2022 இல் தரம் ஒன்றுக்கு பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால எல்லை ஜுலை 31 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜுன் 30 ஆம் திகதிவரை காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2022 இல் தரம் ஒன்றுக்கு பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால எல்லை ஜுலை 31 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜுன் 30 ஆம் திகதிவரை காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2 ஆவது லங்கா பிரிமியர் லீக் ரி – 20 கிரிக்கெட் தொடர் ஜுலை 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது என ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 22 ஆம் திகதி இறுதிப்போட்டி நடைபெறும்.
சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி இத்தொடரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மகாத்மா காந்தியின் 56 வயதான கொள்ளு பேத்திக்கு தென்னாப்பிரிக்கா டர்பன் நீதிமன்றத்தால் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் வாழும் பிரபல மனித உரிமை ஆர்வலர்கள் எலா காந்தி மற்றும் மறைந்த மேவா ராம்கோபிந்தின் மகள் ஆஷிஷ் லதா ராம்கோபின்( வயது 56) .ராம்கோபின் அகிம்சைக்கான சர்வதேச மையத்தில் பங்கேற்பு மேம்பாட்டு முயற்சியின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்தார்.
இவர் மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தி ஆவார். இவர் மீது தொழிலதிபர் ஒருவர் பண மோசடி செய்ததாக கடந்த புகார் அளித்தார்.
இந்தியாவில் இருந்து, சரக்குகளை, சுங்கவரி இல்லாமல் இறக்குமதி செய்து தருவதாக, மகராஜ் என்ற தொழிலதிபரிடம் இருந்து இந்திய மதிப்பில் சுமார் 3 கோடியே 33 லட்சம் ரூபாய் பெற்று ஏமாற்றியதாக வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
கடந்த 2015 ல் தொடரப்பட்ட இந்த வழக்கில் அவருக்கு பின்னர் ஜாமின் வழங்கப்பட்டாலும், ஆஷிஷ் லதா ராம்கோபின் திங்கள்கிழமை நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். டர்பன் சிறப்பு வணிக குற்றவியல் நீதிமன்றத்தால் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உள்ளது.
இப்போது தீர்ப்பு வெளியாகி, மேல்முறையீடு செய்ய முடியாது என்ற நிபந்தனையுடன் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். போட்டி திகதியில் மாற்றம் செய்யப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக பாதியில் ஒத்திவைக்கப்பட்ட 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் வருகிற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் சபை ஏற்கனவே அறிவித்துள்ளது.
ஆனால் எஞ்சிய ஐ.பி.எல். போட்டிக்கான அட்டவணை எதுவும் வெளியிடப்படவில்லை.
இருப்பினும் இந்த போட்டி செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் அக்டோபர் 10 ஆம் திகதி வரை நடைபெறலாம் என்று தகவல் வெளியானது.
ஐ.பி.எல். போட்டி அட்டவணை குறித்து ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்க இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி மற்றும் நிர்வாகிகள் அமீரகம் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டி குறித்து பெயர் வெளியிட விரும்பாத இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘எஞ்சிய ஐ.பி.எல். போட்டியை செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் அக்டோபர் 15 ஆம் திகதிக்குள் நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. தொடக்கத்தில் 10 நாட்கள் இரண்டு ஆட்டங்களை நடத்துவது குறித்து சிந்திக்கப்பட்டது.
செப்டம்பர் மாதத்தின் 3-வது மற்றும் 4-வது வாரத்தில் 10 நாட்கள் இரண்டு ஆட்டங்கள் நடத்தினால் மாலையில் நடைபெறும் போட்டியில் வெப்பத்தை தாக்குப்பிடித்து வீரர்கள் விளையாடுவது கடினமாக இருக்கும். இதனால் இறுதிப்போட்டியை அக்டோபர் 15 ஆம் தள்ளிப்போட முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் 10 நாட்கள் இரண்டு ஆட்டங்கள் நடத்துவது என்பது 5 அல்லது 6 நாட்களாக குறையும்’ என்றார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் மேலும் 392 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் 414 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 206 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட ரீதியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் விவரம் வருமாறு,

எழுத்து -மல்லியப்புசந்தி திலகர்,
நன்றி – மாற்றம் இணையம்
அண்மைக்காலமாக தமிழ்த் திரை இசை அல்லாத சுயாதீனப்பாடலான தமிழ்ப்பாடல் ஒன்று தமிழ்ச் சூழலையும் கடந்து கோடிக்கணக்கான இசை ரசிகர்களிடையே சென்றுள்ளது. அதுதான் குக்கூ … குக்கூ… எஞ்சாயி எஞ்சாமி .. எனத்தொடங்கும் பாடல்.
‘தெருக்குரல்’ என சாமானிய மக்களின் வாழ்வியலை பாடலாக்கியவர் இளம் ‘ரப்’ கலைஞர் அறிவு. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் அவரது மகள் ‘தி’ எனும் இலங்கைப் பின்னணி ( வடக்கு ) கொண்ட பாடகியுடன் இணைந்து அறிவு பாடியுள்ள இந்தப் பாடலின் வரிகளை எழுதியவரும் ‘தெருக்குரல்’ அறிவு அவர்களே.
இந்தப் பாடலின் இசையும் பாடகி ‘தீ’ ( Dhee) யின் குரலும் போலவே அறிவின் வரிகளும் அந்த வரிகளுக்காக அவர் வரித்துக் கொண்ட பின்புலங்களும் பாடலுக்கு பலம் சேர்த்துள்ளது.
ஏ.ஆர். ரகுமான் , பா.ரஞ்சித், சந்தோஷ் நாராயணன் போன்ற சினிமா பிரபலங்களின் இணைப்பில் சுயாதீன பாடல்களை ஊக்குவிக்கும் ‘மாஜா’ எனும் அமைப்பின் ஊடாக தயாரிக்கப்பட்டு வெளிவந்ததால் அதன் தரமும் வீச்சும் வேறு எல்லைகளைத் தொட்டுள்ளது.
பாடல் வரிகளை எழுதிய அறிவு, பாடலின் வெளியீட்டு விழாவிலும் அதற்குப் பின்னரும் மேடைகளில் பேசுகையில் அவரது வரிகளுடனேயான அரசியல் முன்வைப்புகளை வெளிப்படையாக பேசி வருகிறார்.
அந்த அரசியல் முன்வைப்பை மிகுந்த அவதானத்துடனும் தெளிவுடனும் முன்வைக்கும் அவர், சாதியற்ற சமூகம் ஒன்றை நோக்கிய அவரது இலக்கினை தெளிவாக பேசுகிறார். இந்தப் பாடலை எழுதிப் பாடுவதற்கு முன்பிருந்தே Casteless Collective எனும் இசைக் குழுவில் இணைந்து இயங்கி வருபவர்.
இந்த குக்கூ குக்கூப் பாடலின் பின்னர் அல்லது இந்தப் பாடல் வரிகளின் பின்னணியில் இருக்கக்கூடிய தனது பாட்டி வள்ளியம்மை பற்றிய பதிவுகள் இன்னுமொரு பக்கத்தை வெளிப்படுத்துகிறது. அதனையும் கூட அவரே தனது உரைகளில் வெளிப்படுத்துகிறார்.
தனது தாயாரின் தாயாரான வள்ளியம்மா இலங்கை மலையகத்தில் பிறந்தவர் என்பதும் அவர் 1964 ஆம் ஆண்டு இலங்கை – இந்திய நாடுகள் செய்துகொண்ட சிறிமா – சாஸ்த்திரி ஒப்பந்தத்தின் பிரகாரம் தமிழ்நாட்டுக்கு தாயகம் திரும்பியவர்களாக வந்தவர் என்பதையும் நோக்கத்தோடு முன்வைக்கிறார்.
தன்னுடைய பாட்டி தன்னை ‘ஏஞ்சாமி …’ என விளித்து அழைக்கும் சொல்லையே தனது பாடலுக்கு தலைப்பாக்கியுமுள்ளார். அதேபோல பாட்டி பாடும் ஒப்பாரி பாடலின் வரிகளையும் கூட இந்த குக்கூ… பாடலில் சேர்த்துக் கொண்டுள்ளார். கூடவே தனது பாட்டியின் பெயரான வள்ளியம்மையையும் கூட பாடலில் கொண்டு வருகிறார். இது தவிர தமிழ் நாட்டு இடதுசாரி அறிவொளி இயக்க நாட்டார் பாடல் சேகரிப்புகளில் இருந்தும் சில வரிகளைச் சேர்த்துக் கொண்டுள்ளார்.
இலங்கையில் இருந்து வந்த தனது பாட்டியின் வரலாற்றை வெறுமனே பாடலுக்காக மாத்திரம் சேர்த்துக் கொள்ளாது உண்மையிலேயே அந்த வரலாற்றை அறிந்து கொள்ளவென இரண்டு வருடங்களுக்கு முன்பதாக இலங்கை வந்துள்ளார்.
புசல்லாவையில் மலையக அருங்காட்சியகத்தை நடாத்தும் கண்டி, சமூக அபிவிருத்தி நிறுவனம், அதன் தலைவர் பெ.முத்துலிங்கம் ஆகியோருடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டு தனது பாட்டி பிறந்த தலவாக்கலை, ஆகரப்பத்தனை சென்.ரெகுலர்ஸ் தோட்டத்துக்கும், அவர் மணம் முடித்து வந்த கொட்டகலை மண்வெட்டி தோட்டத்துக்கும் மலையகத்தின் ஏனைய பகுதிகளுக்கும் கூட பயணித்திருக்கிறார்.
இந்தப் பின்னணியில் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனம் கலைஞர் அறிவு உடனான இணையவழி கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. குறித்த எண்ணிக்கையினரான பங்குபற்றுனர்களுடன் இடம்பெற்ற அந்தக் கலந்துரையாடலில் அறிவு இடத்தில் கேள்விகளை கேட்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. அதன்போது நான் (கட்டுரையாளர்) கோரிக்கை ஒன்றாக ஒரு கேள்வியை முன்வைத்து இருந்தேன்.
இலங்கையில் வாழும் மலையகத்தமிழர்கள் இலங்கை வந்தது ஒரு வரலாறு. அது பரவலாகப் பேசப்பட்டுள்ளது, பேசப்படுகின்றது. அவர்களுள் ஒரு பகுதியினர் மீளவும் திரும்பிச் செல்ல அல்லது திருப்பி அனுப்பப்பட்ட வரலாறும் பரவலாக பேசப்பட்டுள்ளது.
ஆனால், தாயகம் திரும்புகிறோம் எனும் பெயரில் இந்தியாவுக்குத் திரும்பிச் சென்ற மலையகத் தமிழர்களின் இந்திய வாழ்வியல் குறித்த பதிவுகள் பெரிதாக பேசுபொருள் ஆகவில்லை. இப்போது கலைஞர் அறிவு அடைந்திருக்கும் பிரபலத்தின் ஊடே அவர் இணைந்திருக்கும் சினிமா பின்புலத்தின் வெகுசனத் தளத்தில் தாயகம் திரும்பிய மலையகத் தமிழர்கள் குறித்த தமிழ்த் திரைப்படம் ஒன்றைக் கொண்டு வரும் சாத்தியம் உள்ளதா ? என்பதே எனது கோரிக்கையும் கேள்வியும்.
சுருங்கச் சொன்னால் பாடலில் வந்த பாட்டி வள்ளியம்மையின் வரலாற்றைப் படமாக்கும் சாத்தியமுள்ளதா? என்பதே.
எனது கோரிக்கையின் நியாயத்தைப் புரிந்து கொண்டவராக பதில் அளித்த கலைஞர் அறிவு அதனைச் சாத்தியமாக்குவதை நோக்கிய நகர்வின் முன்மொழிவை வழிமொழிந்து ஏற்றார். அந்த இணையக் காணொளியின் உரையாடல் பதிவை ‘த ஹிந்து’ ஆங்கில இதழின் இலங்கை செய்தியாளர் மீரா ஶ்ரீநிவாசன் இத்தகைய திரைப்படம் ஒன்றின் எனது கோரிக்கையை அழுத்தமாகவே பதிவு செய்துள்ளார்.
இத்தகைய ஒரு திரைப்படத்தின் அவசியம் என்ன எனும் கேள்விக்கு பின்னாலுள்ள அரசியல் கோரிக்கை முக்கியமானது. இலங்கையில் அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என அறியப்பட்டுள்ள மலையகத் தமிழ் மக்களுக்கு, இருந்த ஒரே மாற்றுத் தெரிவான இந்தியா சென்றவர்களின் வாழ்க்கை நிலைமையை பரவலாக அறிந்து கொள்ளக்கூடியதன் வாய்ப்பே அது.
இவ்வாறு தாயகம் திரும்பிச் சென்றவர்களின் வாழ்வியலைப் பேசும் படைப்புகள் வெளிவராமலும் இல்லை. அவ்வாறு சென்றவர்கள் குழுவாக இணைந்து வெளியிட்ட ‘எங்கெங்கும் அந்நியமாக்கப்பட்டவர்கள்’ ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு தமிழிலும் ‘Alienated Everywhere’ என ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளது.
மலையக மக்கள் மறுவாழ்வு மன்றத்தின் மூலவரான இர.சிவலிங்கம் தொகுத்திருக்கும் In the service of the displaced – Indo – Sri Lanka Agreement 1964 & 1974, எல்.வேதவள்ளி எழுதிய SriLankan Repatriates in Kotagiri, மலையக கல்வியாளரும் ஆய்வாளருமான எம்.வாமதேவன் தனது தத்துவமாணி பட்டப்படிப்புக்காக சமர்ப்பித்து பின்னர் ஆங்கில நூலாகவும் வெளிவந்த Sri Lankan Repatriates in Tamil Nadu எனும் ஆய்வு நூலும் முக்கியமானது.
இஸட் ஜெயசிங் எழுதிய ‘இலங்கை வாழ் இந்தியர்களின் குடியகல்வு’, மு.சி.கந்தையா எழுதிய ஆய்வு நூலான ‘சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள்’, தமிழகன் (ராமச்சந்திரன்) தொகுத்த ‘மலையகமும் மறுவாழ்வும்’ அதேபோல சி.பன்னீர்செல்வம், அரு.சிவானந்தன், மு.சி.கந்தையா, தமிழகன் உள்ளிட்ட தாயகம் திரும்பிய முதல் தலைமுறையினரின் பல இலக்கிய படைப்புகளும் உள்ளன. தாயகம் திரும்பியவரான இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த தவமுதல்வன் இயக்கத்தில் வெளியான ‘பச்சை ரத்தம்’ ஆவணப்படமும் முக்கியமானது. அதேபோல தாயகம் திரும்பியவர்கள் அல்லாத இந்திய பூர்வீக தமிழர்களான பேராசிரியர் வி.சூரியநாராயணன் தொகுத்த Rehabilitation of Srilankan Repatriates: A critical Appraisal எனும் ஆங்கிலநூல்,
தமிழ் மகன் (வெங்கடேசன் ) எழுதிய வனசாட்சி (நாவல்), இரா.வினோத் எழுதிய ‘தோட்டக்காட்டீ’ (கவிதை), முஹம்மட் யூசுப் அண்மையில் எழுதியுள்ள ‘தட்டப்பாறை’ (நாவல்) என பல படைப்புகள் தாயகம் திரும்பிய மலையகத் தமிழர்களையும், அவர்களது பூர்வீக மலையகத் தமிழர் பின்னணியையும் தொட்டுச் செல்வனவே. இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மலையகத் தமிழர்களின் புனர்வாழ்வு குறித்து பதிவு செய்யும் The Directory of Rehabilitation எனும் விபரப்பதிவும் கூட உள்ளது. தாயகம் திரும்பியோர்… எனும் அடைமொழியுடன் இயங்கும் பல அமைப்புகள் தமிழ் நாட்டில் பரவலாக உள்ளன. இப்போது தாயகம் திரும்பியோர் எனும் சமூக அடையாளத்துடன் ஒரு சட்ட மன்ற உறுப்பினரும் உள்ளார் (பொன். ஜெயசீலன் MLA கூடலூர் 2021).
அதேநேரம் தாயகம் திரும்பிய மூன்றாந் தலைமுறை இளைஞரான 27 வயது நிரம்பிய அறிவு தமிழ் நாட்டிலேயே பிறந்து வளர்ந்தவர். தனது பாட்டி வள்ளியம்மையை முன்னிறுத்தி வெளிக்கொணர்ந்துள்ள கலைப்படைப்பின் காலமும், வடிவமும், நுட்பமும் வேறுபட்ட தளத்தில் இயங்குவதனால்,
இன்றைய நிலையில் தாயகம் திரும்பிய மலையகத் தமிழர்களது சமகால வாழ்வியல் வரலாற்றுப் பின்புலங்களுடன் திரைப்படமாகும்போது சமகாலத் தலைமுறையினருக்கு இரண்டு தரப்பு மலையகத் தமிழர்களினதும் நிலை பற்றிய புரிதலை ஏற்படுத்த வல்லது. தமிழக (இந்திய) நிலையில் தாயகம் திரும்பிய மலையகத் தமிழர்க்கும் ஈழ அகதிகளுக்கும் இடையேயான வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளவும், இலங்கை நிலையில் மலையகம் அடைந்திருக்க வேண்டிய அரசியல் நிலையைப் புரிந்து கொள்ளவும் திரைமொழியின் ஊடாக சொல்லப்படும் கதை வலுசேர்ப்பதாக அமையவல்லது.
கலைஞர் அறிவு ஏற்கனவே தமிழ் சினிமாவில் ஒரு கவிஞராக காலடி எடுத்து வைத்திருப்பவர்தான். ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த நடிப்பில் வெளியான ‘காலா’ திரைப்படத்தில் அவர் எழுதிய உரிமையை மீட்போம் …. நிலமே எங்கள் உரிமை … நிலமே எங்கள் உரிமை…உரிமை… எனும் பாடல் இலங்கை மலையகத் தமிழர் அரசியல் கோரிக்கைகளுக்கு மாத்திரமல்ல, இலங்கையில் இருந்து இந்தியா சென்று தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் ‘தனித் தொகுதியினராக’ வாழும் தாயகம் திரும்பிய மலையகத் தமிழருக்கும் கூட அவசியமானதே.
எங்கெங்கும் அந்நியமாக்கப்பட்டவர்களின் அரசியல் ஒன்றாக இருப்பதை ஒரு திரைமொழியில் சொன்னால் இன்னும் ஓர் அகலத்திரைக்கு அது செல்லக்கூடும் என்பது எதிர்பார்ப்பு.
சஜித் பிரேமதாச தலைமையிலான அணியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையவுள்ளனர் என வெளியாகும் தகவலை ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது.
சஜித் அணியில் உள்ள சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட குழுவினர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளனர் எனவும், நாடாளுமன்றம் வரவுள்ள ரணிலை எதிர்க்கட்சித் தலைவராக்குவதற்கு நகர்வை அவர்கள் முன்னெடுத்துவருகின்றனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையிலேயே மேற்படி தகவலை ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது. அத்துடன், சஜித்துக்கு நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானமொன்றையும் அதிரடியாக நிறைவேற்றியுள்ளது.
பொகவந்தலாவை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட 5 தோட்டங்களில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்றிரவு கிடைக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் டின்சின் தோட்டத்தில் 15 பேருக்கும், மோரா தோட்டத்தில் 16 பேருக்கும், பொகவந்தலாவை தோட்டத்தில் மேல் பிரிவில் 9 பேருக்கும், சென் ஜோன் டிலரி தோட்டத்தில் 5 பேருக்கும், கிளானி தோட்டத்தில் ஒருவருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் கொரோனா வைரஸ் தொற்றியவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், இவர்களுடன் தொடர்பை பேணிய நபர்களும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
இலங்கை முதலீட்டு மாநாடு – 2021 இரண்டாவது தின ஆரம்ப நிகழ்வில் பிரதமர் மஹிந்த ஆற்றிய உரை வருமாறு,
“முதலீட்டு சபை, கொழும்பு பங்குச்சந்தை மற்றும் இலங்கை வர்த்தக சபை ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள, இணையத்தினூடாக நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன். இதனை காலத்திற்கு உகந்ததொரு நடவடிக்கையாக நாம் கருதுகின்றோம்.
2006 முதல் 2014 வரையான 9 ஆண்டு காலத்தில் நமது நாடு அபிவிருத்தியடைந்த வேகத்தை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.
அக்காலத்தில் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 24 பில்லியன் அமெரிக்க டொலரில் இருந்து 79 பில்லியன் வரை வேகமாக அதிகரிக்க எம்மால் முடிந்தது.
ஆனால் பின்னர் 2015 முதல் 2019 வரையிலான 5 ஆண்டுகளில், எங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தி 82 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை மாத்திரமே அதிகரித்தது. எனவே, நம் நாட்டில் பொருளாதார நன்மைகளின் வளர்ச்சி தடைபட்டது. புதிய திட்டங்களை ஆரம்பிக்கும் செயற்பாடு நிறுத்தப்பட்டது.
2020ஆம் ஆண்டில், நாங்கள் மீண்டும் அரசாங்கத்தை கையகப்படுத்திய பின்னர், உலகம் முழுவதையும் சூழ்ந்த கொவிட் தொற்றை நாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
கொவிட் அச்சுறுத்தலில் இருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்க நாங்கள் 66 நாட்களுக்கு முழு நாட்டையும் மூட வேண்டியிருந்தது. ஒட்டுமொத்த வணிகத் துறையும் கடுமையான சவால்களை எதிர்கொண்டது.
இதன் விளைவாக, உலகின் பிற பகுதிகளிலும் நிகழ்ந்ததைப் போல நம் நாடும் பின்னோக்கி சென்றதுடன், 2020 ஆம் ஆண்டில், பொருளாதாரம் 3.6 சதவிகிதம் சுருங்கியது. இதன் விளைவாக, நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 80 பில்லியன் அமெரிக்க டொலர்களாக சரிந்தது.
எனினும், எமது மக்களின் வாழ்க்கை நிலையை திருப்திகரமான மட்டத்தில் பேண எமது அரசாங்கத்திற்கு முடிந்தது.
ஒரு நாடு என்ற வகையில், இந்த தீவிரமான சூழ்நிலையை நாம் தொடர்ந்து எதிர்கொண்டு, நம் நாட்டை மீண்டும் ஒரு துடிப்பான பணியிடமாக மாற்ற வேண்டும். நாம் இதுவரை ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி, ‘அனைவருக்கும் நீர்’ மற்றும் புதிய அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணித்தல் போன்ற நாடு தழுவிய திட்டங்கள் மூலம் பொருளாதார ரீதியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றோம்.
வணிக நடவடிக்கைகளை எளிதாக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்த தொழில்துறை வலயம் ஊடாக புதிய தொழில்களைத் தொடங்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தருவோம். மருந்து பொருட்கள் உள்ளிட்ட புதிய தொழில்துறை வலயங்கள் ஏற்கனவே நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ளன.
கொழும்பு துறைமுக நகர திட்டத்தை விரைவில் ஆரம்பிப்பதற்கு தேவையான சட்ட கட்டமைப்பை வகுத்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார காரணிகளை சரியான திசையில் கொண்டு செல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
அதன்படி, இப்போது நம் நாடு மீண்டும் 6 சதவீத வளர்ச்சி விகிதத்தை தாண்டிய பாதையை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.
இலங்கையின் வளர்ச்சி வேகத்தை துரிதப்படுத்த வேண்டும் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்கிறோம்.
இதற்கு மூலதன முதலீட்டை குறிப்பிடத்தக்க அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும். உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் பொருளாதாரத்தின் உற்பத்தித்திறனை விரிவாக்குவதற்கும் அதிக முதலீடு தேவை என்பதையும் நாங்கள் அறிவோம்.
இதற்கான அரசாங்கத்தின் மூலதன செலவுத் திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க நாம் எதிர்பார்க்கிறோம். இதேவேளை, முதலீட்டை அதிகரிக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் முக்கிய பங்கு வகிக்க எதிர்பார்க்கிறது.
அதன்படி, 2020 நவம்பரில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எங்கள் இறுதி வரவு செலவு திட்டத்தில் படகு கட்டுதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற தெரிவுசெய்யப்பட்ட துறைகளில் முதலீட்டாளர்களுக்கு புதிய வரிவிலக்கு, நிதி மற்றும் நிதி அல்லாத சலுகைகளை நாம் அறிமுகப்படுத்தினோம். அவை அனைத்தையும் மிக விரைவில் செயல்படுத்த நாங்கள் இப்போது பணியாற்றி வருகிறோம்.
இதேவேளை, புதிய துறைமுக நகரை மையமாகக் கொண்டு அடுத்த 5 ஆண்டுகளில் குறைந்தது 15 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை நாட்டிற்குள் ஈர்க்கவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். இதற்கு தேவையான சட்ட மற்றும் வணிக வசதி கட்டமைப்பை ஒரு புதிய சட்டத்தில் நிறுவியுள்ளோம். இதன்மூலம், கொவிட் தொற்றுநோய்க்கு மத்தியில் கூட, நம் நாட்டில் ஒரு திருப்புமுனையை நாம் ஏற்படுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
புதிய சட்டத்தின் கீழ், முதலீட்டாளர்கள் அனைத்து சேவைகளையும் ஒரே சாளரத்தில் இருந்து அணுக முடியும், மேலும் உலகெங்கிலும் உள்ள சிறந்த முதலீட்டாளர்களை நம் நாட்டிற்குள் நுழைய ஊக்குவிப்பதே எமது எதிர்பார்;ப்பாகும்.
இன்று கடன் வாங்குவதற்கு பதிலாக, கடன் அல்லாத அந்நிய செலாவணி வருவாயை இலக்காகக் கொண்டு நாம் செயற்பட வேண்டும்.
இவற்றில், தனியார் பங்கு விற்பனை, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பத்திரங்களின் வளர்ச்சி, கடன் கருவிகளின் செயல்திறன், புதிய துணிகர மூலதனத்தின் ஊக்குவிப்பு இதுபோன்ற திட்டங்களுக்கு நாம் முன்னுரிமை வழங்க வேண்டும்.
அதற்காக, புதிய வணிக நடவடிக்கைகளுக்கு வெளிநாட்டிலிருந்து பெறும் முதலீடுகளுக்கான பின்னணியை தயார்ப்படுத்தியுள்ளோம்.
இதற்கிடையில், தொற்றுநோய்க்கு மத்தியிலும் கொழும்பு பங்குச் சந்தையின் சமீபத்திய செயற்பாடு குறித்து மகிழ்ச்சியடையலாம்.
தனியார் துறையில் முதலீட்டாளர்களுக்கு ஆர்வத்தை வெளிகாட்டக்கூடிய பல குறிப்பிட்ட முதலீட்டு வாய்ப்புகள் குறித்து நான் ஏற்கனவே விவரித்தேன்.
இந்த மாநாட்டில் பங்கேற்கும் அரசு நிறுவனங்களுக்கும் தனியார் துறைக்கும் இடையிலான முதலீட்டு வாய்ப்புகளை விரைவுபடுத்த நீங்கள் அனைவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என நாம் நம்புகிறோம்.”
பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப் பகுதியில் விற்பனை செய்ய முடியாத மேலதிக மரக்கறிகள் மற்றும் பழங்களை கொள்வனவு செய்து, அரசாங்கத்தினூடாக விநியோகிக்கும் திட்டத்தை செயற்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் வருமாறு,
அரசாங்கத்தால் நாடளாவிய ரீதியில் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையால் தங்களது உற்பத்திகளை குறிப்பாக மரக்கறிகள் மற்றும் பழவகைகளை வழக்கமான முறையில் போக்குவரத்துச் செய்யவும் விற்பனை செய்யவும் இயலாமையால் அழிவடைந்து போகும் நிலையில், சிறிய மற்றும் நடுத்தர அதேபோல் பாரிய விவசாயிகள் பெரும் பொருளாதார பிரச்சினைக்கு முகங்கொடுத்து வருகின்றமை தெரிய வந்துள்ளது.
மேலும், நுகர்வோர் நியாய விலையில் தரமான மரக்கறிகள் மற்றும் பழவகைகளைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
அதற்கமைய, பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள சூழலில் விற்பனை செய்ய இயலாத தொகையான மரக்கறிகள் மற்றும் பழவகைகளை மாவட்ட விலைமனுக் குழுவின் விலையின் அடிப்படையில் மாவட்டச் செயலாளர்கள், அரசாங்க அதிபர்கள் மூலம் கொள்வனவு செய்வதற்கும்,
அவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட தொகையான மரக்கறிகள் மற்றும் பழவகைகளை பயணத்தடை முடிவுறும் வரை கொவிட் சிகிச்சை நிலையங்களுக்கும், அனைத்து அரச மருத்துவமனைகளுக்கும், முப்படையினர் மற்றும் இடம்பெயர்ந்துள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கும், வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கும் தேவைக்கேற்ப இலவசமாக வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக விவசாய அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.