற்றும் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் நடவடிக்கைகள் தொடர்பில் சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன, சரத் பொன்சேகா, மனோ கணேசன், பழனி திகாம்பரம், ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர் எனவும், இதனால் ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு படக்கூடும் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இவ்விடயம் குறித்தும் கவனத் செலுத்தப்பட்டது. இதன்போது சம்பிக்க, மனோ, ஹக்கீம் உள்ளிட்டவர்கள் இணைந்து சஜித்துக்கு நம்பிக்கை தெரிவிக்கும் யோசனையை முன்வைத்துள்ளனர். சரத் பொன்சேனா, லக்‌ஷ்மன் கிரியல்ல உள்ளிட்டவர்கள் அதனை வழிமொழிய, யோசனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அடை மழை தொடரும் – ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் – 18 பேர் பலி!

அடை மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. ஐவர்  காயமடைந்துள்ளனர். ஒருவர் காணாமல்போயுள்ளார் – என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை விடுத்துள்ள நாளாந்த நிலைவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 10 மாவட்டங்களில் 52 ஆயிரத்து 695 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 7  ஆயிரத்து 882 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், ஆயிரத்து 39 வீடுகள் பகுதியளவும், 20 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன என்றும் மேற்படி மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 ஆயிரத்து 360 குடும்பங்களைச் சேர்ந்த 23 ஆயிரத்து 164 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, புத்தளம், களுத்துறை, நுவரெலியா, கேகாலை, காலி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் வாழ்பவர்களே சீரற்ற காலநிலையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, தென்மேல் பருவப்பெயர்ச்சி மழை இன்றும் நாளையும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 100 மி.மீ. வரையான மழைவீழ்ச்சி பதிவாகலாம் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

‘கொரோனா’ தடுப்பூசி – கர்ப்பிணி பெண்களுக்கான விசேட அறிவித்தல்!

நாட்டிலுள்ள கர்ப்பிணி பெண்களுக்கு கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றுவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கான நடவடிக்கை நாளை (09) முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.

கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு மாதத்துக்குள் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை நிறைவுக்கு கொண்டுவருவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் கூறியவை வருமாறு,

” கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி ஏற்றுவது தொடர்பில் வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் முக்கியமாக இரு விடயங்கள் கருத்திற்கொள்ளப்படவேண்டும்.

கர்ப்பம் தரித்து மூன்று மாதங்களுக்கு மேற்பட்ட கர்ப்பிணி பெண்களே தடுப்பூசி பெற்றுக்கொள்ளவேண்டும். மூன்று மாதங்களுக்கு குறைவான கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படாது.

அத்துடன், தடுப்பூசி பெறுவதற்குவரும் கர்ப்பிணி பெண்கள் மகப்பேற்று மற்றும் நரம்பியல் விசேட வைத்தியர் ஒருவரின் பரிந்துரையை பெற்றுவர வேண்டும்.” – என்றார்.

‘நாட்டில் மேலும் 1,028 பேர் நேற்று கைது – 976 வாகனங்கள் திருப்பி அனுப்பட்டன’

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் ஆயிரத்து 28 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட கடந்த ஒக்டோபர் முதல் இதுவரை அச்சட்டத்தைமீறிய 25 ஆயிரத்து 886 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை, அத்தியாவசிய சேவைகளுக்கென அனுமதி வழங்கப்பட்டுள்ள பணியாளர்கள் பயணிக்கும் வாகங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணி இடம்பெற்றுவருகின்றது.

அதன் அடிப்படையில் சோதனைகளும் இடம்பெற்றுவருகின்றன. நேற்று காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை கொழும்பு நகருக்குள் 78 ஆயிரத்து 22 வாகனங்கள் பிரவேசித்துள்ளன.

இவற்றில் 976 வாகனங்கள் எவ்வித காரணங்களும் இல்லாமல், அத்தியாவசிய சேவை என்ற போர்வையில் கொழும்புக்குள் பிரவேசிக்க முற்பட்டுள்ளன. அவ்வாறான வாகனங்கள் திருப்பி அனுப்பட்டன.

ஹட்டன், தலவாக்கலை ,நுவரெலியா வாசிகள் உட்பட மேலும் 46 பேர் பலி!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

21 ஆண்களும், 26 பெண்களுமே மே 17 முதல் ஜுன் 6 ஆம் திகதிவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கொரோனாவால் நாட்டில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 789 ஆக அதிகரித்துள்ளது.

பாரதியின் பாடலை மேற்கோள்காட்டி ஜனாதிபதி கோட்டா முகநூல் பதிவு!

உலக உணவு பாதுகாப்பு நாள் இன்றாகும். இதனைமுன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது முகநூலில் (தமிழ் பிரிவு) பதிவிட்டுள்ள பதிவு வருமாறு,

” தனி ஒருவருக்கு உணவு இல்லையெனின் இந்த பூலோகமே மனிதருக்கு தேவையில்லை என்றவாறு பாடினான் பாரதி.

ஆனால் – ஒவ்வொரு நாளும் இந்த பூவுலகில், 69 கோடி மக்கள் பசித்த வயிற்றோடு இரவு படுக்கைக்குச் செல்கின்றார்கள் என்பது ஒரு கொடூரமான தரவு அல்லவா…?!
உணவு என்பது ஒவ்வொரு மனிதரதும் உரிமை.

அதிலும், குறிப்பாக, ஆரோக்கியமான, நச்சுத்தன்மையற்ற, பாதுகாப்பான உணவு என்பதே அந்த உரிமையின் உண்மையான அர்த்தம் என்பதோடு – இந்த பூலோகத்தை அடுத்த உயிரினங்களோடு் பகிர்ந்து வாழ்கின்ற நாம் ஒவ்வொருவருமே, அடுத்தவர்களின் அந்த தூய உணவுக்கான உரிமையை மதிக்க வேண்டும்.

இன்று உலக உணவு பாதுகாப்பு நாள் -World Food Safety Day! எனது நாட்டின் குடிமக்களுக்கான பாதுகாப்பான உணவு என்ற கொள்கையை இறுக்கமாக கடைப்பிடிக்கத் தீர்மானித்துருப்பதாலேயே – எவரது அல்லது எதனது அழுத்தத்திற்கும் விட்டுக்கொடுக்காமல் – எமது நாட்டின் விவசாயத்தைச் சேதனப் பசளைக்கு

முழுமையாக மாற்றுவதில் நான் விடாப்பிடியாக நிற்கின்றேன். எத்தனையோ சவால்களை எதிர்கொண்டு எமது நாட்டின் விவசாயத்திலும், எமது மக்களின் உணவுப் பழக்கத்திலும் நாம் ஏற்படுத்துகின்ற இந்த புரட்சிகரமான மாற்றமானது – இலங்கையின் சரித்திரத்தில் தனித்துவமாக எழுதப்படும்.

உடல் ஆரோக்கியமும் மனச் செழுமையும் சிந்தனைப் பொலிவும் மிக்க சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் – எமது அரசாங்கத்தோடு கைகோர்க்குமாறு எம் நாட்டு விவசாயப் பெருமக்கள் அனைவரையும், இன்றைய நாளில் நான் அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றேன்.

‘கொரோனா ஒழிப்பு சமருக்கு ஒத்துழைப்பு தாருங்கள்’ – மக்களிடம் பிரதமர் கோரிக்கை

தொற்று நிலைமையாக இருப்பினும், அனர்த்த நிலைமையாயினும் எந்த சூழ்நிலைகளிலும் மக்களுடன் அந்த சவாலை ஏற்றுக்கொள்ள ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நாம் தயார் என   பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (07)   தெரிவித்தார்.

பயணத்தடையின் போது மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என அறிந்த போதிலும் ஒரு உயிரின் மதிப்பறிந்து அரசாங்கம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிக்குமாறு இதன்போது  பிரதமர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

புதிய களனி பாலம் முதல் அத்துருகிரிய வரையான 16.4 கிலோமீற்றர் நீளமான அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கெடம்பே, கொஹுவல, கொம்பனித்தெருவில் நீதிபதி அக்பர் மாவத்தை மற்றும் உத்தரானந்த மாவத்தை, பாலதக்ஷ மாவத்தை மற்றும் சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை ஆகிய இடங்களில் நிர்மாணிக்கப்படும் 06 மேம்பாலங்களின் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அலரி மாளிகையில் இருந்தவாறு குறித்த வேலைத்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு பிரதமரின் தலைமையில் காணொளி தொழில்நுட்பம் ஊடாக இடம்பெற்றது.

அங்கு   பிரதமர் ஆற்றிய முழுiமையான உரை வருமாறு,

” கொழும்பு மற்றும் கண்டி வாகன நெரிசலுக்கு தீர்வு காணும் திட்டங்களையே இன்று ஆரம்பித்துள்ளோம். இவ்விடங்களில் காணப்படும் வாகன நெரிசல் தொடர்பில் பலர் வரலாற்றில் எத்தனை கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்? என்பதை நீங்கள் அறிவீர்கள். வாகனங்களின் வரிசை நாளுக்கு நாள் நீண்டுக்கொண்டே சென்றதே தவிர எவரும் இதற்கு நடைமுறை தீர்வு வழங்கவில்லை.

காலம் என்பது எம் அனைவருக்கும் முக்கியமானதாகும். மக்களுக்கு போன்றே இறுதியில் அது நாட்டிற்கும், நாட்டின் எதிர்காலத்திற்கும் ஒரே மாதிரி முக்கியம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். வாகன நெரிசலினால் பொதுமக்களுக்கு வீதியில் செலவிடும் காலத்தை குறைத்து, அக்காலத்தை ஏதேனும் முக்கியமான விடயத்திற்கு பயன்படுத்த முடியுமாயின் அதை நாம் பெற்ற வெற்றியாக நான் பார்க்கின்றேன்.

இன்று நாம் ஆரம்பிக்கும் திட்டங்களுள் முழுமையாக தூண்களின் மீது நிர்மாணிக்கப்படும் இந்நாட்டின் 8ஆவது அதிவேக நெடுஞ்சாலை திட்டமும் உள்ளடங்கும். அந்த அதிவேக நெடுஞ்சாலை புதிய களனி பாலத்திலிருந்து அத்துருகிரிய வரை நிர்மாணிக்கப்படும்.

நான்கு வழிப்பாதை அதிவேக நெடுஞ்சாலை எமது நாட்டின் முதலாவது மற்றும் இரண்டாவது அதிவேக நெடுஞ்சாலைகளை ஒன்றுடனொன்று இணைப்பது விசேட அம்சமாகும். அத்துடன் தெமடகொட, ராஜகிரிய, கொஸ்வத்த மற்றும் ஹோகந்தர உள்ளக பரிமாற்றம் நிர்மாணிக்கப்படும் போது, கொழும்பு வாகன நெரிசலிலிருந்து கணிசமான அளவில் எமக்கு குறைக்க முடியும்.

இந்த அதிவேக நெடுஞ்சாலையில் 15 ஆண்டு கால செயல்பாடு மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட கட்டுமானத்திற்கு வரையறுக்கப்பட்ட சைனா ஹாபர் பொறியியலாளர் நிறுவனம் சுமார் 135 பில்லியன் ரூபாய் நிதியை செலவிட்டுள்ளது. அவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக்கு அமைய நாம் நாட்டை கட்டியெழுப்ப மக்களுக்கு உறுதியளித்தோம். கொவிட் தொற்றுக்கு மத்தியிலேனும் நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நிறுத்த வேண்டாம் என ஜனாதிபதி அவர்கள் எம் அனைவருக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த தொற்று நிலைமை எதுவும் இல்லாமலேயே இன்று உள்ள எதிர்க்கட்சி அன்று எந்தவொரு வேலையும் செய்யாதிருந்தது. நாம் என்ன செய்;கின்றோம் என இன்று அவர்கள் எம்மிடம் கேட்கின்றனர்.

ஒரு பொறுப்புள்ள அரசாங்கமாக நாங்கள் மக்களுக்கு தடுப்பூசிகளைக் வழங்வோம் என்று உறுதியளித்தோம். தடுப்பூசி மூலம் எங்கள் மக்களைப் பாதுகாக்கும் திட்டத்தை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்துகிறோம். சில குறைபாடுகளை சரிசெய்ய முன்வந்துள்ளோம். இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்த வைத்தியர்கள் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்கள், முப்படையினர், காவல்துறை மற்றும் அதை ஆதரிக்கும் மக்கள் பெரும் தியாகங்களைச் செய்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

சிலருக்கு அதனை சகித்துக்கொள்ள முடியாது. அவர்கள் இங்கேயும் அங்கேயும் சொல்லி அதை நாசப்படுத்த முயற்சிக்கின்றனர். தவறான பிரசாரங்களை மேற்கொள்கின்றனர். தடுப்பூசி போடும்போது அவர் இறந்துவிடுவார் என்றும் கூறினர். மக்களை பயமுறுத்த முயன்றனர். எதிர்க்கட்சிக்கு நாம் சொல்வது இதுபோன்ற பொய்களை பரப்பி மக்களின் வாழ்க்கையை நாசமாக்கி அரசியல் ஆதாயம் தேட வேண்டாம். இந்த தொற்று நம் அனைவருக்கும் ஒரு சவால். இந்த சவாலை சமாளிக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்கள் தங்கள் சமூக ஊடகங்களில் அரசாங்கத்தின் தடுப்பூசி திட்டத்தை பாராட்டுவதை நான் கண்டேன். இந்த நேரத்தில் இந்த சவாலை ஒன்றிணைந்து எதிர்கொள்வதையே நாட்டு மக்களும் நம்புகிறார்கள்.

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் போது, பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வார்கள் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் உங்கள் அனைவரின் உயிரையும் மதிக்கிறோம். எனவே, அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் திட்டத்திற்கு மக்கள் தங்கள் ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் அதேவேளை உங்கள் அன்புக்குரியவர்களைப் பாதுகாக்கவும். பின்னர் முழு நாடும் பாதுகாக்கப்படும்.

தொற்று நிலைமையாக இருப்பினும், அனர்த்த நிலைமையாயினும் இந்த சூழ்நிலைகளிலும் மக்களுடன் அந்த சவாலை ஏற்றுக்கொள்ள ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நாம் தயார். மக்களுக்கு முறையான சாலை வசதிகளை வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். இன்றைய நிலையை விட எதிர்காலத்தை நோக்கி நாம் அதிகமாகப் பார்க்கிறோம்.

சிரமங்கள் இருந்தபோதிலும், நெடுஞ்சாலை அமைச்சு தற்போது ஒரு பெரிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. நமது அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அதற்கு தலைமை தாங்குகிறார்.

அந்த வேலை சிறப்பாக நடைபெற்று வருகிறது. இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா, அமைச்சின் செயலாளர், இராஜாங்க அமைச்சின் செயலாளர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அனைத்து உறுப்பினர்களும் இதற்கு நல்ல உத்வேகம் தருவார்கள் என்பதை நாங்கள் அறிவோம். அதனால்தான் சமீபத்தில் மத்திய அதிவேக நெடுஞ்சாலை மற்றும் ருவன்புர அதிவேக நெடுஞ்சாலையில் பணிகளைத் தொடங்க முடிந்தது.

அது மட்டுமல்லாமல், இன்று பணிகள் ஆரம்பிக்கப்பட்ட கொம்பனித்தெரு மேம்பாலம், கொஹுவல மற்றும் நீதிபதி அக்பர் மாவத்தை மேம்பாலம் இரண்டு மற்றும் கண்டி கெடம்பே மேம்பாலம் கட்டுமானங்களை விரைவில் நிறைவுசெய்ய எதிர்பார்ப்பதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இதற்கான நிதி உதவிகளை நல்கும் ஹங்கேரி அரசாங்கத்திற்கும், அதில் செயற்பாட்டு ரீதியில் சம்பந்தப்பட்டு இந்த திட்டங்களை மிகக் குறுகிய காலத்தில் நிறைவுசெய்ய திட்டமிட்ட உள்ளூர் பொறியியலாளர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவ் அமைச்சு அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளும் பணிகளை இச்சந்தர்ப்பத்தில் பாராட்டுகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் ‘என்று பிரதமர் கூறினார்.

மண்சரிவு அபாயம் – கூடாரங்களில் வாழும் தோட்ட மக்கள்! தொடர்கிறது அவலம்!!

கேகாலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவந்த கடும் மழையினால் மாவட்டத்தில்  பல இடங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவு என அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன. மண்சரிவால் இதுவவரை   ஐந்து மரணங்கள் நிகழ்துள்ளது.

இந்நிலையில் எட்டியாந்தோட்டை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட லெவண்ட் தோட்டத்தில் கடந்த 5ஆம் திகதி பெய்த தொடர்மழையினால் தோட்டத்தில் லயக்குடியிருப்புக்கு அருகாமையில் மண்சரிவுக்கான அறிகுறி தென்பட்டதோடு நிலத்தில் வெடிப்புக்களும் ஏற்பட்டிருந்தன.

இதனால் மண்சரிவு ஏற்படக்கூடுமென மக்கள் அச்சத்தில் இருந்தமையினால் 25வீடுகளை கொண்ட லயன் குடியிருப்பில் உள்ள 149 பேர் தோட்ட நிர்வாகத்தின் உதவியுடன் தற்காலிக்க கூடாரங்களில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இவ்வாறான சூழ்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு இதே போன்றதான மண்சரிவு அபாயம் ஏற்பட்டு அப்போதும் இவ்வாறான நிலைமையாகவே தற்காலிக்கமாக தங்கவைத்து மீண்டும் அதே அபாயமிக்க லயக்குடியிருப்புக்கே அனுப்பப்பட்டனர். இப்பொழுது மீண்டும் தோட்ட நிர்வாகம் தற்காலிக கூடாரங்களை வழங்கி தங்க வைத்துள்ளனர்.

இந்த கூடாரத்தில் தொடர்ச்சியாக எம்மால் வாழமுடியாது. பிறந்து 12 நாளான கைக்குழந்தையுள்ளது. மற்றும் சிறுபிள்ளைகள் வயோதிபர்கள் என ஓரே குடும்பத்தை சேர்ந்த 5, 6 பேர் ஒரே சிறிய கூடாரத்தில் வசிக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த கூடாரத்தில் சிறு பிள்ளைகளை விட்டு வேலைக்கும் செல்லமுடியாத நிலை, சாப்பாட்டுக்கும் வசதியில்லாத நிலையுள்ளது. நேற்றுமுன்தினம் அலுகொல்ல தோட்ட கோயில் ஐயர் எமது நிலையை கருத்தில் கொண்டு ஒருவேலை உணவை வழங்கினார் என தோட்ட மக்கள் தெரிவித்தனர்.

இடன்று (7ஆம்) திகதி) வரக்காபொல தமிழ் சமூக அபிவிருத்திபேரவை இம் மக்களின் நிலைமையை அறிந்து உலர், உணவு பொருட்களை வழங்கியதாக அமைப்பின் தலைவர் திருமதி கோமதி அம்மாள் தெரிவித்தார்.

ஆனால் இதுவரை எந்தவொரு அரசியல்வாதியும் இவர்களின் நிலைமையை அறியவோ அல்லது வருகைத்தரவோ இல்லையென கவலைதெரிவித்தனர். எனவே இவர்களுக்கான நிரந்தர தீர்வாக தனிவீட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இவர்களின் துன்பவியல் வாழ்க்கைக்கு முற்றுவைப்பதற்கு மலையக அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

நாட்டில் மேலும் 1,960 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

நாட்டில் மேலும் ஆயிரத்து 960 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி வைரஸ் தொற்றியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 7 ஆயிரத்து 293 ஆக அதிகரித்துள்ளது.

 

கடல் உணவு உட்கொள்ள முடியுமா? முடியும் என்கிறதாம் நாரா நிறுவனம்

கடல் உணவு உட்கொள்வதில் எவ்வித சிக்கல்களும் இல்லை என நாரா நிறுவனம் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்திற்கு அண்மித்த பிரதேசத்தில் தீப்பிடித்த எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் இராசானப் பொருட்களும், அதிலிருந்த வேறு வகையான பொருட்களும் கடலில் கலந்துள்ளது. இதனையடுத்து கடல் உணவை உட்கொள்வதில் பொதுமக்களிடையே அச்சமும் சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

எனினும், இதுகுறித்து ஆய்வு செய்து சமர்ப்பித்துள்ள ஆரம்ப அறிக்கையில் நாரா நிறுவனம் கடல் உணவு உட்கொள்வதில் எவ்வித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை என நாரா நிறுவனம் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

 

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

முச்சக்கர வண்டி மீது முறிந்து விழுந்த பைனஸ் மரம் – தந்தை, மகன் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்

0
கண்டி - கலஹா பிரதான வீதியின் கலஹாகுறுப் பகுதியில், பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றின் மீது இன்று பைனஸ் மரம் முறிந்து விழுந்து விபத்தொன்று சம்பவித்துள்ளது. பாடசாலை முடிந்ததும் தனது மகனை முச்சக்கர...

நுவரெலியா – பதுளை வீதியில் விபத்து: 4 வாகனங்கள் சேதம்!

0
நுவரெலியா - பதுளை பிரதான வீதியின் ஹக்கல தாவரவியல் பூங்கா பகுதியில் இன்று (16) பிற்பகல் கனரக வாகனம் ஒன்று, மேலும் மூன்று வாகனங்களுடன் மோதி பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியாவிலிருந்து வெலிமடை நோக்கி அதிக...

பதுளை – ஹாலிஎல வீதியின் ஒருபகுதியை புனரமைக்க அமைச்சரவை அனுமதி!

0
பதுளை – செங்கலடி வீதியை மேம்படுத்தும் கருத்திட்டத்திற்காக சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியம் மற்றும் சவூதி அபிவிருத்தி நிதியம் ஒருங்கிணைந்து நிதியனுசரணை வழங்கியுள்ளது. அதன்கீழ் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் கடன் தொகை மூலம் அமுல்படுத்தப்படும்...